Everything posted by nochchi
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
தென்னாசியாவில் மக்கட்தொகையில் முதலிடம் வகிக்கும் ஒருநாடு(தமிழர் எதிர்நிலை,தமிழ்மொழி அழிப்பு,கிந்தி,கிந்து மதத் திணிப்பு என்பவற்றைக் கடந்து)என்ற வகையில் மிகச் சிறந்த வெற்றியே. பொதுவாக இந்தியர்களது பெருமைக்குணம் மாறாதது. அவர்கள் ஒரு கூட்டத்தில் முதலில் ** விட்டாலும் அதனையும் பெருமையாகக் கூறிவிட்டுச் செல்லக்கூடியவர்கள். வெட்க துக்கம் பாராது கடந்துவிடுவர். அதுகூட அவர்களது வளர்ச்சிக்குக் கரணியமாக இருக்கலாம். அயல்நாடென்ற வகையில் பாராட்டுதற்குரியதே. மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளூர் அரசுகளின் ஊழலற்ற நிர்வாகத்தினாலும், செயற்றிறன் மிக்க அதிகாரிகளினாலும் மட்டுமே அடையமுடியும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த இனக்கொலைகளினதும் சொத்தழிப்புகளினதும் முக்கிய பங்காளி. அவர்தான் தற்போதைய அரசுத்தலைவர் இனப்பிரச்சினையைத் தீர்க்க முனைபவராம். சரியாக யே.ஆரைப்(மாமனாரை)போலவே சாதுரியமாகக் காய்நகர்த்தித்தமிழினத்தை இனிமேல் எழாதவாறு முழுமையாகச் சிறிலங்காவுக்குள் அமிழ்த்தி அழிக்கும் நோக்கிலே செயற்படுகின்றார். எங்கே இந்த சிங்களக்கொடியாட்டிய சம் அவர்கள். அவர் இவற்றை அறியாதவரா அல்லது அப்போதென்ன கோமாவில் இருந்தாரா? பிறகேன் குட்டிக் குள்ள நரிக்குக் கடிதம்?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த வரலாற்றுப் பதிவைப் படித்தபோது மனதிலே எழுகின்ற சோகமும் வலியும் இன்றைய அரசியல்வாதிகள்மீது வெறுப்பையே வரவைக்கிறது. இனவழிப்பில் கைதேர்ந்த ஐ.தே.கட்சியையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்கள் எவளவுதூரம் சூடு சுறணையற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழினம் முதலில் எந்வொரு சிங்களக் கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முன்வரலாமா? இவர்கள் செய்வித்த, செய்கின்ற கொடுமைகளை மறந்துவிடலாமா? ஏனிந்தச் சூனிய நிலையில் மீண்டும் மீண்டும் தமிழினம் பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்று புரியாமல் உள்ளது. யே.ஆரின் அதே தந்திரத்தோடு நகரும் ரணிலையும் நம்புவதற்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றனர் என்பது எவளவு மதியீனமானது. ஏதிர்காலத்திலாவது தமிழ்க் கட்சிகள், கல்விமான்கள் மற்றும் புலமையாளர்கள் ஒன்றினைந்து தமிழ்த் தேசியத்திற்கான பொது முன்னணியொன்று கட்டமைக்கப்பட்டு கட்சிகளுக்கான முதன்மை நிலை களையப்பட்டு, தமிழரது தேசியப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி நகரும் நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். இதிலே புலமாக இருந்தாலும் தாய்நிலமாக இருந்தாலும் ஒரு நிலைப்பாட்டுடன் ஒரு அணியாகத் தாயகத்திலும் புலத்திலும் நகர்வதே தமிழருக்கு விடிவைத்தரும். சிங்களக் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் எவரையும் தமிழினம் ஆதரிப்பதைக் கைவிடுவதோடு, அவர்களின் சலுகைகளுக்கு ஏமாறாது இருக்கும் வகையில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். தமிழர் தாயகத்திலே தமது கட்சிக்கு மட்டும் முதன்மை தேடும் கட்சியோ அல்லது தனிநபரோ இனங்காணப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் பரப்புரைகளின்போது பேரிவாதக் கட்சிகள் செய்த நிலப்பறிப்பிலிருந்து இன அழிப்புவரையான தொகுப்பினைத் தமிழரிடையே காட்சிப்படுத்தும் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கடந்தகாலத்தில் தமிழர் பட்ட அவலங்கள் இளைய தலைமுறையினரிடம் பரவச்செய்யப்படுதல் வேண்டும். அதிலே டொன் ஸ்ரெபான் செனனாயக்க முதல் இன்றைய ஆட்சியாளர்வரை செய்த, செய்துவரும் தமிழின அழிப்புவிடயங்கள் முழுமையாக நிரலாக்கம் செய்யப்படுவது அவசியமாகும். இலங்கைத்தீவு முழுவதும் தமிழினத்தின் குருதிச்சுவடுகள் பரவியுள்ளதை அறியாத தமிழ்ப் பரம்பரைக்கு இவற்றை நாம் கடத்தாதுவிடுவதும் ஒருவகை வரலாற்றுத் துரோகமே. றஞ்சித் அவர்களே, நாம் செவிவழியாகக் கேட்டபோதும், இடம்பெயர்ந்து வந்தோரை வரவேற்றபோதும் கிடைக்காத பல அரிய வரலாற்றுண்மைகளும், எமது இனம் எதிர்காலத்தில் உறுதியாக எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளெனும்; தீரம்மிகு அமைப்பின் பின்னைய நடவடிக்கைகளின் நியாயப்பாடுகளுக்கும் மேலேயுள்ள இன அழிப்பினதும் சிங்களப் பெருந்தேசியவாதத்தின் ஊறிப்போன பேரினவாதமுகத்தினையும் ஒவ்வொரு துகள்களாகப் பதியமிட்டுவருகிறது.களத்தினதினது நோக்கத்தை நகர்த்தும் உங்களின் அயராத முயற்சிக்கு நட்பார்ந்த நன்றியுடன் பாராட்டுகின்றோம். யாழ் களம் ஏதாவது சிக்கலுக்குட்பட்டாலும் தாங்களவாது பதிவுகளைச் சேமித்து வைப்பீர்கள் என்றே நம்புகின்றோம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
றஞ்சித் அவர்களின் தொடர் முயற்சிக்குப் பாராட்டுகள் உரித்தாகுக. நான் நினைக்கின்றேன் அவர்களிடம் அதற்கானதொரு வழிவரைபடமோ திட்டமோ ஆவணமாக இல்லாதிருந்திருக்கலாம். இரு பக்கத்திலும் உயிரப்பாதுகாப்பற்ற அச்ச உணர்வு மற்றும் 6ஆம் திருத்தச்சட்டத்தால் ஏற்பட இருந்த அழுத்தம் போன்றவும் அவர்களைத் தம்மைப்பாதுகாக்கும் நிலையை நோக்கித்தள்ள அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
வீரமுனையிலே இனப்படுகொலைக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அகவணக்கம். இலங்கைச் சோனகர்களது வாக்குகளுக்காக யாழ் குடா வெளியேற்றத்தை மனிதஉரிமை மீறல் எனக் கதறியழும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் வீரமுனைப்படுகொலை நினைவிடத்திலே காணமுடியவில்லை. தாமே சுத்தத் தமிழ்த் தேசியக் காப்பர்களென மார்தட்டும் கஜன்,விக்கியையா போன்றவர்களையும் காணவில்லையே. சோனகர்கள் முதலில் இவற்றிற்குப்பொறுப்ப கூற நிர்பந்திக்கப்பட வேண்டும். நீங்கள் தேடிய வீரமுனை இனப்படுகொலை என்று ஒரு தலைப்பில் விவரங்களை ஆவணமாக்கி வெளியிட வேண்டும். அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் அவர்களே நன்றி, தொடருங்கள். ஆட்சிகள், அதாவது ஆளும் தரப்புகள் மாறினாலும் எப்படிச் சிங்களம் திட்டமிட்டு இன அழிப்பை ஒரு நிரலாகவும், தெளிவாகவும் செய்துவருகிறது. சமகாலத்தில் வேறுநாடுகளில் நடைபெற்ற இன அழிப்பக்குத் தண்டனை, தீர்வு என்று நிலைமை முன்னேறிச் செல்ல நாமேன் பின்தள்ளப்படுகின்றோம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தங்கள் நேரத்திற்கும் முயற்சிக்கும் நன்றி. யூலை (1983) இன அழிப்புக்காலத்தில் பொருத்தமான பதிவாக உள்ளது. இன்றும் தொடரும் அவலமாக நடந்தேறுகிறது. யூலையில் யே.ஆரால் திட்டமிடப்பட்டிருந்த இனஅழிப்புக்கான திட்டங்களை(இந்தப்பதிவிலே சுட்டியவாறு)தமிழினம் எதிர்கொள்ள முடியாதநிலை அன்றுமட்டுமல்ல, இன்றும் இருக்கின்ற ஆட்சியாளரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவரும் இன அழிப்பை இதுவரையான பட்டறிவின்பாற்பட்டுத் தமிழ்த் தலைமைகள் சிந்திக்கமறுப்பதேன்? ஒரு தலைவரும் ஒரு உறுப்பினரும் கொண்ட கட்சிகளாகவும், வெற்றுக்காட்சிகளாகவும், வெறும் அறிக்கைகளாகவும் தொடர்வதேன்? சாதாரணமானவர்கள் செய்கின்ற தொண்டில் ஒரு துகளளாவது இந்த அரசியல்வாதிகள் செய்கிறார்களா?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அதனால்தான் மாபெரும் ஆளுமையாக இந்த உலகு உள்ளவரை படிக்கப்படும் ஒரு படைத்துறை வல்லமையாகவும் எம் தலைவன். ரஞ்சித் அவர்களே நன்றி.
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
ஊடகங்களுக்கு செய்தி. உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்தோர் யாரென்றறியாத துயரத்துள் வெதும்பும் நிலை. இந்த அவலட்சணத்தில் ஐ.நாவும் மனித உரிமையும் என்று கதையளப்பு.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஆட்சிகளும் கட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் தமிழின அழிப்புத்தொடர, 40ஆண்டுகளாக மன்னிப்புச்சபையும் மற்றும் ஐ.நா.ம.உரிமைச் சபை போன்றனவும் இன்றுவரை அறிக்கையோடு மட்டுமே நிற்கின்றன.
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
உண்மை.ஆனால், ஊடகங்களுக்குத் தீனி கிடைத்திருக்கிறது. மேற்கு முதல் கிழக்குவரையான ஊடகங்கள் மீட்டுவிடுவார்கள் அல்லது கண்டுபிடித்துவிடுவார்கள். நன்றி
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வரலாற்றுத் தடம் வழியே தமிழினப் (நடேசன் சத்தியேந்திரா) பற்றுடையோரையும், நாற்பது ஆண்டுகளின் முன் தங்கத்துரையவர்களால் கேட்கப்பட்ட பயங்கரவாதம் குறித்தான வினாவுக்கான பதிலை இன்றுவரை சிங்களத்தாலோ உலகாலோ தேடவோ அல்லது மாற்றுச்சிந்தனைக்கான தேடலோ இல்லாத நிலையே தொடர்கிறது. ஆனால், சிங்களத்தால் முன்னெடுக்கப்பட்ட அதேகாட்சிகள் மாறாது தொடர்கிறது. இறுதியில் அப்பாவிச் சிங்கள மக்கள் இனவாதத்தீயில் முழ்கடிக்கப்பட்டு பட்டினியோடு போராட, தமிழினமோ நீதியற்ற உலகிடமே நீதிகேட்டுப்போராடும் நிலையிற் பணமுதலைகள் மட்டும் உறிஞ்சி ஊதிப்பெருத்துவருகிறது. தங்கத்துரையவர்கள் சுட்டியதை இன்றாவது தூசுதட்டுடியெடுத்துப்பார்த்தால் புத்திவருமா? ரஞ்சித் அவர்களே உங்கள் உழைப்புக்கு நன்றியோடு கரம் பற்றுகிறோம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
உண்மையில் இந்தத் வரலாற்றுத் தொடரைப் படிக்கும்போது திரு அமிர்தலிங்கம் அவர்களது நிலையை அறியமுடிகிறது. இங்குதான் உண்மைகளை அறிந்தவர்கள் அது எதுவாயினும் தயங்காது பதிவிடுவது தெளிவை ஏற்படுத்தும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அன்பார்ந்த நட்புடன் றஞ்சித் அவர்களுக்கு மிகச்சிறந்ததொரு செயலைச் செய்துவருகின்றீர்கள். எமது தலைமுறை அறியாத அரசியல் வரலாற்று நகர்வுகளையும், எமது அடுத்தலைமுறை அறிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய அரசியற் தந்திரோபாயங்களையும் கொண்டதாக இந்தத் வரலாற்று விரிப்புத் திகழ்கிறது. முழுமையடையும்போது இதனை யாழ்க்களம் சார்பாகப் பிரதியாக்கம் செய்து கைகளிற் கிடைக்கச் செய்தால் சிறப்பாக இருக்கும். நிதியை நாமே போட்டுச் செய்துவிடலாம். உங்கள் பொன்னான நேரத்துக்கு கரங்களை நன்றியோடு பற்றுகின்றேன். தமிழினம் கொண்டாடும் ஒரு வரலாற்று நாயகனின் காலத்தில் தமிழினத்திற்காக எதையுமே செய்யாது ஓடிவந்தோமே என்ற வருத்தமும் மேலெழுந்து வாட்டுகிறது. கருத்துகளைப் பதியாவிடினும் படிக்கின்றோம். தொடருங்கள்.... உழைப்பிற்கான பெறுமதியைக் காலம் பதிவுசெய்யும். நன்றி
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தன்னையும், தனது அடுத்தலைமுறையையும் அர்பணித்துவிட்டுத் தமிழரது மனமெங்கும் வாழும் வீரத்தலைவன் 'மேதகு' வே.பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்!
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். சிறப்பு. ஒவ்வொரு கட்டத்தையும் அதனுள் வாழ்ந்து செல்வதுபோல் எழுதியமையைப் பார்க்கும்போது கற்பனை என்று சொல்லமுடியாத அளவுக்கு நகர்கிறது. நிர்மலா கதிரவனது கூடலை வடித்தமை அந்தக்காலகட்டத்தைக் கடந்த 50 – 60ஐக் கடந்தோருக்கு கற்பனைக் குதிரைகளைப் பின்னோக்கிப் ஓடவிட்டு இரசிக்கும் வகையாகும். ஒரு பெரும் நாவலுக்கு நிகரான கனதியைத் தொட்டுநிற்கிறது. உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும். நேரம்கிடைக்கும்போது நிச்சயம் வாசிப்பேன்.கதைகள் மனிதர்களை மட்டுமல்ல காலத்தையும் மீட்கின்றன. வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக. நன்றி
-
திரும்பும் வரலாறு!
யஸ்ரின் அவர்களுக்கு, மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் படிப்போருக்கு ஆர்வமேற்படும் எழுத்துநடையோடு எழுதியமைக்கும், நேரத்துக்கும் பாராட்டுடனான நன்றி. இந்தக் கட்டுரையைப் படித்தபோது எனது மனதிற் தோன்றியதை பதிகின்றேன். யுத்தம் எப்போதுமே கொடுமைகள் சூழ்ந்த வயல்களாகவும் சாக்க்காடுகள் ஊடாக நகரும் பெரும் அரக்கனாகவும் தோற்றம்கொண்டு ஆடியபோதும். முடிவில் சமரசங்களை எட்டத்தவறவில்லை. ஆனால் மிகவும் சிறிய நாடான இலங்கைத்தீவில் போர்முடிவுற்ற 14ஆண்டுகளில், போர்காலம் தடுத்துவைத்திருந்த நில ஆக்கிரமிப்பும்,பண்பாட்டு அடையாள அழிப்புமாக வேகமாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத்தொடர்கிறது. ஏன்? இலங்கை அவளவு சக்திவாய்ந்த நாடா? அல்லது உலகின் செல்லப்பிள்ளையா? அல்லது உலகம் ஈழத்தமிழினம் அழிவதை விரும்பி மௌனித்திருக்கிறதா? நன்றி
-
வெள்ளித் தேரோட்டி...
நன்றி, யாழினது கம்பீரத்தைப் பாடும் அழகான கவிப்படையல். பல உறவுகளது உள்ளக்கிடக்கையும் கூட.
-
பூபதித்தாயே வணங்குகின்றோம்!
சுவி அவர்களுக்கு, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி
-
பூபதித்தாயே வணங்குகின்றோம்!
பூபதித்தாயே வணங்குகின்றோம்! வாழ்வுத் தேடலில் சுழன்றிடும் தாய்மையின் வரம்பினை உடைத்து வரலாற்றுத் தாயாகி தேசத் துயரினை நெஞ்சினில் ஏந்தியே பாசத் தாயாகிப் பசியேற்று நோன்பிருந்து தமிழீழத்து வெளியெங்கும் நிறைந்தாயே தாயே! நீதிக்காய் இன்னும் கண்திறக்கவில்லை என்று நீதியே சாவுக்குள் நிலையிழந்து கிடந்தாலும் நீதிக்காய் நீண்ட காத்திருப்பு நிச்சயமாய் ஒருநாள் பெருந்தீயாய் எழுகின்ற வேளைவரும் காலமதில் மாமாங்க முன்றலிலே ஒளிதோன்றும் தாயே! நின் பசிதீரும் அப்போது பகலாகும் தாயகமே நிழலரசை இழந்த இனம் நிலையரைசைக் கையேற்கும் எம் இளைய தலைமுறையோ தாயகனின் சிந்தனையை புதிய திசைவழியே பதியமிடும் காலமதில் நின் முகமாக நிலம் பூக்கும்! நிலம் பூக்கும் நீர் நிலைகள் வழிந்தோடும் பாவலரும் ஆடலரும் கூடியுந்தன் புகழுரைப்பர் தமிழீழப் பெண்களது தனித்துவத்தின் குறியீடாய் தமிழ் உலகு உள்ளவரை வாழும் புகழ்படைத்த எழுச்சியின் வடிவான பூபதித்தாயே வணங்குகின்றோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தையல்கடை.
சீட்டுக்காசு, கடைதிறத்தல், நிர்வகித்தல், ஊழியர்களின் செயற்பாடு, மேலாடையை எப்படி அளவெடுக்கும் தொழில் நுட்பம், ஊடல் கூடல் என ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் நகர்த்தியமை சிறப்பு. சுவியவர்களே பாராட்டுகள். யாழினது எழுதாற்றல் கொண்டோரில்,நீங்கள் மக்களது வாழ்வியலை படைப்பதில் தனித்தன்மையுடையவர். நன்றி
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
படைப்புக்குப் பாராட்டுகள் ! நரியார் எதையுமே இழக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் இழக்க ஏதுமில்லை. ஆனால், தன்மானத்தை இரந்தல்லவா ஒரு வடையைப் பெற்றிருக்கிறார். ஒரு வடையைவைத்தே பல வித்தைகளைக் காட்டக்கூடும். பார்வையாலேயே வீழ்த்தினனான் என்று ஒரு புரளியை எடுத்துவிட்டு விழுந்து விம்பத்தை தூக்கிநிறுத்தவும் கூடும். ஏனென்றால் அவளவு தந்திரமானவரல்லவா? மீண்டும் காகங்களுக்கு ஆப்பா?
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
தமிழ்சிறி அவர்களே சிறப்பு. பாராட்டுகள்!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் அவர்களே, அறிந்தவை அறியாதவை எனச் சிறப்பு. இளையதலைமுறை மட்டுமல்ல அனைவரும் வாசிப்பிற்குட்படுத்த வேண்டிய பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் பெட்டகமாக உள்ளது. தங்களின் சிறந்ததொரு செயற்பாட்டினை மிகப்பொருத்தமானதும் அவசியமானதுமானதொரு காலத்திற் செய்யும் தங்களை நன்றியுடன் பற்றிக்கொள்கின்றேன்.
-
நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் 2023இலும் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள். ரணில அரசுத்தலைவராகச் சிறுசிறு சலசலப்புகளோடு தொடர்வார். தமிழ்த் தலைமைகள் நம்பினோம் ஏமாற்றிவிட்டார்கள் என்று கைவிரிப்பர். வட-கிழக்கிலும், தெற்கிலும் புதிய அரசியற் கூட்டுகள் உருவாகும். இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமடைவதோடு நாடு மேலும் பலவீனமாகும். உலகெங்கிலும் பொருண்மிய மந்த நிலை தொடரும். ருஸ்ய – உக்ரேன் போர் தொடரும். கிரிமியா உக்ரேனிடம் வீழுமானால் போர் முடிவுக்குவரும் தொடக்கப் புள்ளியாகும். இந்தியாவில் இந்துத்வாவும் தமிழகத்தில் திராவிடமும் கோலோச்சும். பலஸ்தீனர்கள் மீது கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும். ருஸ்யா - சீனா - இந்தியா - துருக்கி ஆகியன தமது பொருண்மிய நலன்நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பர். இது பலமடைந்தால், மேற்கின் பொருண்மியச் சமநிலையுட்படப் பங்குச் சந்தைகளில் தாக்கமேற்படும் உலகிற் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து நசுக்கப்படும். யேர்மனியில் வலதுசாரிகளின் பலம் அதிகரிக்கும்.ஊதிய உயர்வு கிடைக்காது.