Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. கும்பழாவளை விநாயகர் ஆலயம் அளவெட்டி
  2. Movie : Kanni Thaai, Sung By : T.M.Soundararajan, Music : K.V.Mahadevan கேளம்மா சின்னப்பொண்ணு
  3. ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய தடைக்கு தடைக்கு பறையும் கெடக்குது சிவன் பாடல்ஈழத்து சிவன் ஈழத்துச் சிதம்பரம்சிவதாண்டவம்
  4. கணேசனை காண விழையுதடி நெஞ்சம் கருணை புரிய இங்கு வருவானோ மானிப்பாய் மருதடி பிள்ளையார்
  5. பாடல்: மலை சாய்ந்து போனால் படம்: கார்த்திகை தீபம் பாடியவர்: “இசையரசர்” டி.எம்.எஸ் இசை: ஆர். சுதர்ஸனம் பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு மலை. சாய்ந்து போனா~ல்| சிலை.யா..~கலாம் - இந்த மனம்~ சா..ய்ந்து போ..~னால் என்ன செய்யலா.~.~.~ம் மலை.~ சாய்ந்து போனா~.~ல்| சிலை.யா..~கலாம் - இந்த மனம்~ சா..ய்ந்து போ..~னால் என்ன செய்யலா.~.~.~ம் மலை.~ சா..ய்ந்து போ...னா~ல்| சிலை.யா..~கலாம்
  6. திருவடி சரணமையா துதிக்கையான் திருவடி சரணமையா துதிக்கையான் மருதடியில் அமரும்.. மானிப்பாய் மருதடி பிள்ளையார்
  7. ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து..... ஒழுக்கம் பார்த்து, மரியாதை பார்த்து, படிப்பு பார்த்து, பண்பு பார்த்து, குலம் பார்த்து, குடும்பம் பார்த்து, எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்..... நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது... திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை, இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ... சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க.... இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்....... அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!... மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,.... பின் கணவனுக்கு பறிமாறல், கை கழுவ தண்ணீர் தருதல், அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு, எப்போதும் மகனுடனே இருப்பது, மகனும் அவளுடனே இருப்பது என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்.... இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது, துணி துவைப்பது, காத்திருப்பது, கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??...... அவன் என் மகன், முதல் உரிமை எனக்குதான், என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?..... என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்...... அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது இதை எப்படி சரிசெய்வது?.... இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,.... திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்...... அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!..... ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது.... இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது... Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்.... அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்.... பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்....... அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்.... அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன் அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்.... உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....
  8. அன்னை பிதாவே அகிலமென்று உனக்கு வண்ண மாம்பழம் பெற்ற வாரணன் சரணம்
  9. சலனமில்லாத_மனம் ஒரு நாள் விவசாயி ஒருவர் தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை. நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது , அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்." என்றார். சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் . சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன்!" என்றான். விவசாயியும், "சரி! போய் தேடிப்பார்" என்றார். மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான். அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார். "நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து 'டிக் டிக்' சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான். அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.
  10. துதிக்கை தூக்கி ஆடையா துதிக்கையால் துதிக்கும்.. ஈழத்துப் பாடகர் சாந்தன் அவர்களின் கணீர் குரலில் ஒரு இனிமையான ,காரணவாய் பிள்ளையார் பாடல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.