Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. அபூர்வமாக பேசுபவர்களை அல்ல...! பொறுமையோடு காது கொடுத்து கேட்பவர்களை இவ்வுலகம் விரும்புகிறது..!
  2. ஒரு குட்டிக்கதை ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார். குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர். மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது. ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார். சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை. செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி. ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர். “”ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள். தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார். ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர். மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர். திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர். சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது. சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?” “”அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு. “”உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?” “”என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர். எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.😄
  3. சித்திரை தேர் ஏறும் சித்தி விநாயகா பக்த்தர்கள் பவனிவரும் நெடுந்தீவு நெழுவினி பிள்ளையார் பாடல். பாடல் - எஸ்.ஜி.சாந்தன் வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - இசைப்பிரியன்
  4. Titel Paravaigal Palavidham Interpret T. M. Sounderarajan Album Iruvar Ullam பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
  5. ஒருவன் என்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள் என அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்.. அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான். என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள் என்றானாம். உடனே அனைவரும் வரிசையாக நின்றனர். வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது. அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன். அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்.. ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும் என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான். முதலில் நின்றவர் "இங்கு என்ன நடக்கிறது" என்று ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என்று சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார்.. இப்படியே முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக்கொண்டார்கள். இப்படியே யாருமே உதவிகள் பெற வரவே இல்லை.... இதுதான் மனிதர்களின் மனோபாவம்.
  6. எப்ப பாரு Facebook லையே இருக்கியே உனக்கு வேலை வெட்டியே இல்லையா .. தம்பி, புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது.. ஒருநாள் நீ வந்து பாரு .. ஒரே ஒரு நாள் Facebook ல நீ இருந்து பாரு அப்ப புரியும் எங்க வலி என்னனு .. எவ்வளவு post எவ்வளவு டென்ஷன் எத்தனை லைக் எத்தனை கமெண்ட் எத்தனை ஷேர் எத்தனை சண்டை எத்தனை பஞ்சாயத்து எத்தனை கெஞ்சல்கள் எத்தனை கொஞ்சல்கள் இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும் ... கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும் திருமண நாள் வாழ்த்து சொல்லனும் அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்.. இது இல்லாமல் டிரெண்ட்னு வரும் வாரம் ஒரு வாட்டி.. அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்.. பெண்கள் தினம், குழந்தைகள் தினம், சிட்டுக்குருவி தினம் வரை வரும் அதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லனும்.. என்னா ச்சும்மான்னு நினைச்சிருக்க போல தம்பி நீங்க.. இது இல்லாம புரபைல் பிக்சர் போட்டா . இல்லன்னா..வாய்பிளந்து "wow" Enna panra தினமும் கேட்கனும்.. அவங்க மூஞ்சி சுமாரா இருந்தாலும் Wow , nice , super , excellent, beautiful வாய் கூசாம பொய் சொல்லனும்.. பெண்ணியம் பேசனும் ஆணியம் பேசனும்.... அடிக்கடி "செம்ம"ன்னு போடனும். முக்கியமா லைக் போடனும். எல்லா தோழிக்கும் friend request கொடுக்கனும்.. கொடுத்து ஆறு மாசம் கழிச்சு தான் accept பண்ணுவாங்க .. அத தொலை நோக்கு பார்வையோட handle பண்ணனும்... பங்காளி,மாமா மச்சி அக்கா தங்கச்சி அண்ணன் தங்கச்சி தோழா தோழின்னு உறவுமுறை வைத்து கமென்டு போடனும். பல்சுவையா எழுதனும், அதுக்காக பல்இளிச்சுரக்கூடாது,அசிங்கமா போய்ரும். முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும் .... பங்காளின்னு சொல்லிட்டு, நம்மலயே காலிபண்ணுவாங்க, அவங்களையும் பாத்து வச்சிக்கனும். கட்சிய,கட்சிக்காரன திட்டுனா..ஃபேக் ஐடில போகனும்..அவனுகள திட்டனும். எதையும் வந்து பார்த்தான் யா தெரியும் எங்க கஷ்டம்
  7. பதினாறும் நிறயாத பருவ மங்கை Yanai Paagan T. M. Soundararajan K. V. Mahadevan பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை பதினாறும் நிறையாத பருவ மங்கை
  8. சந்திரகுப்த சாணக்யா ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். சி. சாச்சி (எஸ். சி. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்
  9. சாவையூர் அந்திகுழி ஞானவைரவர் கோவில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.