நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,,
எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள்
மைனா விசில்
இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால்
அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ..
அம்மம்மா குழல்
இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறும் பொழுது மாடு கத்துவது போன்ற ஒரு சத்தம் வரும் ,சிறுவர்களாக இருக்கும் பொது ஒரு ஜாலியாத்தான் இருக்கும்
வீட்டில் இரண்டு பேர் சிறுவர்கள் இருந்தா காதே அடைக்க ஊதுவோமில்ல ,,உங்கள் அனுபவம் எப்புடி..
இழுவை விசில்..
இதுவும் ஒரு அருமையான விளையாட்டு பொருள்
இதுவும் ஒரு போல்பெயின்ட் பேனை அளவில் உள்ள குழல் ,
அதில் ஒரு முனை வாயில் வைத்து உதவம் ,மறுமுனை,கீழ்ப்பக்கம்
உள்ள குழாயின் ஓட்டை வழியே ஒரு சிறு கம்பி வெளியில் நிண்டு ஒரு வளையம் போல் ,அதாவது மோதிரம் போல் வளைத்து விடப்பட்டிருக்கும் அந்த வளையத்தில் விரலை விட்டு மேலும் கீழும் இழுக்கும் பொழுது விசிலயும் ஊத விசிலின் சத்தமும் ஏறி இறங்கி
ஒரு விதமான சத்தம் வரும் ..........
என்ன இருந்தாலும் இவைகள் ஒன்றை அந்த திருவம்பா பத்து நாட்க்களில் ஒன்றாவது வாங்கணுமென்று அடம் பிடிப்பம் இதற்காக பல தியாகங்கள் செய்ய வேண்டும்
வீட்டு வேலைகள் ,ஆட்டுக்கு குழை முறிக்கனும் வாழைக்கு தண்ணி பாச்சனும் அப்பப்பா எத்தனை கொடுமைகளின் பின் ,அதுவும் கிடைக்குமா,,திருவெம்பா முடிஞ்சிடுமா ,,முடிஞ்ச பின்னர் கனவுகள் வந்து கத்தி எழும்பி அழுற சீன் ..
இப்ப இத்தோட நிப்பாட்டுறன் ....