Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை சொல்வதற்கென்று பல இடக்குறியீடுகள் காணப்படுகின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குவது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை. 1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையின் திறப்பு விழா பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்டது காங்கேசந்துதொழிற்சாலை ஒரு காலத்தில் தமிழ் மக்களின் மகத்தான பொக்கிசமாகத் திகழ்ந்தது. யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது. ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தொழில் முடக்க நிலை ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி மாவிட்டபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்கள் சூனியப்பிரதேசங்களாகின. குறித்த காலப்பகுதியில் இப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய இலங்கை இராணுவம் சீமெந்து தொழிற்சாலையை கையகப்படுத்தியது. அன்றில் இருந்து இன்று வரைக்கும் தொழிற்சாலையினுள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளின் பின்பு அண்மையில் உயர்பாதுகாப்பு வலயங்களின் கீழிருந்த பல பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்பட்டனர். அவர்களது வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற போதும் மூடப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையின் கதவுகள் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. இவ்வாறு மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற சீமெந்துத் தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் காலத்திற்குக்காலம் முன்னெடுக்கப்படுவதான செய்திகளையும் அறிய முடிகிறது. 2008 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனம் ஒன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை பொறுப்பேற்று மீள ஆரம்பிக்கப் போவதான அறிவிப்புக்கள் வெளிவந்தன. இவற்றிற்கான ஆவணக் கையெழுத்துக்களும் இடப்பட்டதாகவும் தொழிற்சாலையினை புனரமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. எனினும் அந்த முயற்சி தள்ளிப்போனது. இதனைத்தொடர்ந்து 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் அதன் ஏனைய பங்குதாரர்களும் இணைந்து தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான தமது நல்எண்ணத்தை தெரிவித்தனர். இதற்கான பெறுமதியாக சுமார் 1.5 பில்லியன் ரூபா முதலீடு மதிப்பிடப்பட்டது. எனினும் குறித்த பேச்சுவார்த்தை வெற்றி அடைய வில்லை. ஆனாலும் இந்தியா சீனா சவுதிஅரேபியா உட்பட்ட சில நாடுகள் முதலீட்டு அடிப்படையில் சீமெந்துத் தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கு முன் வந்தன. இவற்றிற்கான நிதி முதலீடாக சுமார் நான்காயிரம் கோடி ரூபா வரை மதிப்பிடப்பட்ட போதும் செயலளவில் எவையும் வெற்றி பெறவில்லை. இவற்றின் தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அப்போதைய கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் சீமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் உட்பட தமிழ்த் தலைவர்களோடு யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து தொழிற்சாலையயை மீள ஆரம்பிப்பதற்கான முடிவுகள் உறுதி செய்யப்பட்டதுடன் சீமெந்து தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளையும் ஆராய்ந்தனர். ஆனால் இன்றுவரை அந்தத் தொழிற்சாலையின் கதவுகள் மீளத் திறக்கப்படவில்லை. இவ்வாறாக தொடர்ச்சியாக இயக்கமற்ற நிலையில் காணப்படுகின்ற தொழிற்சாலையின் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் அதன் மூலமாக சட்டவிரோதமான செயற்பாடுகள் நிகழ்த்தப்படுவதாகவும் செய்திகள் பரவியுள்ளன. பொதுமக்கள் உள்நுழைய முடியாத உயர்பாதுகாப்பு வலயத்தினை சாதகமாக்கிக்கொண்டு தொழிற்சாலையிலுள்ள பாரிய இரும்பு உலைகள் பீப்பாய்கள் இயந்திரப்பாகங்கள் மற்றும் இரும்பு உபகரணங்கள் ஆகியவை வெட்டி அகற்றப்பட்டு பழைய இரும்பு விற்பனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற சுமார் 1.8 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தில் கொள்ளுப்பிட்டியில் அலுவலக கட்டத்தொகுதி ஒன்று அமைக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது. 👍🔔
  2. கொட்டுங்கடா மேளதாளம் கணபதியாட அந்த கொட்டாவடியான் வந்து நின்று தக திமி ஆட அந்த கொட்டாவடியான் வந்து நின்று தகதிமியாட கொட்டுங்கடா மேளதாளம் கணபதியாட அந்த கொட்டாவடியான் வந்து நின்று தக திமி ஆட
  3. அகர முதல எழுத்தெல்லாம் ஏடெடுத்து ஊட்டி இகபர சுகங்கள் அருளும் நெல்லண்டை தாயே 🙏🏾
  4. அடடாகாசமான நடிப்பு கண்கள் மட்டும் நடனம் புரியுது 👌👌👌
  5. நெல்லண்டை எனும் நேர்மையுள்ளூர் தம்பதியின் நெல்லிமர நிழலில் நின் கணவருடன் நின்று அல்லும் பகலும் உன் அடிபரவும்
  6. இது என்ன? பழம் ,மாம்பழமா ?பாத்தா குருவிச்சம் பழம் போல தெரியுது...
  7. தும்பளை நாயகியே பத்திரகாளியே தும்பளை நாயகியே பத்திரகாளியே உன் அருள் வெள்ளம் பொங்கட்டுமே தும்பளை நாயகியே பத்திரகாளியே
  8. தமிழீழ தேசிய வானொலியாக தாய் மண்ணில் இருந்து ஒலித்த புலிகளின் குரல் வானொலி 21ஆம் நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ் குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்து வாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வலையில் புலிகளின் குரல் வானொலி இயங்கியது. அதாவது “ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கி ஒலிக்கவேண்டும்!” என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது. தமிழ்மக்களின் விடுதலையினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் புலிகளின் குரல்வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஊடாக மக்களுக்கான கருத்துக்கள் முன்னெடுத்து வைக்கப்படட ஒரு வானொலியாகும் . அந்தவகையில்தான் தமிழ்மக்களின் கலை கலாச்சாரத்தையும் தொன்மையினையும் வரலாறுகளையும் பன்னாடுகளின் வரலாறுகளையும் எடுத்துக்கூறும் பல்வேறு நிகழ்சிகள் வானொலியில் இடம்பெற்றன. இவ்வாறு யாழ்ப்பாணத்தை 1995 ஆம் ஆண்டு சூரியக்கதிர் படைநடவடிக்கை மூலம் வல்வளைப்பு செய்த சிறிலங்காப் படையினர் அங்கிருந்த ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஒர் இரவில் வெளியேற்றினார்கள், இந்தவேளையில் மக்களிற்கான ஒர் ஊடகமாக புலிகளின் குரல் செயற்பட்டுக்கொண்டிருந்த , ஒலிபரப்பு நிலையத்தினை இடம்பெயர்த்துக்கொண்டு ஓர் நாள் கூட இடைநிறுத்தாது பனைமரங்களிலும் பாரிய உயரமரங்களிலும் தனது கோபுர செயற்பாடுகளை மேற்கொண்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கான ஊடகமாக செயற்பட்டுக்கொண்டிருந்த வேளையில் யாழ்பாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துசெயற்பாடுகளும் வன்னிக்கு மாற்றப்படுகின்றது இந்நிலையில் கிளிநொச்சிப்பகுதிக்கு புலிகளின் குரலின் நிறுவன செயற்பாடுகள் மாற்றப்படுகின்றன. கிளிநொச்சிப்பகுதியில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல், சிறிலங்காப் படையினரின் வல்வளைப்புகாரணமாக மக்களும் வானொலியும் இடம்பெயர்ந்து மாங்குளம் பகுதியில் சிறிதுகாலம் இயங்குகின்றது. அப்படிப்படட புலிகளின் குரல் வானொலியில் அன்றொருநாள் இடம் பெற்ற ஒரு சிறு பதிவு ,
  9. துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.