Everything posted by வாத்தியார்
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
தேசிய பட்டியலில் கிடைத்தது ஒன்று எதற்கு இரண்டிற்கு அடிபிடி இவருக்கு நாட்டு நடப்புத் தெரியாதா
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு தனது அப்புக்காத்து வேலையை மட்டுமே செய்ய உள்ளதால் மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
அனுர என்ற தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனை என்பது ஒன்றாகவும் அவர் தங்கியிருக்கும் அமைப்பின் சிந்தனை என்பது வேறாகவும் அவர் சார்ந்த ஒட்டு மொத்த மக்களின் சிந்தனை என்பது இன்னுமொரு வேறுபாடாகவும் இருக்கலாம். இந்தச் சிந்தனைகளில் பலதோ அல்லது ஓர் சிலதோ ஒரு இடத்தில் சந்திக்கும்போது ஒரு தீர்வுக்கு அவர்கள் வரலாம். ஆனால் அந்தத் தீர்வு என்பது அவர் சார்ந்த ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாக இருக்காவிட்டால் அது அவருடைய இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் . ஆகவே அவர் வழங்கும் தீர்வு என்பது அவர் சார்ந்த ஒட்டுமொத்த மக்களின் விருப்பமானதொரு தீர்வாகவே இருக்க வாய்ப்பு இருக்கலாம். ஆகவே தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இலவு காத்த கிளியின் நிலைகுத் தள்ளப்படலாம்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கட்டாயம் அவர் தான் தேசியப்பட்டியல் மூலம் செல்வார் அவருடைய கட்சி தான் இந்த முடிவை எடுக்கும். ஆனாலும் அந்தக் கட்சிக்காரர்கள் அல்லது முடிவை எடுத்தவர்கள் யார் என்று மட்டும் கேட்கக்கூடாது அப்படிக் கேட்டால் சுமிக்கு கேட்ட கோபம் வரும்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பையன்.... நான் அறிந்தவரையில் அரசியலில் ஒருவரை நம்புவது என்பது சரியானது அல்ல. மக்களின் தேவையறிந்து அவற்றை யார் நிறைவு செய்கின்றார்களோ அவர்களே மக்களின் தெரிவிலும் முன் நிற்பார்கள். இது காலத்துக்கு கால வேறுபாடும். மக்களின் அன்றைய தேவையைப் பொறுத்த உள்ளது.🙂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜீ இப்படி எங்களையெல்லாம் நையாண்டி செய்தால்..... ஏழு பைத்தியங்கள் இங்கே உலாவுகின்றன😎
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை பையன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சென்ற தேர்தலில் மாபெரும் தவறை இழைத்தவர்கள். கிழக்கில் இருந்து ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைச் செய்யாதவர்கள் மக்கள் காத்திருந்து பதில் சொல்லியுள்ளார்கள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனி மற்றவர்கள் எதைக் கேட்கின்றார்கள் என்பதை ஆராயவேண்டிய அவசியமில்லை மக்களே தீர்மானித்து விட்டார்கள் இதை கடந்த அரசாங்கங்களின் முன்னிலையில் தேர்தலுக்கு முன்னரே சுமந்திரன் ஐயா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனப்பிரச்சனைக்கு முன்னர் வகுப்பு வாதம் களையப்பட வேண்டும் தொழில் ரீதியான வேறுபாடுகள் களையப்பட வேண்டும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் இப்படி நிறையவே தங்களுக்குள் தீர்க்கப்படாத அவலங்களை தேசியம் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொண்டு இனப்பிரச்சனைக்கான தீர்வை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது .இதுவரை எந்த ஒரு மேட்டுக் குடி அரசியல்வாதியும் யோசிக்கவில்லையே
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில், அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது . அங்கிருக்கும் மக்கள் தயார் நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதுவரை வெளி வந்த வாக்குக்களின் எண்ணிக்கை அடிப்படையில் திசை காட்டி முன்னிலையில் இருந்தாலும் இனி வரும் முடிவுகள் திசை காட்டிக்குப் பெரும் அளவில் உதவாது ஆனாலும் தேசிய பட்டியலுக்கு உதவலாம் கிட்டத்தட்ட 50 விகித வாக்குகள் திசை காட்டிற்கு கிடைக்கலாம் சுமந்திரனின் அரசியல் தமிழர்களை ஒரே நாடு ஒரே மக்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது😧
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை .🙏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது ஒரு ஊடகவியலாளரின் FB நம்பகரமானது 👍
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழில் தபால் மூல வாக்களிப்பு திசைகாட்டி முன்னிலை. ஊசி, மான், வீடு, சைக்கிளுக்கு பலத்த போட்டி ஊசி சில நிலையங்களில் இரண்டாமிடம்.FB´.
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
யாழ்ப்பாணத்தில் 50 வீத வாக்குகளும், கிளிநொச்சியில் 46 வீத வாக்குகளும் முல்லைத்தீவில் 50 வீத வாக்குகளும் பதிவாகி உள்ளது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஆமாம் மாவட்ட ரீதியில் 5விகிதத்திற்குக் கீழே வாக்குக்களைப் பெற்ற குழுக்களின் வாக்குக்களே வெட்டப்படும் அது மட்டுமல்லாமல் அவர்கள் தோல்வியடைந்தவர்களாக வெளியேற்றப்படுவார்கள் . அத்துடன் செல்லுபடியாகாத வாக்குகளும் அடங்கும்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இது கடந்த தேர்தல் காலத்தின் பொது வந்த காணொளி ஐயா🙏 யாழ் மாவட்டத்தில் ஏழு உறுப்பினர்கள் தெரிவு என்றதைத் தவிர மற்றவை எல்லாமே சரி
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அந்தப்பக்கம் கந்தப்பு அண்ணை விளக்கமாக எழுதி உள்ளார் பார்க்கவில்லையா 😂 யாழ் மாவட்டத்தில் கூடுதலான வாக்குகளை பெற்றவர்களுக்கு போனஸ் 1 போக பின்னர் செல்லுபடியான வாக்குகளில் இருந்து 5 வீதத்திற்கு குறைவாக எடுத்த குழுக்களின் கடசிகளின் வாக்குகளை விலத்தி விட்டு மிகுதி வாக்குகளை ஐந்தாகப் பிரித்து வென்றவர்களைத் தெரிவு செய்வார்கள் மேற்படி கருத்துக் கணிப்பில் கிடைத்த வாக்குக்களை லட்சம் என்ற நோக்கில் பார்த்தால் சைக்கிள் 150.௦௦௦ அனுரா 140,௦௦௦ வீடு 130.000 ஊசி 70.௦௦௦ மொத்த வாக்குகள் 490.000 490,௦௦௦ இன் 20 விகிதம் 98.௦௦௦ ஆக ஒரு வேட்பாளரின் வெற்றிக்காக 98.000 வாக்குகள் கிடைக்க வேண்டும் அப்படி இல்லாத வகையில் அந்த எண்ணிக்கையினை நெருங்கிய வகையில் யாரிடம் வாக்குகள் உள்ளதோ அவர்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் உறுதி செய்யப்படுவார்கள் 150.000-98.௦௦௦ 42.௦௦௦ என்ற வகையில் குட்டிக் கழித்து வரும் பொது 98.௦௦௦ என்ற எண்ணிக்கையை நெருங்கி இருக்கும் சார்பிற்கும் ஒரு உறுப்பினர் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது அங்கே தான் எங்கள் நாயகன் அர்ச்சுனா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது எல்லாமே கோஷானின் யாழ் கள கருத்துக்கு கணிப்பின் மூலாதாரமாக கிடைத்ததே🙏
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
TNPF இன் வாக்கு வாங்கி நிரந்தரமானது எந்தக் கட்சியாலும் பிரித்தெடுக்க முடியாது எனக் கூற முடியாது. இன்றைய நிலையில் சுயேட்சைக் குழுக்களால் சில ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட இருக்கின்றன. அதன் தாக்கத்தினால் குறைந்தது ஒரு வேட்பாளர் வெல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விகிதாசார முறைப்படியான தேர்தல் என்பதால் இப்போதும் இந்தக் கணிப்பின்படி அனுரவின் பக்கம் ஒரு அங்கத்தவர் தான் தெரிவு செய்யப்படுவார்😊
-
யாழ் களத்தில் புதுவரவு
வணக்கம் செவ்வியன் வாங்கோ🙏
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
மன்னிக்கவும் உறவுகள்🙏 குழப்பி விட்டேன்😙 இன்றைய நிலையில் யாழ் கள வாக்கெடுப்பின் தரவுகளின் படி சைக்கிள் 3 ஒரு வீடு 1 ஒரு திசை காட்டி 1 ஒரு ஊசி 1 என்ற நிலை தான் காணப்படுகின்றது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
உண்மை இதை நான் கவனிக்கவில்லை அர்ச்சுனா அல்லது அனுர உள்ளே இல்லை நன்றி கந்தப்பு அண்ணை
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இப்போது 48 members have voted எனக் காட்டுகின்றது ஆனால் கட்சிகளுக்கு 39 வாக்குகள் கிடைத்திருக்கின்றது நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் அவற்றை செல்லாத வாக்குகளாக சேர்த்துக் கொள்ளலாம் 😂
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அங்கத்தவரையும் இன்றையநிலையில் வாக்காளர்களின் தெரிவின்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3 அங்கத்தவர்களையும் தமிழரசு 2 அங்கத்தவர்களையும் அனுர மற்றும் அர்ச்சுனா தலா ஒரு அங்கத்தவரையும் பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்றார்கள்