Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11533
  • Joined

  • Days Won

    15

Everything posted by வாத்தியார்

  1. என்னது இன்னும் குறைவான ஓட்டங்களா அது எப்படிச் சாத்தியப்படும் ஒரு அணி பந்து போட மற்றைய மட்டை அடி வீரர்கள் எல்லோரும் கவிழ்ந்து குப்பிறப் படுத்திருந்தால் 😧தான் இனி அந்த நிலைமைக்கு வரலாம் எந்த அணி அந்த நிலையில் இருக்கின்றது பையனுக்குத்தான் இந்த விளக்கம் எல்லாம்தெரியும்😁. இந்த விளையாட்டுக்கு நான் வரேல்லை😂
  2. துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்
  3. 30 பந்து எல்லாம் தேவை இல்லை என நினைக்கின்றேன் 19 பந்துகளில் ஓமான் 52 ஓட்டங்கள் கொடுத்து விட்டன
  4. அமெரிக்கன் தாத்தாக்கு என்ன பிரச்னை இப்ப😂 நான்தான் ஒமானைப் போட்டது 🤣 கந்தப்பு அண்ணை எனக்கு முதல் உகண்டாவைப் போட்டிருக்கிறார் கொப்பி அடிச்சிருக்கலாம்😅
  5. எப்போதுமே கள நிலைமைகள் சர்வதேசத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லையே . ஒரு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்கள் அடுத்த முறை பயங்கரவாத அமைப்பு என தடையும் செய்யாமல் இல்லை. சொல்ல வேண்டிய தருணங்களில் சொல்லியே ஆக வேண்டும். கொள்கையில் உறுதி இல்லாத அரசியல்வாதிகள் இருக்கும் தமிழ் இனத்தில் மக்களாவது கொள்கைப் பிடிப்புடன் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்வதில் தவறில்லையே.
  6. சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் சொல்லும் செய்தி உறுதியானதாக இருக்க வேண்டும் :அதைச் சொல்வதற்கான நேரம் ஜனாதிபதி தேர்தல் தான் பொது வேட்பாளர் என்பது காலத்தின் கட்டாயம்: சுமந்திரன் எதையும் கூறலாம்: ஆனாலும் முடிவு மக்களின் கைகளில் உள்ளது: மக்கள் நம்பும் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தால் சுமந்திரன் இருக்கும் இடம் தெரியாமல் செல்லும் காலம் வரும்: கை மாறும் பெட்டிகள் கனமானதாக இருக்கும்நேரம் எல்லாம் சுமந்திரன் இப்படி ஊழையிடுவது வழமை.
  7. போட்டியை திறம்பட நடத்தி உற்சாகமான முறையில் முடிவுகளை அறிவித்த சகோதரன் கந்தப்பு அவர்கட்கும் போட்டியில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் போட்டியில் வென்ற கிருபன், நிழலி மற்றும் பிரபா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்
  8. அப்படியென்றால் இங்கே நின்று சுமந்திரனுக்கு காவடி தூக்குவது எதற்காக ?
  9. தேவை ஏற்படின் ஒரு பிரேரணையை முன்வைத்து அவரைக் காலி பண்ணலாம் என்று யோசிக்க வேண்டாம் எல்லாரும் அன்றே எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவி்த்து விட்டீர்கள் .... எதிர்க்காமல்....
  10. இல்லை மிகுதி 80% இல் 20 % வெளிநாட்டவர்களுக்கு அதிக சலுகை கொடுக்கக் கூடாது எனும் பகுதி. ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் ஒரு 20 % வெளிநாட்டவர்களை தங்கள் அடிமைகளாக நினைத்து அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த நினைப்பவர்கள். அதனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம் மிகுதி 20 வீதத்தினர் வெளிநாட்டவர்கள் தங்களைவிடப் பொருளாதாரத்தில் முன்னேறுவதை பிடிக்காதவர்கள் . அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் 20 வீதமானவர்கள் நித்திரை போல நடிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே வெளிநாட்டவர்களுக்கு எதிராகப் பேசிக்கொள்வார்கள் நல்லவர்களை போல நடித்துக் கொண்டிருப்பார்கள் . நேரம் வரும்போது AFD எனும் கட்சியை விடப் பலமடங்கு துவேசத்தைக் காட்டுவார்கள் . ஆனாலும் அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்
  11. இந்த ஐரோப்பியர்களைக் காலம் காலமாகக் காப்பாற்றும் கனேடியர்களும் அமெரிக்கர்களும் வானத்தில் இருந்து குதித்தவர்களாக்கும்
  12. இங்கே ஜெர்மனியியில் AFD எனும் இனவாதக் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது- ஒரு காலத்தில் மலேசியா சிங்கப்பூர் எனக் குடியேறி அல்லது பலவந்தமாக குடியேற்றப்பட்டு அங்கு குடித்தனமாக வாழ்ந்து ஒய்வு காலம் வந்தபோது குறிப்பிட்ட தொகை மக்கள் இலங்கை திரும்பியிருந்தார்கள் . அந்த மாதிரி இனி வரும் காலத்தில் ஒரு தொகை மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் காலம் விரைவில் வரும். அதற்கு இந்த இனவாத ரீதியான கட்சிகளின் ஆக்கரமிப்பும் ஒரு காரணமாக இருக்கும் .
  13. மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ! by Web EditorJune 9, 20240 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் பிரதமர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் அமித்ஷா நிதின் கட்காரி ஜே.பி.நட்டா சிவராஜ் சிங் சவுகான் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் மனோகர் லால் கட்டார் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி பியூஷ் கோயல் தர்மேந்திர பிரதான் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங் சர்வானந்த சோனாவால் வீரேந்திர குமார் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு பிரகலாத் ஜோசி ஜூவல் ஓரம் கிரி ராஜ் சிங் அஸ்வினி வைஷ்ணவ் ஜோதிராதித்ய சிந்தியா பூபேந்தர் யாதவ் கஜேந்திர சிங் ஷெகாவத் அன்னபூர்ணா தேவி கிரண் ரிஜிஜூ ஹர்தீப் சிங் புரி மன்சுக் மாண்டவியா ஜி.கிஷன் ரெட்டி லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் சி.ஆர்.பாட்டீல் இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு: ராவ் இந்திரஜித் சிங் ஜிதேந்திர சிங் அர்ஜுன்ராம் மேக்வால் சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி இணை அமைச்சர்கள்: ஜித்தன் பிரசாதா சிரிபத் நாயக் பங்கஜ் சவுத்ரி கிருஷ்ணன் பால் குர்ஜால் ராம்தாஸ் அத்வாலே நித்யானந்த் ராய் அப்னா தள கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா படேல் சோமன்னா பெம்மசாணி சந்திரசேகர் எஸ்.பி.சிங் பாகேல் சோபா கரந்லாஜே கீர்த்தி வர்தன் சிங் பி.எல்.வெர்மா சாந்தனு தாகூர் கமலேஷ் பாஸ்வான் பண்டி சஞ்சய்குமார் அஜய் தாம்தா எல்.முருகன் சுரேஷ் கோபி ரன்வீத் சிங் பிட்டு சஞ்சய் சேத் ரக்‌ஷா கட்சே பாகிராத் சவுத்ரி சதீஷ் சந்திரடூபே துர்கா தாஸ் உய்கி சுகந்தா மஜும்தார் சாவித்ரி தாக்கூர் டோக்கான் சாவ் ராஜ் பூஷன் சவுத்ரி பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஹர்ஸ் மல்ஹோத்ரா நிமுபென் பாம்பனியா முரளிதர் மொஹோல் ஜார்ஜ் குரியன் பபித்ரா மார்கரீட்டா https://news7tamil.live/modi-3-0-who-are-the-union-ministers-full-list-here-it-is.html
      • 1
      • Like
  14. 2026 தான் இலக்கு” – தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி! by Web EditorJune 9, 20240 தவெகவிற்கு 2026 தான் இலக்கு எனவும், ஜூன் 18-ம் தேதி சென்னையில் தவெகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி உண்மையல்ல எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “விஜய்யின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும். அதன் பின்னர் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் விஜய்யின் கட்டளை. அதை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும். விஜய் கூறியவாறு 2026 தான் நமது இலக்கு. 2026 இல் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும். நாம் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம். நம்முடைய மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். பொதுமக்கள் பிரச்னையில் முன்னுரிமை கொடுத்து அவற்றை தீர்ப்பதற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறூ பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவது குறித்து தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. அவசரப்பட வேண்டாம். தமிழக வெற்றிக் கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. அடுத்ததாக நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18-ம் தேதி கூட்டம் என்று கூறவில்லை. இது எப்படி வெளியானது என்று தெரியவில்லை. 2026-ம் ஆண்டு தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கனவே தலைவர் விஜய் அறிவித்து விட்டார்” இவ்வாறு தெரிவித்தார். https://news7tamil.live/2026-is-the-goal-dwega-general-secretary-bussi-anand-interview.html
  15. என்ன நடக்கின்றது இந்த முறை கிரிக்கெட் T 20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஆரம்பமான நிலையில் பலரும் எதிர்பார்த்த மாதிரியே ஸ்ரீலங்கா அணி இரண்டு விளையாட்டுக்களில் தோல்வி . அடுத்து இலங்கைக்கு இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியும் இரண்டாவது விளையாட்டில் அவுஸிடம் தோல்வியடைந்ததது. யாரும் எதிர்பாராத அமெரிக்க அணி முதல் இரண்டு விளையாட்டுக்களிலும் வெற்றி- அவுஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தாங்கள் விளையாடிய இரு விளையாட்டுக்களிலும் வெற்றி, இருந்தாலும் இன்னும் சில விளையாட்டுக்கள் இருப்பதால் இன்றைய நிலை நாளை மாறும் என்பதைப்போல எல்லா அணிகளும் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றார்கள் .😂
  16. எப்பவுமே இருக்கிற இடம் தெரியாமல் இருந்திட்டுப் போயிடனும் பிரச்சனையேயில்லை 🤣
  17. அது சரி இவருக்கும் கிரிக்கட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்கா அமெரிக்காவில் ஏதாவது கிளப்புக்களை வாங்கி வைத்திருக்கின்றாரா?
  18. எனக்கென்னவோ எங்கடை அமெரிக்கன் தாத்தா மேலை தான் சந்தேகம்🤣
  19. விகிதாசார முறைப்படி மாற்றினால் இலகுவாக காங்கிரஸ், பா ஜ போன்றவர்களும் தமிழ் நாட்டில் உறுப்பினர்களை பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. தேர்தல் முறையை மாற்றினாலும் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்க முடியாது என்றில்லையே .
  20. அவர் சொன்ன 800 டாலருக்கும் டிக்கெட் கிடைக்குமோ தெரியாது குறைந்த விலை கவுண்டரில் 300 டொலர் .க்கு வாங்கியவர்கள் இப்போது 1500 டாலருக்கும் விக்கலாம் களவாக 😧
  21. நிச்சயமாக அது இன்றைய நிலையில் இந்தியாவில் நடக்காது. அங்கு மக்களுக்கான அரசியல் என்பது அறவே இல்லை என்று சொல்லலாம். தங்கள் கட்சியை வளர்ப்பதற்குத் தேவையான பணத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிப்பதற்காகவே அரசாங்கத்தை பயன்படுத்துகின்றார்கள். மேற்கில் அரசியல் என்பது ஒப்பந்தம் எழுதுவது போல சொன்னதை செய்வார்கள் அல்லது செய்யக்கூடியதை மட்டுமே சொல்வார்கள் இந்தியாவில் அப்படி அல்ல இன்றைய இந்திய அரசியல் என்பது மக்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கும் ஒரு தொழில் என்றே சொல்ல வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.