Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. காலை உணவு மிக முக்கியமானது என்று தொன்று தொட்டு சொல்லி வருகின்றனர். ஆனால் இங்கேயே பிறந்து படித்து வளர்ந்த பல பிள்ளைகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒரு ஆதாரமற்ற நம்பிக்கை என்று இலேசாக தட்டிக் கழிக்கின்றனர். பல வருடங்களின் முன் என் சொந்த வாழ்க்கையில் சுகர் பிரச்சனை வந்தது. அதிக சுகர் இல்லை, மாறாக, என் இரத்தத்தில் மிகக் குறவான சுகரே இருந்தது. அதைக் கூட தற்செயலாகவே கண்டு கொண்டோம். அப்பொழுது வருடா வருடம் மருத்துவரிடம் நான் போவதில்லை. ஒரு பத்து யார் தூரம் ஓடினாலேயே, நான் விழுந்து கோமா நிலைக்கு போய் விடுவேன் என்று மருத்துவர் சொன்னார். அப்பொழுது நான் இங்கு ஒரு அணிக்காக லீக்கில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்தேன்! அதை விட கரப்பந்தாட்டமும், கிரிக்கெட்டும் விளையாடிக் கொண்டிருந்தேன். மருத்துவர் நம்பவே இல்லை. நான் சிறு வயதிலிருந்தே இப்படித் தான், நேரம், காலம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் என்று அவருக்கு சொன்னேன். பல சோதனைகளுக்குப் பின், அவர் எனக்கு சொன்னது காலை எழுந்தவுடன் முதலில் சாப்பிடு, பின்னர் போய் விளையாடு என்று. சில சாப்பாடுகளையும் சிபாரிசு செய்தார். அதன் பின் ஒழுங்காக சாப்பிடுகின்றேன். அவரின் அனுமானத்தின் பிரகாரம், நான் சிறுவயதிலிருந்தே காலை உணவை சரியாகக் கவனிக்காததே அடிப்படை காரணம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், சேதமில்லாமல் தப்பி வந்திருக்கின்றேன்.
  2. 🙏..... தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றிகள்.
  3. (குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.
  4. உங்களின் ஆக்கங்களுக்கு மிக்க நன்றிகள், தில்லை ஐயா. இலக்கியத்திலும், சினிமாவிலும், சமயத்திலும் அறம் எப்பொழுதும் பேசுகின்றது. நாளாந்த நடைமுறை வாழ்வில் அறம் பேசுமா என்றால் சரியான சந்தேகமாகவே இருக்கின்றது. அப்பழுக்கற்ற நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் இருந்தால், 'விவரம் பத்தாது' என்றே சொல்கின்றனர். சமீப வருடங்களில் தமிழில் வந்த சிறுகதை தொகுதிகளில் மிக அதிகமாக பேசப்பட்டதும், விற்பனையானதும் ஜெயமோகனின் 'அறம்' என்னும் சிறுகதைத் தொகுப்பே. வாசித்திருக்கின்றேன். மிகநல்ல கதைகள், அறத்துடன் வாழ வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும் கதைகள்.
  5. அண்ணாமலையார் 'கச்சதீவு துரோகம் - பகுதி 2' ஐ அடுத்த நாள் வெளியிடுவதாகச் சொல்லி இரண்டு நாட்கள் போய்விட்டன. இன்னமும் வெளிவரவில்லை.....🤣 ஜீவன் தொண்டமான் இலங்கையிலிருந்து பதில் சொல்லியிருக்கின்றார் - இந்தியா கச்சதீவை ஒரு போதும் திருப்பிக் கேட்கவும் இல்லை, நாங்கள் கொடுக்கப் போவதும் இல்லை என்ற ரீதியில். ஜீவனும், அண்ணாமலையும் இனி இந்த விடயத்தை பார்த்துக் கொள்வார்கள் போல...😀
  6. ஜப்பானியர்கள் சொன்ன மூன்று முகங்கள்: பொதுவெளியில் காட்டும் முகம், நெருங்கிய நண்பர்களுடன் வெளிப்படும் முகம், தனிமையில் வெளிப்படும் முகம் என்று நினைக்கின்றேன். கருணாநிதி வகையில் இன்னும் மேலே போய் உலக சாதனை செய்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். எப்படித்தான் சமாளித்தார்களோ......🤣
  7. 😢...... இரண்டாவது புரட்சியின் போது, 80 களின் இறுதிப் பகுதிகளில், கலஹா சந்தியில் தலைகளை அடிக்கி வைத்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு இலட்சத்திற்கும் மேலான ஒரு கணக்கு இருந்தது. அதன் பின்னரேயே, மூன்று வருடங்கள் பூட்டியிருந்த பல்கலைக்கழகங்களை மீண்டும் திறந்தனர்.
  8. 🙏 நீங்கள் சொல்வது சரியே. நான் தான் என்ன ஆனாலும் நான் இந்த மாதம் ஊருக்கு போயே ஆக வேண்டும் என்பதை அழுத்திச் சொல்வதற்காக அப்படிச் சொல்லிவிட்டேன். ஒரு ரஜனி, விஜய் பட விளம்பரம் போல...😀 👍........ லித்தியம் - அயன் கலங்களில் வேறு வேறு உலொகங்களும் கலக்கப்பட்டிருக்கும் என்ற ஞாபகம். மற்றும் இவை நிலநீருக்குள் கசிந்தால் நீர் மாசுபடும் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். என்னுடைய சில நண்பர்கள் இங்கு இந்த துறையில் வேலை செய்கின்றனர் - Landfill Design and Geo Synthetics.
  9. 😢.......... அந்த முதலாவது புரட்சியிலும் இப்படி நடந்ததா.........80 களில் தான், அவர்களின் இரண்டாவது புரட்சியில் தான், புரட்சியாளர்களைக் கொன்று குவித்தார்கள் என்று நினைத்திருந்தேன்.
  10. 🤣......... கொள்கலன்களில் அணு உலைக் கழிவுகள் தான் வந்தாலும், நான் இந்த மாதம் நடுவில் அங்கே போகின்றேன்....உண்மையிலேயே. **
  11. நீங்கள் சொல்வது உண்மையே. விபத்து நடக்காவிட்டால், இது வெளியில் வந்தே இருக்காது. விபத்து நடந்த உடனே, இந்தக் கப்பல் இலங்கை நோக்கி போய்க் கொண்டிருந்தது என்ற செய்தியைப் பார்த்தவுடன், அப்படி என்னதான் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து இவ்வளவு பெரிய கப்பலில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கின்றது என்று தோன்றியது. பொருட்களை பெருமளவில் வாங்கும் அளவிற்கு நாட்டில் நிதி நிலைமை இல்லை என்றே நினைக்கின்றேன். அங்கே எங்கே தான் இவை எல்லாவற்றையும் புதைப்பார்களோ....
  12. நெஞ்சைத் தொடும் நினைவுகள்..........🙏 நானும் அங்கே படித்தேன். ஆனால் உங்களுக்கு பல வருடங்கள் பிறகு என்று நினைக்கின்றேன். எங்களின் காலத்தில், பல வருடங்களாக ஜேவிபி இயக்கத்தில் இருந்து அரசால் சிறை வைக்கப்பட்ட சில பொறியியல் பீட மாணவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எங்களை விட பல வயதுகள் அதிகம், ஆனால் எங்களுடன் வந்து மீண்டும் படித்தனர். சிலர் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்களின் நியாயமும், போராட்டமும், தியாகமும்....... கடவுளே, இங்கு எத்தனை பரிமாணங்கள் எல்லாவற்றிலும்.........
  13. இது எப்பவோ சில வருடங்களின் முன் நான் எழுதினது. அந்த வருடம் உலகில் மிகக் குறைவான நேரம் வேலை செய்பவர்கள் இத்தாலியர்களே என்று ஒரு சுட்டி வெளியிடப்பட்டது....😀 ******** ஆஸ்திரேலியா பறவைகளின் தேசம். இந்தியா காவிகளின் தேசம். இலங்கை அராஜகங்களின் தேசம். அமெரிக்கா முதலாளிகளின் தேசம். இங்கிலாந்து வெறும் இறுமாப்பு மட்டும் எஞ்சி நிற்கும் தேசம். ஜேர்மனி அதிக ஆசைப்பட்டவர்களின் தேசம். பிரான்ஸ் அழகான பிடிவாதக்காரர்களின் தேசம். லெபனான் அழகான ஆண்களின் தேசம். இஸ்ரேல் இல்லாத தேசம் ஆனால் இருக்கின்றது. பலஸ்தீனம் இருக்க வேண்டிய தேசம் ஆனால் இல்லை. சீனா, ரஷ்யா அடக்குமுறைகளின் தேசம். கனடா கருணையின் தேசம். ஜப்பான் உழைத்தே மடிபவர்களின் தேசம். இத்தாலி உழைக்காமல் வாழ்பவர்களின் தேசம்.
  14. 👍..... ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் ஒரு வரியில் மட்டுமே சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்கா பற்றி இப்படி சொல்லவேண்டும்: அமெரிக்கா முதலாளிகளால் ஆன நாடு. இங்கு என்னதான் கட்டுப்பாடுகள், சட்டங்கள் போட்டாலும், முதலாளிகள் அவற்றை குறுக்கறுக்க வழிகள் கண்டு பிடித்துவிடுவார்கள்.
  15. இணையத்தில் வந்து கொண்டிருக்கும் கச்சதீவு சிரிப்புகள். ****** கச்சதீவை மீட்க நான் பாடுபடுவேன் -- ஓபிஎஸ் மற்ற நான்கு ஓபிஎஸ் வேட்பாளர்கள் நவ்: நாங்களும் கச்சதீவை மீட்போம் ****** கன்னித்தீவுக்கும் கச்சதீவுக்கும் என்ன வித்தியாசம், அண்ணே? அடேய் தினம் தினம் பேப்பர்ல கதையா வந்தா அது கன்னித்தீவு தேர்த்லுக்கு தேர்தல் பழங் கதையா வந்தா அது கச்சதீவு ******* கச்சதீவு டைவர்ஸன்: மேல இருக்கிற அருணாச்சல் பிரதேசத்தை சீனாக்காரன் அது தன்னோட இடம் என்று அறிவிச்சிட்டான். மேல பார்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாதுனு கீழ இருக்கிற கச்சதீவை மேல கொண்டு வர்றாங்க போல.......
  16. போன வாரம் அமெரிக்கவின் பால்டிமோர் துறைமுகத்தில் அங்கிருக்கும் பாலத்துடன் மோதி பெரும் சேதத்தை உண்டாக்கிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த பொருட்கள் மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையான கழிவுப் பொருட்கள் என்று அமெரிக்காவில் நடைபெற்ற முதலாவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 56 கொள்கலன்களில் 764 டன்கள் எடையுள்ள கழிவுப் பொருட்கள் - லித்தியம் -இரும்பு மின்கலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய கழிவுகள் உட்பட - இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தன. இன்னமும் மிகுதியாக இருக்கும் அந்தக் கப்பலின் 4644 கொள்கலன்களில் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற விபரங்கள் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றது. https://www.dailymirror.lk/breaking-news/Ship-was-carrying-US-toxic-waste-to-Sri-Lanka-Report/108-279925
  17. 👍..... இந்தக் கட்டுரையின் மூலத்தை சில வாரங்களின் முன் https://theconversation.com/salty-foods-are-making-people-sick-in-part-by-poisoning-their-microbiomes-224591 என்ற முகவரியில் பார்த்திருந்தேன். இதை சுருக்கி, தமிழில் 'உப்புள்ள பண்டம் குப்பையிலே...' என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பிபிசி நல்ல வேலை செய்து விட்டனர். அழகான தமிழில் போட்டு விட்டனர்....👍
  18. 😢..... இறந்தவருக்கு 39 வயது, கணேஷ் ராமச்சந்திரன் என்று இன்னொரு செய்தியில் இருக்கின்றது. என்ன கொடுமை இது..... இறப்பிற்கு நிமோனியாவும், உணவு தொண்டையில் தங்கி நின்றதுமே காரணம் என்ற முதற் காரணத்தை மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.
  19. அள்ளு கொள்ளை ----------------------------- பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் செய்வதற்கு இரண்டு வேலைகள் இருந்தன. ஒன்று பந்தடிப்பது, மற்றயது கயங்குண்டு விளையாடுவது. போலை அல்லது மார்பிள் என்று சொல்வதை எங்களூர் பக்கம் கயங்குண்டு என்று சொல்வார்கள். பந்தடிப்பதற்கு ஆட்கள் சேர முன், கயங்குண்டு விளையாடுவோம். பெரும்பாலும் கோஸ் என்று ஒரு விளையாட்டு. அன்று நான் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த இரண்டு விளையாட்டுகளுக்காகவும் அர்ப்பணித்திருந்தேன். பள்ளிக்கூடத்திற்கும் ஒரு பந்தும், கொஞ்ச கயங்குண்டுகளும் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது பள்ளிக்கூடத்தில் ஒரு புதிய விஞ்ஞான கூடம் கட்டியிருந்தனர். அது ஒரு மூலையில் கொஞ்சம் ஒதுக்குப் பக்கமாக இருந்தது. அதற்கும் பழைய கட்டிடங்களுக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. சின்ன இடைவேளை அல்லது பந்தடி இல்லாத நாட்களில் அங்கு கயங்குண்டு விளையாடுவோம். வேறு வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக விளையாடுவோம். பெரிய பெட்டி நிறைய கயங்குண்டுகள் சேர்ந்தது. விற்றல், வாங்கல் என்று வியாபாரமும் நன்றாகவே நடந்தது. ஒரு தடவை ஒருவர் அரிதான கயங்குண்டு என்று குட்டி குட்டி கயங்குண்டுகளை எங்களை ஏமாற்றி அதிக விலைக்கு விற்றும் விட்டார். 'சதுரங்க வேட்டை' படத்தில் வருவது போல. பின்னர் தான் தெரிந்தது, அந்த குட்டிக் குண்டுகள் பல கடைகளில், வேறு ஊர்களில், சாதாரணமாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தன என்று. ஊரில் பண்டிகை நாட்கள், தைப்பொங்கல், சித்திரை வருடம் மற்றும் தீபாவளி வருகிறது என்றவுடன் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே லாஸ் வேகாஸ் வகை விளையாட்டுகளும் ஆரம்பிக்கும். சுத்தமான சூது. முதன் முதலில் லாஸ் வேகாஸ் போன பொழுது, தமிழர்களின் பாரம்பரியத்தை அமெரிக்கர்கள் இன்று பெரும் பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்களே என்று தோன்றியது. இந்த விளையாட்டிற்கு பல வீடுகளில் தடை இருந்தது. அந்த தமிழ் பழமொழி தான், சூதும் வாதும் வேதனை செய்யும், அதற்கு பிரதான காரணம். இந்த விளையாட்டுகளை விளையாடுவது தெரிந்தால், முதுகுத் தோல் நிச்சயமாக உரிக்கப்படும். ஒரு சில வீடுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அந்த சில வீடுகளில் இரவில் படுக்கப் போகும் முன் எல்லா உருப்படிகளும் இருக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொள்வார்கள். எண்ணிக்கையில் ஒன்று இரண்டு குறைந்தாலும், ஒரு பரபரப்பும் இருக்காது. மூன்று நான்கு நாட்கள் வீட்டுப் பக்கம் போகாமல் இருந்ததும் உண்டு. இந்த விளையாட்டுகளில் எப்போதும் ஒரு விடயம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முடிவில் வெல்வது ஒரு ஆளாக மட்டுமே இருந்தது. ஒரே ஆள் இல்லை, ஆனால் யாரோ ஒருவர் மட்டுமே கயங்குண்டுகளையோ அல்லது மொத்த காசையோ நாள் முடிவில் வென்று கொண்டிருந்தார். விளையாட்டு கடும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த வழியால் போகும் யாரோ ஒருவர் 'அள்ளு கொள்ளை' என்று பலமாகச் சத்தம் போடுவார். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று, தோற்றுக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் நடுவில் பாய்ந்து, வென்று கொண்டிருப்பவரிடம் பறித்துக் கொண்டு ஓடி விடுவார்கள். பின்னர், நாங்களே ஒன்று கூடி சட்டம் ஒழுங்கை எப்படி நிலைநாட்டுவது என்று முடிவெடுத்து, அதை நடைமுறைப்படுத்தினோம். எல்லோருக்கும் ஆயுதம் வைத்திருக்க அனுமதி கொடுத்தோம். அமெரிக்காவின் மக்கள் எல்லோரும் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை போலவே. கம்பு தடிகள் தான் ஆயுதங்கள். நடுவில் எவராவது பாய்ந்தால், எல்லோரும் கேட்டுக் கேள்விகள் இல்லாமல் பாய்ந்தவரை அடிக்கலாம் என்று ஒரு சட்ட திருத்தமும் கொண்டு வந்தோம். ஆனாலும் அப்பப்ப அள்ளு கொள்ளை நடந்து கொண்டேயிருந்தது.
  20. சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்தில், பள்ளிக்கூடத்திற்கு போடும் வெள்ளைச் சேர்ட்டில் மை அடிப்போம், ஏப்ரல் ஒன்றில். பெரிது பெரிதாகவும், சிறிதாகவும் பொய்களை, புழுகுகளை அவிழ்த்து விடுவோம். இப்ப இந்த நாள் அப்படி ஒரு தனியான விஷேமான நாள் இல்லை. எல்லா நாட்களும் ஒன்றே ஆகிவிட்டன.....
  21. 🙏....... வந்து வாசித்ததிற்கு என் நன்றிகள். தோற்றமும், வெளிப் பேச்சுகளும் தாண்டிப் போனால், ஒவ்வொருவரின் உள்ளேயும் இன்னொரு மனிதன் இருப்பான். ஒவ்வொரு மனிதனும் உண்மையில் மூன்று மனிதர்கள் என்று ஜப்பானியர்கள் கருதுவதாக எங்கோ வாசித்த ஒரு ஞாபகம்.....😀
  22. 👍........ இங்கு அமெரிக்காவில் இப்பொழுது சில காலமாக கொலஸ்ட்ராலுக்கும், மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பில்லை என்ற ரீதியில் ஆராய்சிக் கட்டுரைகள் வரத் தொடங்கிவிட்டன. மாச்சத்தை தவிர்க்கும் சிலர், புரதத்தையும் அத்துடன் அதிக கொழுப்பையும் அதன் காரணமாக சேர்த்து எடுக்க ஆரம்பித்துள்ளனர். முக்கியமாக முட்டை. ஒரு நாளிலேயே பல முட்டைகளை உள்ளெடுக்கின்றனர். சில வருடங்கள் போக வேண்டும் இதன் விளைவுகள் தெரிய வர. நீரிழிவு/சலரோகம் எங்களின் பரம்பரை சொத்து போல. ஒவ்வொரு வீட்டையும் இது எட்டிப் பார்க்கின்றது. மிகவும் கட்டுப்பாடான உணவுப் பழக்கங்களுடன் இருப்பவர்கள் கூட, பரம்பரை முகூர்த்தங்கள் காரணமாக, இதிலிருந்து முற்றாக வெளியே வர முடிவதில்லை. கரணம் தப்பினால் இன்சூலின் என்ற நிலை. எல்லோரும் சொல்வது போல, எல்லோருக்கும் தெரிந்தது போல, நிம்மதி/நித்திரை/உடற்பயிற்சி/விளையாட்டு அவசியம். ஆனால், பொதுவாக, மிகவும் பிந்தியே இவை உணரப்படுகின்றன. நீங்கள் முன்னரேயே சுதாகரித்து விட்டீர்கள்..........👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.