Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
  2. கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
  3. 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
  4. 👍........... பல சிவில் மற்றும் கட்டுமான பொறியியல் நிறுவனங்கள் இந்த பெரும் திட்டத்தை தாங்கள் எப்படி எடுக்கலாம் என்ற ஆலோசனையையே இப்பொழுதே தொடங்கியிருக்கும்.
  5. அந்த துறைமுகத்தில் வேலை செய்யும் 2400 பேர்களுக்கு உடனடியாக வேலை இல்லாமல் போகும் என்று ஒரு செய்தியில் இருக்கின்றது. மே மாதத்தின் பின்னர் தான் அவர்கள் மீண்டும் வேலையை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்று சொல்கின்றனர். அந்தக் கடல் பகுதியைச் சுத்தம் செய்ய அவ்வளவு நாட்கள் எடுக்கும் போல. இவர்கள் நாட் சம்பளத்தின் அடிப்படையிலேயே வேலை செய்பவர்கள். ஒரு தொழிற் சங்கம் ஆக இருக்கின்றவர்கள். அரசும், அவர்களின் சங்கமும் அது வரை இவர்களுக்கு உதவி செய்யும் என்று நினைக்கின்றேன். இவர்களைத் தவிர அந்த துறைமுகத்தினூடாக ஏற்றப்படும் மற்றும் இறக்கப்படும் பொருட்களில், உதாரணம் கார், நிலக்கரி, தங்கி இருக்கும் பல தொழில்களில் நேரடியாகவும், இல்லாமலும் வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கானோரின் நிலை பெரும் சிக்கலாகும். சில வருடங்களின் முன், இந்த தொழில் சங்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்களில் ஒரு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அந்த நாட்களில் கடல் முழுவதும் கப்பல்கள் வரிசையாக நின்றன, வாகனங்கள் பெரும் தெருவொன்றில் வரிசையில் நிற்பது போல. இங்கும் அதே நிலை சில காலத்துக்கு வரலாம்.
  6. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பெரும்பாலும் இடதுசாரிகளின் ஆட்சியில் இருந்தது. தலைசிறந்த அறிவுஜீவிகளும், இலக்கியவாதிகளும் அங்கிருந்து வந்தனர். அவர்களின் முற்போக்கு அரசியல் சாதிபேதம் அற்றது என்பது ஒரு பொதுவான பார்வையாக இருக்கின்றது. இந்தக் கட்டுரை இன்னொரு உண்மையை முன் வைக்கின்றது. இதை சுபஜீத் நஸ்கர் எழுதியிருக்கின்றார். வ. ரங்காச்சாரி அவர்கள் இதை தமிழில் மொழி பெயர்த்து, 'அருஞ்சொல்' இதழில் இக்கட்டுரை பிரசுரம் ஆகியிருந்தது. *********************************************** வங்கத்து முற்போக்கு அரசியல் சாதியற்றதா? சுபஜீத் நஸ்கர் 26 Mar 2024 மேற்கு வங்கத்தில் அரசியல் முற்போக்கானது – சாதி பேதம் அற்றது என்று போற்றப்படுகிறது, அதேசமயம், வட இந்தியாவின் இந்தி பிராந்திய மாநிலங்களில்தான் சாதி உணர்வு தலைவிரித்தாடுகிறது என்று தூற்றவும்படுகிறது. இது உண்மைதானா? வங்கம் இருவேறு உலகங்களால் ஆனது என்பதை நாம் புறக்கணிக்கிறோம் என்பதே உண்மை! வங்கத்தின் சமூக மேல் அடுக்கில் பிராமணர்கள், காயஸ்தர்கள், வைத்தியாக்கள் உள்ளனர்; இன்னொரு அடுக்கில் விளிம்புநிலையில் வாழும் பட்டியல் இனத்தவர், ஆதிவாசிகள் வாழ்கின்றனர். சாதி அடிப்படையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் உரிமைகளால் தலித்துகளையும் பழங்குடிகளையும் அடக்கி ஒடுக்குகின்றனர் சவர்ணர்களான முற்பட்ட சாதியினர், இந்தப் பிளவு, புவியியல் அடிப்படையிலானது அல்ல; சமூக முதலீடு - பொருளாதார வளங்கள் - அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றில் இது பரவியிருக்கிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வசிக்கும் முற்பட்ட சாதிகள் தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வதால், சாதி அடிப்படையிலான சமூக படிநிலை இருப்பது மறைக்கப்படுவதல்லாமல், கேள்விகளுக்கும் உள்ளாவதில்லை. இந்த ‘முற்போக்குக் கண்ணோட்டமும்’ முற்பட்ட சாதியினரின் சாதி உணர்வுகளின் மீதுதான் கட்டியெழுப்படுகிறது. விளிம்புநிலை மக்களின் நிலை வங்க சமூகத்திலும், ஊடகங்களிலும், கல்விச்சாலைகளிலும், மக்கள்குழு அமைப்புகளிலும் - மிகவும் குறிப்பாக அரசியலிலும் பட்டியல் இனத்தவரின் விருப்பங்கள் – லட்சியங்கள் யாவும் அன்றாடம் நிராகரிக்கப்படுகின்றன; அதுவும் எப்படி என்றால், ‘உத்தர பிரதேசம், பிஹாரைப் போல வங்கத்தில் சாதி அரசியலே கிடையாது’ என்று மிகவும் கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட தோற்றத்தால்! மும்பையில் 'இந்தியா கூட்டணி' நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டபோது, அதைத் தீவிரமாக எதிர்த்தார், இதில் அவர் பாஜகவின் நிலையைத்தான் எடுத்தார். மாநிலம் முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதியையும் சேர்த்து தரவுகளைச் சேகரித்தால் முற்பட்ட சாதியினர் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றம் அம்பலமாகும், வங்காளத்தில் ஏழை - பணக்காரன் என்று இரண்டு சாதிகள்தான் உள்ளனவே தவிர வேறு சாதிப் பிரிவினைகள் இல்லை என்ற கம்யூனிஸ்ட்டுகளின் பொய்யுரையும் தவிடுபொடியாகும். பிஹாரில் எடுத்த சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்படி தலித்துகள் (பட்டியல் இனத்தவர்) எல்லா வகைகளிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டனர் என்பதையும் காயஸ்தர்கள் எப்படி எல்லாவற்றிலும் உயர்நிலையில் இருக்கின்றனர் என்பதையும் வெளிக்காட்டியது. தலித் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் மூன்று மாநிலங்களில் வங்கமும் ஒன்று என்பதை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காட்டியது. அதுவே முற்பட்ட சாதிகளுக்கும், தலித்துகள் – பழங்குடிகளுக்கும் இடையிலான சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவுக்கு இருப்பதையும் ஓரளவு வெளிப்படுத்தியது. மாநிலம் முழுவதிலும் வாழும் தலித்துகள் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 23.51% என்றாலும் மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவில் அவர்களுடைய எண்ணிக்கை வெறும் 5.4% மட்டுமே. பழங்குடிகள் எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த எண்ணிக்கையில் 5.8% ஆக இருந்தாலும் கொல்கத்தாவில் வாழ்வோர் எண்ணிக்கை வெறும் 0.2% மட்டுமே. இவ்விரு குழுவினரும் எந்த அளவுக்கு அதிகாரமற்றவர்களாகவும் நகர்ப்புறங்களில் குடியேறக்கூட தகுதி பெறாதவர்களும் விளிம்புநிலையில் வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன இந்தத் தரவுகள். வங்க சமூகத்தில் முற்பட்ட சாதியினருக்குக் கிடைக்கும் அரசியல் – சமூக அரவணைப்பு காரணமாக, ஒடுக்கப்பட்ட பிரிவினர் தொடர்ந்து அதே பின்தங்கிய நிலையில் மாநிலத்தின் பிற பகுதிகளில் வாழ்கின்றனர். பிராமண மேலாதிக்கம் வங்க சட்டப்பேரவைக்கு 2021இல் நடந்த பொதுத் தேர்தலின்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவைப் பெற, அவர்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது. இதனால் மிரட்சி அடைந்த மம்தா பானர்ஜி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியைப் பார்த்து எச்சரிக்கை விடுத்தார்: “நானே பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள், உங்களுடைய மத உணர்வுத் தூண்டலை என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள், தினமும் காலையில் காளி பூஜை செய்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைக் கவனிக்கிறேன்” என்று முழங்கினார். அது மறைமுகமாக முற்பட்ட சாதியினருக்குக் கொடுக்கப்பட்ட சமிக்ஞை. இன்னொரு புறத்தில் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், தங்களுக்கு சாதி அபிமானமெல்லாம் கிடையாது என்று கூறிக்கொண்டே, தங்கள் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாம் கிடைப்பதை உறுதிசெய்தனர். பாஜகவைப் பற்றி விவரிக்கவே தேவை இல்லை. வரலாற்றுரீதியாகவே வங்கத்தின் முற்பட்ட சாதியினருக்கு, சமூக – மத அமைப்பில் சாதிகள் எவ்வளவு முக்கியமானவை என்பது நன்றாகவே தெரியும். எந்த இயக்கமுந் இதில் மாறுபட்டது இல்லை. படித்த முற்பட்ட சாதியினரைக் குறிவைத்து 19வது நூற்றாண்டில் ‘இந்து மேளாக்கள்’ நடத்தப்பட்டதையும், இந்து மதத்தின் புனிதத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அங்கே தீர்மானிக்கப்பட்டதையும் சுமந்த பானர்ஜி என்ற எழுத்தாளர், புத்தகமே எழுதியிருக்கிறார். ‘அனைத்து இந்தியர்களுக்குமான தேசியம்’ என்ற அடிப்படையில் சுரேந்திரநாத் பானர்ஜி என்ற காங்கிரஸ் கட்சியின் பிராமணத் தலைவர், வங்காள இந்து இளைஞர்களை ஒன்று திரட்டினார். சந்திரநாத் பாசு என்ற காயஸ்தர், ‘இந்துத்வா - இந்துர் பிராக்ரித இதிஹாஸ்’ என்ற தலைப்பில் வங்க மொழியில் கட்டுரை எழுதினார். உலகமே புகழும் ரவீந்திரநாத் தாகூர்கூட, சாதி என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டவர்தான்; இந்திய மக்களுடைய சகிப்புத்தன்மை என்ற உணர்வால் உருவானதுதான் சாதி அமைப்பு என்று கருதினார் தாகூர். எனவே, வங்காளிகள் ‘சாதி பாராத’ – ‘சாதி உணர்வற்ற’ முற்போக்காளர்கள் என்பது முற்பட்ட சாதி இந்துக்களால் உருவாக்கப்பட்ட தோற்றம். இதற்காக, தங்களுக்கு இணக்கமாக இருக்கக்கூடிய நலிவுற்ற பிரிவினர் சிலரைத் தங்களுடைய அமைப்பில் இணையாக அவ்வப்போது சேர்த்துக்கொள்வார்கள். அமைச்சரவையில் இடமில்லை மேற்கு வங்கத்தில் 1977 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இடதுசாரி முற்போக்கு முன்னணி பதவிக்கு வந்தபோது தலித்துகள் எவரையும் அமைச்சராக, சேர்த்துக்கொள்ளவில்லை முதல்வர் ஜோதிபாசு. கட்சியின் தலித் தலைவர்கள் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மிகவும் வற்புறுத்திய பிறகு, இளைஞர் நலத் துறை அமைச்சராக காந்தி பிஸ்வாஸ் நியமிக்கப்பட்டார். 1982 முதல் 2006 வரையில் தொடக்கக் கல்வித் துறை அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார் காந்தி பிஸ்வால். “தான் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு நூற்றுக்கணக்கான புகார் கடிதங்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் முற்பட்ட சாதி உறுப்பினர்களால் தொடர்ந்து முதல்வருக்கு அனுப்பப்பட்டன” என்று பின்னாளில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்தார் காந்தி பிஸ்வாஸ். மோனோபினா குப்தா என்ற நூலாசிரியர், ‘வங்காளத்தில் இடதுசாரி அரசியல், பத்ரலோக் மார்க்சிஸ்டுகளிடையே காலவெளி கடந்த பயணம்’ (Left Politics in Bengal: Time Travels Among Bhadralok Marxists) என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். காந்தி பிஸ்வாஸ் அமைச்சர் ஆனதைச் சகித்துக்கொள்ள முடியாமல் பட்டாசார்யா என்றொருவர் பட்பாரா என்ற ஊரிலிருந்து எழுதிய கடிதம் குறித்து அதில் குறிப்பிட்டிருக்கிறார். ‘பிஸ்வாஸ் தன்னுடைய திறமையை நிரூபித்திருந்தாலும் முற்பட்ட சாதி பிராமணர்கள் எப்படி ஒரு சண்டாளபுத்திரனிடமிருந்து கல்வியைப் பெறுவது?’ என்று கேட்டிருந்தார் பட்டாசார்யா! இவை அனைத்துமே வங்காளிகளின் கூட்டுணர்வில், பிராமண மத ஆதிக்கம் எப்படிப் பரவியிருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான். மாநில அமைச்சரவையில் தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம் புறக்கணிக்கும் அளவிலோ அல்லது மக்கள்தொகைக்குப் பொருத்தம் இன்றி மிகவும் அற்பமாகவோதான் இருக்கிறது. எல்லாமே அரசியல் ஆட்டம் 2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ‘தபாசிலி சங்கல்ப்’ என்ற பெயரில், ‘தலித்துகளுடன் ஓர் உரையாடல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது ஆளும் திரிணமூல் காங்கிரஸ். 2024 மக்களவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இப்போது மீண்டும் அந்த முயற்சி புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தேர்தலுக்காக செய்யப்படும் நாடகங்கள். வங்கத்தில் எந்த அரசியல் கட்சியுமே தலித்துகள் – பழங்குடிகளுக்கு உண்மையான அதிகாரமும் பிரதிநிதித்துவமும் அளிக்கும் திட்டங்களைத் தீட்டியதும் இல்லை, அறிவித்ததும் இல்லை. தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால் களமும் சூடேறிக்கொண்டிருக்கிறது. சந்தேஷ்காளியில் தலித் பெண்களுக்கு நேரிட்ட கொடூரத்தை பாஜக பெரிதுபடுத்திப் பேசுகிறது. திரிணமூல் காங்கிரஸோ அதை யாரும் தொடர்ந்து கவனத்தில் கொள்ளாமல் இருக்க, அனைத்து மறக்கடிப்பு வேலைகளையும் செய்கிறது. விளிம்புநிலை மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் புறப்பட்டிருப்பதை யாருமே கவனிக்கவில்லை. விளிம்புநிலை மக்களுடைய ஆசைகள், உரிமைகள் நிராகரிக்கப்படும்போது அவர்கள் அணிதிரண்டு பொங்கி எழுந்து தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட முற்படுவதே வரலாறு. வங்கத்தின் அரசியல் களம் பெரும்பாலும் முற்பட்ட சாதி வங்காளிகளின் எண்ணப்போக்குக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அதனால்தான் அங்கு பிராமணர்கள் ஆதிக்கம் அதிகம். மாநில முதல்வராக தலித் ஒருவரைக் கொண்டுவரும் சாத்தியம் இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் இல்லை. எனவே, வங்க அரசியலிலிருந்து பிராமணமயத்தை விலக்க வேண்டும், முற்பட்ட சாதி கண்ணோட்டத்தில் சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளை அணுகுவதைக் கைவிட வேண்டும், சாதி உணர்வை உள்ளூர வைத்துக்கொண்டு, சாதியுணர்வே எங்களுக்குக் கிடையாது என்கிற மாய்மாலத்தைக் கைவிட வேண்டும், தலித் சமூகத்தினரின் நீண்ட காலக் கனவுகள் நனவாக சமூக நீதியையும் அதிகாரத்தையும் வழங்கும் அரசியல் மாற்றத்தை வங்காள அரசியல் தலைமைகள் தழுவ வேண்டும். https://www.arunchol.com/subhajit-naskar-article-on-west-bengal-politics-has-to-be-de-brahminised
  7. அய்யய்யோ.... களத்தில் பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியாது.... என் அபிப்பிராயத்தை மட்டுமே எழுதினேன். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா...
  8. 🤣.... நிகழ்தகவு என்ற சொல்லை கணக்குப் பாடத்திலேயே முதலில் அறிந்து கொண்டோம்....👍
  9. உங்களின் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் என்றும்.............🙏
  10. அதிர்ஷ்ட லாபச் சீட்டு ----------------------------------- மீண்டும் ஒரு பில்லியன் டாலர்கள் இன்று இங்கு ஒரு அதிர்ஷ்ட லாபச் சீட்டிற்கு கிடைத்திருக்கின்றது. மெகா மில்லியன் மற்றும் பவர் லொட்டோ என்னும் இரண்டு பெரிய குலுக்கல்கள் வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ தடவைகள் இங்கு நடக்கும். அதை விட பல மாநிலங்களின் விதவிதமான சீட்டுகளும், குலுக்கல்களும். மொத்தத்தில் இங்கு இவை ஆயிரக் கணக்கில் வரும் என்று நினைக்கின்றேன். எல்லாம் குலுக்கல்கள் என்றில்லை, பல சுரண்டும் வகையையும் சேர்ந்தவை. மெகா மற்றும் பவர் குலுக்கல்கள் பரிசு சில மில்லியன்கள் என்று ஆரம்பித்து, எவருக்கும் பெரும் பரிசு விழாமல், ஆயிரம் மில்லியன்களையும் (ஒரு பில்லியன்) தாண்டிப் போவன. ஒரு சீட்டின் விலை ஒன்று அல்லது இரண்டு டாலர்கள் (மட்டுமே....). வேலையில், நண்பர்கள் வட்டத்தில், விளையாட்டுக் குழுமங்களில் என்று குழுக்களாக சேர்ந்து இந்த அதிர்ஷ்ட லாபச் சீட்டுகளை வாங்குவார்கள். முக்கியமாக பெரும் பரிசு பில்லியன் டாலர்களை அணுகும் போது, எல்லோரும் 'போனால் மயிர், வந்தால் மலை....' என்று ஓரணியில் திரள்வார்கள். அப்படியே குழுக்களாக வாங்கிக் கொண்டு, தனித்தனியாகவும் வாங்கிக் கொள்வார்கள். குழுக்களில் அதிர்ஷ்டம் கெட்டவர் யாராவது இருந்து விட்டால் என்ன செய்வது என்னும் முற்காப்பு யோசனை போல. நான் வாங்குவதில்லை, குழுக்களில் சேர்வதில்லை. இதுவரை வாங்கவில்லை. ஏனென்ற காரணம் கடைசியில் இருக்கின்றது. குழுக்களுடன் சேராமல், சீட்டு வாங்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். வேலையில் இருக்கும் குழு சொல்லும் பரிசு விழுந்தால் அவர்கள் எல்லோரும் இந்த வேலையை விட்டுவிட்டுப் போய் விடுவார்களாம். நான் தனியே வேலை செய்ய வேண்டி வருமாம். நண்பர்கள் குழு சொல்லும் நான் இப்படியே இருக்க அவர்கள் மட்டும் பல மில்லியன்களுக்கு அதிபதிகள் ஆவது அவர்களுக்கு சங்கடமாக இருக்கின்றது என்று. விளையாட்டுக் குழுக்கள் அவர்கள் வென்றால் நாங்கள் வழமையாக ஆடும் மைதானங்களுக்கு அதன் பிறகு வரவே மாட்டார்களாம். என் அதிர்ஷடமோ என்னவோ, இவர்களில் ஒருவருக்கு கூட இன்னமும் சொல்லும் படியாக ஒரு பரிசும் கிடைக்கவில்லை. பரிசு விழுவதற்கான நிகழ்தகவு நம்ப முடியாத அளவிற்கு மிகக் குறைவு என்று கலைமாமணி, முதுமாமணி, பெருமாமணி என்று எவருக்கு நான் சொல்ல ஆரம்பித்தாலும், 'ஆனாலும் யாருக்கோ பரிசு விழுகிறது தானே....' என்ற ஒற்றையடி மட்டையடியாக என் மேல் விழுகின்றது. படிப்பும், வாழ்க்கையும் ரயில் தண்டவாளங்கள் போல, ஒன்று இன்னொன்றுடன் இணையவே மாட்டாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் போல. இந்தப் பரிசு விழுவதை விட, மின்னல் தாக்கி இறப்பதற்கு பதினைந்து மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. இந்தப் பரிசு விழுகுதோ இல்லையோ, உலகில் மின்னல் தாக்கி தினமும் பலர் போய்க் கொண்டிருக்கின்றார்கள். மின்னல் தங்களை தாக்கவே மாட்டாது என்று நினைப்பவர்கள், பெரும் பரிசு மட்டும் தங்களுக்கு விழும் என்று நம்புவது கொஞ்சம் வேடிக்கையானதுதான். எது என்னவோ, சீட்டு எடுப்பவர்கள் எல்லோரும் தங்களுக்கு பரிசு விழும் என்று நம்பியே எடுக்கின்றனர். சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன். பிற் குறிப்பு: 1. இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகள் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும். 2. பல நிகழ்விற்கான நிகழ்தகவுகள் கீழே இருக்கின்றது. பெரும் பரிசு விழ முன், ஒரு தேனீ குத்தி போய்ச் சேருவதற்கு ஐம்பது மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது: Winning Mega Millions: 302,575,350 to 1 Winning Powerball: 292,201,338 to 1 Being eaten by a shark: 264 million to 1 Being struck by lightning twice: 19 million to 1 Becoming U.S. president: 32.6 million to 1 Dying in a plane crash: 11 million to 1 Being hit by debris from a plane: 10 million to 1 Being killed by a bee sting: 6.5 million to 1 Being attacked by a shark: 5 million to 1 Being attacked by a grizzly bear: 2.7 million to 1 Becoming a movie star: 1.5 million to 1 Being struck by lightning: 960,000 to 1 Winning an Olympic medal: 662,000 to 1 Hitting a hole-in-one in golf: 12,500 to 1 Winning an Oscar: 11,500 to 1 Bowling a perfect 300 game: 11,500 to 1 Being injured by a toilet: 10,000 to 1
  11. Canola Oil என்ற ஒன்றை இங்கு அதிகம் பயன்படுத்துகின்றார்கள். கனடாவே இந்தப் பயிரை முதலில் உருவாக்கியது. Canada + Ola சேர்ந்தே Canola ஆகியது. Ola என்பது Oil ஐக் குறிக்கும் ஒரு சொல்லாக இங்குள்ளது. இந்த எண்ணெயில் Saturated fat 7% மட்டுமே உள்ளது, நல்லெண்ணெயில் இந்த கெட்ட கொழுப்பு 14% உள்ளது. மேலும் இது இன்று உள்ள சமையல் எண்ணெய்களில் சிறந்த ஒன்றாக கருதப்படுகின்றது. இது அமெரிக்காவின் ஒரு சந்தைப்படுத்தல் உத்தியாகவும் இருக்கலாம். மிகவும் நன்றாக தரவுகளை உண்டாக்கி, உற்பத்திகளை சந்தைப்படுத்தலில் அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு இணை இல்லை. கோவிட் தொற்றின் போது, இந்த எண்ணெயின் விலை இரண்டு மடங்காகி, பின்னர் இந்த எண்ணெய் கடைகளில் இல்லாமல் போய், திரும்பவும் வரும் போது விலை மூன்று மடங்காகியது... இது இன்னுமொரு விற்பனைத் தந்திரம் போல......🤣
  12. 'நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்' என்று ஒரு விஜய் சேதுபதி படம் பல வருடங்களின் முன் வந்தது. இதை வாசிக்க அந்தப் படம் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.......🤣
  13. சின்னம் பிரச்சனை இப்பொழுது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது தமிழ் நாட்டில். சீமானுக்கு கேட்ட சின்னம் கொடுக்கப்படாத பின்னர், தேர்தல் ஆணையம் தொல். திருமாவின் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கவில்லை. வை.கோ கட்சிக்கு பம்பரம் தர முடியாது என்று இன்று சொல்லிவிட்டனர். துரை வைகோ வேற செத்தாலும் என் சின்னத்தில் தான் நிற்பேன் என்று மேடையில் பேசிவிட்டார். இப்ப 'என் சின்னம் என்ன சின்னம்' என்று தேர்தல் ஆணையம் தான் இவருக்கு சொல்ல வேண்டும். ஓபிஎஸ் எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற ஒரு கணக்கில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதிலேயே குறியாக இருக்கின்றார். ஊரில் நடக்கும் சாக்கு ஓட்டப் போட்டியில் கூட இவ்வளவு தடைகளை பார்த்தது இல்லை......🤣
  14. 🤣.... தனியார் நிறுவனங்களிலேயே வேலை செய்யும் எங்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பது தான் பென்சன்..... சோசல் வரும், இன்னும் 10 அல்லது 12 வருடங்கள் இருக்குது. அது வரும் போது சேடமும் இழுத்துக் கொண்டு இருக்குமோ தெரியவில்லை....😀 சமீபத்தில் ஜெயமோகன் காசி போய் வந்து ஒரு பயணக் கட்டுரை எழுதியிருந்தார். அதை வாசித்த பின் தான் அப்படி ஒரு எண்ணம் வந்தது. அதே வாரம் தமிழில் மொழி மாற்றப்பட்ட ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன். கதையே ஒரு குடும்பம் காசிக்கு போவதைப் பற்றியது. அழகான படம். பின்னர், வே.நி. சூர்யாவின் காசி பற்றிய கவிதை ஒன்று. எல்லாமே காசி, காசி என்று ஏன் சொல்லுதோ தெரியவில்லை.............🤣 *********** தொலைவிலிருந்து பார்த்தல் (வே.நி. சூர்யா) ----------------------------------------------------------------- கல்லூரி படிக்கையில் அவன் காசிக்கு ஓடிப்போனான் இனி திரும்பிவரக்கூடாது என படித்துறைகள் தகித்தன கங்கை நீர் ஊசியாகத் துளைத்தது ஊருக்குத் திரும்பும்போது முதியவரொருவர் தன் நண்பரிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தான் விரக்தியான குரலில் பேச்சுக்கிடையே காசியைச் சுற்றிப்பார்க்க வந்தவரை காசி சுற்றிப்பார்த்துவிட்டது என அவர் உரைத்தது இன்னும் உக்கிரமான மெளனத்தினுள் அவனை வீசியெறிந்தது மறுநாள் ஊரில் வாரணாசித் தெருக்களைக் கண்டான் மாலைநேரப் படிக்கட்டுகளில் அமர்ந்து மணிகர்ணிகாவின் படித்துறையில் விறகுகளோடு விறகாகத் தன் சடலம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.
  15. 👍.... ஐன்ஸ்டைன் பின், Richard Feynman மற்றும் சிலர் இயற்பியலை இன்னும் முன்னெடுத்து சென்றிருக்கின்றனர். இவர்கள் எளிய முறையில் விளக்கமாக எழுதியிருக்கும் கட்டுரைகளே விளங்குவதற்கு கஷ்டமாக இருக்கின்றது. இங்கு முன்னர் ஒரு பொறியியல் பேராசிரியர் இருந்தார். இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்டார். நான் அவரிடம் படிக்கவில்லை. அவர் தன் மாணவர்களுக்கு சொன்ன ஒரு புத்திமதி: ஒன்று விளங்கவில்லை என்றால், இன்னுமொரு தடவை வாசி. அப்பவும் விளங்கவில்லை என்றால், மீண்டும் வாசி. நூறு தடவைகள் வாசி. ஆயிரம் தடவைகள் கூட வாசிக்கலாம் என்று......🤣.......
  16. 😀...... சும்மா தனிய விட்டாலே ஓபிஎஸ்ஸிற்கு பெரிதாக எதுவும் கிடைக்காது..... மற்ற நான்கு ஆட்களுக்கும் தமிழில் 'ஒ' என்ற குறிலும், ஓபிஎஸ்ஸிற்கு 'ஓ' என்ற நெடிலும் என்று நேற்று நியூஸ் 18 இல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர்...........ஆங்கிலத்தால் தான் பிரச்சனையே......🤣
  17. சனாதனம் என்றால் தொன்மையானது என்று ஒரு பொருள் உள்ளது. மனிதர்களின் சில இயல்புகளும் மிகத் தொன்மையானதே. இந்த சில இயல்புகள் இன்னமும் மாறாமல் அப்படியே வந்து கொண்டிருக்கின்றது. ************************************* சனாதன வருத்தம் ---------------------------- புது மனிதர் ஒருவரை இன்று சந்தித்தேன் தான் ஒரு பெரியவன் என்று அவரே சொன்னார் அடிக்கடி சொன்னார் பெரிய வேலை என்றார் பெரும் பொறுப்பு என்றார் பெரிய சந்திப்புகள் என்றார் மற்ற எவரும் உருப்படி இல்லை நானும் உருப்படி இல்லை என்றார் என்னைத் தெரியாமலேயே எனக்கு எதுவும் தெரியாது என்றார் மேலே கீழே எவருக்கும் எதுவும் தெரியாது என்றார் இப்படியே நிற்காமல் இது போய்க் கொண்டிருந்தது இதற்கு மருந்து இன்னுமா இல்லை என்று நான் எப்பவோ யோசிக்கத் தொடங்கியிருந்தேன் பாவம் அந்த வீட்டில் பெரியவருடன் சேர்ந்து குடியிருப்பவர்கள்.
  18. சோதனையின் உச்சம். ராமநாதபுரத்தில் 5 "ஓபிஎஸ்"கள் போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவருக்கு போட்டியாக அதே பெயரில் அதே இனிஷியலில் இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் என 400- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது போல் அன்றைய தினமே உசிலம்பட்டி தாலுக்கா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளரும் சுயேச்சை என்பதால் சின்னங்கள் ஒதுக்கீடு என்பது வேட்புமனு ஏற்கும் நாளன்றுதான் தெரியவரும். இருவரும் சுயேச்சைகள் என்பதால் சின்னத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.இந்த நிலையில் ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலில் மேலும் 3 பேர் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனராம். இன்று மட்டும் மதுரையை சேர்ந்த 3 பேர் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் வேட்புமனு செய்துள்ளனராம். அதில் ஒருவர் தெற்காட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வம். எனவே தற்போது களத்தில் 5 ஓபிஎஸ்கள் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றார் ஓபிஎஸ், அப்போது அவர்களிடம் இரு தொகுதிகளை கேட்ட நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு மறுத்தார். 2 தொகுதிகள் வேண்டுமானால் தாமரை சின்னம், சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியென்றால் ஒரு தொகுதிதான் என பாஜக கூறிவிட்டதாம். இதனால் ஓபிஎஸ் தனி சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளராம். இதற்காக ராமநாதபுரத்தை அவர் தேர்வு செய்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அதிமுக இந்த தேர்தலில் வெல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எப்படியாவது தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என ஓபிஎஸ் போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு சோதனையாக மேலும் 4 பேர் அதே பெயர் இனிஷியல் கொண்டவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே பதவி போய், கட்சி போய், பல முறை நீதிமன்றங்களுக்கு சென்றும் ஒரு பயனும் அளிக்காத நிலையில் இது போன்ற ஒரு சிக்கலால் ஓபிஎஸ் வேதனையில் இருக்கிறாராம். ஒரு வேளை ஓபிஎஸ்ஸை எப்படியாவது தோற்கடிக்க அதிமுகவினர் யாராவது ஓபிஎஸ் என்ற பெயர் கொண்டவர்களை தேடி தேடி பிடித்து அனுப்புகிறார்களா, இல்லை இது பாஜக வேலையா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன. நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைவதற்குள் இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ தெரியவில்லை. Read more at: https://tamil.oneindia.com/news/ramanathapuram/there-are-5-members-who-have-same-name-and-initials-o-paneer-selvam-files-nomination-in-ramanathapur-593821.html
  19. பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀
  20. கீழே உள்ள ஒரு குறிப்பை ஒருவர் எழுதியிருந்தார். இங்கு சில கடலோடிகள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களால் இதை உறுதிப்படுத்த முடியும்: I heard on the radio that the ship reported to the shore that they lost propulsion control shortly after they left port and were warning they might hit the bridge. Sounds plausible since watching the video, you can see the ship lights go out then come back on shortly before the collision. Not sure though how much time there was between the alleged reporting and the collision, or if bridge could have been shut down and evacuated in that time frame.
  21. உங்கள் வீட்டில் பறவைகளை தொந்தரவு செய்ய ஒருவரும் இல்லை என்றவுடன், சுகுமாரனின் இந்தக் கவிதை ஞாபகத்திற்கு வந்தது. அப்படியான வீடுகளுக்கும், இடங்களிற்கும் கடவுளும் சேர்ந்து வந்து போகின்றார் என்ற ஒரு அர்த்தத்தில் இதை கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கின்றார் என்று நான் விளங்கிக்கொண்டேன். ************ செவ்வாய்க்கு அடுத்த நாள், ஆனால் புதன்கிழமை அல்ல --------------------------------------------------------- வீடு தவறியோ விலாசம் விசாரித்தோ உதவி கோரியோ நன்கொடை திரட்டவோ எப்போதாவது யாராவது வருவார்கள் என்பதைத் தவிர்த்தால் வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர வருகையாளர் அதிகமில்லை வீட்டுக்கு அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும் அபூர்வமாக நுழைவதுண்டு விடிந்ததும் காற்றின் வெளிச்சம் வீட்டைப் பிரியாத பூனையின் காதலன் காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று விசாரனை செய்ய வரும் நீல வால் குருவி தொட்டிப் பூவை பறித்தது ஏன் என்று பிராது சொல்லும் தேன்சிட்டு மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை அறைக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக் கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு இவையெல்லாம் தற்செயல் வருகைகள் இன்று வெய்யிலின் இளநீர் வாசனையோடு கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும் நட்டநடுப் பகலில் மூடிய கதவைக் கடந்து யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன் கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன் யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை எனினும் யாரோ வந்து வீடு முழுவதும் ஊன்றி நடந்து திரும்பிய அடையாளாமாய் தாழிட்ட கதவுக்கு இப்பால் வாசல் நிலையருகில் தரையில் ஒரு ஜோடிக் காற்சுவடுகள் ஆரஞ்சு ஒளியுடன் விடுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன் அப்போது முதல்தான் இதயத் துடிப்பின் நிமிடக்கணக்கில் ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன் அன்று செவ்வாய்க்கு மறு நாள், ஆனால் புதன்கிழமை அல்ல. - சுகுமாரன்
  22. காலையிலேயே மகிழ்ச்சியை கொடுத்த செய்தி.....👍 ஆந்திராவில் ஒரு கணவனும், மனைவியுமாக ஒரு பெரும் வறண்ட நிலப்பரப்பாலான ஊர்களில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ஆல மரங்களை வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்ற ஒரு கட்டுரையை சில மாதங்களின் முன் வாசித்திருந்தேன். 'இப்பொழுது அங்கு குருவிச் சத்தங்கள் கேட்கின்றன...' என்றும் அந்தக் கட்டுரையில் இருந்தது........
  23. போன வாரம் யாரோ கேட்டிருந்தனர். திமுகவிற்கு இத்தனை லோக்சபா உறுப்பினர்கள் இருக்கின்றார்களே, ஒரு நாளாவது இந்தச் செங்கல்லை லோக்சபாவின் உள்ளே எடுத்துச் சென்று, அங்கே நியாயம் கேட்கலாமே என்று...... செங்கல் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்று சபையின் உள்ளே எடுத்துப் போக விட மாட்டார்களோ என்னவோ......
  24. சில நேரங்களில் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தலைவர்களும் இப்படியான விபரீத முடிவுகளை மறைமுகமாக ஆதரிக்கின்றார்களோ என்று கூடத் தோன்றுகின்றது.
  25. வட கலிபோர்னியாவில் உள்ள மகள் வீட்டிலா? அங்கு குளிர் காலங்களில் குளிர் கொஞ்சம் அதிகம். மரம் வளர்ந்து வர பெரும் சிரமப்படும். சிலர் ஒருவாறு, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் என்று மாறி மாறி இடம் மாற்றி, வளர்த்தெடுத்து விட்டனர். ஆனால் அங்கு பூப்பதும், காய்ப்பதும் மிகக் குறைவு. சில இந்திய நண்பர்கள் கொய்யா இலையை என்னிடம் வாங்கிச் செல்கின்றனர். தடிமன் வந்தால், கொய்யா இலையை கொதிக்க வைத்து அந்த ஆவியைப் பிடிக்கின்றனர். நாங்கள் ஊரில் சஞ்சீவி (யூக்கலிப்டஸ்), தேசி இலைகளைத்தான் இதற்குப் பயன்படுத்தினோம். கொய்யா இலையில் ஆவி பிடித்ததாக ஞாபகம் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.