Everything posted by ரசோதரன்
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
🫣...... இந்தச் செய்தி டெய்லி மிர்ரரில் நேற்று வந்தவுடனேயே, அந்தச் செய்தியின் கீழ் சிலர் இப்படி நடக்கும் என்றும் சொல்லியிருந்தனர். எப்படியும் இந்த தேரர் போய் ஆஸ்பத்திரியில் படுத்து விடுவார் என்று. இதை செப்படி வித்தை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்..........🫣
-
தோற்ற வழு
இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஏராளமான போலி வைத்தியர்கள் பற்றிய செய்திகளை பார்த்திருக்கின்றேன். அப்படியான ஒருவர் ஆஸ்திரேலியா வரை வந்தது ஆச்சரியமாக இருக்கின்றது. 'பலே கில்லாடிகள்..' என்ற சொற்தொடருக்கு சிலர் அப்படியே பொருந்துவார்கள்.....🤣 கணினி தொழில்நுட்ப துறையில் நேர்முகத் தேர்விற்கு ஒருவர் வருவதும், பின்னர் வேலைக்கு இன்னொருவர் வருவதும் ஒரு நிகழ்வாக சில காலம் வரை இருந்தது.
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை அளவாக சாப்பிடலாம் என்று சொல்லியிருப்பது அருமை.........👍 இவர்களில் பலர் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் சோறு சாப்பிடுகின்றனர், மதியமும் இரவும். அதுவே மாசத்து மிகுதியால் வரும் சில நோய்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகின்றது. சோற்றுடன் இவர்கள் சேர்க்கும் காய்களும் (அப்படித்தான் மரக்கறிகளை சொல்கின்றனர்) குறைவே. எங்கள் அளவிற்கு இவர்கள் மீன் சாப்பிடுவதும் இல்லை. இப்பொழுது வசதி உள்ளவர்கள் ராகி (குரக்கன்), கம்பு என்று சாப்பிடத் தொடங்கியிருக்கின்றனர். இது நெடுங்காலம் நீடிக்குமா என்று தெரியவில்லை.
-
தோற்ற வழு
நாங்கள் பொதுவாகவே, எங்களையும் அறியாமல் கூட, புதிய ஒருவரை கண்டவுடன் ஏதோ ஒரு விதத்தில் அந்தப் புதிய மனிதரை எடை போட்டுக் கொள்கின்றோம். பல நேரங்களில் அது தப்பாக இருக்கும். இந்த நிகழ்வில்/கதையில் வருவது போன்று முற்றிலும் தப்பாக மாறும் சந்தர்ப்பங்களும் சில வேளைகளில் அமைந்துவிடுகின்றன.
-
ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
👍..... அருமையான ஒரு தொடர். இந்த வரிசையில் இருக்கும் உங்களின் பழைய கட்டுரைகளை இனிமேல் தான் வாசிக்கவேண்டும். புலம்பெயர்ந்த வியட்நாம் மக்கள் எங்கும் பேக்கரிகள் நடத்திக் கொண்டு, இந்த உலகிலேயே மிகவும் திறமான பாண்களை தாங்களே தயாரிப்பதாகச் சொல்கின்றனர். எப்படி என்று ஒரு நாள் அவர்களில் ஒருவரைக் கேட்டேன். இதை தாங்கள் பிரான்ஸ் நாட்டவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொன்னார். எங்களின் தேயிலையும் தேநீரும் போல, அவர்களின் பேக்கரிகளும் பாணும்.
-
தோற்ற வழு
(குறுங்கதை) தோற்ற வழு ------------------- இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது. இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன. உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார். முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது. தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது. பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன். வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ? அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை. அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான். வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது.
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
அருமையான ஒரு கட்டுரை..........👍 தராகி சிவராமும் எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் அவரும் கொலை செய்யப்பட்டார்.
-
லொத்தர் சபையின் பங்களிப்பு அதிகரிப்பு
🫣.... இது கொடுமை தான். இங்கு பெரிய பரிசுகள் வென்ற பலர் சில வருடங்களிலேயே வங்குரோத்து நிலைக்கு போய், முன்னர் இருந்த நிலையை விட இன்னும் பின்னுக்கு போயிருப்பதாக கட்டுரைகளில் பார்த்திருக்கின்றேன். வரிகள் ஒரு பக்கம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகள். ஆனால், வங்குரோத்து நிலைக்கு போவதற்கு அது காரணம் அல்ல. வென்றவர்கள் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்களும், ஏமாற்றும் ஒரு பெரிய கூட்டமுமே பிரதான காரணங்கள். பணத்தை சரியாக நிர்வகிக்கத் தெரிந்தால், பலரும் Warren Buffett போல ஆகி விடுவார்கள்.......🤣
-
லொத்தர் சபையின் பங்களிப்பு அதிகரிப்பு
அந்த நண்பர் இதுவே போதும், இனிமேல் வேண்டவே வேண்டாம் என்று இப்ப ஓடி விடலாம்.....😀 இங்கு இந்த வாரம் இன்னுமொரு லொட்டோவின் பெரும் பரிசு ஒரு பில்லியன் டாலர்கள் அளவில் வந்துவிட்டது. இங்கு மக்களின் மத்தியில் இஸ்ரேல், ஹமாஸ், உக்ரேன் போன்ற எல்லாப் பிரச்சனைகளும் கொஞ்சம் பின்னுக்கு போய் விடும் ஓரிரு நாட்களுக்கு......🤣
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌 https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/
-
லொத்தர் சபையின் பங்களிப்பு அதிகரிப்பு
'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌
-
ஆதி அறிவு
👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
-
இந்தின் இளம்பிறை
🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀
-
என் இந்தியப் பயணம்
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
-
அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி - 22 வயது இளைஞர் வெறிச்செயல்
அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783
-
உரையாடலின் அறுவடை
😀.... 'அகழ்' இதழிற்கு போய் மிகுதிக் கவிதைகளையும் பார்த்து விட்டீர்கள் போல. தொடர்ந்து இவைகளை வாசித்துக் கொண்டு வர.........பழகி விடும் என்று நினைக்கின்றேன்...🤣
-
என் இந்தியப் பயணம்
😀... இதைக் கேள்விப்பட்டால் ஜெயமோகனை எதிர்ப்பவர்கள் சந்தோசப்படுவார்கள்....🤣.. அவர் இப்ப ஒரு தடவை அங்கு போய் வந்தார். அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருக்கின்றது. எனது மாமா மற்றும் மாமி, மனைவியின் பெற்றோர்கள், பல வருடங்களின் முன் போய் வந்தனர். இன்றும் சுகமாக இருக்கின்றார்கள்.
-
உரையாடலின் அறுவடை
'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும். நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது. '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....' என்ற வரிகளில் அவர் தெரிந்தார். ************* உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797
-
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
-
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
-
புரட்சியில் விழித்தோம்
உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே. மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
-
நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட பல்!
மூச்சுக் குழலுக்குள் ஒரு பருக்கை சோறு போனாலே நாங்கள் படுகின்ற பாடு........இந்த மனிதனுக்கு ஒரு பல்லே அதற்குள்ளால் உள் வரை போயிருக்கின்றது.