Everything posted by ரசோதரன்
-
தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
🤣........... இதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்குது போல........அனுஷ்காவையோ அல்லது இன்னும் யாரையோ அடுத்ததாக கூட்டிக் கொண்டு வருகிற பிளான் போல. எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இப்பவிருந்தே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.........😀
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அன்று இந்திரா காந்தி அம்மையார் விஞ்ஞான ரீதியாகவே கச்ச தீவை இலங்கைக்கு கொடுக்கும் முடிவை எடுத்தார் என்று அண்ணாமலையாருக்கும், மோடியாருக்கும் பதில் சொல்லியிருக்கின்றார். வளங்கள் கூடிய கடல் பகுதிகளை இந்தியா எடுத்துக் கொண்டு, பிரயோசனமற்ற கச்சதீவை இலங்கைக்கு கொடுத்ததாக அவரின் விளக்கம் போகின்றது. எல்லாம் சரி, உங்களின் வளங்கள் கூடிய கடலை விட்டுவிட்டு இப்போது ஏன் எங்களின் கடலிற்குள் வந்து எங்களின் கண்டமேடைகளை சுடுகாடாக்குகின்றீர்கள்?
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
மோடியும் கச்சதீவு பற்றி பேசியிருக்கின்றார். காங்கிரஸ் செய்த பெரும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார். அண்ணாமலை அதனை மறு ஒலிபரப்பு செய்கின்றார். கூடுதலாக, நெடுந்தீவு வரை அண்ணாமலை வந்தும் விட்டார். தமிழ்நாட்டில் 19ம் திகதி தேர்தல் முடிவதற்குள், இவர்கள் இலங்கையின் எல்லாத் தீவுகளையும் பிடித்து விடுவார்களோ......🤣
-
ஒரே மழை
👍.... மழையின் பெயரால், ஒட்டியும் ஒட்டாமலும் வாழும் புலம் பெயர் வாழ்வை சொல்ல முயன்றேன்.
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
👍.... சரியாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கும் இந்த துறையில் அனுபவம் இருக்கின்றது போல. என் நண்பர்கள் பலர் சிவில் பொறியியலாளர்களே, அதனால் ஓரளவிற்கு அவர்களின் நடமுறைகள் தெரியும். ஒன்றோ இரண்டோ பெரிய நிறுவனங்கள் முழுத் திட்டத்தையும் எடுக்கும், பின்னர் நீங்கள் சொல்வது போல பல மட்டங்களுக்கு/நிறுவனங்களுக்கு சிறு சிறு திட்டங்களாகச் செல்லும்.
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
😀........... அவர்களுக்கும் ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு பாலம் போட்டு, இன்னுமொரு தனி மாநிலம் ஆக்குவமோ? ஒடிசாவிலிருந்து எப்படி அவ்வளவு நீளமான பாலம் போடுகிறது என்று எலான் மஸ்க்கை தான் கேட்க வேண்டும்....அவர் தான் இங்கே நிலத்திற்கு கீழால், மேலால், வானத்தில் என்று புது வழிகள் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றார்...😀
-
பழைய நீதிக்கதை
இன்றைய வாழ்க்கை கொடுக்கும் அழுத்தத்தை அளக்க ஒரு சுட்டி, அளவீடு இங்கில்லை. மருத்துவமும் அறியாதது அது. அளவில்லா விருப்பங்களே அழுத்தங்களாக பின்னர் இழப்புகளாக மாறுகின்றன என்று சொன்னாலும், அதைக் கேட்போர் என்று எவரும் இல்லை. *************************** பழைய நீதிக்கதை ------------------------------ ஒரு ஊரில் ஒருவர் இருந்தார் அவர் பெயர் அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்' என்று அவர் சொன்னார் கலாம் ஐயா பொதுவானவர் எளிமையானவர் நல்லவையே சொன்னார் ஆகவே கனவிற்கு மேல் கனவென்று எல்லோரும் காண்கின்றனர் உத்தியோகம் உயர ஊதியம் இரண்டு மடங்காக வீடு மாளிகையாக வாகனம் வசதியாக பிள்ளைகள் தனியே தெரிய போன்ற சொந்தக் கனவுகளுடன் அடுத்தவர்களின் கனவுகளையும் வாங்கி இருப்பதுடன் ஒப்பிட்டு அதில் சிலதையும் சேர்த்துக் கொண்டு கனவுத் தொழிற்சாலைகளாக கால் முளைத்து நடந்து கொண்டிருக்கின்றோம் கனவுகளுடன் நடந்த ஒருவர் நன்றாகத் தெரிந்தவர் எள்ளவும் எதிர்பாராமல் இடறி விழுந்து ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் உயிர் தப்பியதே உன்னதம் என்றாகி விட்டது நாலு அடைப்புகள் நெஞ்சில் என்று திறந்து பார்க்க ஐந்து அடைப்புகள் அவரின் உள்ளே இருந்தன 'ஒரே நாளில் வாழ்க்கையே முடிந்திட்டுதே.....' என்று உயிர் போய் வந்த அடுத்த நாள் அழுது கொண்டே இருந்தார் படைத்தவனுக்கோ பார்த்தவர்களுக்கோ நன்றி சொல்லாமல் பார்த்து விட்டு திரும்பும் வழியில் 'கொலஸ்ட்ரால் கூட இருக்கவில்லையே....' என்று குழம்பி வந்தனர் நண்பர்கள் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கையில் ஓடி ஏறி தலை கீழாகத் தொங்குகின்றது.
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
நேற்று பாண்டிச்சேரியில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாண்டிச்சேரியை ஒரு மாநிலமாக மாற்றுவோம் என்ற வாக்கு கொடுத்து வாக்குகள் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரண்டு புதிய மாநிலங்கள் இந்தியாவில் வரப் போகுது போல தெரியுதே......😀
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
இலங்கையில் இருந்து இங்கு வந்த நம்மவர்கள் பலர் சிவில் பொறியியலாளர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலும் பேராதனை பல்கலையில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் வேலை செய்யும் சில நிறுவனங்களுக்கு இந்த மீள்கட்டமைப்பில் வாய்ப்புகள் கிடைக்கும்.......👍
-
ஒரே மழை
இது என்ன மழையோ, இங்கு நான் இருக்கும் பாலை நிலத்தில் இப்படி பெய்து கொண்டேயிருக்கின்றது. இங்கு முன்னர் இப்படியான ஒரு மழையை நான் காணவில்லை. ஊரில் தான் மாரியில் இப்படி பெய்திருக்கின்றது. ************************** ஒரே மழை ---------------- அன்று அங்கே மாரியில் அடைமழையில் இடுப்பளவு ஓடும் வெள்ளத்தில் குளிப்போம் வெள்ளத்தின் போக்கில் கடல் வரும் ஓங்கி ஓங்கி கடல் அலை கரையை அடிக்கும் என்னூருக்கு ஏதோ ஒரு சாபமிடுவது போல அலையை தொட்டு தொட்டு ஒதுங்குவோம் வெட்ட வெளியை வெள்ளம் மூடும் பத்து லட்சம் பேத்தைக் குஞ்சுகள் பிறக்கும் அன்று வந்து வெள்ளத்தில் வால் ஆட்டி ஆட்டி நீந்தும் அவை ஒரு கையில் அள்ளினால் அதில் நூறு குஞ்சுகள் நிற்கும் வெள்ளத்தில் ஊதாப்பூ ஒன்று பூக்கும் கிண்டிப் பார்த்தால் கிழங்கு இருக்கும் அடியில் தவளை முட்டைகளும் ஊதாக் கிழங்குகளும் நாங்களும் அடை மழைக்கு காத்திருந்தோம் ஒவ்வொரு மாரியிலும் எல்லா கோவில் குளங்களும் நிரம்பும் இன்னும் இன்னும் மேலே மேலே ஏறி தலை கீழாக குதிப்போம் மாரி முடிய முன் காலில் விரலிடையில் சிரங்கென்று ஒன்று வந்து நிற்கும் அதுக்கு மருந்து மண்ணெண்ணெய் அன்றைய சுகாதார அமைச்சர் இந்த மருந்தை சொல்லவில்லை இது எங்களின் சுய கண்டுபிடிப்பு மாரி முடிய மைதானம் மூடி இடுப்பளவு புல் நிற்கும் மாடுகளைக் கட்ட அந்த புல் போகும் பந்தடிக்க கால் வைத்தால் அவ்வளவும் முள் அதையும் காலைக் கொடுத்து எடுப்போம் காலையும் மாலையும் அங்கேயே உருண்டோம் இப்ப இங்கேயும் அடைமழை அங்கே பெய்த மழை நான் இங்கே வந்தவுடன் ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்து இப்ப இங்கே கொட்டுகின்றது நல்லார் ஒருவர் உளரேல்........... இந்த மழை கூரையில் விழும் சத்தம் பட பட என்று கேட்கின்றது இரட்டைக் கண்ணாடி யன்னல்களில் வெளிக் கண்ணாடிகளில் வழிந்து ஓடுகின்றது மற்றபடி இந்த மழைக்கும் எனக்கும் வேறு தொடர்பேதும் இல்லை.
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
😀............... நீங்கள் லீவில் நின்ற போது இது நடந்துவிட்டது.....😀..... இதே விடயத்தை 'சங்கீத கலாநிதி' என்று இன்னொரு திரியிலும் விவாதித்திருந்தோம். அதில் நான் பகிர்ந்த பெருமாள் முருகனின் கட்டுரை ஒன்றை இங்கேயும் இணைக்கிறேன். இது 'அருஞ்சொல்' இதழில் அவர் எழுதியது: சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா பெருமாள்முருகன் 25 Mar 2024 மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது. பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. தமிழ்நாட்டுக்கு அப்பால்… தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. புதுமையான முன்னெடுப்புகள் டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார். புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது. துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார். அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். வாழ்த்துகள்... சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள். https://www.arunchol.com/perumal-murugan-article-on-tm-krishna
-
எனது அறிமுகம்
உங்கள் வரவு நல்வரவாகுக.
-
வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல
உங்களின் இந்தக் கவிதையும், நீங்கள் பதிந்துள்ள மற்ற கவிதையும் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கின்றது. இரண்டுமே அருமையானவை.......👍👍
-
ஒரு ஈழ அகதியின் பெயரால்
உங்களின் இந்தக் கவிதையும், நீங்கள் பதிந்துள்ள மற்ற கவிதையும் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கின்றது. இரண்டுமே அருமையானவை.......👍👍
-
தோற்ற வழு
🙏... உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்து இருப்பது மிகச் சந்தோசம். இங்கே யாழில் எழுதி எழுதியே என் எழுத்து நல்லா வந்து விடும் போல....😀 🤣...... இதில் நான் எதுவும் சொல்லாமல் இருப்பதே உசிதம் என்று நினைக்கின்றேன்.....😀
-
பாக்குவெட்டி
🤣... இங்கே எல்லோருமே பெரும் சிலேடைப் புலவர்களாக இருக்கின்றார்களே........👍
-
தோற்ற வழு
😀..... நாங்கள் எல்லோரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே என்று எங்கேயோ படித்த ஒரு ஞாபகம். பாதிப்பின் அளவு தான் ஆள் ஆளுக்கு மாறுபடும் என்று அதில் சொல்லியிருந்தவர்கள் என்றும் ஞாபகம். நான் அவனில்லை....🤣
-
பாக்குவெட்டி
🤣.... இங்கு வீட்டில் பாக்குவெட்டி இல்லை. என்றாலும் ஒரு கவனம் இருக்கத்தான் வேண்டும்......😀
-
பாக்குவெட்டி
வெற்றிலைத் தட்டம் இல்லாத வீடுகளே அன்று இல்லை எனலாம். இளம் பச்சை நிற கொழும்பு வெற்றிலை, ஊர்ப் பாக்கு, கும்பகோணம் ரோஸ் கலர் சுண்ணாம்பு தட்டத்தில் சுற்றிவர இருக்கும். அப்படியே ஒரு பாக்குவெட்டியும் தட்டின் நடுவில் இருக்கும். சீவல் பாக்கு பலருக்கும் பிடிப்பதில்லை. தாங்களே சீவி எடுத்தால் தான் திருப்தி. பாக்கை சீவுவதை விட இந்தப் பாக்குவெட்டியால் வேறு ஏதாவது பயன் இருக்கின்றதா? ********************************* பாக்குவெட்டி --------------------- எங்கள் வீட்டில் ஒரு பாக்குவெட்டி இருந்தது நான் பிறக்கு முன்னேயே அது அங்கே இருந்தது ஒரு தட்டத்தில் எப்போதும் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு சுற்றி வர நல்ல ஒரு கண்டுபிடிப்பு சரசரவென்று பாக்கைச் சீவும் இது விரலை எப்போது சீவும் என்று நினைப்பேன் அப்பா ஆச்சி வந்தவர்கள் எவர் விரலையும் அது சீவவே இல்லை நான் ஒரு போதும் முயலவில்லை இன்று ஒரு செய்தி இலங்கையில் படுத்திருந்த கணவனை பாக்குவெட்டியால் வெட்டினார் மனைவி என்று நீங்கள் சரியாகவே வாசித்திருப்பீர்கள் சந்தேகமே இல்லை துண்டு இரண்டங்குலமாம் விரலை மட்டும் தான் இது வெட்டக் கூடும் என்று யோசித்திருந்தேன் செய்தியை பார்க்கும் வரை என்ன ஒரு கண்டுபிடிப்பு.
-
பைப்லைன் மூலம் கசிப்பு விநியோகம் : ஒருவர் கைது!
🤣...... முதலில் வீட்டிற்குள்ளேயே சுரங்கம் வெட்டினார். பின்னர் குழாய் மூலம் அனுப்பினார். அடுத்தது என்னவென்று அறிய ஆவலாக இருக்கின்றது.........😀 கிரியேட்டிவிட்டி, கிரியேட்டிவிட்டி என்று வேலை இடத்தில் அடிக்கடி சொல்வார்கள். அதாவது எங்களுக்கு கிரியேட்டிவிட்டி வேணுமாம். இந்த நபருக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்குது...😀
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
😢............ 'வேட்டையாடு விளையாடு' படத்தில் இவரின் பாத்திர அமைப்பும், நடிப்பும் மறக்க முடியாதவை.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக அவ்வூர் மக்கள் அதன் ஆபத்து கருதியே அவ்வளவு போராடினார்கள். உதயகுமார் என்னும் ஒரு பேராசிரியர் என்று ஞாபகம். அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் இருந்தார். அவர் தமிழ்நாடு திரும்பி, இந்தப் போராட்டத்தில் முன்னால் நின்றார். அந்த அணு உலையில் விபத்து ஏதும் ஏற்பட்டால், இலங்கையின் கடற்கரை பக்கம் கூட பாதிக்கப்படும். ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தின் தாக்கம், 38 வருடங்களின் பின், இன்றும் வீரியம் குறையாமலேயே இருக்கின்றது. ரஷ்யா - உக்ரேன் போரிலும் அந்த இடத்தை தொடாமல் விட்டே வைத்திருக்கின்றார்கள். அங்கிருக்கும் சில விலங்குகள் மிக அதிகமான கதிர் வீச்சுக்கு எப்படி இயல்பாகி வாழ்கின்றன என்ற விவரணம் இங்கு போன வாரம் ஒரு தொலைக்காட்சியில் போனது. கூடங்குளத்திலும் ரஷ்யாவின் இதே தொழில்நுட்பமே என்று சொன்னார்கள். சூரிய ஒளி மின்கலங்கள் இங்கு இப்பொழுது கூரை ஓடுகளின் வடிவிலும் வந்துவிட்டன. என் அயலவர் ஒருவர் அதைப் போட்டிருக்கின்றார். இங்கு இந்த வருடம் சரியான மழை. சூரிய மின்கல ஓடுகள் போட்ட பின், அவரின் வீட்டில் மழை நீர் ஒழுகத் தொடங்கி, இப்பொழுது திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்றிரவில் இருந்து திரும்பவும் நல்ல மழை.........😌
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
👍.... ஒரு வைத்தியர் போலவே சொல்லியிருக்கிறீர்கள்.........😀 இங்கு பல 'டயட்' வகைகள் எம்மவர் மத்தியிலே இருந்தன. அதில் ஒன்று 'லோ கார்ப் அல்லது நோ கார்ப் டயட்'. கொஞ்சமாக கீன்வா என்ற ஒரு தானியத்தை சிலர் அவித்து சாப்பிட்டனர். கோவிட் வைரஸ் வந்த வரத்தில், எல்லா டயட்டும் காணாமல் போய்விட்டது............🤣. இனி மீண்டும் வரும்.
-
தோற்ற வழு
இணைப்பிற்கும், தகவலுக்கும் நன்றிகள். ஒரு பெருச்சாளி (possum) உள்ளே புகுந்து அவரது ஆவணங்களை சேதப்படுத்தி விட்டது என்பது சிரிப்பை உண்டாக்கியது. அவருக்கு அதிர்ஷ்டம் நிறையவே.....😀. சில நாட்கள் முன் இங்கு களத்தில் 'எச்சரிக்கை' என்னும் ஒரு சுய ஆக்கம் எலிகள் பற்றி நான் எழுதி, பின்னர் பெருச்சாளி, மூஞ்சூறு என்று அது போனது..........🤣
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
👍.... உடல் உழைப்பு இருந்தால், நீங்கள் சொல்வது மிகச் சரியே. இன்று இங்கு இவர்கள் பெரும்பாலும் கணினி தொழில்நுட்ப துறையில் நேரம் காலம் அற்று இருந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள். எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றனர், அந்த விபரங்களுடனேயே நோய்களும் வருகின்றன........