Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இலங்கையில் இனப் பிரச்சனை நாட்டையே இரண்டாக்கும் முன் இருந்த காலத்தில், வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதியப் பாகுபாடுகள் உச்சத்தில் இருந்தது. அன்றைய நாட்களில் சில தமிழ் வியாபாரிகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் வியாபாரங்களும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகமாக இருந்த காலகட்டம் அது. ஆனாலும் அன்று சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே திருமண உறவு மிகக் குறைவாக இருந்தது. காவல்துறை தலைவர் நடேசன் போன்ற ஓரிருவரே அப்படிச் செய்ததாக தெரிந்திருந்தது. போராட்டம் தீவிரமாக இருந்த காலம் வேறு. முற்று முழுதான சந்தேகமே இரண்டு பக்கங்களிலும் இருந்தது. இனப் பாகுபாட்டை மீறி எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்தும் ஒரு சாதகமான நிலை இருக்கவில்லை. மிகவும் சிலவே நடந்தன. இன்றைய போக்கு மாறி இருந்தால், அதற்கான பிரதான காரணம் வடக்கு மக்களின் பரம்பலே பிரதான காரணமாக இருக்கவேண்டும். வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் நாட்டின் வேறு பகுதிகளில் நிரந்தரமாக , முக்கியமாக கொழும்பு போன்ற இடங்கள், வாழ ஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்கள் வேறு இன மக்களுடன் அதிக இணக்கத்துடன், முன்னருடன் ஒப்பிடும் போது, இருக்கின்றார்கள் போல. இது இன்று உலகின் பல பெரு நகரங்களிலும் காணும் ஒரு நடைமுறையே. சென்னையில் கூட அவர்களின் மிகவும் இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி புதிய உறவுகள் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணமோ மூவினங்களும் ஒரே அளவில் வாழும் ஒரு பிரதேசமாக மாறிவிட்டது. காலப்போக்கில் இன மற்றும் வேறு அடையாளங்களை தாண்டிய உறவுகள் அங்கே அதிகமாவது தவிர்க்க முடியாத ஒன்றே.
  2. சில வருடங்களின் முன், டென்மார்க்கிலிருந்து இதே போல ஒரு செய்தி வந்திருந்தது. 'விமான ஓட்டியான முதல் ஈழத்து தமிழ் பெண்...........' என்பது போன்ற ஒரு தலைப்புடன். அந்தப் பெண்ணின் தந்தை தெரிந்தவர், ஊரில் ஆசிரியராக இருந்தவர். அவர் ஒன்றோ இரண்டு முழு நீள சினிமா படங்களும் எடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஊரில் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தவர். சில காலமாக அவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. பின்னர் எந்த செய்தியும் வரவில்லை/தெரியவில்லை. அதற்கு சில வருடங்களின் முன் பிரித்தானியாவில் தனது மகன் விமான ஓட்டியாக இருப்பதாக ஒருவர் சொன்னார். அமெரிக்கா கூட வந்து போவதாகச் சொன்னார். ஆனாலும் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. இங்கு நான் இருக்கும் அதே ஊரில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் விமான ஓட்டியாக இருக்கின்றார். பெரிதாக பழக்கம் இல்லை. எங்காவது கண்டால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே. பல வருடங்களின் முன் இங்கு இருக்கும் ஒரு சிறிய கல்லூரியில் ஒரு தமிழ் அரசியல்வாதியின் மகன் வந்து இந்த துறையில் படித்துக் கொண்டிருந்தார். முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. தினக்குரலோ அல்லது வேறு ஏதோ ஒரு பத்திரிகையில் பெரிதாக படங்களுடன் செய்தி வந்திருந்தது. ஒரு பெரிய விளம்பரம் போன்றே அது தெரிந்தது. அந்தக் கல்லூரி, படிப்பு எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிது இல்லை, ஆனாலும் எதிர்கால அரசியலுக்காக செய்கின்றார்கள் போல என்று நினைத்தேன். அவர் இன்னமும் ஒரு தேர்தலிலும் நிற்கவில்லை போல.
  3. கடன் என்பது பலவீனமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும் இல்லை. அதுவே ஒரு நாட்டின் பலமாகக் கூட இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வட்டி மற்றும் முதல் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதிலேயே கடன் ஒரு நாட்டுக்கு சுமை ஆகின்றதா அல்லது அதன் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுகின்றதா என்று தீர்மானிக்க முடியும். தனிநபர் சராசரி வருமானமும், முழு நாட்டின் செல்வத்தின் பரம்பல் விகிதங்களும் மக்களின் வருமானத்தை ஓரளவு சரியாகக் குறிக்கும். வருமானமும், வாழ்க்கை தரமும் நேர் விகிதமானதாக இருக்க வேண்டும் என்றில்லை, உதாரணம்: அமெரிக்கா. அதே நேரத்தில் இந்தியா போன்ற ஒரு தேசம் எவ்வளவு சமச்சீர் அற்றது என்று அறிந்து கொள்ள இந்தக் குறியீடுகள் உதவியாக இருக்கின்றன.
  4. மிக்க நன்றி. நீங்கள் சொன்ன பின் இந்த திரியில் இருந்த என்னுடைய முதல் பதிவை திருத்தி அஞ்சலியையும் சேர்த்துள்ளேன்................🙏.
  5. மஹா குழுமத்தை இந்த கணக்குகளும், தொகைகளும் பாதிப்பதே இல்லை, வசீ. மிகவும் அடிப்படையான சில தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாதிப்புகள் நேரடியாக அங்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரலாம். ஆனால் இன்று அவர்கள் வெற்றி பெற்று விட்ட, அவர்களின் அமெரிக்காவை மீண்டும் கொண்டு வந்து விட்ட ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள். மற்றைய அமெரிக்கர்களின் நிலை, அதிகமாக மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளில் இருக்கும் மக்கள், ஒரு நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியபடியே இருக்கின்றது. புதிய முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு மூன்றரை வருடங்கள் மட்டுமே என்றும் நம்புகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டு, அதனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிதாக கல்லூரிப் படிப்புகளை முடித்தவர்கள். இந்த வகையினர் கொஞ்சம் அவநம்பிக்கையுடனேயே இன்று இருக்கின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவால் உண்டாகிக் கொண்டிருக்கும் தொழில்துறைச் சுனாமியும் ஒரு பிரதான காரணம்.
  6. விசுகு ஐயா 'சினிமாவுக்குப் போன சித்தாளு' என்னும் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய குறுநாவலை வாசித்திருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. இந்தக் கதையில் வரும் பல சம்பவங்கள் இன்றும் பொருந்துபவை மற்றும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உண்டாக்குபவை. அந்தக் கதையில் எம்ஜிஆர் இருக்கின்றார், ஆனால் நேரடியாக அல்ல, ஆனாலும் அது எம்ஜிஆர் தான் என்று வாசிப்பவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும். எம்ஜிஆர் சுத்தமாகவே ஆண்மையற்றவர் என்று சுட்டும் வசனங்கள் அந்தக் கதையில் உண்டு. நான் இதை வாசித்த பின், எம்ஜிஆருக்கு எந்த வகையிலாவது வாரிசுகள் உண்டா என்ற கேள்வி உண்டானது. ஆனாலும் இப்படி எழுதியதற்காக ஜெயகாந்தனை எம்ஜிஆர் எதுவும் செய்யவேயில்லை. அவர் ஜெயகாந்தனை ஒதுக்கக்கூட இல்லை. இந்தக் கதையின் பின்னும், 'இலக்கியவாதிகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்..............' என்று அவர் ஜெயகாந்தனைப் பற்றி மிகவும் உயர்வானதாகவே சொன்னதாகச் சொல்லுகின்றார்கள்.
  7. இந்த விடயத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜும், ஜேவிபி கட்சியினரும் நடந்து கொண்ட விதம் மோசமானதே. அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போய்விட்டது...........................😒.
  8. 👍.................. அருள்நிதியின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு, மு க குடும்பத்தில் இவர் யார் என்று தேடி நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை பார்த்திருக்கின்றேன். அதே போலவே சமீபத்தில் முரசொலி செல்வம் மறைந்த பொழுது அவர் பற்றிய செய்திகள் பிரசுரமாகியிருந்தன. பெரிய ஒரு குடும்பமே................
  9. மோடியை நுள்ளிப் பார்க்கிறதை தலை ஒரு வேலையாக வைச்சிருக்குது போல............🤣. நான் முதலில் தலை சொல்லியிருந்த தகவலைத்தான் பார்த்தேன். தலை ஏன் இப்ப இதை சொல்லுகின்றது என்று பார்த்தால்.................... மோடி உலகமே வியந்தது என்று ஒரு பேச்சோட வாறார்...........😜.
  10. மு க முத்து அவர்களுக்கு என் அஞ்சலிகள். தமிழ்நாட்டு அரசியலில் சாதாரண ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவரே சம்பாதிக்கும் காலத்தில், மு க முத்துவிற்கு ஏற்பட்ட நிலையை நம்புவது கடினமாக இருக்கின்றது. அழகிரி ஒரு பக்க தமிழ்நாட்டில், ஸ்டாலின் இன்னொரு பக்க தமிழ்நாட்டில், சகோதரிகளின் கணவர்கள் உயர் பதவிகளில், அவர்களின் பிள்ளைகள் மத்திய அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்று ஒரு குடும்ப சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய கருணாநிதியாலே முத்துவை என்ன செய்தும் வழிப்படுத்த முடியாமல் போனது ஆச்சரியம் தான்.
  11. மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முன்மொழியும் திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான விடயங்களாக இருக்கின்றன. இன்றே இவற்றை முன்மொழிந்து சட்டங்கள் ஆக்கினால், இனிவரும் காலங்களில் இவை பயன்களைக் கொடுக்கும். ஒரு மரத்தை நடுவது போல. ஆண்களால் சிலவற்றை சீரணிக்க முடியாமலேயே இருக்கப் போகின்றது. மனங்களை விசாலமாக்கி, இவற்றை ஏற்றுக் கொள்வது தான் இங்கிருக்கும் ஒரே வழி. சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். கனடாவில் ஓரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். அந்த திருமணம் ஒரு திருமண விழாவாகவே நடந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் வந்த எதிர்ப்பு மிகப் பெரியது. ஆண்களின் எதிர்ப்புக் குரல்களே அதிகமாக இருந்தன. நாங்கள் அப்படியே அங்கங்கே தேங்கி நின்று விட்டோம் என்று தோன்றியது. ஆனால் காலம் தேங்கி நிற்பதில்லை, பின்னுக்கும் போவதில்லை. நாங்கள் தான் ஓடிப் போய் பிடிக்கவேண்டும். அந்த திருமணத்தில் நான் உணர்ந்த ஒரு விடயம்: அந்த இரு பெண்களுக்கும் உலகெங்கும் இருந்து எம் பெண்கள் கொடுத்த ஆதரவு. பிறப்புச் சான்றிதழில் ஏன் ஆணின் பெயர் அவசியமில்லை என்பதற்கான தேவைகளில் இதுவும் ஒன்று.
  12. சமீபத்தில் கனடாவில் ஒரு கோவிலை இடம் மாற்றியிருந்தார்கள். முன்னர் இருந்த இடத்தில் இருந்து ஒரு புதிய இடத்திற்கு. இதனால் கோவிலின் கணக்கில் இருந்த நிதி முழுவதுமாக முடிந்துவிட்டது. இப்பொழுது புதிய நிதியை திரட்டுவதற்காக சில சூப்பர் சிங்கர் பாடகர்களை அழைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் போக்குவரத்து செலவு, தங்குமிடம் மற்றும் கட்டணம் பற்றி ஒரு நண்பன் சில தகவல்களை சொன்னான். எங்கேயென்றாலும், சரியாகத் திட்டமிட்டால், நிதி திரட்டுவதற்கு இது ஒரு இலகுவான வழி போல.
  13. 🤣......... கிட்டத்தட்ட இன்னொரு ஜென்மம் எடுத்தது போலவே............. 🤣.......... ஒரு வயதுக்கு மேலே புதிதாக எதையும் கண்டுபிடித்தால் என்ன, கண்டுபிடிக்காவிட்டால் என்ன என்ற ஒரு மெத்தனப் போக்கு பொதுவாக வந்து விடுகின்றது போல, சுவி ஐயா............
  14. உங்களின் மாமி இப்பொழுது சுகமாகி இருப்பார் என்று நினைக்கின்றேன், அண்ணா. கனடாவில் நண்பன் ஒருவனின் அம்மாவிற்கும் இப்படி நடந்துவிட்டது. படுத்த படுக்கையாக இருக்கின்றார். அந்த நினைவும், அலுவலகத்தில் நடந்த விடயமும் சேர்ந்து தான் இப்படி ஒன்றை எழுத வைத்திருக்கின்றது போல.................... சும்மா பகிடியாகவே எழுதினேன். தெரிந்தவர்கள் சிலருக்கு இப்படி நடந்திருப்பது இப்பொழுது வரிசையாக ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஒருவர், அவர் இலங்கையில் ஓரளவு பிரபலமானவர். குளியலறையில் விழுந்த பின் சென்னைக்கு கொண்டு போனார்கள் என்று நினைக்கின்றேன். அல்லது கொழும்பில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையோ என்று சரியாக ஞாபகம் இல்லை. அங்கு சில மாதங்கள் இருந்தார் போல. நிறைய செலவாகியது. ஆனால் அவர் சுகப்படவே இல்லை.
  15. 🤣................ அடுத்த தடவை போய் விடுவேன் என்று நினைக்கின்றேன். உலகம் முழுக்க 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக காயப்படுவதில் குளியலறையில் விழுவதும் ஒன்று என்று சொல்லுகின்றார்கள். இன்னும் சில வருடங்கள் இருக்கின்றன.............😜.
  16. குளிக்கும் வேலை ---------------------------- ஏதாவது புதிய யோசனைகள் உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர் அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார் மௌன அஞ்சலி செலுத்துவது போல மௌனமாக இருந்தோம் நாங்கள் இரண்டு நிமிடங்கள் முடிய இன்று மதியம் என்ன உணவு என்று முடிவெடுத்து இருந்தேன் பரவாயில்லை குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும் அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார் நாளை கூட சொல்லலாம் என்றார் சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது ஒரு இருபது வருடங்களின் முன் எனக்கும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தோன்றிக் கொண்டிருந்தன பின்னர் எப்பவோ அது நின்று போனது அன்று குளிக்கும் போது ஒன்றைக் கண்டு பிடித்தே விடுவது என்று தலையில் தண்ணீரை விட்டேன் குளியலறையில் வழுக்கி விழுந்த சொந்தங்கள் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து போயினர்.
  17. 🤣............... நல்ல ஒரு வலுவான காரணம், வாதவூரான்.................😜. ஒரு பிள்ளையின் பின்னால் எத்தனை பேர்கள் சுற்றுகின்றார்கள் என்ற ஒரு கணக்கு கூட 80 களில் இருந்தது. எவருமே கலைக்காத பிள்ளைகளும் வேறு ஒரு புதைமணலில் சிக்கிக் கொண்டார்கள் போல. சில ஆசிரியர்கள் கூட, குறிப்பாக விலங்கியல் படிப்பித்த தம்பிராசா ஆசிரியர், தூய/பிரயோக கணிதங்கள் படிப்பித்த கணேசலிங்கம் ஆசிரியர் போன்றோர், இதற்கு ஒரு சின்னக் காரணமோ தெரியவில்லை. அவர்கள் வகுப்புகளில் போட்ட அதட்டில் பிள்ளைகள் தெறித்து ஓடினார்கள். கணிதப் பிரிவிலிருந்து வர்த்தகப் பிரிவிற்கு பாய்ந்தோடிய ஒரு சக மாணவியைப் பற்றி முன்னர் எழுதியிருக்கின்றேன்................
  18. 👍............... இதன் பின்னணி என்னவென்ற ஆர்வம் பல வருடங்களாகவே என் மனதில் இருக்கின்றது. அந்த நாட்களிலேயே, 80ம் ஆண்டுகளில், இப்படித்தான் நடந்தது. ஊரில் என்னுடைய வகுப்பில் சாதாரண தரத்தில் மிகத் திறமையாக சித்தி பெற்றவர்களில் பல பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். எங்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஒருவர் கூட விதிவிலக்கில்லாமல் சக மாணவிகள் எல்லோரும் காணாமல் போனார்கள். மருத்துவர் ஆகப் போகின்றார், பொறியியலாளர் ஆகப் போகின்றார் என்று கூறப்பட்ட ஒரு சக மாணவி கூட அப்படி ஆகவில்லை. சாதாரண தரத்தில் நண்பனின் மகள் ஒருவர் 9 A பெற்றிருந்தார். அவர் ஊரில் உள்ள ஒரு பாடசாலையிலேயே படித்தார். அயலூரில் இருக்கும் மெதடிஸ் பெண்கள் கல்லூரி அல்லது வேறு எந்த பெரிய பாடசாலைக்கும் அவர் போகவில்லை. இந்த வருடம் அவருடைய உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்தன. மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஊர் இணையதளங்களில் ஒரு செய்தியுமே வரவில்லை. சிறந்த பரீட்சை முடிவுகளை ஊர் இணையதளங்கள் உடனேயே போடும் காலம் இது. பின்னர் அவருடைய பரீட்சை முடிவுகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. இன்னொரு தடவை முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் என்று பலரும் சொல்லியிருக்கின்றார்கள்.................
  19. இவை சிலருக்கு ஒரு வடிகால்களே என்பதில் மற்றுக்கருத்து கிடையவே கிடையாது. இதில் சிலரை பல்கலைக் கழகம் முடிந்து பல வருடங்கள் பின்னரும் நான் அறிந்து இருக்கின்றேன். இந்த நடவடிக்கைகள் வேறு ஏதோ வகைகளில் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. புதிய மாணவர்களுக்கு நிறைய உதவிகள் தேவையே. செய்யப்படும் சின்ன உதவிகளைக் கூட பலரும் வாழ்நாளில் மறப்பதில்லை. 'மெய்யழகன்' படத்தில் வரும் அந்த சைக்கிள் கதை போல நெகிழ்ந்து சொல்லுகின்றார்கள். இப்படி வரும் பிணைப்பும், நட்பும் என்றும் அழியாமல் நிற்கின்றது........👍.
  20. ❤️................ என்ன ஆனாலும் சிலவற்றை இறுதிவரை தொடர்வோம் போல, சுவி ஐயா.
  21. கிறிஸ்துமஸ் மரம் --------------------------- ஒரு ஒழுங்கான கூம்பு வடிவில் இருக்கும் சின்ன சவுக்கு மரமே கிறிஸ்துமஸ் மரம் என்று தான் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஊரில் இருந்த நாட்களில் இதை எங்காவது நேருக்கு நேரே பார்த்ததாக ஞாபகம் இல்லை. படங்களில் அல்லது கதைகளில் மட்டுமே நான் இதை பார்த்திருக்கவேண்டும். அப்படியே வெள்ளைப் போர்வையாக அந்த வீடுகளைச் சுற்றி பனி கொட்டிக் கொண்டிருப்பதாகவும் மனதில் பதிந்து இருந்தது. ஆகவே நிச்சயம் இது படமோ அல்லது கதையோ உண்டாக்கிய தோற்றம் மட்டுமே. ஊரில் கிறிஸ்தவ மக்கள் இருந்தார்கள். மற்றைய ஊர்களை விட என்னுடைய ஊரில் அதிகமாகவே இருந்தார்கள். அதில் ஒரு சிலர் என்னுடைய வயது உடையவர்களாவும், தெரிந்தவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்தப் பண்டிகை நாட்களில் அவர்களின் எவர் வீடுகளுக்குள்ளும் போனதாக ஞாபகம் இல்லை. உண்மையில் அவர்களின் ஒருவரின் வீடுகளுக்குள்ளும் ஒரு தடவையும் போனதில்லை. பின்னர் அவர்களில் ஒருவன் நெருங்கிய நண்பன் ஆனான். அப்பொழுதும் கூட அவன் வீட்டின் வெளிக்கதவில் நின்றே அவனைக் கூப்பிடுவோம். அவன் அதற்கு முன்னர் அவ்வளவாக ஊர் சுற்ற எங்களுடன் வெளியில் வந்ததில்லை. அவர்கள் ஒரு உயர்குடி என்ற அபிப்பிராயம் எங்கள் மனதுகளில் பொதுவாக இருந்தது. மார்கழி மாதங்களில் அவன் வீட்டின் கண்ணாடி யன்னல்களில் சின்ன சின்ன மின்விளக்குகள் நின்று நின்று எரிந்து கொண்டிருக்கும். அவனின் வீடே அந்த நாட்களில் இன்னும் அழகானதாக மாறி இருக்கும். நண்பனின் வீட்டுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் மரம் இருந்திருக்கும். அந்த மரத்திற்கு சோடனைகள் செய்திருப்பார்கள். அதன் உச்சியில் ஒரு நட்சத்திரமும் வைத்திருப்பார்கள். ஆனால் நான் இவை எதையும் பார்க்கவில்லை. அவன் சில நாட்களில் சில தின்பண்டங்களை எடுத்து வருவான். அவை வித்தியாசமானதாக இருந்தன, நன்றாகவும் இருந்தன. பின்னர் அவனுடன் ஒன்றாக நான்கு வருடங்கள் தங்க வேண்டியிருந்தது. அது படிக்கும் காலம். இவ்வளவு நல்ல மனிதர்களும் இருக்கின்றார்களா என்று ஆச்சரியப்படவைத்தான். அதை நான் அவனுக்கு சில தடவைகள் நேரடியாகவே சொல்லியிருக்கின்றேன். ஒரு விதமாக சிரிப்பான். நீ தான் அடுத்த தேவமைந்தன் என்று பகிடி போல சொல்லியும் இருக்கின்றேன். சில மனிதர்கள் எப்படி அப்பாவிகளாகவும், மிகவும் நல்லவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது பெரிய ஆச்சரியமாகவே இருக்கின்றது. இவ்வாறு இருப்பவர்களின் உலகத்தில் மிகச் சில விடயங்களே இருக்கின்றன. அவர்களின் உலகத்தில் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இறைவன் ஒருவரும் இருக்கின்றார் போல. பின்னர் எங்கள் வாழ்க்கையில் நானும் மனைவியும் சேர்ந்து வருடாவருடம் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்க வேண்டியதாகியது. இரு குழந்தைகளின் எதிர்பார்ப்பை ஏமாற்ற முடியவில்லை. அந்த நாட்களில் கிறிஸ்துமஸ் மரத்துடன் சேர்ந்து வீடும் அழகாகவே இருந்தது. எதற்கு இருக்கின்றது தெரியாமல் இருக்கும் புகைபோக்கியினூடாக ஒரு தாத்தா வருவார் என்று அங்கு கொஞ்சம் இடம் ஒதுக்கி வைக்க வேண்டியதாகியது. வருடத்தில் ஒரு நாள் தாத்தாவிற்கு பிஸ்கட்டும், பாலும் வைக்கும் ஒரு வழக்கத்தையும் கற்றுக்கொண்டோம். முன்பக்கம் இருந்த அயல் வீடொன்றில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகன், அவர் வேறு எங்கேயோ இருந்தார். அடிக்கடி வந்து போவார். வெள்ளை இனத்தவரான அவர்கள் எங்களுடன் பேசவில்லை. அவர்கள் பேசுவதற்கு கூட முயலவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சிறிது முயன்றேன், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன். அவர் வயதானவர் என்றாலும் மிகவும் சுறுசுறுப்பானவராக இருந்தார். அவர் வீட்டில், வளவில் எல்லா வேலைகளையுமே மிகவும் நேர்த்தியாகச் செய்தார். அவர் வீட்டின் கூரையின் ஒரு பகுதியைக் கூட அவரே புதிதாகப் போட்டார். கூரையில் ஏறி கோழி கூட பிடிக்க முடியாத நான் கூரையை எப்படி மாற்றுவேன் என்று அதிர்ச்சி அடைவதை தவிர வேறொரு மார்க்கமும் எனக்கு இருக்கவில்லை. அவர் எந்த வேலை செய்தாலும் அவருடைய மனைவி எந்த உதவியும் செய்ததில்லை. அவர் வேலை செய்யும் போது வெளியில் வந்து எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர் கூரைக்கு மேல் நின்ற நாட்களில் கூட அவரின் மனைவி வீட்டினுள்ளேயே இருந்தார். அவர்களின் வீட்டின் முன் ஒரு மரம் நின்றது. அது நான் சிறு வயதில் கற்பனையில் கண்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஓரளவிற்கு ஒத்தது. அதுவே தான் அவர்களின் கிறிஸ்துமஸ் மரம் என்பது முதல் வருடத்தில் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா சோடனைகளும் அந்த மரத்திற்கே நடந்து கொண்டிருந்தது. பரிசுப் பொதிகள் போன்றவை கூட அந்த மரத்தின் கீழே வைக்கப்பட்டன. அவர்களின் வீட்டினுள் கிறிஸ்துமஸ் மரம் இருக்கவில்லை. வெளியில் உயிருடன் நின்ற கிறிஸ்துமஸ் மரத்தை சோடிப்பதற்காகவே விசேடமாக சின்ன ஏணி, சில தடிகள் என்று அவர் வைத்திருந்தார். சில வருடங்களின் பின் அவர் மிகவும் தளர்ந்து போனார். ஒரு நாள் அவராகவே வந்து அவரது ஈரல் பகுதியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். அதன் பின்னர் மிகவும் நட்புடனும், நெருக்கத்துடனும் பேச ஆரம்பித்தார். அந்த வருடமும் அவரே கிறிஸ்துமஸ் மரத்தை சோடித்தார், கொஞ்சம் மெதுமெதுவாக. அவரின் மனைவி உள்ளேயே இருந்தார். பின்னர் ஒரு நாள் அவர் வீட்டின் முன் தெருவின் கீழ் போய்க் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இருவர் திருத்திக் கொண்டிருந்தார்கள். அவரின் மகன் அந்த இருவரின் அருகிலே நின்று கொண்டிருந்தார். குழாய் வெடித்து விட்டதா என்று அவரின் மகனிடம் கேட்டேன். ஆமாம், உடைந்து விட்டது, இன்று திருத்தி விடுவார்கள் என்றார் அவரின் மகன். கூரையையே மாத்தியவருக்கு இந்தக் குழாயை மாற்றுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை, ஆனால் இப்பொழுது உடம்புக்கு முடியாமல் போய் விட்டது என்று நினைத்தபடியே அப்பா எங்கே என்று கேட்டேன். 'அப்பா போன மாதம் இறந்து போனார்..................' '' வார்த்தை ஒன்றும் வரவில்லை. அந்தக் கணத்தில் உலகமே அப்படியே உறைந்து போனது. எனக்கு ஏன் சொல்லவில்லை என்று உரக்கக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் இது என்ன உலகம், இந்த மனிதர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு கையாலாகாத நிலையிலேயே அங்கே நின்றேன். 'அம்மா......................' என்றேன். 'அம்மா உள்ளே இருக்கின்றார்................'. எதுவும் சொல்லாமலேயே அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அந்த அம்மா அந்த வீட்டுனுள் இருக்கின்றார் என்பதற்கு அடையாளமாக இரவுகளில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உயிருள்ள கிறிஸ்துமஸ் மரம் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மரம் இனி என்னவாகும் என்ற எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. அந்த வருட பண்டிகைக்காலம் ஆரம்பித்த ஒரு நாள் வெளியே போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கிறிஸ்துமஸ் மரம் இருக்கும் திசையில் பார்வை அதுவாகப் போனது. அங்கே அதே விசேட சின்ன ஏணி, சில தடிகளை வைத்துக் கொண்டு அந்த அம்மா கிறிஸ்துமஸ் மரத்தை மெதுமெதுவாகச் சோடித்துக் கொண்டிருந்தார்.
  22. 👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். எந்தப் புள்ளியிலும் எல்லாத் திசைகளும் இருக்கின்றது தானே.................... இலங்கையின் தென் கிழக்கே போய்த்தான் அங்கிருந்து தென்கிழக்கை பார்க்க வேண்டுமா............... அப்படியே உட்கார்ந்தாலும் வந்து விடும் படிப்பு................🫣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.