Jump to content

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1604
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Everything posted by ரசோதரன்

  1. ஜேவிபியின் கொள்கைப் படி இலங்கையில் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட மக்களே கிடையாது. எல்லோரும் இலங்கையர்களே. அது தான் அவர்களின் தீர்வு. தமிழர்களுக்கு என்றோ அல்லது வேறு எந்தப் பிரிவினருக்கு என்றோ அங்கு தனிப்பட்ட பிரச்சனை என்று ஒன்றே கிடையாது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. மற்ற அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கின்றது, நாங்கள் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்வார்கள், ஆனால் ஒருபோதும் அவர்களில் ஒருவரும் இது சம்பந்தமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடப் போவதில்லை. ஜேவிபி அப்படி ஒரு பிரச்சனையையே கிடையாது என்று ஆரம்பத்திலேயே அடித்து மூடிவிடுவார்கள். இவர்கள் பொறுப்புக்கு வந்தால் இலங்கை வெனிசுவேலா ஆவது துரிதகதியில் நடக்கும். இவர்களின் தேசியமயம் என்ற ஒரு கொள்கையே போதும் நாட்டை இருப்பதை விட இன்னும் சில தசாப்தங்கள் பின்னுக்கு கொண்டு போக. அசாமில் ஒரு தடவை மாணவர் புரட்சி வென்று, ஆட்சிக்கும் வந்தார்கள். புரட்சியில் வென்ற அவர்கள், ஆட்சியில் அந்த மாநிலத்தை அழித்தார்கள். அதே வரலாறு இங்கே மீண்டும் திரும்பும். கட்டப் பஞ்சாயத்தை நேரில் பார்க்கலாம். அது தான் அவர்களின் சட்டம் ஒழுங்கு.
  2. இந்த நண்பனின் சொந்த மாநிலம் மத்தியப் பிரதேசம். அவனில் அராபியர்களின் சில அம்சங்களும் தெரியும். ஆனால் வீட்டில் பேசுவது ஹிந்தி அல்ல. குஜராத்தி மொழியையே இவர்கள் வீட்டில் பேசுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் பேசுவது போல.
  3. இன்றைய ஐடி துறையில் இவர்கள் தான் பெரிய இராணுவம். ஆனாலும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்ட இராணுவம். நாட்டின் பொருளாதாரமும் உலகில் முதல் ஐந்திற்குள் எப்போதும் வந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் வளர்ச்சி எல்லா மக்களையும் போய்ச் சேரவில்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. ஊழல், இலஞ்சம், அரச நிர்வாகத் திறமையின்மை என்பன ஒப்பீட்டளவில் மிக அதிகம். காமன்வெல்த் போட்டியை நடத்தினார்கள். இதில் அமைச்சரும் மற்றவர்களும் இலஞ்சம் வாங்கியதாக இன்னமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பீகாரில் ஒன்பது வருடங்களாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய பாலம் ஒன்று நேற்று மூன்றாவது முறையாக உடைந்து விழுந்துவிட்டது. அங்கு பாலங்கள் இடிந்து விழுவது ஒரு தொடர்கதை. அயோத்தி ராமர் கோவிலில் இப்போது கூரை ஒழுகுகின்றது என்கின்றார்கள். இந்த இந்தியாவால் ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தவே முடியாது. இலாப நோக்கற்ற, அரசப் பணிகளில் ஊழலும், லஞ்சமும் அங்கு தலைவிரித்தாடுகின்றது. பெரும்பாலானோருக்கு பெருமை எல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. செயலில் எதுவுமே இல்லை. தான் ஒருவன் இலஞ்சம் வாங்குவதால் அல்லது கொடுப்பதால் இங்கு எந்தக் குடியும் முழுகிவிடப் போவதில்லை என்பதே பெரும்பான்மை மக்களின் மனநிலை, அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கான தடை. ஆனாலும் இந்தக் கூட்டத்தில் சிக்காத உண்மையான பல இடதுசாரிகளும், சமூகப் போரளிகளும் அங்கு இருக்கின்றார்கள்.
  4. 🤣......... நீங்கள் தொடர்பு கொண்ட அறிஞர்கள் மிகவும் இளையவர்கள் போலத் தெரிகின்றது............ அநியாயமாகப் இடையிலேயே போய்ச் சேர்ந்த ஒரு அற்புதமான கலைஞன். இன்றைய சினிமாவில் இவர் இருந்திருக்கவேண்டும். இன்றும் சினிமாவில் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், தல, தளபதிகள் என்று ஒரு பக்கம் கொடி, ஆலவட்டம் இருந்தாலும், 'மாற்றுக் கலைஞர்களுக்கும்' இன்றைய சினிமாவில் நல்ல இடமும், வரவேற்பும் இருக்கின்றது. அன்று இதே வரவேற்பு அவர்களுக்கு இருக்கவில்லை. இங்கு ஒரு நாடகத்தில் 'நானொரு முட்டாளுங்க.........' பாடல் இருந்தது. அதில் நடிக்க இருந்தவர் அநதப் பாட்டிற்கு தான் மேடையில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.........🫣. 'பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்.................', தமிழில் வந்த பாடல்களில் மிகச் சிறந்ததில் ஒன்று................
  5. 2022ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 2024ம் ஆண்டு 70வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. 'பொன்னியன் செல்வன்' சிறந்த தமிழ்த் திரைப்படமான தேர்வாகியிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு - ரவிவர்மன், சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி ( காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்) விருதுகளை வென்றுள்ளனர். சிறந்த நடன இயக்கத்திற்கான விருது ஜானி ( திருச்சிற்றம்பலம்), சிறந்த சண்டைப் பயிற்ச்சிகான விருது அன்பறிவு (கே.ஜி.எஃப் -2) ஆகியோருக்குக் கிடைத்திருக்கிறது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. விருதுகள்: சிறந்த படம் ஆட்டம் (மலையாளம்) சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் காந்தாரா சிறந்த இயக்குநர் சூரஜ் ஆர் பர்ஜாத்யா (Uunchai) சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி ( காந்தாரா) சிறந்த நடிகை நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்) சிறந்த துணை நடிகர் பவன் ராஜ் மல்ஹோத்ரா (Fouja) சிறந்த துணை நடிகை நீனா குப்தா (Uunchai) சிறந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரீபத் (Malikappuram) சிறந்த பிராந்திய திரைப்படங்கள்: சிறந்த தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1 (இயக்குநர் - மணிரத்னம்) சிறந்த கன்னட திரைப்படம் கே.ஜி.எஃப் - 2 (இயக்குநர் - பிரசாந்த் நீல்) சிறந்த மலையாள திரைப்படம் Saudi Vellakka CC.225/2009 (இயக்குநர் -தருண் மூர்த்தி) சிறந்த தெலுங்கு படம் Karthikeya 2 (இயக்குநர் - சந்தூ மொண்டேடி) சிறந்த இந்தி திரைப்படம் Gulmohar (இயக்குநர் - ஷர்மிளா தாகூர்) சிறந்த குஜராத்தித் திரைப்படம் Kucth Express (இயக்குநர் - பிரோமோத் குமார்) சிறந்த மராத்தி திரைப்படம் Vaalvi சிறந்த பெங்காலி திரைப்படம் Kaberi Antardhan சிறந்த பஞ்சாபி திரைப்படம் Baghi Di Dhee சிறந்த திவா திரைப்படம் Sikaisal சிறந்த ஒடியா திரைப்படம் Daman (இயக்குநர்கள் விஷால் மௌரியா, லெங்கா தேபிபிரசாத்) சிறந்த அசாமிய திரைப்படம் Emuthi Puthi (இயக்குநர் - Kulanandini Mahanta) தொழில் நுட்ப விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் ( பாடல்கள்) ப்ரீதம் (Brahmastra) சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன்) சிறந்த பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ (Saudi Vellakka CC.225/2009) சிறந்த பின்னணிப் பாடகர் அர்ஜித் சிங் (Brahmastra - song Kesariya.) சிறந்த ஒளிப்பதிவு ரவிவர்மன் (பொன்னியின் செல்வன்) சிறந்த படத்தொகுப்பு மகேஷ் புவனேந்த் (Aattam) சிறந்த ஒலிமையமைப்பு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ( பொன்னியின் செல்வன்) சிறந்த பாடல் வரிகள் பாடலாசிரியர்: நௌஷாத் சதர் கான் (பாடல்: Salaami, படம்: Fouja) சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆனந்த அத்யா (Aparajito) சிறந்த ஆடை வடிவமைப்பாளர் நிக்கி ஜோஷி (Kutch Express) சிறந்த ஒப்பனைக் கலைஞர் சோம்நாத் குந்டு (Aparajito) சிறந்த திரைக்கதை ஆனந்த் ஏகர்ஷி (Aattam) சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் Brahmastra சிறந்த நடன இயக்குநர் ஜானி ( பாடல்: மேகம் கருக்காதா, படம்: திருச்சிற்றம்பலம்) சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி அன்பறிவ் (கே.ஜி.எஃப் -2) சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம் Kutch Express (குஜராத்தி) சிறந்த திரைப்பட விமர்சகர் Deepak Dua சினிமா பற்றிய சிறந்த புத்தகம் கிஷோர் குமார் -The Ultimate Biography Non-Feature Films: சிறந்த திரைப்படம் Ayena (Siddhant Sarin) சிறந்த ஆவணப்படம் Murmurs of the Jungle சிறந்த அறிமுகத் திரைப்படம் Madhyantara சிறந்த வாழ்க்கை வரலாறு/வரலாற்று/தொகுப்பு திரைப்படம் Aanakhi Ek Mohenjo Daro சிறந்த கலை/கலாச்சாரத் திரைப்படம் Ranga Vibhoga/Varsa சிறந்த கதை Mono No Aware சிறந்த வசனம் Murmurs of the Jungle சிறந்த இசையமைப்பு Fursat சிறந்த படத்தொகுப்பு Madhyantara சிறந்த ஒலிப்பதிவு Yaan சிறந்த ஒளிப்பதிவு Mono No Aware சிறந்த இயக்கம் From the Shadow சிறந்த குறும்படம் Xunyota சிறந்த அனிமேட்டேட் திரைப்படம் The Coconut Tree சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் On the Brink Season 2 – Gharial
  6. அந்த தேர்தலா....... அது ரொம்ப ரொம்ப காம்ப்ளிகேட் ஆனதுங்க..... அங்க இன்னைக்கு, இப்ப யாரு யாருக்கு சப்போர்ட் பண்றாங்க, என்ன டீலிங் இன்னைக்கு போய்க்கொண்டு இருக்கு, ஒண்ணுமே புரியல்லங்க........ சந்திரபாபுவின் அந்தப் பாட்டுத் தான் சிட்டிவேஷன் சாங்க்......
  7. அவர் இன்னமும் 'மார்க்கெட்' உள்ளவராகவே இருக்கின்றார் என்பதே அதன் காரணம்...........🤣. பெயரைக் கண்டவுடனேயே அதிர்ந்து போய் விட்டார்கள்.........😜.
  8. 👍..... வீரம், வீரம் என்பவர்கள் பலர் எப்போதும் உள்ளுக்குள் பயத்துடனும், நடுக்கத்துடனும், சந்தேகத்துடனும் தான் வாழ்நாள் முழுவதும் இருக்கின்றார்கள் போல.
  9. 👍........... நேற்று கட்சிக்குள் வந்த ராதிகா & சரத்குமார் கடகடவென்று முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். தன்னை எல்லோரும் மறந்தே போய் விட்டனர் என்று தான் குஷ்பு மீண்டும் கமலாயம் வந்திருக்கின்றாராம். தேசிய மகளிர் ஆணையம் வேற தினமும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரச அமைப்பு. கடைசியாக இந்த வாரம் மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் ஆணையம் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றது. மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் குஷ்பு வாயையே திறக்கவில்லை, ஏனென்றால் அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக கட்சியின் பிரமுகர். இது ஏன் இந்த தொல்லை என்று தான், இந்தப் பதவியால் வசதி, வாய்ப்பு, பெயர், புகழ் என்று எதுவும் அவருக்கு கிடைக்கவும் இல்லை, தமிழக மக்களுக்கு சேவை செய்ய என்று மீண்டும் மாநிலம் நோக்கி வந்து விட்டார் குஷ்பு. தமிழிசை, வானதி, ராதிகா, குஷ்பு............. அத்துடன் சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்திலிருந்து ஆரம்பித்துவிட்டது.................
  10. குமாரசாமி அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
  11. 🤣......... இங்கு சில வருடங்களின் முன் வெறும் கையை துப்பாக்கி போல நீட்டிய ஒருவரை போலீஸ் சுட்டுக் கொன்று, அது பெரிய செய்தியாகியது. கொல்லப்பட்ட அந்த நபரின் கையில் தாங்கள் ஒரு துப்பாக்கியை கண்டோம் என்று தான் போலீஸ் ஆரம்பத்தில் சொன்னது.......... முந்தாநாள் இங்கு எனக்கு அருகில் இருக்கும் ஊர் ஒன்றில் தெருவில் போய்க் கொண்டிருந்த மூன்று ஆட்களுக்கிடையில் ஏதோ வாக்குவாதம். திடீரென ஒருவர் ஒரு துப்பாக்கியை எடுத்து இன்னொருவரைச் சுட்டுவிட்டார். மூன்றாமவர் சுட்டவரின் மேல் பாய்ந்து, படங்களில் வருவது போல, அவர்கள் இருவரும் கைகளால் சண்டை போட்டுக் கொண்டனர்.........போலீஸ் அங்கு வர முன் சுட்டவர் ஓடித் தப்பி விட்டார்.......... அமெரிக்கா ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் எல்லா பதக்கங்களையும் வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை............🤣.
  12. 😀.... அன்றைக்கே திரும்பி போயிருக்க வேண்டிய ஆள்.... போதுமடா, இந்த நாடு என்று சில மாதங்களில் ஒரேயடியாக திரும்பி போனவன் தான், பின்னர் இந்தப் பக்கம் வரவேயில்லை.
  13. அச்சம் தவிர் ------------------- முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவை கிட்டத்தட்ட எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்த நாடு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கேயே உழைத்து, இங்கேயே செலவழிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போல. இதற்காக இங்கு சில பல்கலைகளில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அறிக்கைகள் கூட தயார் செய்திருப்பார்கள். இவர்களின் சில ஆராய்ச்சிகளைப் பார்த்தால், அவை 'மயிர் பிளக்கும்' ஆராய்ச்சிகள் போன்றே தோன்றும். ஆனாலும் அவற்றின் பின்னாலும் சில திட்டங்கள் இருக்கும் போல. மிக நேர்மையானவனாக இருந்தான். அதுவரை நான் அப்படி நேர்மையான ஒரு மனிதனை எங்களின் வேலையில் பார்த்திருக்கவில்லை. மிகத் திறமையானவனும் கூட. அவன் பொய்யே சொல்வதில்லை என்றே தோன்றியது. ஒரு நாள் நேரடியாகவே அதைக் கேட்டேன். மெல்லிய சிரிப்பு ஒன்றே அவனின் பதிலாக இருந்தது. தினமும் ஒரு கத்தியுடனேயே வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றான் என்று சில நாட்களில் தெரிய வந்தது. கத்தியை அவனின் மேசையில் இருக்கும் ஒரு அலுமாரியில் வைத்துக் கொள்வான். பின்னர் வேலை முடிந்து வீடு போகும் போது அதை கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவர்களின் மார்க்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பிரிவுகளும் இல்லாமல் இன்னொரு பிரிவே அவனுடையது. முதன் முதலாக அந்த மார்க்கத்தில் இருக்கும் அப்பிரிவைப் பற்றி அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆண்கள் கத்தியுடன் வெளியே போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டளை அங்கிருந்தது. சீக்கியர்களுக்கும் இப்படியான ஒரு வழக்கம், கத்தி ஒன்றுடன் போய் வரும், இருந்தது. இன்றும் பஞ்சாப்பில் நகரம் அல்லாத பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கக்கூடும். 9/11 தாக்குதலின் பின், இங்கு சில இடங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், இஸ்லாமியர்கள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். இரு பக்கங்களும் ஒரே மாதிரியான தோற்றங்கள் மற்றும் ஆடைகள், ஒப்பனைகள், கத்திகளுடன் இருக்கின்றனர். ஒரு நாள் ஏதோ ஒரு விசா சம்பந்தமான அலுவல் ஒன்றுக்காக அவன் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் குடிவரவு அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. எங்களின் வேலை இடத்தில் இருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் நகரத்தின் மையப்பகுதி இருக்கின்றது. அங்கே வேறு பல மத்திய, மாநில அரச அலுவலகங்களும் சுற்றிவர இருக்கின்றன. காலையில் இருந்தே அந்தப் பகுதி கூட்டமாக இருக்கும். காரை தரிப்பிடங்களில் நிற்பாட்டுவதற்கே நேரம் எடுக்கும். ஆதலால் அதிகாலையிலேயே போய், அருகே இருக்கும் ஒரு இடத்தில் காரை நிற்பாட்டி விட்டு, அவன் போக வேண்டிய இடத்திற்கு போகச் சொல்லியிருந்தேன். கூகிளுக்கு முந்திய காலம் இது. காரை நான் சொல்லியிருந்த இடத்தில் விட்டு விட்டு, அருகிலேயே இருக்கும் கட்டிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா, எந்தப் பக்கம் போவது என்ற சந்தேகம் வந்தது. அங்கே நின்ற ஒருவரைக் கேட்போம் என்று, கையில் ஒரு கடதாசியை நீட்டிக் கொண்டே, இந்த இடம் எங்கே இருக்கின்றது என்று அவன் கேட்கப் போனான். இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான். அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான். உன்னுடைய கத்தி எங்கே இருந்தது என்று கேட்டேன். இடுப்பைக் காட்டினான். இப்பவும் அந்தக் கத்தி அங்கேயே இருந்தது. இனிமேல் தான் அது மேசை அலுமாரிக்குள் போகும். சில மாதங்கள் அவன் இங்கிருந்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போய்விட்டான்.
  14. நீங்கள் எழுதுபவற்றை நான் வாசிக்கின்றேன். நிச்சயமாக இன்னும் பலரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், ஜஸ்டின்...........❤️. எந்தக் கருத்தும், எழுத்தும் ஏற்கனவே எவரின் உள்ளேயும் பதிந்திருக்கும் நம்பிக்கைகளை மாற்றுவதில்லை என்பது கசப்பான உண்மை தான்........ ஆனால் அந்தப் பக்கம் - இந்தப் பக்கம் என்று பக்கம் சாராமல் இருப்போர் பலரும் இங்கே இருக்கின்றனர்........🙏.
  15. (தோழரே என்று அழைப்பது தான் உங்களுக்கு பிரியமானது என்று நினைக்கின்றேன்......) தோழரே, உங்களிடம் பன்முகத்தன்மை உள்ளது என்பது மட்டும் இல்லை, நீங்கள் அவை ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பு பெற்றுள்ளீர்கள் என்பதே உண்மை. நீங்கள் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்றே ஆரம்பத்தில் நான் நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது நீஙகள் ஒரு கணிதப் பேராசிரியர் என்று. உங்களின் இயக்க நடவடிக்கைகளும், சமூகப் போராட்டங்களும் உங்களின் மிகச் சிறப்பான அடுத்த பக்கங்கள்........❤️. உங்களின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய எங்களின் வாழ்த்துகள். எங்களுக்காக இங்கு எழுதுங்கள், உங்களின் அனுபவங்களை தொடர்ந்து எங்களுடன் பகிருங்கள்.........
  16. 🤣.......... அப்படியும் ஒரு திரி இருக்கின்றதா, அண்ணை........... இதுவரை ஒரு ஐந்து அல்லது ஆறு திரிகளுக்குள் தான் போய் வந்திருக்கின்றேன்..........
  17. 🤣............ இந்தச் சடங்கை ஒரு விளம்பரமாக ஒரு பழைய காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று சொல்வார்கள். இன்றும் ஒரு விளம்பரம் ஆகவும் இது இருக்கின்றது போல....... ஆனால் இரண்டும் வெவ்வேறு விளம்பரங்கள்.......... என்னுடைய பெயரில் பிள்ளை இல்லை. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என்னும் பெயர் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அங்கிருந்தே ஆரம்பிக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். வன்னி என்னும் எங்களின் நிலப்பரப்பை வைத்து நாங்கள் வன்னியர்களா என்று என்னைக் கேட்ட ஒருவரும் இருக்கின்றார்..............🤣. பண்டார வன்னியனுக்கு வேலூர், தர்மபுரி பக்கங்களில் ஒரு சிலை வைத்தாலும் வைத்து விடுவார்கள்............🤣.
  18. இது எப்படி எம் மனிதர்களை விட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது என்பது ஒரு கேள்வியாக உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கின்றது. ஏதோ ஒரு வகையில், ஆகக் குறைந்தது வெறும் சொற்களாகவாவது, இதை தங்களின் ஒரு அடையாளமாக பலரும் வெளிப்படுத்தி விடுகின்றனர், வசீ......😌. சிலவற்றை எழுதியவுடனேயே தெரிந்து விடும், இந்த அனுபவத்துடன் பலரும் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்று..........🤣.
  19. வேலுப்பிள்ளைமார் ------------------------------- காலையிலேயே வந்து விடுங்கள் என்று அவன் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் தொலைபேசியில் கூப்பிட்டு ஞாபகப்படுத்தினான். காலை 10 மணிக்கு முன்னரே அங்கே நிற்க வேண்டும், அப்புறம் அங்கிருந்து திரும்பி வர பின்னேரம் ஆகி விடும், அன்றைய பொழுது முழுவதும் இப்படியே போய்விடப் போகின்றது என்று தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படியாகிப் போவதில் இஷ்டமில்லை தான், ஆனாலும் அவனை மறுக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து பாப்பாவை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் நேர ஒழுங்கில் மிக மோசமானவர்கள். உலகில் இந்தளவிற்கு நேரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வேறு எவரையும் என் அனுபவத்தில் நான் கண்டதில்லை. இலங்கையர்களும் மோசம் தான், ஆனாலும் இந்தியர்கள் மிக மிக மோசம். நானும் மனைவியும் ஒன்பதரைக்கு அங்கே போய் விட்டோம். அவனின் சொந்தபந்தங்கள் பலர் சில நாட்கள் முன்னரேயே வேறு நாடுகள், வேறு ஊர்களிலிருந்து வந்து நிற்பதாகச் சொல்லியிருந்தான். எல்லோரும் வந்து போகக் கூடிய நல்ல ஒரு கோடைக்கால நாட்கள் இவை. அவர்களே வீட்டையும், வளவையும் நிறைத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வர வேண்டிய சிலருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்கவில்லை என்று சொன்னான். அவர்கள் எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவனும், அவனின் மனைவியும் எங்களிருவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டனர். ' இல்லை........ வேண்டாம் அப்பா, நீ போய் ஆக வேண்டியதைப் பார்.........' என்று சொன்னாலும், அவன் கேட்பதாயில்லை. மஞ்சள் நீராட்டு விழா என்று தான் அவர்கள் சொன்னார்கள். இதையே நாங்கள் பூப்புனித நீராட்டு விழா என்றோ அல்லது சாமத்தியச் சடங்கு என்றோ சொல்லிக் கொள்வோம். இதற்கு பாக்கு நீரிணைக்கு இரண்டு பக்கங்களிலும் என்ன பெயர்கள் சொன்னாலும், இதற்கெல்லாமா நீங்கள் விழா எடுப்பீர்கள் என்று வேறு பல நாட்டு நண்பர்கள் சிரித்திருக்கின்றார்கள். விழாக்கள் என்பது ஒரு குடும்ப ஒன்றுகூடலிற்கான தருணம், ஒரு கட்டாயத்திலாவது பலரும் வந்து ஒன்றாகச் சேர்வார்கள் என்ற வகையில் கொண்டாடப்படலாம், முக்கியமாக குடும்பங்களே தனித்தனியாக உலகெங்கும் சிதறிக் கிடக்கும் இந்தக் காலத்தில். ஆனால், அதற்காக உலங்கு வானூர்தியில் இருந்து குதிப்பதோ அல்லது பல்லக்கில் ஏறுவதோ போன்ற சேட்டைகள் இந்த விழாக்களின் நோக்கத்தையே காலப் போக்கில் அழித்துவிடக்கூடும். அவனின் நண்பன் என்று ஒருவரைக் கூட்டி வந்து அறிமுகப்படுத்தினான். இருவரும் ஒன்றாக அங்கே ஒரே கல்லூரியில் படித்ததாகச் சொன்னான். சொல்லி விட்டு பெரிதாகச் சிரித்தான். அவனின் கல்லூரி பற்றியும், கல்லூரி நாட்கள் பற்றியும் பல கதைகளை முன்னர் சொல்லியிருக்கின்றான். எல்லாமே வேடிக்கையான கதைகள். அவன் பிளஸ் டூ சோதனையில் அவ்வளவு நல்ல புள்ளிகள் எடுக்காததால், இந்தக் கல்லூரியில் போய்ச் சேர வேண்டியதாகப் போய் விட்டது என்பான். நாங்கள் இருவரும் பதினொரு வருடங்கள் ஒன்றாக வேலை செய்திருக்கின்றோம். அவன் மிகவும் கெட்டிக்காரன். ஆனால் பிளஸ் டூ படிக்கும் காலத்தில், கவனம் முற்றாகச் சிதறும் அளவிற்கு, என்ன செய்து கொண்டிருந்தானோ தெரியவில்லை. அவனின் நண்பன் என்னுடனேயே இருந்தார். எங்கே என் பிள்ளைகள் என்று கேட்டார் அவர். அவர்கள் வரவில்லை, இங்கு அவர்களின் வயதுகளில் எவரும் இல்லை, அதனால் வரவில்லை என்றேன். அப்படி விடக் கூடாது, இழுத்து கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர். எங்களின் கலாச்சாரமும், பண்பாடும் எங்களை விட்டுப் போகவே கூடாது என்றார். உங்களின் பிள்ளைகள்......... என்று நான் கேட்டேன். அங்கே ஓடித் திரிந்து கொண்டிருந்த இரு சிறுவர்களைக் காட்டினார். அவர்களின் வயது ஒன்பது, ஆறு என்றார். இன்னும் பதினெட்டு வருடங்களின் பின் நான் இவரைச் சந்திக்க வேண்டும், அப்ப நிலைமை என்னவென்று கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் அவருடைய மாவட்டத்தின் பெயர் சொல்லி, அந்த மாவட்டம் எனக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றேன். தன் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊரைத் தெரியுமா என்று கேட்டார். அவர் சொன்ன ஊரும் எனக்குத் தெரிந்திருந்தது. அங்கே பத்து குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக 90ம் ஆண்டுகளில் வந்து குடியேறி இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய குடும்பம் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ததாகச் சொன்னார். இன்னமும் அவர்கள் அங்கேயே இருக்கின்றார்களாம். பின்னர், மிக அருகில் வந்து, காதருகே, 'நாங்களும் பிள்ளைமார்கள் தான்.......' என்றார். பிள்ளைமார்கள்...........?? நாங்கள் எப்போதிலிருந்து பிள்ளைமார்கள் ஆனோம் என்று யோசிக்க, வேலுப்பிள்ளை என்ற பெயர் எங்கிருந்தோ நினைவுக்கு வந்தது. பத்து குடும்பங்கள் நன்றாக இருக்கின்றார்கள் தானே என்று, அதனால் மேலும் பிள்ளைமார்கள் பற்றிக் கதைக்காமல், 'இந்தியன் - 2' பற்றி அவருடன் கதைக்க ஆரம்பித்தேன்.
  20. 🤣.......... நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி நிழலி......... களத்தில் வரும் உங்களின் எழுத்துகளை, கருத்துகளை அநேகமாக தவறாமல் வாசித்துவிடுவேன். உங்களின் எழுத்துகளிலிருந்து உங்களின் வாசிப்பு மிக அகலமானது என்றே எனக்குத் தெரிகின்றது........👍 இந்த 'அரைப்பக்க அனுபவங்களை' சும்மா தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் களத்தில் வேறு சிலரும் சேர்ந்து கொண்டு மிக உற்சாகமாக அவற்றின் பின்னால் தங்களின் அனுபவங்களை எழுதுகின்றனர். மிக நன்றாக எழுதுகின்றனர். போகும் வரை போகட்டும் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்..........😃.
  21. 🤣................. வெறுமனே எந்த நேரமும் வீட்டிலிருக்கும் உப்பு, புளிப் பிரச்சனைகளை பற்றி எழுதினால், அது ஒரு உருப்படியான கதையாகாது என்று காலம் காலமாக சொல்கின்றார்கள். கதை என்றால் அதற்குள் ஒரு அகத்தேடல், ஆன்மீகத் தேடல் இருக்க வேண்டுமாம்..........🙃. சரி, நாங்களும் கலந்து எழுதித்தான் பார்ப்பமே என்று பார்த்தால்........ அது வாசிப்பவர்களின் வயிறுகளை கலக்கி விடும் போல இருக்குதே..........🤣.
  22. அதிர்ஷ்டம் அரைவாசித் தூரம், எங்களை நோக்கி, வரும்; நாங்கள் தான் மிகுதி அரைவாசித் தூரத்தை ஓடிப் போய் அதைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அமெரிக்காவிற்கு மீண்டும் மீண்டும் இதுவே நடந்து கொண்டிருக்கின்றது. அதிர்ஷ்டம் உள்ளவர்கள். முதலாவது தாக்குதலின் பின்னர் மிகவும் மனமுடைந்து போனார் என்று சொல்லப்படுகின்றது......... Paul Allen இன் சொத்தை நிர்வகிப்பவர்கள் இவற்றை ஏன் விற்க வேண்டும் என்று புரியவில்லை. அவர்களிடம் ஏற்கனவே இல்லாத பணமா..... இவரின் கூட்டாளிகளான Bill Gates அல்லது Steve Balmer இவற்றை வாங்கி, ஏதாவது அருங்காட்சியங்களுக்கு இவற்றைக் கொடுத்தால், பலருக்கும் பிரயோசனமாக இருக்கும்.
  23. 👍.......... நீங்கள் சொல்வது போலவே தான் பல சமயங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும், ஆரம்பத்தில், 'நாங்கள் உங்களைப் போல இல்லை.......... எங்கள் வாழ்க்கை வேறு மாதிரியானது........' என்றே இளையவர்களும், புதியவர்களும் தங்கள் வாழ்க்கைகளை ஆரம்பிக்கின்றனர். ஆனால் பின்னர் எல்லோரும் சுற்றுவது என்னவோ அதே பழைய செக்கைத் தான்............ எங்கள் ஊர் வேம்படியில் அந்த நாளைய பெரிய செக்கு உரல் ஒன்றை ஒரு ஓரத்தில் போட்டு வைத்திருக்கின்றார்கள். அது ஒரு குறியீடு போல...............🤣.
  24. ஒரு கல்யாணம் செய்து, வீடு வாங்கி, ஒன்றோ சிலவோ பிள்ளைகளும் பிறந்தால், அவ்வளவு தான் எவரினதும் வாழ்க்கை போல.... புதிது என்று எதுவும் இல்லையோ...😀
  25. காட்டுத்தீயை மறந்து விட்டீர்கள்............ ஆனாலும் பூமியில் வாழத்தகுந்த அருமையான ஒரு தேசங்களில் இதுவும் ஒன்று. உண்மையிலேயே சொல்லுகின்றேன். 🤣........... சில நாட்களாக ஊண் உறக்கம் குறைத்து வேலையில் பிசியாக இருக்கின்றேன், அண்ணை. பூமித்தாயே அதைப் பொறுக்காமல் ஒரு குலுங்கு குலுங்கிவிட்டார்..................😜.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.