Jump to content

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1604
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Everything posted by ரசோதரன்

  1. துவாயை அங்கேயே வைத்து விட்டு வந்திருக்கின்றேன்......... யாராவது எடுத்துக் கட்டி, எனக்காக பலியாகட்டும்........🤣
  2. சாரதாஸ் இலவசம் ---------------------------- அவரை அங்கே பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அவருக்கு அப்பொழுது 75 அல்லது 80 வயதுகள் இருக்கும். ஆனாலும் அவரில் என்றுமே வயது தெரிவதில்லை. நல்ல உயரமும், அவரின் திடகாத்திரமான நிமிர்ந்த உருவமும் என்றும் அப்படியே இருக்கின்றது. நான் மிகச் சிறுவனாக இருந்து போது அவர் கால்ப்பந்து விளையாடியதை பார்த்திருக்கின்றேன். பின்னர் நான் வளர்ந்து, ஓரிரு வருடங்கள் அவருக்கு எதிராக விளையாடியிருக்கின்றேன். அங்கிருந்த பல கழகங்களில் அவர் ஒரு கழகம், நான் வேறு ஒரு கழகம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். தனக்கு ஞாபகமில்லை என்று மிகவும் தயக்கத்துடன் சொன்னார். என் தந்தையை அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போல ஆயிரம் பேரை பார்த்திருப்பீர்கள் என்று சொல்லி அந்தச் சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கி விட்டு, அவரின் பல பழைய விளையாட்டு மற்றும் அது சம்பந்தமான நிகழ்வுகளையும் சொல்ல ஆரம்பித்தேன். மிகவும் உற்சாகமானார். நான் அறியாத பல நிகழ்வுகளைச் சொன்னார். திருமணத்தின் பின் பலர் கழகம் மாறிய கதைகளைச் சொன்னார். பெண் வீட்டுக் கழகத்திற்கு மாறாமல் இருந்த ஒரு சிலரைப் பற்றியும் சொன்னார். ஓடிப் போய் தமிழ்நாட்டில் அகதிகளாக இருந்த காலத்தில், எங்களின் பல கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு அணியாகி, தமிழ்நாடெங்கும் போட்டியிட்ட கதையைச் சொன்னார். ஒரு தடவை அவர்களின் காவல்துறை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் அடக்கமாக விளையாடியதை சொல்லிச் சிரித்தார். கதையின் நடுவே, நான் வேட்டியின் மேல் கட்டியிருந்த துவாயைக் காட்டி இது அந்த நாளில் சாரதாஸ் இலவசமாகக் கொடுக்கும் துவாய் என்றார். கட்டுக் கட்டும் போது இந்த துவாய்கள் பலவற்றை அவர்கள் இலவசமாக தருவார்கள் என்றார். கட்டு என்பது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலினூடு கடத்தப்படும் பொதிக்கான உள்ளூர் பெயர். துவாயை அப்பொழுது தான் சரியாகப் பார்த்தேன். மிகவும் சாதாரண நூல் துவாய். நீட்டாகவும் குறுக்காகவும் கோடுகள். மொத்தமே இரண்டு நிறங்கள் தான் அதில் இருந்தது. அதிலும் ஒரு நிறம் மிகவும் தனித்துவமானது. ராசவள்ளிக் கிழங்கை சீவிக் கழுவின தண்ணீரின் மெல்லிய நிறம். எனக்கு அந்த துவாயை மிகவும் வேண்டிய, நெருங்கிய ஒருவரே கொடுத்திருந்தார். புதிது என்று சொல்லியே கொடுத்தார், ஆனால் இலவசமாகக் கிடைத்தது என்று அவர் சொல்லவில்லை. அவர் கட்டு கட்டும் தொழிலில் என்றும் இருந்ததில்லை. யாரோ அவருக்கு இலவசமாகவே கொடுத்திருக்க வேண்டும். கதைத்து முடித்து விட்டு கிளம்பும் போது தனக்கு இப்ப எதுவுமே ஞாபகத்தில் தங்கி நிற்பதில்லை என்றார். என்னையும் மறந்து, இங்கு கதைத்தவற்றைக் கூட அநேகமாக மறந்து விடுவேன் என்றார். திரும்பவும் என்னை மறந்து விடப் போகின்றாரோ என்ற கவலை உடனே வந்தாலும், அது உடனேயே மறைந்து, அவரைப் பார்த்ததும், நீண்ட நேரம் கதைத்ததும் ஒரு இனிய நினைவாக உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள். திருவிழாவில், அதே இடத்தில் அவர் இன்னொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அருகில் போய் நின்றேன். அவருடைய கதையின் நடுவே என்னுடைய துவாயை மட்டும் இடைக்கிடை பார்த்துக் கொண்டேயிருந்தார்.
  3. மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்..........😜.
  4. அவர் சகோதரன் தீயா..... சரி, அது இருக்கட்டும். பையன் சார், நீங்க எல்லா தோசையும் சுட்டபடியால், சாதா தோசை, ரவா தோசை, பேப்பர் தோசை, மசலா தோசை, அனியன் தோசை, இப்படி ............ நாங்கள் எது எதுவென்று சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டம்..........🤣. 🤣.......... அகஸ்தியர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த வல்லமை அன்றும் இன்றும் இருக்கின்றது..........
  5. கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்.............. பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........
  6. இன்னும் ஒரு இரண்டு நாள் பொறுத்தால்....... அடுத்த களப் போட்டியை தொடங்கி விடுவம்...........🤣. தென் ஆபிரிக்கா உள்ளே. இன்று இந்தியா அல்லது இங்கிலாந்தில் ஒன்று உள்ளே போகும்.
  7. 🤣......... பிராணிகளின் பழக்கவழக்கங்களை இங்கு படிப்பிப்பார்கள் போல இருக்குது............ பல்கலையில் பல Animal Science பாடங்கள் இருக்கின்றன. மகள் அதில் எல்லா பாடங்களையும், அம்மாவை பழிவாங்கும் ஒரு நோக்கத்துடன் போல....🤣, எடுத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன். பூனை கண்ணை கண்ணை அடித்தால் ஒரு காரணம், மல்லாக்காக படுத்திருந்தால் ஒரு காரணம், மியாவ் சொன்னால் ஒரு காரணம், புல்லைக் கடித்தால் ஒரு காரணம் என்று என்னுடைய 'பூனை அறிவு' அதி வேகமாக வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது........... ஒரு வீட்டை பூனை தன்னுடைய வீடாக நினைத்தால் அந்த வீட்டில் உச்சா, சிச்சா எதுவும் போகாதாம் என்றும் சொல்லியிருக்கின்றார்கள். சுவர் ஏறி பக்கத்து வீடுகளில் தான் அது உச்சா, சிச்சாவிற்கு போய் வருமாம் .... 😶
  8. என் வீட்டிலும் இரு பிள்ளைகளும் தலையால் கிடங்கு, கிணறு என்று தோண்டிப் பார்த்தார்கள். மனைவி அசரவேயில்லை. ஆனாலும் இப்ப மூன்று வருடங்களாக ஒரு தெருப்பூனை (stray cat) அப்படியே வீட்டுடன் ஒட்டிவிட்டது. அது அதிகமான நேரங்களில் வீட்டிற்கு வெளியிலேயே சுற்றிச் சுற்றி இருக்கின்றது. விஜய்யின் 'லியோ' படம் வந்த பின், படம் பிடிக்கா விட்டாலும் இந்தப் பெயர் பிடித்திருந்தபடியால், தெருப்பூனை இப்போது லியோ ஆகிவிட்டது. லியோ பற்றி சில கதைகள் எழுதலாம். அந்தளவிற்கு அது விசயம் வைத்திருக்கின்றது. ஒரு நாள் எங்கள் வீட்டு முன்பக்கத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறு பிராணியின் மாமிசம் இருந்தது. பின்னர் ஒரு நாளும் இப்படியே இருந்தது. விசயம் என்னவென்றால், இந்த வகை பூனைகள் அவை அண்டி வாழும் மனிதர்களுக்கு இப்படித்தான் தங்கள் நன்றியை தெரிவித்து கொள்ளுமாம். லியோ எங்களுக்கு உணவு தேடிக் கொடுக்கின்றது..........❤️.
  9. 🤣........ விராட் கோலிக்கு சுயபுத்தி கொஞ்சம் அதிகம்......... எவர் சொல்லையும் கேட்க மாட்டார் போல.......🤣.
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஈழப்பிரியன் அண்ணை.
  11. தவறு விட்டு, விளைவு நடந்த பின், தவறு விட்டு விட்டோமே என்று தெரிகின்றது. இந்தப் போட்டியில் என்னுடைய சில அணித் தெரிவுகளைச் சொன்னேன்.........🤣.
  12. 👍........ இந்தியாவிற்கு என்றே இந்த உலகக்கோப்பை நடத்தப்படுகின்றதோ.........
  13. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு வித்தியாசத்தை இப்படிச் சொல்வார்கள்: தன்னை இப்படி கவனித்துக் கொள்ளும் இந்த வீட்டு மனிதர்கள் கடவுள்கள் என்று நினைக்குமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய். இந்த வீட்டு மனிதர்கள் தன்னை இப்படிக் கவனித்துக் கொள்வதால் தான் ஒரு கடவுள் என்று நினைத்துக் கொள்ளுமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் பூனை......🤣.
  14. இப்படித்தான், இதே வார்த்தைகளைத் தான், இங்கும் சொல்லியிருந்தனர்..........😔.
  15. கடைசியில் இந்த முடிவிற்கும் வந்து விட்டோமா..............🤣.
  16. 🤣.......... எழுதி விட்டு திருப்பி வாசித்துப் பார்க்கும் போதே தெரிந்தது........ இந்த இடத்தில் ஒரு குத்து விழும் என்று......🤣.
  17. உங்கள் இரண்டு பேருக்கும் நிறைய இரகசியங்கள் தெரிந்திருக்குது.........ஆனால், இப்ப போட்டி முடியிற நேரத்திலதான் எங்களுக்கு இதைச் சொல்லித் தருகிறீர்கள்......🤣. இந்த ரகசியத்தை முதலே நீங்கள் எங்களுக்கு சொல்லியிருந்தால், நாங்கள் அவுஸை விட்டிட்டு ஆப்கானைத்தான் தெரிவு செய்திருப்போம்......😜.
  18. செல்லப்பிராணி ------------------------ நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது. பின்னர் அவர்கள் சில வார்த்தைகள் அதட்டிச் சொன்ன பின் தான் அது என்னை உள்ளே விட்டது. என்னை முழுவதுமாக மோப்பம் பிடித்து வைத்துக் கொண்டது. அதை நாய் என்று சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஒரு பெயர் இருந்தது. அதன் பெயர் சொல்லியே அதைக் குறிப்பிட வேண்டும் என்பது அங்கு ஒரு விதியாக இருந்தது. நான் அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அங்கு போய் அடுத்த நாளிலிருந்தே அது என்னுடன் மிகவும் நெருங்கி விட்டது. காலையில் கண் விழித்தால் அது கட்டிலின் அருகில் நிற்கும். எங்கு அமர்ந்தாலும் அது அருகே வந்து முதுகால் தேய்த்து விட்டு என் காலுடன் ஒட்டி ஒட்டி நிற்கும். தடவிக் கொடுத்தால் கிறங்கிக் கிடக்கும். இரவிலும் ஒரு தடவை கட்டிலடிக்கு வந்து நான் அங்கு தான் படுத்திருக்கின்றேன் என்று உறுதிப்படுத்தி விட்டுப்போகும். அந்த வீட்டவர்கள் மீதும் அது இதேயளவு பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்பும் நாளன்று அது வீட்டு வாசலில் குறுக்காக படுத்திருந்தது. இந்த வீட்டிலிருந்து எவரையும் போக விடமாட்டேன் என்பது போல. கடும் போராட்டத்தின் பின் நான் காரில் ஏற, அதனால் ஒன்றும் முடியாமல் போக, ஓவென்று அழுதது. பிராணி ஒன்று அழுததை அன்று தான் நேரில் பார்த்தேன். சில மாதங்களில் பின் ஒரு நாள் அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டனர். அதை அன்று கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்ததாகச் சொன்னர். ஒரு தீரா நோய், வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்றனர். அழுது தீர்த்தனர். அப்படிக்கூட என்னால் என் நினைவை தீர்க்க முடியவில்லை. 'விட்டுப் போகாதே......' என்று அழுத அதன் கண்கள் என்னை விட்டுப் போகாமல் எல்லா இடமும் கூடவே வந்து கொண்டிருந்தது. அடுத்த வாரம். அங்கேயிருந்துது இன்னொரு அழைப்பு. இந்த தடவை வீடியோ அழைப்பு. புதிதாக ஒரு குட்டி அங்கு நின்றது. குட்டிக்கும் அதே பெயர் தான். 'குட்டி ஓடுது, குட்டி ஒளியுது, குட்டி ஒழுங்காகச் சாப்பிடுதில்லை, குட்டிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும், ...............' இப்படியே பல விதமாக சொல்லி, அதன் பின்னால் ஓடி ஓடி காட்டிக் கொண்டிருந்தனர். செல்லப்பிராணிகளை மனிதர்கள் எப்படி தொடர்ந்தும் உயிருக்கு உயிராக நேசித்து வளர்க்கின்றார்கள் என்ற கேள்வி அன்றுடன் என்னை விட்டு போனது.
  19. 🤣...... நாங்களும் தான் இப்ப முட்டை முட்டையாக வாங்கிக் கொண்டிருக்கின்றோமே...... ஆனா, அதை எல்லாம் அடை வைச்சிருக்கிறம். அடுத்த களப் போட்டியில் பேடும், சேவலுமா இறங்கி ஓடும் பாருங்கோ..........🤣. இன்னும் நாலு நாளில நாங்க நொந்து போகக் கூடாது என்றால், ஆப்கான் கோப்பையை வெல்ல வேணும்.... எனக்கு அந்த ஆப்கான் கோச் மேல நல்ல நம்பிக்கை இருக்குது..... அவர் கிரிக்கெட்டை தாண்டியும் யோசிக்கிறார்...... ஆடல், பாடல், ஆவேசம், நடிப்பு என்று வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.......😜.
  20. கடவுளே, இது உங்களுக்கு நாங்கள் வழங்கும் கடைசி சந்தர்ப்பம். இந்த தடவையாவது பையன் சார் சொல்வது போல நடக்க நீங்கள் திருவருள் புரியவேண்டும். இங்கிலாந்தோ அல்லது ஆப்கானோ வென்றால், எங்களுக்கு கெட்ட கோபம் வரக்கூடும்........🤣.
  21. 🤣..... ஒன்றிரண்டு கேள்விகளுக்கு கொஞ்சம் யோசித்து பதில் எழுதி விட்டேன், டீச்சர். அந்த ஒன்றிரண்டும் தான் பிழைச்சது. அந்த இடைவெளியில கூட்டாளி 'see you later........' என்று சொல்லிவிட்டார் ........🤣.
  22. உலகத்திற்கு நல்லது USA தனியவா அல்லது NATO கூட்டமைப்பா என்று முடிவெடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை .........
  23. வாரணாசியில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த மோடிஜீ, பின்னர் எண்ண எண்ண முன்னுக்கு போன மாதிரி இங்கு ஒருவர் போய்க் கொண்டிருக்கின்றார்........🤣.
  24. போய் விட்டு வந்து என்னவானது என்று சொல்லக் கூடியவற்றை சொல்லுங்கள். நலமே நடக்கும் என்பது என் நம்பிக்கை.....🙏. இங்கும் சிலரை இந்த நிலையில் பார்த்து இருக்கின்றேன். இது போகப் போக மிகவும் கொடிய நிலையாக மாறும். நினைவுகளுடன், உடல் உறுப்புகளும் அவற்றின் வழமையான தொழிற்பாடுகளை, இயங்கங்களை படிப்படியாக மறந்து விடும்........😔.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.