Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. நேற்று பனிப்போர் என்று சொன்னார்கள், இன்று மூன்றாம் உலகப் போர், நாளை அணு ஆயுதப் போர் என்பார்கள்............... அப்படியே ரிப்பீட்......... ஆதவன் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும், ஐபிசி தமிழ் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும் ஒரே ஆளா................ (இங்கே பிரகாஷ்ராஜ் வரவேண்டும்........😀) 'செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு..........' என்பது என்றும் சாகாத ஒரு சொலவடை.........🤣
  2. இவர்கள் எல்லோரும் நாயகர்களாக இருந்தால், இஸ்ரேல் ஏன் இப்படி வீடு புகுந்து இவர்களை அடித்துக் கொண்டிருக்கின்றது............. இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையை போட்டு விட்டு, தப்பினோம் என்று இருக்கின்றனர் சவூதியும், எகிப்தும்.
  3. அங்கே நேரே போய் குடிவரவு அதிகாரிகளிடம் நேரேயே எடுப்பது தான் சிறந்த வழி என்கின்றார்கள். சில வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் தற்போதைக்கு இந்த விசாக்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. https://www.dailymirror.lk/breaking-news/Sri-Lankan-missions-to-issue-tourist-and-business-visas/108-288838 புலம் பெயர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் 'நீ யார் எனக்கு விசா கொடுக்கவும், தடுக்கவும்..........' என்று அங்கு வேலையில் இருந்த இந்தியர்களுடன் தகராறு செய்ததை நீங்கள் சொல்கின்றீர்கள் போல.
  4. இந்த வருட ஏப்ரல் மாத முடிவில் விஎஃப்எஸ் ஊடாக விசா வழங்கும் நடைமுறை ஆரம்பமானது. பின்னர் சில வாரங்களிலேயே அது தடைசெய்யப்பட்டது.
  5. அனிருத், சந்தோஷ் நாராயணன், ஜி.வி. பிரகாஷ் பெயர்கள் கூட உங்களின் லிஸ்டில் இல்லை. நாங்கள் ஒரு நூறு இசையமைப்பாளர்களையாவது பார்த்து இருப்போம் என்று நினைக்கின்றேன். தமன் ஒரு இசையமப்பாளர் மட்டும் கிடையாது, அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் கூட........... கொடிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்றால்...................... தற்போதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு வேறு எதுவும் அங்கு கிடையாது என்பதாலேயே. இனி முக்கியமாக வரவிருப்பது நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி என்னும் செய்தி மட்டுமே........ 5 + 5 = 5 என்று முடியுதோ தெரியவில்லை..............
  6. நாங்கள் அவரை இரண்டு பக்கங்களுக்கும் இழுத்துக் கொண்டிருக்கின்ற இழுப்பில், அவரே விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு ஓடித் தப்பலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை.............🤣.
  7. 😀.... இந்த விஎஃப்எஸ் விடயத்தில் மிகவும் வெளிப்படையாகவே நாட்டையும், மக்களையும் இந்த அரசாங்கம் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்று அறிந்த பின், இது எங்கே போய் முடியப் போகின்றது என்று அறியும் ஒரு ஆவலிலேயே இந்தச் செய்திகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். சர்வாதிகாரிகள் இப்படிச் செய்வார்கள், அவர்களை ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்கவும் முடியாது. ஆனால் ஒரு ஜனநாயக அரசிலுமா இப்படி..........
  8. பையன் சார், அது ஒரு காலம். நான் அங்கே சில வருடங்கள் விளையாடியிருக்கின்றேன். தமிழர்களும், இஸ்லாமியர்களும் அன்று பெருமளவில் அணிகளில் இருந்தார்கள். என்னுடன் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய நண்பனும் அணியில் இருந்தான். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. தமிழர்கள் விளையாடுவது மிகவும் குறைவு. எவர் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், இலங்கை கால்பந்தாட்ட அணி ஒரு பலமான அணி கிடையாது. ஆனாலும் சமீப போட்டி ஒன்றில் இலங்கை இந்தியாவை வென்றதை செய்திகளில் பார்த்திருந்தேன்.
  9. 'தமிழ் வெல்லும்' என்று இந்த நாணயத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. தமிழில் எழுதப்பட்ட ஒரே நாணயம் என்றும் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்..................🫣. இலங்கையில், சிங்கப்பூரில் என்று தமிழ் நாணயங்களில் வந்து பல காலமாகிவிட்டது. கலைஞருக்காக கடலுக்குள் ஒரு பேனாவை வைக்க திட்டமிட்டிருந்தார்கள். பெரிய பேனா வடிவ கட்டிடம் அல்லது உருவம். இதை அந்தப் பகுதி மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்த்தனர். பேனா திட்டம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. என்ன ஆனாலும், எவ்வளவு காலம் போனாலும், தமிழ்நாடும், பெரும்பாலான தமிழர்களும் தனிமனித துதிபாடுதலில் இருந்து வெளியே வரப் போவதில்லை. நடிகர் விஜய் இன்று வெளியிட்டிருக்கும் பாடலை கேட்டுப் பாருங்கள்............... இன்னொரு சூரியன்............
  10. தற்பொழுது விசா வழங்கும் திட்டம் ஒரு நெருக்கடியில் இருக்கின்றது. விஎஃப்எஸ் நிறுவனத்தின் ஊடாக விசா வழங்கும் திட்டத்திற்கு இலங்கை நீதிமன்றம் தடைவிதித்து இருக்கின்றது. விஎஃப்எஸ் நிறுவனத்தின் மேலதிக சேவைக் கட்டணம் மற்றும் இதன் பின்னால் உள்ள முறைகேடுகள் சம்பந்தமாக சுமந்திரன், ராவூப் ஹக்கீம் மற்றும் இன்னொருவர் கொண்டு வந்த வழக்கை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், முன்னர் இருந்த மென்பொருளுக்கும் உடனேயே திரும்பிப் போக முடியாதுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கணனிகள் மற்றும் சிஸ்டம் எல்லாமே மாறி விட்டன என்றதொரு விளக்கத்தை கொடுத்திருக்கின்றார்கள். இதற்காகக் கூட இந்த ஆறு மாத திட்டத்தை இவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடும். விஎஃப்எஸ் உள்ளே வந்தவுடன் பயணிகளின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது. ஆனாலும் விஎஃப்எஸ் அந்த வீழ்ச்சி தங்களின் சேவையால் ஏற்பட்டதல்ல என்று சொன்னார்கள். பயண முகவர்களும், நிறுவனங்களும் அதிகரித்த விசா கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். விசா கட்டணம் இல்லாமல், அல்லது மிகக் குறைந்த கட்டணத்துடன், மிக முக்கியமாக இலகுவாக்கப்பட்ட ஒரு நடைமுறையின் மூலம் அதிகளவிலான பயணிகளை கவர முடியும் என்பதே இந்தத் துறையில் பல நாடுகள் பெற்றுக் கொண்ட அனுபவம். தாய்லாந்து வருடம் இருபது மில்லியன் பயணிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றது, இலங்கையோ இரண்டு மில்லியன் பயணிகளை பெற்றுக் கொள்ளவே தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. வருடம் இரண்டு மில்லியன் பயணிகள் என்பது நான்கு மில்லியன் பயணிகள் என்றாகினால் கூட இலங்கை குறுகிய காலத்தில் மீண்டு வந்துவிடலாம்.
  11. 👍....... நேற்றைய டெயிலி மிர்ரரிலும் இந்தச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஆறு மாதங்கள் தான் இந்தத் தளர்வு இருக்கும் என்ற தகவல் அங்கிருக்கவில்லை. இதை நிரந்தரமாகவே ஆக்கலாம். https://www.dailymirror.lk/top-story/Sri-Lanka-to-allow-visa-free-access-to-35-countries-Harin/155-290011
  12. 🤣....... இதுவும் நல்ல ஒரு தெரிவு தான்......... சிவப்பும் கலந்த பூவரசம் பூவும் இருக்குது தானே, அது தான் கொடிக்கு நன்றாக இருக்கும். பூ + அரசன் என்று நாலு வரிகள் பாடலில் எழுதுவதற்கும் இது நல்ல வசதி....... என்ன ஒரு பாடல்.............🫣. சமஸ் சில காலத்தின் முன் வேறு ஒரு விடயத்திற்காக எழுதியிருந்த ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்லியிருந்தார்: காலம் ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. நாங்கள் தான் சில வேளைகளில் பின்னோக்கிப் போகின்றோம்.
  13. உடனேயே யானைக்கு ஆபத்து வந்துவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. யானை சின்னத்தை எந்த வடிவிலும் அசாம், சிக்கிம் மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது என்று சட்டம் இருக்கின்றதாம். தமிழக பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திடம், அவர்களின் கொடி வெளியீட்டின் பின், இதைச் சொல்லியுள்ளார்கள். பரிசீலித்து முடிவெடுக்கின்றோம் என்று தவெக இப்போது சொல்லுகின்றது.
  14. இனி வரும் புதுக் கட்சிகளுக்கு தெரிவுகள் குறைந்து கொண்டே வருகின்றது. தமிழர்களாக இருந்து கொண்டு சிங்கத்தை கொடியில் வைக்கமுடியாது. புலியை கருணாஸ், சிறுத்தையை தொல். திருமா, யானையை விஜய்......... அடுத்து விஷால் ஒரு கட்சி தொடங்கினால் கரடி தான் அவருக்கிருக்கின்றது. பூவிலும் தாமரை இனத்தை தொடவே முடியாது. தொட்டார் கெட்டார் தமிழ்நாட்டில். ஆனாலும் தாழம்பூ, முள்முருக்கை பூ என்று சிவப்பு மஞ்சள் பூக்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. இரண்டு யானைகளுக்கு நடுவில் ஒரு மயில் தோகை விரித்து நிற்கின்றது என்று டெயிலி மிர்ரரில் விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். 'க்' தேவையா, இல்லையா என்று குழம்பி கட்சிப் பெயரில் ஒரு திருத்தம் வந்தது போல, எதிர்காலத்தில் கொடியில் ஒரு மயிலுக்கும் இடம் கொடுக்கலாம்.........
  15. இந்தக் கோழிகளுக்கும் மற்ற நாட்டுக் கோழிகளுக்கும் ஊட்டசத்துகளில் வித்தியாசங்கள் எதுவுமில்லை என்றே சொல்லப்படுகின்றது. ஆனாலும் கருங்கோழி, காண்டாமிருகக் கொம்பு என்று வேறு தேவைகளுக்கான ஒரு வரிசையில் இவை இடம்பெற்றுவிட்டன. வேறு சில நாட்டுக் கோழிகளும் அடை காப்பதில்லை. என் அனுபவத்திலும் அவை உண்டு. அவற்றின் முட்டைகளை வேறு கோழிகளுக்கு அடை வைப்போம். ஊரில் கருங்கோழி வளர்ப்போர் முட்டைகளை ஒரு குலுக்கு குலுக்கி விட்டே மற்ற ஆட்களுக்கு கொடுப்பார்கள் என்று நினைக்கின்றேன். முன்னர் அப்படியே வேறு சில நாட்டுக் கோழி இனங்களுக்கு செய்தார்கள். வேறு எங்கும் அந்தக் குஞ்சுகள் பொரித்து விடக் கூடாதே என்ற கணக்குடன்.............
  16. மிக்க நன்றி உங்களின் உள்ளபடியான விமர்சனத்திற்கு. இன்னும் பார்க்கவில்லை, இந்த வாரம் பார்த்து விடுவேன்......... பட வெளியீட்டின் பின் கீர்த்தி சுரேஷ் ஒரு விழாவில் பேசியிருந்ததைப் பார்த்தேன். இந்திக்கு எதிராக ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து விட்டு, இந்தியிலும் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கின்றேன். இது ஒரு முரண் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் என்று அவர் அந்த விழாவில் பேசியிருந்தார். இந்தித் திணிப்புக்குத்தான் நாங்கள் எதிர்ப்பு, இந்தி மொழிக்கு அல்ல என்று அதற்கொரு பதிலையும் அவரே சொல்லியிருந்தார்.
  17. 🤣........ ஐந்து பேர்கள் மட்டுமே அவரின் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தாலும், ஃபீல்ட் மார்ஷல் சரத் உறுதிமொழி கொடுத்திருக்கின்றார். இலங்கையின் முன்னேற்றதிற்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாகவும், அதனை அவர் அழித்தொழிக்கப் போவதாகவும் வாக்குக் கொடுத்து வாக்கு கேட்டிருக்கின்றார்............
  18. தாவூத் இப்ராகிமே பாலிவுட் சினிமாவை கட்டுப்படுத்துகின்றார் என்ற செய்தி பல வருடங்களின் முன்னர் வந்திருந்தது. பல படங்களுக்கு அவரே அன்று மறைமுகமாக கடன் கொடுத்திருந்தார். முழு பாலிவுட்டும் அவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகச் சொன்னார்கள். தமிழிலும் அன்புச்செழியன் (கோபுரம் ஃபிலிம்ஸ்) படத் தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கி, அதன் வழியே எப்படி கட்டுப்படுத்தினார் என்று ஒரு தற்கொலையின் பின்னர் பெரிதாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் அன்புச்செழியன் ஓடி ஒளிந்தார். ஆனாலும் அவர் திரும்பவும் வந்துவிட்டார். இது ஒரு சின்ன உதாரணமே, இவரைப் போன்று பலர் தமிழ் சினிமாத் துறையில் இருக்கின்றனர். தெலுங்கு சினிமாவில் ஐந்து குடும்பங்களே மொத்தத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் ஒரு செய்தி வந்திருந்தது. கன்னட சினிமாவை சுத்தமாக கவனிக்காதபடியால், அவர்களின் செய்தி எதுவும் இல்லை. ஆனாலும் அங்கேயும் புதிதாக எதுவும் இருக்கப் போவதில்லை. ஒரு சிறு கூட்டம், அதன் ஆட்டம் என்றே எல்லா இடங்களிலும். ஹாலிவுட்டில் கூட...........
  19. இவருக்கு பின்னால் ஒரு புத்திஜீவிகள் கூட்டம் இருக்கின்றது என்றார்கள். அவர்களாவது மேடைக்கு முன்னால் வந்து கதிரைகளில் இருந்திருக்கலாம்..................
  20. ஒரு இரவு, எங்களின் அறைக் கதவுகளில் படபடவென்று அடித்தார்கள். நாங்கள் திறந்தோம். வந்திருந்தவர்களில் சிலர் எங்களுக்கு ஏலவே தெரிந்த ஜேவிபி ஆதரவு மாணவர்கள். சிலர் எங்களின் பீடம், வகுப்பு, சிலர் வேறு பீடங்களைச் சேர்ந்தவர்கள். எங்களை வெளியில் நிற்க விட்டு விட்டு அறைகள் முழுவதும் தேடினர். சில 'புலிகள்' எங்களுடன் வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். போலீஸோ அல்லதோ இராணுவமோ வரவில்லை. இவர்கள் மட்டும் தான் வந்திருந்தனர். இடதுசாரிகள் என்னும் நிலையிலிருந்து சிங்கள தேசியத்திற்கு இவர்களின் தலைமை அன்று மாறிக் கொண்டிருந்தது. விமல் வீரவன்ச போன்றவர்களால் இந்த மாற்றம் பொதுவெளியிலேயே நடந்து கொண்டிருந்தது. அன்று வந்த எல்லா தீர்வுப் பேச்சுவார்த்தைகளையும் எதிர்த்தனர். இன்றும் தான்.
  21. அக்கறையற்ற ஆசிரியர்கள் என்றுமே இருந்தார்கள். 'குரு பார்வை' என்னும் குறுங்கதையில் என் பாடசாலை வாழ்வைப் பற்றி இதையே தான் எழுதியிருந்தேன். 'குரு பார்வை ஒரு வெறும் பார்வை மட்டுமே....' என்பதே அதன் ஒரு வரிச் சுருக்கம். என் காலத்தில் தனியார் கல்வி நிலையங்களே பிரதான காரணம். எங்கள் வகுப்பில் தனியார் கல்வி நிலையத்திற்கு போகாத இருவர் மட்டுமே இருந்தனர். ஆசிரியர்கள் வகுப்பை அப்படியே அவர்கள் ஓய்வெடுக்கும் இடமாக மாற்றிவிட்டனர். அந்த இரு மாணவர்களும் தான் பாவம், அதில் ஒன்று நான். நாங்கள் இருவரும் கூட அன்று தனியார் கல்வி நிலையத்திற்கு போயிருக்க வேண்டும். ஊட்டச்சத்து, பன்முகத்தன்மை, சூழல் எல்லாமே, இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல, அவசியமானவை. ஆனால் 10% மட்டுமே மேலே படிக்கப் போகின்றார்கள், 90% அப்படியே அங்கங்கே நின்று விடுவார்கள் என்னும் நிலைமையில் உலகெங்கும் சொல்லப்படும் பொதுவான காரணங்களும், அதனால் உண்டாகும் விளைவுகளும் இங்கு பொருத்தமற்றவை ஆகிவிடுகின்றன. 10% ஆனவர்கள் எந்த நிலையிலும் அவர்களின் மீத்திறனை இழக்கப் போவதில்லை. 50% மாணவர்களாவது தொடர்ந்து மேலே படிப்பார்கள், அவர்களுக்கு அதற்குரிய வேலை கிடைக்கும் என்னும் பட்சத்தில் சமூகத்தில் ஒரு மாற்றம், விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
  22. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இவர்கள் எல்லோரும், நீங்கள் சொல்வது போலவே, நல்லவர்கள் இல்லை, குத்துபவர்கள் போன்றே தெரியும். அதுவும் சரி தான், ஏனென்றால் வெளிநாட்டில் வாழ்வோர் எதிர்பார்ப்பது தனிநாடு அல்லது சமஷ்டி அல்லது ஆகக் குறைந்தது காணி, போலீஸ் அதிகாரங்களுடன் கூடிய வட கிழக்கு இணைந்த மாகாணசபை. இது எதுவுமே ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அங்கே வாழும், தொடர்ந்து வாழப் போகும் தமிழ் மக்களின் தெரிவோ எவர் குறைவாக அவர்களின் வயிற்றில் அடிப்பவர் என்றே இருக்கும். எவரால் வேலை வாய்ப்புகள், வசதிகள் கிடைக்கும் என்று தேடியே வாக்களிக்கப் போகின்றனர். இந்த வகையில் அநுர குமார நல்ல ஒரு தெரிவில்லை. கோத்தா நாட்டைக் கெடுத்த பின், ஓடினார். அவர் ஓடியது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. ஜேவிபியினருக்கு அதிகாரம் கிடைத்து, இதே நிலைமை மீண்டும் வந்தால், அவர்கள் ஓடமாட்டார்கள். இருந்து முடிவு வரை தொடர்வார்கள். இன்றைய பலஸ்தீனத்தையே திரும்பிப் பார்க்காத மேற்குலகம் எங்களை என்றும், எது நடந்தாலும் திரும்பிப் பார்க்கப் போவதும் இல்லை. தொடர்ந்து ஆயிரத்தில் ஒன்றாக எங்களின் கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.
  23. ஜேவிபியின் கொள்கைப் படி இலங்கையில் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட மக்களே கிடையாது. எல்லோரும் இலங்கையர்களே. அது தான் அவர்களின் தீர்வு. தமிழர்களுக்கு என்றோ அல்லது வேறு எந்தப் பிரிவினருக்கு என்றோ அங்கு தனிப்பட்ட பிரச்சனை என்று ஒன்றே கிடையாது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. மற்ற அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கின்றது, நாங்கள் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்வார்கள், ஆனால் ஒருபோதும் அவர்களில் ஒருவரும் இது சம்பந்தமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடப் போவதில்லை. ஜேவிபி அப்படி ஒரு பிரச்சனையையே கிடையாது என்று ஆரம்பத்திலேயே அடித்து மூடிவிடுவார்கள். இவர்கள் பொறுப்புக்கு வந்தால் இலங்கை வெனிசுவேலா ஆவது துரிதகதியில் நடக்கும். இவர்களின் தேசியமயம் என்ற ஒரு கொள்கையே போதும் நாட்டை இருப்பதை விட இன்னும் சில தசாப்தங்கள் பின்னுக்கு கொண்டு போக. அசாமில் ஒரு தடவை மாணவர் புரட்சி வென்று, ஆட்சிக்கும் வந்தார்கள். புரட்சியில் வென்ற அவர்கள், ஆட்சியில் அந்த மாநிலத்தை அழித்தார்கள். அதே வரலாறு இங்கே மீண்டும் திரும்பும். கட்டப் பஞ்சாயத்தை நேரில் பார்க்கலாம். அது தான் அவர்களின் சட்டம் ஒழுங்கு.
  24. இந்த நண்பனின் சொந்த மாநிலம் மத்தியப் பிரதேசம். அவனில் அராபியர்களின் சில அம்சங்களும் தெரியும். ஆனால் வீட்டில் பேசுவது ஹிந்தி அல்ல. குஜராத்தி மொழியையே இவர்கள் வீட்டில் பேசுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் பேசுவது போல.
  25. இன்றைய ஐடி துறையில் இவர்கள் தான் பெரிய இராணுவம். ஆனாலும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்ட இராணுவம். நாட்டின் பொருளாதாரமும் உலகில் முதல் ஐந்திற்குள் எப்போதும் வந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் வளர்ச்சி எல்லா மக்களையும் போய்ச் சேரவில்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. ஊழல், இலஞ்சம், அரச நிர்வாகத் திறமையின்மை என்பன ஒப்பீட்டளவில் மிக அதிகம். காமன்வெல்த் போட்டியை நடத்தினார்கள். இதில் அமைச்சரும் மற்றவர்களும் இலஞ்சம் வாங்கியதாக இன்னமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பீகாரில் ஒன்பது வருடங்களாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய பாலம் ஒன்று நேற்று மூன்றாவது முறையாக உடைந்து விழுந்துவிட்டது. அங்கு பாலங்கள் இடிந்து விழுவது ஒரு தொடர்கதை. அயோத்தி ராமர் கோவிலில் இப்போது கூரை ஒழுகுகின்றது என்கின்றார்கள். இந்த இந்தியாவால் ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தவே முடியாது. இலாப நோக்கற்ற, அரசப் பணிகளில் ஊழலும், லஞ்சமும் அங்கு தலைவிரித்தாடுகின்றது. பெரும்பாலானோருக்கு பெருமை எல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. செயலில் எதுவுமே இல்லை. தான் ஒருவன் இலஞ்சம் வாங்குவதால் அல்லது கொடுப்பதால் இங்கு எந்தக் குடியும் முழுகிவிடப் போவதில்லை என்பதே பெரும்பான்மை மக்களின் மனநிலை, அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கான தடை. ஆனாலும் இந்தக் கூட்டத்தில் சிக்காத உண்மையான பல இடதுசாரிகளும், சமூகப் போரளிகளும் அங்கு இருக்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.