Everything posted by யாயினி
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
தவறுக்கு மன்னிக்க வேணும் ..நேற்றைய தினம் வைத்தியர் நிமலரஞ்சன் தாள் சுகவீனம் காரணமாக இறந்திருக்கிறார்..🙏
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
வைத்தியகலாநிதி சுதர்சனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
-
யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!
தன்னையோ அல்லது தன்னோடு பணி புரியும் சக பணியாளர்களையோ எந்த விதத்திலும் கேள்வி கேட்க கூடாது என்று சொல்லும் வைத்தியர்கள் இருக்கும் மட்டும் இப்படி குறை , நிறைகள் இருக்கும்.வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியவர்கள் கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியர் அர்ச்சனாவோடு முரண்படும் போது ஒரு இடத்தில் சொல்லியிருந்தார்.மக்கள் தான் பாவங்கள்.
-
லயம் – கொ. தினேஸ்.
லயம் – கொ. தினேஸ். written by admin September 11, 2025 லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் வாழும் வீட்டு தொகுதி என்று. வாருங்கள் பார்ப்போம் மலையக மாந்தர்கள் “மனம் கொண்டதே மாளிகை” என கருதி வாழும் லயத்தை பற்றி. ஒற்றை, இரட்டை வரிசையில் சிறு சிறு அறைகளைக் கொண்டிருக்கும். ஒற்றை வரிசையாக இருந்தால் 12 அறைகளும் இரட்டை வரிசையாக இருந்தால் 24 அறைகளும் கொண்டதாக லயம் இருக்கும், 12 அறைகள் கொண்ட லயன் தொகுதியை மலையக மக்கள் “12 காம்பரா” எனவும் 24 அறைகளைக் கொண்ட லயன் தொகுதியை “24 காம்பரா” என அவர்களின் பேச்சு மொழியில் அழைப்பர். 10 முதல் 12 லயன்களைக் கொண்டது ஒரு டிவிசனாக கொள்ளப்படும் இங்கு “டிவிசன்” (னுiஎளைழைn) என்பது பிரிவு ஆகும். இவ்வாரு 3 தொடக்கம் 5 டிவிசன்களை கொண்டது ஒரு தோட்டமாக (நுளவயவந) கொள்ளப்படும். உதாரணம் – களுத்துறை மாவட்டத்தில் ஹல்வத்துறை தோட்டத்தில் காகல டிவிசன், தெல்மேல்ல டிவிசன், கீழ் பிரிவு, மேல் பிரிவு, மத்திய பிரிவு என ஐந்து டிவிசன்கள் (பிரிவுகள்) காணப்படுகின்றன. லயத்தின் ஒரு அறையின் அளவு 10ழூ20 என நீள, அகலங்களை கொண்டு இருக்கும். அத்தோடு அதற்கு முன் 6ழூ10 அகல நீளங்களை கொண்ட “குசினி”(சமயலறை) அல்லது “இஸ்தோப்பு” பகுதி காணப்படும். ஒரு அறைக்கு ஒரு கதவு மாத்திரமே காணப்படும். ஒற்றை வரிசை லயமாக இருக்கும் போது சில நேரம் இரண்டு கதவுகள் காணப்படும். லயத்தின் அனைத்து கதவுகளும் இரண்டு திறக்கும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். இஸ்தோப்பு அல்லது குசினி பகுதியில் கையை தூக்கினால் தொடக்கூடிய உயரத்தில் “அட்டல்” காணப்படும். அட்டல் என்பது பரன் ஆகும். விறகு சேகரித்து வைத்திருக்கும் இடமாகும். லயத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறை. ஒரு அறைதான் அவர்களின் ஒரு வீடு. லயத்திலிருந்து 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் “லெட்டு” என மலையக மக்கள் கூறும் மலசலக்கூடம் காணப்படும். ஒரு லயத்திற்கு 2 அல்லது 3 மலசலகூடமே காணப்படும். ஒரு டிவிசனில்(பிரிவில்) உள்ள அனைத்து லயன்களுக்கும் இலக்கம் இடப்பட்டிருக்கும். மக்கள் லயன்களை அடையாளப்படுத்த “ஒன்னா நம்பர் லயம்”, “ ரெண்டா நம்பர் லயம்” எனவும் “மேட்டு லயம், கீ லயம்” எனவும் அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம். லயம் பொதுவாக தகரத்தில் ஒரே கூரையாக மூடப்பட்டிருக்கும். தனித்தனியான கூரையமைப்பு இங்கு இல்லை. அனைத்து லயன்களும் சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டு இருக்கும். லயத்தின் பின்புறத்தினை “கோடி புறம்” என்றும் லயத்தின் கடைசி அறை இருக்கும் பகுதியை “தொங்கல்” என்றும் அழைப்பர். ஒரு டிவிசனில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் காணப்படும். அதில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிணறுகள் வேறு வேறாக காணப்படும். ஒவ்வொரு டிவிசனுக்கும் பொதுவான ஒரு இடத்தில் ஒரு கோயில் இருக்கும். இது தான் மலையக மக்கள் “மனம் கொண்டதே மாளிகையாக” வாழும் லயன் ஆகும். கொ. தினேஸ் நுண்கலை துறை, கலைக்கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை. Global Tamil Newsலயம் - கொ. தினேஸ். - Global Tamil Newsலயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள்…
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது.கவலைப் படாதீர்கள்.தேவைப்படும் போது பொதுவான ஒரு இடத்தில் எழுதி விட்டு அங்கு ஒட்டி விடலாம்.
-
இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி வாகனத்துடன் பறிமுதல்:
written by admin August 10, 2025 மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் காவற்துறையினர் நேற்று சனிக்கிழமை (09.08.25) இரவு பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் காவற்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருவதாக மரைன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மரைன் காவற்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் சரக்கு வாகனம் இரண்டையும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் https://globaltamilnews.net/2025/219048/
-
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் மனமுடைந்து உயிரை மாய்த்த நபர் : விசாரணையில் குற்றமற்றவரென வெளியான தகவல் !
உண்மை.அனேக இடங்களில் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டவும் முடியாத நிலை வந்து கொண்டு இருக்கிறது.
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
-
பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்
இரா.முருகவேள் என்பவரது படமும் மேலுள்ள இணைப்பில் இருக்கிறது பாருங்கள்.👆 இணைப்பிற்கு நன்றி தம்பி.🖐
-
பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்
Posted inBook Review பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம் Posted byBookday02/09/20252Posted inBook Review எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) 1969 இல் ஆங்கிலத்தில் Red Tea என்னும் தலைப்பில் வெளிவந்தது இந்நவீனம்.. தேயிலை மலைகளில் பல்லாயிரம் உழைக்கும் மக்கள் பலியாக காரணமாகயிருந்த அடக்குமுறைக்கும், நோய்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை உழைக்கும் மக்களின் நண்பர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பது நம்பகத்தன்மையற்றது என்று மனித நேயம் கொஞ்சமும் இல்லாத ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும் தென்னிந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலை உருவாக்குவதில் ஆயிரம் ஆயிரம் முகம் தெரியாத தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதங்களை உலகிற்கு உணர்த்த எழுத்தாளர் கையாண்ட கோலாக இப்புத்தகம் எரியும் பனிக்காடு.. ஆதவன் தீட்சண்யாவின் உணர்வு பூர்வமான வரிகளோடு துவங்குகிறது இந்நவீனம், *ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலை தோட்டங்களில் அடியுறமாயிடப்பட்டவை எமது உயிர்கள் நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருப்பது எமது உதிரம்* என்னும் மனதை கசக்கும் வரிகள், *தோட்டியின் மகன், தூப்புக்காரி* போன்ற சமூக அவலங்களை முன்னிலைப்படுத்திய நாவல்களை என் கண்முன் நிறுத்தியது.. இந் நவீனம் முழுவதும் திருநெல்வேலியில் மயிலோடை என்னும் குக்கிராமத்தில் வசிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்களான கருப்பன் , வள்ளி என்னும் தம்பதியினரின் வறுமையின் பிடி, அவல நிலை மற்றும் தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடந்து பிழைக்க வந்த அவர்களை அங்கேயே சாகடித்த நூற்றுக்கணக்கான மக்களின் வலிநிறைந்த குரல்கள் நம் கண்களில் பிரதிபலிக்கும் நீரூற்றாய் இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுதே… ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்போது வால்பாறையில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டின் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் எழுத்தாளர் பி எச் டேனியல் அவர்கள்.. 1920 முதல் 1930 வரை அப்பகுதியில் வேலை பார்த்த மக்களின் கொடூரமான அவல நிலையையும் மிருகங்களை விட கீழ்த்தரமாக நடத்தப்பட்ட பரிதாப சூழ்நிலைகளையும் இந்நவீனத்தில் தோலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.. பிழைப்பிற்காகவும், ஒருவேளை சாப்பாட்டிற்காகவும் மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் வேறு சில கதாபாத்திரங்களின் அடக்குமுறையும், உயிரியல் ரீதியாக பார்த்தால் *விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்* என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்நாவலின் மொத்த சாரமும்.. “கூரையாக வேயப்பட்டிருந்த பனையோலைகள் ஏறக்குறைய இறுதி மூச்சு விடும் நிலையில் இருந்தன” “மூலையில் கிழிந்த நாராக கிடந்த அம்மாவின் உருவம்” போன்ற ஆசிரியரின் மொழி நடை நாவலின் கூக்குரலுக்கு மெருகூட்டுகிறது… மேஸ்திரி சங்கரபாண்டியின் ஆலோசனைக்கிணங்க கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு கருப்பனும், வள்ளியும் ரயிலில் பயணிக்க அவர்களுடன் வாசகியாக நானும் பயணிக்க ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிய, வேலை ஆரம்பிக்க, கருப்பன் விறகு வெட்ட, வள்ளி தேயிலை கிள்ள, தீப்பெட்டி அளவே உள்ள தகர வீட்டில் இன்னொரு குடும்பத்தினருடன் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ள, வேலை பார்க்கும் இடத்தில் கண்காணிப்பாளர்களின் பாலியல் தொந்தரவுக்கு இடம் கொடுக்காது வரும் பிரச்சனைகளினால் மனம் துவள, ஆளுக்கொரு போர்வையென மழையில் நனைந்துவிட்டால் அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ள, மாற்று போர்வை கிடைக்காது என்று மேஸ்திரி எச்சரிக்க, பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம். கழிப்பறை கிடையாது, மருத்துவ வசதி கிடையாது, வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய், என வெள்ளை துரைகளுக்கும் மேஸ்திரிகளுக்கும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க எழுத்தாளரின் எழுத்தாணி வால்பாறையின் பனிக்காட்டில் எரியும் மக்களின் குமுறல்களை படமிட்டு காட்ட, நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னால் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும், கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் சுவைக்குப் பின் கசப்பின் நியதியை அழகாகப் பதிவு செய்திருக்கிறது.. மக்கள் மலைக்கு போவதற்கான கட்டாயம் என்ன? அங்கே சென்றாலும் அவர்களுடைய கனவுகள் பலித்ததா? அவர்களது சொல்லொன்னா அடிமைத்தன வாழ்வு எப்படியாய் இருந்தது? என்ன அடக்குமுறைகளுக்கெல்லாம் உள்ளானார்கள்? அடிமைத்தன வாழ்க்கை முறையின் அனுபவங்கள் என்னென்ன? சாதிவெறி யின் தாக்கங்கள் என்னென்ன? கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சியை நம்மால் கட்டுப்படுத்தவே இயலாது அவ்வளவு துயரமிக்க காட்சிகளை நம் மனக்கண் முன் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.. இந்நூலை வாசிக்க வாசிக்க Shakespeare’s *Merchant of Venice* ல் வரும் *எவ்வளவு அழகான முகமூடி பூண்டி இருக்கிறது இந்த நரகம்* என்னும் வரிகள் நம் எண்ண ஓட்டத்தில் வந்தே தீரும்.. குறிப்பாக ஒவ்வொரு தலைப்பிற்கு முன்னும் ஆசிரியர் கொடுத்திருக்கும் மேற்கோள்களின் ஒப்பீடு மிக அருமை.. வால்பாறை மண்ணையும், மக்களையும் அறிமுகப்படுத்திய இந்நூலில் இடம் பெறும் உரையாடல்கள் முழுக்க முழுக்க நம் திருநெல்வேலியின் மண்வாசம் வீசுவது கூடுதல் சிறப்பு.. புத்தக பிரியர்கள் தினமன்று புத்தகப் புழுவாகிய எனது நண்பரின் அன்பளிப்பாக பெற்றேன் இப்புத்தகத்தை பெற்ற நாள் முதற்கொண்டு வாசிக்க வாசிக்க கண்களில் நீர் கோர்க்காத நாளில்லை அப்பேர்ப்பட்ட மன வலிகள் மிகுந்த நவீனம் தான் *எரியும் பனிக்காடு*.. *சமூக அவலங்களை அறிந்ததோடு நில்லாது அதனை அப்புறப்படுத்தும் நோக்கில் எழுத்தாளருடன் இணைவோமா??* நூலின் விவரங்கள்: நூல் :எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) ஆசிரியர்: பி.எச்.டேனியல் (P.H.Daniel) | தமிழில்: இரா. முருகவேள் வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம் விலை: ரூ. 250 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/ எழுதியவர் : ✍🏻 சுகிர்தா அ, நெல்லை. https://bookday.in/eriyum-panikadu-book-reviewed-by-sugirtha-gunaseeli/
-
'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
- யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை
இந்த டிப்பர் வாகனத்தை நிரந்தரமாக தடை செய்தால் நாட்டில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் உயிரளப்புக்களிலிருந்து மக்கள் தப்பித்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.- மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள்
மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள் written by admin September 1, 2025 மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் தெரியவருவதாவது, மயிலிட்டி இறங்குதுறை அதிகாரிகளால், நிகழ்வுக்கு வருமாறு அப்பகுதி இந்து மதகுரு மற்றும் கிறிஸ்தவ பாதிரியாருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில் நேற்றைய தினம் மதகுருமார்களை சந்தித்த அதிகாரிகள், நிகழ்வுக்கு வர வேண்டாம் என கோரியுள்ளனர். மயிலிட்டி நிகழ்வுக்கு பௌத்த மதகுரு சார்பில் தையிட்டி விகாரதிபதியை அழைக்க நேரிட்டால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்வில் எந்த மதகுருமாரையும் அழைக்காது விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியே, நிகழ்வுக்கு மத குருமார்களை வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219944/- சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழப்பு!
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழப்பு! written by admin September 1, 2025 யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மரவள்ளி தோட்டத்தை பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக , தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமான முறையில் மின் வேலி அமைத்துள்ளார். இரவு வேளைகளில் மாத்திரம் , வேலிக்கு மின் இணைப்பினை வழங்கி விட்டு , காலையில் அதனை துண்டித்து விடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார். அந்நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பினை துண்டிக்க மறந்து , வேலியை தொட்ட வேளை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவற்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைதத்ததுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219905/- நல்லூர் திருவிழாவில் பொருட்களை தவறவிட்டோருக்க்கான அறிவிப்பு!
நல்லூர் திருஅறிவிப்புவிழாவில் பொருட்களை தவறவிட்டோருக்கான அறிவிப்பு! written by admin September 1, 2025 நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாக் காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்ட நிலையில் வேறுநபர்களால் கண்டெடுக்கப்பட்டு, உற்சவக் காலப்பணிமனையில் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் தற்போது மாநகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகரசபையின் நிர்வாகக் கிளையின் அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219903/- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நந்தண்ணா.✍🖐- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கைதாகாலாம்? written by admin August 23, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை மற்றும் அதன் விசாரணைகள் தொடர்பில் இன்று (23) நடைபெற்ற விசேட காவற்துறை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்பட உள்ளாரா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். விசாரணைகள் நடைபெற்று வருவதால், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று இதன்போது கலிங்க ஜயசிங்க கூறினார். வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். https://globaltamilnews.net/2025/219556/- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர். இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தற்போது மாற்றப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Kalmunaiwin- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
- கற்க கசறும்
ஆரம்பத்திலயே கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல் பட்ட நல்ல பெற்றோர். நன்றி..ஏன் ஏனில் இவ்வாறு புரியாதவற்றை பேசும் பிள்ளைகளை வைத்தியரிடம் கொண்டு போய் காட்டும் பட்சத்தில் அவர்கள் வேறு ஓரு கோணத்தில் தான் சிந்திப்பார்கள்.சில வேகைளில் பிள்ளைகளை வாழ் நாள் வருத்தக்காரர்களாக்கியும் விடும்.- வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?
இப்போதுள்ள இள வயதினருக்கு சோம்பேறித்தனம் கூடுதல் ஆகவே தான் நான்கு நாள் வேலை மற்ற நாட்களில் விடுமுறை தேவை என்று எதிர் பார்க்கிறார்கள்.- ஒரு சோறு
கடசி பந்திக்கு மேலே உள்ள பெரிய பந்தியை சற்று கவனித்தால் நன்று ..✍👋- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
வைத்தியர் சுதர்சனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .🙏- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தாத்தா.✍- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் திடீர் மறைவு – மருத்துவ சமூகத்திற்கு பேரிழப்பு. .................................................................................. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும். அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். "ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கிறார்; ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். டாக்டர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார்." அவரது ஆத்மா சாந்தியடையட்டும். Thangamuthu Sathiyamoorthy - யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை
Important Information
By using this site, you agree to our Terms of Use.