Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9544
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. june1,2024  · 

    May be an image of flower and text that says 'Welcome WelcomeJune! June!'
     
     
     
     
     
    All reactions
  2. நிறைய இடங்களில் ஐடிக்களை திறந்தால் பாஸ்வேர்ட்டை எங்காவது எழுதி வைத்து விட்டு அப்படியே விட்டுவிடுவது ..இப்படியான காரணங்களால் பொது வெளிக்கு ஒன்று சொந்தப் பாவனைக்கு மற்றையது என்று வைத்திருப்பதால்..பெரிதாக எதையும் கணக்கெடுப்பதில்லை.ஊரில் மின்சாரம் இல்லாத காலத்தில் வாழ்ந்த போது எல்லாம் எந்த வசதி வாய்ப்புக்களோடு வழ்ந்தோம்..ஒன்றும் இல்லைத் தானே..எந்தக் கஸ்ரம் வந்தாலும் சமாளித்துக் கொண்டு போக தெரிந்தால் எதுவும் கடினம் அல்ல...என்னைப் பொறுத்த மட்;டில்..
  3. தம்பி...ஏதாவது ஒரு விடையத்தில் அலட்சியப் படுத்தப்படும் போது விலகி இருக்கவும், விளங்கிக் கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும்.பல நேரங்களில் நான் உணர்ந்து கொள்ளும் விடையம். வேலை, பழகும் இடம், உறவுகள் ...😏
  4. படைப்பு ; கவிதை ரசிகன்
    குமரேசன்
     
    மலரை
    நுகர்ந்துப் பார்த்திருக்கிறாய்....
    தேனை
    சுவைத்துப் பார்த்திருக்கிறாய்....
    தென்றலை
    தீண்டிப் பார்த்திருக்கிறாய்.....
    இயற்கையை
    ரசித்துப் பார்த்திருக்கிறாய்...
    இசையைக்
    கேட்டுப் பார்த்திருக்கிறாய்...
    என்றாவது
    பட்டினிகிடந்து பார்த்திருக்கிறாயா ?
    காற்றில்
    தூசுகளும் மாசுக்களும்
    சப்தமும் மணமும் மட்டும்
    அலைந்துக் கொண்டிருக்கவில்லை...
    "அம்மா பசிக்கிறதே!" என்ற
    வார்த்தையும்
    அலைந்து கொண்டுதான் இருக்கிறது......
    ஔவையார் சொன்னது போல்
    "மனிதராய் பிறப்பது அரிதல்ல
    குருடு செவிடாய் பிறக்காமல்
    இருப்பது அரிதல்ல .....
    ஔவையார் சொன்ன
    அரிதுகளிலேயே
    அரிதானது
    'மூன்று வேளை உணவு '
    கிடைப்பதுதான் அரிது.....!
    உடலில் பற்றிய 'செந்தீ'' கூட
    ஒரே ! நாளில் கொன்று விடுகிறது
    இந்த வயிற்றில் பற்றிய
    'பசித்தீ' தான்
    ஒவ்வொரு நாளும் கொள்ளும்...!
    ஒருவனுக்கு அறிவு பசி !
    ஒருவனுக்கு ஆன்மீகப் பசி !
    ஒருவனுக்கு அன்பு பசி !
    ஒருவனுக்குப் பணப்பசி !
    ஒருவனுக்குப் பதவிப்பசி!
    எந்தப் பசி வேண்டுமானாலும்
    இருக்கலாம்
    ஆனால்
    ஒருவனுக்கு
    " வயிற்றுப்பசி "மட்டும்
    இருக்கவே கூடாது.....!
    தனித்திரு
    விழித்திரு
    பசித்திரு என்று
    விவேகானந்தர் சொன்னார்
    ஆனால்....
    பலர்
    "பசித்தே இறக்கின்றனர்...!'
    காற்றில் வரும் பல ஓசையைக்
    கேட்டவர் உண்டு....
    வயிற்றை நனைக்க
    " பால் " இல்லாமல்
    கண்கள் நனைய
    கன்னம் நனைய
    ஏன்?
    'உடல் ' நனையவே!
    கதறியழும்
    பச்சிளம் குழந்தையின்
    குரளைக் கேட்டவர் உண்டா ?
    "பசிக்கிறது
    ஏதாவது கொடுங்கள் " என்று
    கேட்பதற்குக் கூட
    'சக்தி 'இல்லாமல்
    சாலை ஓரத்தில் கிடப்பவர்களின்
    'கண்ணீரின் ஈரம் '
    'காற்றின் ஈரமாக'
    வருவதை
    உணர்ந்தவர் உண்டா ?
    'உணவில்லாமல்' இறந்த
    ஒரு 'குழந்தையின் '
    அல்லது
    ஒரு 'முதுமையின் '
    சடலத்தின் ' வாசணையை '
    சுமக்க முடியாமல்
    சுமந்து வரும்
    காற்றின் சுமையை
    அறிந்தவர் உண்டா ?
    "தனி ஒருவனுக்கு
    உணவில்லை எனில்
    ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார்....
    தனி ஒருவனுக்கு என்ன?
    ஏழு நிமிடத்திற்கு ஒருவர்
    உணவில்லாமல் இறக்கிறார்கள் ஆனால் ....நாங்களோ!
    கைக்கட்டி
    வேடிக்கைப் பார்க்கிறோம்...
    "நாய் சாப்பிடும்
    எச்சில் தொட்டியில்
    மனித வாய் சாப்பிடும் "
    இந்த தேசத்திற்கு
    எதற்கடா தேசியக்கொடி ?
    பசியின் அழுகையும்
    பட்டினியின் கதறலுமே !
    இந்நாட்டின்
    "தேசிய கீதமானப்" பிறகு
    இங்கு
    "ஜன கன மன" எதற்குடா....?
    பசி படடினி தீரும் வரை...
    மக்களாட்சி
    ஜனநாயகம்
    சமதர்மம்
    சுந்திரம் என்பதெல்லாம்
    வெறும் வார்த்தைதானடா....!
    நிலவிற்குச் செயற்கைக்கோள் விட்டோம் என்று
    'மார்பைத் தட்டிக் '
    கொள்கின்றவர்களே !
    இங்கு பசிக்கு
    'வயிற்றைத்
    தட்டிக் : கொண்டிருப்பவர்கள்
    ஏராளம் ! ஏராளம் !
    லட்ச லட்சமாய் செலவழித்து
    சிலை வைப்பதும்
    கோடி கோடியாய் செலவழித்து
    கோயில் கட்டுவதும்
    இவர்களின்
    பசி பட்டினியை தீர்க்குமா ?
    கொடிகட்டி ஆண்டவனே
    ஒரு நாள்
    மாண்டானடா..!
    நீ கொள்ளையடித்து
    ஆள்கிறயே
    நீ என்ன மடையனாடா....?
    உடையில்
    துண்டுப் போட்டுக் கொள்பவன்
    அரசியல்வாதி இல்லையடா...!
    ஏழையின் வயிறு கண்டு
    உணவு போடுபவனே
    அரசியல்வாதியடா....!
    உன் பிள்ளைகளின்
    கழுத்தில் கிலோ கிலோவாக
    நகை போட
    மூன்று வேளையும்
    அறுசுவை உணவு போட
    என்னமோ செய்யடா...!
    ஆனால் இந்த ஏழையின்
    வயிறு பசிக்கும் போது
    உணவு போட ஏதாவது செய்யடா..!
    எரிந்த வீட்டில் தான்
    எதுவுமில்லாமல் போகும்
    திருடிய வீட்டில்
    ஏதாவது
    இல்லாமலா போய்விடும்....
    என்னை
    மன்னித்து விடுங்கள்...
    யாருக்கும்
    உணவு கொடுக்காதீர்கள்....!
    முதுமையாக இருந்தால்
    மட்டும் உணவு கொடுங்கள்
    இளமையானவர்களாக இருந்தால்
    வேலை கொடுங்கள்
    சிறுவர் சிறுமிராக இருந்தால்
    படிப்பு கொடுங்கள்
    நீங்கள் இன்றைய உணவை
    கொடுத்து விடுவீர்கள்
    நாளை உணவை
    அவர்களுக்கு யார் கொடுப்பார்...?
    உங்களிடம்
    கையெடுத்து கும்பிட்டு
    கேட்கிறேன்......
    பசித்தீயால்
    இறந்தவர்களின் உடல்களை
    மீண்டும் சிதைத்தீயால்
    எரிக்காதீர்கள்......!
    அப்படியே எரித்தாலும்
    அவர்கள் உடலில்
    என்ன இருக்கிறது எரிவதற்கு? அதுதான் எல்லாம்
    எறிந்து விட்டதே பசித்தீயில்...!
    பட்டினி கிடக்கும்
    அனைவருக்குமாக
    அழுவதையும்
    எழுதுவதையும் தவிர
    வேற என்ன செய்ய முடியும்
    கவிஞனாய்
    பிறந்து விட்ட என்னால்......!!!
    ஏதாவது
    உதவி கேட்டவருக்கு
    முடிந்ததைச் செய்வோம்
    'பசிக்கிறது' என்று கேட்டவருக்கு
    'முடியாததையும் ' செய்வோம்...
     
    கவிதை ரசிகன் குமரேசன்
     
    All reactions:
     
     
  5.  · 
     
     
    May be an image of 2 people and text that says 'HAPPINESS is meeting an an old friend after a long time and feeling like nothing has changed! LM'
     
     
     
     
     
    All reaction
  6. கடந்த காலங்களில் எழுத சொல்லி கேட்டுக் கொண்ட நிலுவைகள் நிறைய இருக்கிறது அக்கா..🖐️😀
  7. ஒரு பேனையும், தானோடும் நீங்களும் அந்தப் பொது வேட்பாளராகலாம் நிலாந்தன்..வேணும் எண்டால் பிளைட் பிடிச்சு வோட் போட புலம் பெயர்ஸ் வாறம்..இது எப்படி ...✍️🖐️
  8. தீக்கோழி முட்டையின் மனைவி: ஒரு தென்னாப்பிரிக்க கதை
    தென்னாப்பிரிக்காவின் மலைகளுக்கு நடுவே அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில் ஒரு காலத்தில் தாபோ என்ற ஏழை வாழ்ந்து வந்தார். அவர் கனிவான இதயம் கொண்டவர், ஆனால் அவர் வறுமையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளப் போராடினார். அவர் ஒவ்வொரு நாளும் தனது சிறிய தோட்டத்தில் கடுமையாக உழைத்தார், அவர் தனது குடும்பத்தின் பசியைப் போக்கக்கூடிய அளவுக்கு தரமான அறுவடைகளை எதிர்பார்த்தார்.
    ஒரு நாள், தபோ தனது பயிர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, புதர்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய தீக்கோழி முட்டையின் மீது கால் இடறித் தடுமாறினார். ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் அவர் அந்த முட்டையை எடுத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் அவர் வியக்கும் வண்ணம், முட்டை உடைந்து உள்ளே ஒரு அழகான இளம் பெண் வெளிப்பட்ட்டாள். அவள் காலைப் பனியைப் போல மென்மையான தோலையும், நட்சத்திரங்களைப் போல மின்னும் கண்களையும் கொண்டிருந்தாள்.
    "என்னை விடுவித்ததற்கு நன்றி" என்றாள் அந்தப் பெண். "நான் நந்தி, தீக்கோழி முட்டையின் மனைவி. நீங்கள் என்னிடம் கருணை காட்டியுள்ளீர்கள், நான் உங்களுக்கு நீங்கள் விருப்பப்படுவதைத் தருகிறேன்."
    தபோவின் உள்ளம் நன்றியினால் பொங்கியது. அவர் தனது குடும்பத்தின் போராட்டங்களைப் பற்றி நினைத்தார் - பசி, வறுமை - மற்றும் அவருக்கு என்ன தேவை என்பதையும் சரியாக அறிந்திருந்தார். "நந்தி", "தயவுசெய்து என்னை எங்கள் ஊரின் தலைவனாக ஆக்குங்கள். என் மக்கள் என்னை மதிக்கட்டும், கௌரவிக்கட்டும்" என்றார்.
    நந்தி சிரித்தாள். "உன் விருப்பம் என் கட்டளை" என்று பதிலளித்தாள். "ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இரக்கத்தையும் கருணையையும் கொண்டிருப்பேன் என எனக்கு உறுதிக்கொடுங்கள் என்றால். அவரும் அப்படியே உறுதியளித்தார். நீங்கள் தலைவனாக இருக்க இரக்கமும் கருணையும் அவசியம் " என சொல்லிவிட்டு நந்தி மறைந்தாள்
    நந்தியின் வார்த்தைகள் உண்மையாக, தபோ தலைமை தபோ ஆனார். அவரது தலைமையின் கீழ் அவரது கிராமம் செழித்தது, அவருடைய நேர்மை மற்றும் இரக்கத்திற்காக மக்கள் அவரைப் போற்றினர். ஆனால் காலப்போக்கில், தபோ திமிர்பிடித்தார். கருணை பற்றி நந்தி கற்பித்த பாடத்தை அவர் மறந்துவிட்டார்.
    ஒரு நாள், நிலத்தில் வறட்சி ஏற்பட்டது. ஆறுகள் வறண்டு, பயிர்கள் கருகின. விரக்தியடைந்த தபோ மீண்டும் நந்தியின் உதவியை நாடினார். "தீக்கோழி முட்டை மனைவி," அவர் கெஞ்சினார், "எங்கள் வறண்ட வயல்களுக்கு மழை கொடுங்கள்."
    நந்தி கண்கள் சோகமாக அவன் முன் தோன்றினாள். "தாபோ," அவள் சொன்னாள், "நீங்கள் கருணையின் சாரத்தை மறந்துவிட்டீர்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளீர்கள்-மற்றவர்களை இரக்கத்துடன் நடத்துவேன் என்று என்னிடம் உறுதியளித்தீர்கள் ஆனால் அதனை மீறிவிட்டீர்கள் . அதனால் இப்போது, நான் உங்களுக்குக் கொடுத்ததைத் திரும்பப் பெற வேண்டும்."
    அந்த வார்த்தைகளோடு, தபோவை விட்டுவிட்டு நந்தி மறைந்தார். கூடவே அவனுடைய செல்வம் மறைந்தது, அவனுடைய மக்கள் அவனை விட்டு விலகினர். "உண்மையான செல்வம் என்பது பட்டங்களிலோ உடைமைகளிலோ அல்ல, பிறரிடம் நாம் காட்டும் கருணையில் உள்ளது என்பதை தாபோ உணர்ந்தார்"
    All reaction
  9. ஆற்றல் மிக்க கதை சொல்லி எஸ்.பொ .. அவர்குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பகிர விரும்புகிறேன்.
     
    போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கவிஞன் பெர்ணான்டோ பெஸோவா. 127 புனைபெயர்களில் எழுதியதாக அறிய முடிகிறது. தமிழில் எனது வாசிப்பிற்கு உட்பட்டவரை, வாசித்தவற்றில் ஞாபகங்களில் உள்ளவரை எஸ்.பொ தான் அதிக புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். முகநூல் வந்தபிறகு பெர்ணான்டோ பெஸோவாவைக் கூட மிஞ்சுமளவு பலர் பேக் ஐடிகளை வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.
     
    தனது பெயரை எஸ்.பொ.என்று சுருக்கி வைத்துக்கொண்ட எஸ்.பொன்ணுத்துரை, ஆரம்பக்காலத்தில் 'நான்' என்ற புனைபெயரைப் பயன்படுத்தினார். நாற்பதுகளில் சுதந்திரனில் ஆறுபுனைபெயர்களில் வாரமொன்றுக்கு இருகதை வீதம் எழுதியுள்ளார். 'சிறீதரன்' என்ற பெயரில் முதலில் கட்டுரைகள் வெளியிட்டார்.
     
    கல்கி ஈழத்துச் சிறுகதைப் போட்டியை 'மரகதம்' என்ற இதழில் நடத்தினார். அவ்விதழில் 'எழுவானோர் ஏகாம்பரம்' என்ற பெயரில் எஸ்.பொ. விமர்சனக் கட்டுரைகளைச் செய்துள்ளார். இலங்கை அரசியலை அலச 'அபிமன்யு' என்ற பெயரை 'அக்கினிக்குஞ்சு'ல் பயன்படுத்தினார்.
     
    ஈழநாட்டில் 'போதிமரநிழலில்' என்ற தலைப்பில் 'வெள்ளாங்காடு வீ. வியாச தேசிகர்' என்ற பெயரிலும், தேசாபிமானியில் 'போகிற போக்கில்' என்ற தலைப்பில் 'பொக்கன் கணபதி' என்ற பெயரிலும், இளம்பிறையில் 'நாமும் நாங்களும்' என்ற தலைப்பில் 'கொண்டோடிச்சுப்பர்' என்ற பெயரிலும், 'பிருகண்ணளை' என்ற பெயரில் நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.
     
    நையாண்டிக் கவிதைகள் எழுதுவதற்கு 'மூப்பன் முருகன்', 'துமிலைத் திமிலன்' என்ற பெயர்களையும், பெயர் தெரியாமல் எழுத முயன்றபோது 'பெயர்விழையான்' என்கிற புனைபெயரையும் கையாண்டுள்ளார். எஸ்.பொன்னுத்துரை என்று எழுதுவதற்கு முன், சா.பொன்னுத்துரை என்றும், பொதுஊசி, துரை, பழமைதாசன், புரட்சிப்பித்தன், ராஜ், மித்ர, நச்சாதார்க்கும் இனியன் என்ற புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளார்.
     
    May be an image of 1 person
     
     
    கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.போ பிறந்த நாளை நினைவு கூர்ந்த ஒருவர் பதிந்தலிருந்து..
     
  10. இந்த இடத்தில் சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்த தமிழர்களும் இருக்கிறார்கள்..பெற்றோர் மட்டும் தமிழ் பேசுபவர்களாகவும் அநன் பின் வந்தவர்களுக்கு தமிழ் பற்றி மற்றும் நம் நாடு பற்றி அதிகம் தெரியாத பல் வேறு பட்ட மக்களோடு கலந்தவர்களாக இருக்கிறார்கள்.
  11. பழக்கத்தை மாத்துவது கடினம் சிறியண்ண..கு.சா தாத்தா..தாத்தாவாகவே இருக்க விடுங்கள்..யாழில் மட்டும் நான் உட்பட தாத்தா என்று தானே சொல்வது..இனி இந்த திரி கொழுந்து விட்டு எரியாமல் இருந்தால் சரி..🤭
  12. அந்த வழியால் போய் வரும் மக்களால் தானே இந்த நிலை.பொதுவாக பழங்கள் கொடுத்து பழக்கிய படியால் தான் தமக்கான இரையை தேடிக் கொள்ளாது தெருவுக்கு வருகிறது..
  13. இவர்களுக்கு தங்களின் பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிக்கூடங்களிலுள்ள குறை நிநைகளையே தீர்ப்பதற்கு முடியவில்லை...அதற்குள் யாழ்ப்பாணத்திற்கு போய் விட்டார்கள்..தம்புள்ள என்று தான் நினைவு .அங்குள்ளை வைத்தியசாலையில் கறள் பிடித்த பெட் தானாம் இருக்கிறது..அந்த கறள் பிடித்த நோயளார் காவும் பெட்டில் எந்தப் பெரிய வலியோடு வந்தாலும் கர்ப்பிணி பெண்களும் போக வேணும்..மொத்தமாக 3 பெட் தான் உள்ளதே.இது நேரில் பார்த்த ஒரு உறவினர் சொன்னது..உடனுமே ஒரு பெட் வாங்கிக் கொடுக்கபட்டும் இருக்கிறது.இதை எல்லாம் தீர்த்து வைக்க முடியாத ரணில் ஏன் யாழ்ப்பாணம் போனார்.
  14. ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏
  15. Aadal Kalaiye / Farhan Navas / Live Orchestra / Ponmaalai Pozhuthu 2024

     
  16. இரும்பு சத்துக்கள் கூடியது.. @highlight All reactions
  17. நேற்று கோவையில் உள்ள ஒரு பிரபலமான ஓர் ஓய்வு விடுதியில்தங்க நேர்ந்தது.

    அப்போது ஹோட்டல் நிர்வாகம்
    கொடுத்த
    சில பொருட்கள்.
    டவல், சோப்பு, ஷாம்பு ,ஹேர் கண்டிஷனர்,ஹேர்நரீஷர்,சீப்பு, பற்பசை,
    கோகனெட் ஆயில் சேஷே,
    டூத் பிரஷ், ஷேவிங் செட், ஷவர்பாத் ஹெட் கவர்...
    சாப்பிட குக்கீஸ்.ஜூஸ் பாக்கெட்ஸ்,
    கோலா என்று சிறிய அட்டவணையே போடும் அளவுக்கு
    அறையில் பொருட்கள்
    இருந்தது. எல்லாமே இலவசம்.
    நோ பில்லிங்.
    இருந்தாலும்,
    அவர்கள் கொடுத்த பொருட்களிலேயே எனக்குப்
    பிடித்தது இதுதான்.
    எதையாவது நாம் எழுதிக் கொள்வதற்காக அவர்கள் கொடுத்த
    ஒரு
    கையடக்க வெற்றுத் தாள்களோடு கூடிய
    சிறிய புத்தகம்தான்.
    அதன் அட்டை மேல்
    அழகான , அருமையான
    ஒரு வாசகம்.
    Scribble
    until you
    find it.....
    (அதைக் கண்டுபிடிக்கும் வரை
    எதாவது எழுதிக்கொண்டு
    இரு)
    நான் இன்றைக்கு ஒரு எழுத்தாளனாக இருக்க,
    காரணமே ஆரம்ப காலத்தில்
    நான் எதையாவது
    எழுதிக்கொண்டே
    இருந்ததுதான்.
     
     எழுத்தாளர் ராஜேஸ் குமார்.
    May be an illustration of diary and text that says 'Scribble until find it...! yoy'
     
     
     
     
     
    All reaction
    1. ஈழப்பிரியன்

      ஈழப்பிரியன்

      வணக்கம் @யாயினி

      அண்மையில் உங்கள் ஒவ்வொரு பதிவும் மற்றவர்கள் பதிவது போல் அல்லாமல் வித்தியாசமாக உள்ளது.இது எனக்கு மட்டும் தெரியுதா?இல்லை எல்லோருக்கும் இப்படித் தான் தெரியுதா தெரியவில்லை.

      மற்றவர்களின் பதிவுகள் கொஞ்சம் வாசிக்கக் கூடியதாக உள்ளது.

      உங்களின் பதிவு ஏதோ பதிந்திருக்கிறீர்கள் என்பது மட்டுமே தெரிகிறது.

    2. யாயினி

      யாயினி

      வந்து பார்த்துட்டு போகும் மற்றவர்கள் யாராவது கருத்து பகிர்ந்தால் சரி, பிழைகளை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

  18.  · 
    புதன் காலை..🤭
     
    May be a doodle of scorpion grass
     
     
     
    All reactions
     
     
  19. வாதவூரனுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.