-
Posts
9544 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by யாயினி
-
ஒன்றரை மாதப் பயிர்கள்; யானைகளால் நாசம்
விவசாயிகள் கவலை!
(யோகி)
கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குச் சொந்தமான வயல் பகுதிகளில் நேற்று (18) இரவு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளன.
விதைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களே ஆன பயிர்களே இவ்வாறு காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது முதல் தடவை இல்லை எனவும் தொடர்ச்சியாக காட்டுயானைகளால் தமது நெல் வயல்கள் அழிவடைவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள், இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தமக்கான பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தர வேண்டும் எனவும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ)
-
இலங்கையில் ஏற்படவுள்ள மிகப்பெரிய புவிநடுக்கம்!!
(புதியவன்)
நேற்றையதினம் (18) இரவு 11.02 மணியளவில் இலங்கையில் சிறியளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக செய்தித்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியாகின.
இலங்கையின் நிலப்பகுதிகளிலும், இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை புவிநடுக்க பதிவுக் கருவியில் (Seismograph) குறைந்தளவான ரிக்டர் அளவுத்திட்டத்தில் அளவிடப்பட்டிருந்தாலும் கூட, இவை அனைத்தும் நாம் ஒரு மிகப்பெரிய புவிநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதற்கான எதிர்வுகூறலே ஆகும்.
பூமியானது பெரியதும் சிறியதுமான பல கவசத்தகடுகளால் அமையப்பெற்றது. இதில் இலங்கையானது இந்தோ-அவுஸ்திரேலியா கவசத்தகட்டின் வட மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நிகழும் பல புவிநடுக்க அதிர்வுகள் இலங்கையின் கீழான சிறிய கவசத்தகடுகளில் விலகல், ஒருங்கல், அமிழ்தல் போன்ற சிறியளவிலான மாற்றங்கள் ஏற்படுவதை வெளிப்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் பெரிதாக அமையும் சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புவிநடுக்கங்கள் இலங்கையில் ஏற்படும் வாய்ப்புள்ளது.
உலகில் முன்னெதிர்வு கூற முடியாத மிகப்பெரும் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இயற்கை இடர்களில் புவிநடுக்கம் முதன்மையானது. ஆயினும் இது தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் இருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை ஓரளவு குறைக்கலாம்.இலங்கையில் புவிநடுக்கத்தைப் பதிவு செய்யும் புவிநடுக்கப் பதிவுக் கருவிகள் கண்டி-பள்ளேகலவிலும், அனுராதபுரம்- மிகிந்தலையிலும், மட்டக்களப்பிலும் மற்றும் மாத்தறையிலும் உள்ளன. இவ்வாறாக வவுனியாவில் நேற்று ஏற்பட்ட நில அதிர்வு மிகிந்தலையில் உள்ள புவி நடுக்கப் பதிவுக் கருவியில் பதிவாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.02 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் அனைத்துப் பகுதியினரும் மிகப்பெரியவொரு புவிநடுக்கத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஏ)
-
*எழுதியது யார் என்று தெரியவில்லை..*00ஆனால்...உண்மையை புட்டு புட்டு வச்ச மாதிரி இருக்கு!● வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்.பீடா போட்டால் அது நகரம்.● பச்சை குத்தினால் கிராமம்.டாட்டூ (Tattoo ) போட்டுக் கொண்டால் நகரம்.● மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.மெஹந்தி போட்டா நகரம்.● மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா கிராமம்.இரசாயன (Chemical) பொடி தூவி ஹோலின்னா (Holi) நகரம்.● கையில் மஞ்சப் பை வைத்திருந்தால் கிராமம்.பாலித்தீன் பை வைத்திருந்தால் நகரம்.● கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்.மனைவி அவள் நண்பா்களை கணவனுக்கு அறிமுகம் செய்தால் நகரம்.● கிழிந்த ஆடையை துவைத்துப் போட்டால் கிராமம்.நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்.● உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்.உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்.● கோடு போட்ட அண்டர்வேர் (பட்டாப்பட்டி) கிராமம்.இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் நகரம்..● நாய் வீட்டைக் காவல் காத்தால் அது கிராமம்.நாயை வீட்டில் வைத்து காவல் காத்தால் அது நகரம்.*இப்ப இன்னொன்று .*● சாதத்தில் தண்ணீர் ஊற்றி, பழையது சாப்பிட்டா கிராமம்.அமேசான்ல ஆர்டர் பண்ணி பழையது சாப்பிட்டா நகரம்.*நீங்கள் கிராமமா அல்லது நகரமா ?*All reactio