Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. Editorial / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 01:29 - 0 - 103 செ.தி.பெருமாள் எல்லோராலும் அதை செய்ய முடியாது. அதற்கென ஒரு மனது வேண்டும் என்பார்கள். அதை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா செய்துகாட்டி ஏனைய சகல மாணவர் சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியான மாணவியாக எடுத்துக்காட்டியுள்ளார். நெடுஞ்சாலையில் கிடந்த அரைப் பவுன் தங்க தாலி , 3,000 ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா மஸ்கெலியா- சாமிமலை வீதியில் உள்ள அம்மன் ஆலய பகுதியில் உள்ள பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை (24) காலை கிடந்த அரைப் பவுன் தங்க தாலி மற்றும் 3000 ரூபாய் பணம் ஆகியவை அந்த மாணவி கண்டெடுத்துள்ளார். அவற்றை அப்பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தர் ஜீ.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துவிட்டு, இது தொடர்பில் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனிடம் அறிவித்துள்ளார். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ். புஸ்பகுமாரவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நடத்திய விசாரணையின் போது, மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவனலோஜினி ( வயது 46) என்பவரே அந்த பொருட்களின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டார். அந்த பொருட்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கபட்டது. மஸ்கெலியா ராணி பிரிவில் இருந்து கொழும்புக்கு முச்சக்கர வண்டியில் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பொருட்கள் அடங்கிய பொதி தவறவிடப்பட்டுள்ளது. அவற்றை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவியை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பொருட்களுக்கான உரிமையாளரும் நன்றி தெரிவித்துள்ளார். Tamilmirror Online || மஸ்கெலியா மாணவி அபிநயாவின் மனிதநேயம்
  2. நரம்பியல் வைத்திய நிபுணரின் செயலால் தவிக்கும் நோயாளர்கள்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் அவர்கள் கடந்த ஆறு நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையில் உள்ளார்கள். அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையில் உள்ளார்கள். வைத்திய நிபுணர் திருமதி. கவிதா அவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கூட பாராமல் தினசரி வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார். ஆனால் வைத்திய நிபுணர் அஜந்தா அவர்கள் சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வைத்திய நிபுணர் அஜந்தா கடந்த புதன்கிழமை (18.09.2024) அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளார். அதற்கு பின்னர் இன்று வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வைத்திய நிபுணரின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். குறித்த வைத்திய நிபுணர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார். ஆகையால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த வைத்திய நிபுணர் தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. (ப) நரம்பியல் வைத்திய நிபுணரின் செயலால் தவிக்கும் நோயாளர்கள்! (newuthayan.com)
  3. இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார். அவரது தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல்நாடுகளான சீனா இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயலாது என தெரிவித்துள்ளார். புவிசார் அரசியல் மோதலில் நாங்கள் ஒரு பகுதியாக மாறமாட்டோம்,எந்த தரப்புடனும் இணைந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் துண்டாடப்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லைஎன குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளும் பெறுமதி மிக்க நணபர்கள்,எங்கள் அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அவர்கள் நெருங்கிய சகாக்களாக மாறுவதை விரும்புகின்றோம்,என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மத்திய கிழக்கு ஆபிரிக்காவுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் பிராந்திய பதற்றங்களிற்கு இடையில் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்த நடுநிலை வெளிவிவகார கொள்கை அவசியம் என தெரிவிததுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி பரஸ்பரம் சாதகமான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு முயற்சி செய்வார் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார | Virakesari.lk
  4. தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார் - பொ.ஐங்கரநேசன் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவுவரை தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் அதன் பின்னர் சாதிகளாகவும், சமயங்களாகவும், பிரதேசங்களாகவும், கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கைகோர்த்து திட்டமிட்டு இதனை நிறைவேற்றி வந்துள்ளனர். "இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசிய உணர்வுத் தளத்தை மீளக்கட்டமைப்பதில் காத்திரமான பங்காற்றியுள்ளார்." என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்யுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு இனத்தைத் தேசமாகக் கட்டியமைப்பதில் அந்த இனம் பேசுகின்ற மொழி, தாயகமாகக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு, பண்பாடு ஆகியன வகிக்கும் பங்களிப்புகளுக்கு நிகராக தேசம் என்ற உணர்வு நிலையும் இன்றியமையாதது. யுத்தத்தின் பின்னரான தமிழர் அரசியலில் தேசம் என்கின்ற உணர்வு நிலை தமிழ்ச் சூழலில் ஊடுருவியுள்ள பெரும்பான்மைக் கடசிகளாலும் அவர்களின் எடுபிடிகளாலும் மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே தமிழ் மக்களைத் தேசமாக மீளவும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் தான் பெற்ற கணிசமான வாக்குகளின் மூலம் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்டியுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கில் கோடான கோடி பணத்தைச் செலவழித்து தமிழ் வாக்குகளை வியாபாரப் பண்டமாக்கிக் கொள்வனவு செய்ய முயன்றனர். இதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயினர். ஆனால், விலை போகாத தமிழர்களாக இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசிய அரசியலை சீர்செய்து நேர்செய்யும் பயணத்தில் பொதுவேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் பலமான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார் - பொ.ஐங்கரநேசன் | Virakesari.lk
  5. நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அநுரகுமாரவும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்தகாலங்களில் முழுமையாக துணைநின்றது. ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ்மக்கள் இறுதிப்போரில் மடிவதற்கு இந்த அமைப்பு உதவி புரிந்தது. தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித்துள்ளனர். நாங்கள் அனைவரையும் அரவணைத்துச்செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். நீங்கள் கனவுகாண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். அது எவ்வாறு தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்கமுடியாது உங்களுக்கு அந்த அருகதை கிடையாது. தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக்கொண்டு அந்த விருப்பங்களை அங்கிகரிக்கும் மூலமாக தமிழர்களை இந்தநாட்டின் ஆட்சியிலே பங்காளிகள் ஆக்குவதற்கு துணியவேண்டும். அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்று புத்தபிரானையும் எமது கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம். வடகிழக்கு தமிழர்தாயகத்தை அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பினை கொண்டுவருவதனூடாக இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின் பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும். அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக இறங்கவேண்டும்என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக்கின்றோம் என்றார். கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை | Virakesari.lk
  6. ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை" எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்பிரதமர் வேட்பாளராக சஜித்பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனக்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்த ஒத்துழைப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை" | Virakesari.lk
  7. நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்- புதிய பிரதமர் நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்- புதிய பிரதமர் | Virakesari.lk
  8. இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் திங்கட்கிழமை (23) இடம்பெற்றன. தேசிய மக்கள் சக்தி (NPP)யில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுர குமார திசாநாயக்க புதிய 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும் ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று தேசிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் இன்று இடம்பெற்றது . இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஒலுவில் , கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை , உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா பள்ளிவாசலின் நிர்வாகிகள் உட்பட தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றியதுடன் இறுதியாக விசேட துஆ பிராத்தனையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை! | Virakesari.lk
  9. பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் ; ஐ.தே.க. தவிசாளர் பகிரங்க அழைப்பு! (எம்.ஆர்.எம்.வசீம்) இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தயாராகவே இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்றே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் தெரிவித்து வந்தார். அந்த அழைப்பு தற்போதும் அவ்வாறே இருக்கிறது. அதனால் பல்வேறு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பவர்கள் ஒன்றுபட்டு, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுக்கிறேன். நாடு வங்குராேத்து அடைந்திருந்தபோது, அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தபோது, அதற்கு இனங்காத பிரிவினரை எப்படியாவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தற்போது அது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கலந்துரையாடல்களின் இறுதியில் இது தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்க இருக்கிறோம். இணைந்து செயற்பட வேண்டும் என்றே அதிகமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அதனால் எவ்வாறாவது இணைத்துக்கொள்ளவே நாங்களும் முயற்சிக்கிறோம். அடுத்து இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்து அரசியலில் இருப்பதாகவும் இலங்கைக்கு இயலாத சந்தர்ப்பம் ஏற்படும்போது தேவையான தலையீடுகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அன்றாட அரசியல் மாற்றங்களுக்கு அமைய எமக்கு தேவையான ஆலாேசனைகளை வழங்கி, கட்சியை வழிநடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவார் என்றார். பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் ; ஐ.தே.க. தவிசாளர் பகிரங்க அழைப்பு! | Virakesari.lk
  10. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் 15 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன. பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர் உட்பட 15 அமைச்சுக்களின் செயலாளர்கள் வருமாறு, பிரதமரின் செயலாளர் -சபுநந்திரி அமைச்சரவை செயலாளர் - எம்.டி.ஜே. பெர்னான்டோ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் - டி.எஸ்.ருவன் சந்திர, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் - கே.எம்.எம். சிறிவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் - அருணி விஜேவர்தன, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சின் செயலாளர் - டி.ஜயசுந்தர, மகளிர் , சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம்,மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் - கே. மகேஷன், வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு – எம்.எம். தய்முதீன் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் - எம்.பி அதபத்து, சுகாதார அமைச்சின் செயலாளர் -பாலித குணரத்ன மஹிபால, நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் - பி.பி. யசரத்ன, சுற்றாடல், வனஜீவராசிகள், வள வனங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் - பிரபாத் சந்திரகீர்த்தி, கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில்,மற்றும் உயிர் பல்வகைமை வளங்கள் அமைச்சின் செயலாளர் - எம். விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - சம்பத் துய்யகொன்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - ஆர்.பி செனவிரத்ன, புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் - ரஞ்சித் ஆரியரத்ன, சக்தி வலு அமைச்சின் செயலாளர் - உதயங்க ஹேமபால 15 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம் | Virakesari.lk
  11. பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Thinakkural.lk
  12. இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளரும் தொலைக் காட்சியில் செய்திவாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளரும் என்ற பெருமை பெற்ற ஆயிஷா ஜுனைதீன் காலமானார். இறக்கும்போது அவருக்கு 74 வயது. முஸ்லிம் சேவை முதல் பணிப்பாளர் வி ஏ .கபூரின் சிபார்சில் முதன் முதலாக "பிஞ்சு மனம்" சிறுவர் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு பெற்று, சிலாபம் மாதம்பை பழைய நகரிலிருந்து வானொலிக்குள் பிரவேசித்து, முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளரானார்.தொடர்ந்து பகுதி நேர அறிவிப்பாளரானார். இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளரும் இவரே. ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பமான காலத்திலேயே, தொலைக் காட்சியில் செய்திவாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் என்றபெருமையும் இவருக்குண்டு ரூபவாஹினியில் ஒளிபரப்பான பல பிரபல நாடங்களுக்கு இவர் எழுதிய தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பே காட்சி படுத்தப்படும்.தமிழ் மொழியோடு, ஆங்கிலம், சிங்கள மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். ஜனாஸா அஸர் தொழுகையின் பின்னர் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது Tamilmirror Online || முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்
  13. அனுர, சஜித் மற்றும் ரணிலுக்கு மட்டுமே வாய்ப்பு.. Freelancer / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 07:54 - 0 - 7 இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகத் தெரிவான அனுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R Tamilmirror Online || அனுர, சஜித் மற்றும் ரணிலுக்கு மட்டுமே வாய்ப்பு..
  14. 23 Sep, 2024 | 05:11 AM (நா.தனுஜா) புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அவரது வெற்றி குறித்து பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளனர்: எம்.ஏ.சுமந்திரன் 'அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி சிறந்த முன்னேற்றகரமான நகர்வாகும். நாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென ஆராய்ந்தபோது சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லாத பல விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தில் இருந்தன. அதேபோன்று அவர் அரசியலமைப்பில் உள்ளவாறு மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துவதாகவும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்துக் கலந்துரையாடலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதுமாத்திரமன்றி 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து முடிவுறுத்துவதாகவும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்திருந்தார். எனவே அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கக்கூடிய இவ்வனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்' என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தர்மலிங்கம் சித்தார்த்தன் 'ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி மிகச்சிறந்த மாறுதலாகும். இவ்வேளையில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நாட்டை ஊழல் மோசடிகளற்ற தூய நாடாக மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இருப்பினும் தமிழ்த்தேசிய பிரச்சினையைப் பொறுத்தமட்டில், இனிவருங்காலங்களிலேயே இதுபற்றி அவருடன் பேசுவோம். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அவர் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது' என புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி முன்னேற்றகரமான மாற்றமாகும்; அரசியல் தீர்வு குறித்து இனிவருங்காலங்களில் பேசுவோம் - தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் | Virakesari.lk
  15. 23 Sep, 2024 | 01:45 PM யாழ்ப்பாணத்தில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது, உரிய முறையில் குளிர்சான பெட்டியை பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, மருத்துவ சான்றிதழ் கொண்டிராமை, சுகாதார முறைப்படி உணவு கையாளும் இடப்பரப்பினை பேண தவறியமை, உபகரணங்களை உரிய முறையில் பேண தவறியமை போன்ற செயற்படுகளுக்கு எதிராக உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு வியாழக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது 15 உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உரிமையாளர்களுக்கு 01 இலட்சம் நாற்பதாயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. அதேவேளை, ஒரு உரிமையாளரின் உணவகத்திலுள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டது. யாழில் உணவகமொன்றுக்கு சீல் ; 15 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தண்டம் | Virakesari.lk
  16. 23 Sep, 2024 | 04:20 PM இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்றவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவையென பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. பிரசார நடவடிக்கைகளின்போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்பட்டதாகவும் இதுகுறித்து எதிர்வரும் தேர்தல்களில் விழிப்புணர்வூட்டப்படவேண்டும் என்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. விருப்பு வாக்கு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவு இல்லை - பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு | Virakesari.lk
  17. 23 Sep, 2024 | 04:32 PM இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலிசப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன். உங்கள் நம்பிக்கையும்,ஊக்கமும் தான் இந்த பயணம் முழுவதும் என்னை தாங்கிய தூண்கள். 2019ம் ஆண்டு நான் அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது எனது நாட்டிற்கு சேவைசெய்ய குறிப்பாக நீதியமைச்சை சீர்செய்வதில், எனது வாழ்நாளின் பெரும்பகுதியை நான் அர்ப்பணித்த துறையில்,ஒரு தெளிவான பார்வையால் உந்தப்பட்டேன். நாங்கள் பயணி;கப்போகும் பாதை எதிர்பாராதவிதமாக கரமுரடானதாக மாறுகின்றது. உலகமும் நாடும் விரைவில் அசாதாரண சவால்களின் பிடியி;ல் சிக்கின. கொவிட் 19 பெருந்தொற்றும்,அதன் பின்னர் உக்ரைனில் வெடித்த போரும்,அதன் தீவிரமான நீண்டவிளைவுகளும்,சர்வதேச ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தின.இது எங்கள் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடிக்கு வழிவகுத்தது.நாம் நினைத்து பார்க்க முடியாத வகையில் எங்களின் மீள் எழும் திறனை சோதனை செய்தது. இந்த கடினமான காலங்களில் எனக்கு பல பதவிகளில் சேவையாற்றுவதற்கான கௌரவம் கிடைத்தது,நீதியமைச்சராக, நிதியமைச்சராக இறுதியாக வெளிவிவகார அமைச்சராக.ஒவ்வொரு பதவியும் அவற்றிற்கே உரிய சவால்களுடன் வந்தன. என்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கு நான் என்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயற்பட்டேன். வெளிவிவகார அமைச்சராக உலகளாவிய ரீதியில் தலைவர்கள் இராஜதந்திரிகள் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இலங்கையை பொருளாதாரநெருக்கடியிலிருந்து மீட்சியை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளின் போது அவர்களின் தளர்ச்சியற்ற ஆதரவும்,இணைந்த செயற்பாடுகளும் எங்களிற்கு அளவிடமுடியாத பெறுமதிஉடையவையாக காணப்பட்டன. எங்களின் இருள்மயமான தருணங்களி;ல் வெளிப்படுத்தப்பட்ட நன்றிக்காக நான் ஆழமான நன்றியுடையவனாகயிருக்கின்றேன். பொதுச்சேவை என்பது எப்போதும் இலகுவான பாதையில்லை.அதற்கு நேரமும் சக்தியும்மாத்திரமல்ல ஆழமான தியாகமும் அர்ப்பணிப்பும் அவசியம். ஒருவன் நேர்மையுடன் சேவையாற்ற முயலும்போது ,அந்த தியாகங்கள் இன்னமும் பெரிய விடயங்களாக உணரப்படும். ஆனால் நான் எனது பயணத்தை பற்றி சிந்திக்கும்போது, எங்கள் தேசத்தின்சவாலான தருணங்களில் என்னால் வழங்கப்பட்ட பங்களிப்பு குறித்து ( அது எவ்வளவு சிறியதாக காணப்பட்டாலும்)நான் பெருமிதம் கொள்கின்றேன். அரசியலில் ஈடுபடுவதுஎன்பது எனக்கு இயல்பாக கிடைத்த ஒருபாதையில்லை. எதிர்பார்த்த எதிர்பாராத பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது,. ஆனால் இவற்றின் போது பல வருடங்களிற்கு முன்னர் எனது தந்தை வழங்கிய ஆலோசனையை நான் இறுக்கமாக பின்பற்றினேன்.'உங்களால் கட்டுப்படுத்த முடிந்தவற்றை கட்டுப்படுத்துங்கள், கட்டுப்படுத்த முடியாதவை குறித்து நேரத்தை வீணடிக்கவேண்டாம்" இந்த வார்த்தைகள் எப்போதும் எனக்கு வழிகாட்டியுள்ளன,பாதை எதுவென்பது தெரியாத தருணங்களிலும் முன்னோக்கி இந்த வார்த்தைகள் எனக்கு உதவியுள்ளன. தற்போது அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகும் இந்த தருணத்தில் எனது முதல் ஆர்வமான சட்ட துறையில் மீண்டும் ஈடுபடுவது குறித்து எதிர்பார்த்துள்ளேன். அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் - அலி சப்ரி | Virakesari.lk
  18. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம். ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமது விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். அதேவேளை சமத்துவமான தேசத்தை உருவாக்கும் கனவோடு ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதையும் எதிர்பார்க்கிறோம். எமது வேண்டுகோளை ஏற்று எமது அரசியல் வழி நின்று வாக்களித்த மக்களுக்கும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து மக்களிற்கும் நாம் நன்றி கூறுகின்றோம். இதுவரை கால எமது நாடாளுமன்ற அரசியலில், தேசிய நல்லிணக்க வழிமுறை வரலாற்றில் அரசுகளுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் மக்கள் நலன் சார்ந்து நாம் உறுதியுடன் செயலாற்றி வருகின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே என்றும் மாறாத எமது அரசியல் இலக்கு என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா! | Virakesari.lk
  19. Polling Division - Kilinochchi SAJITH PREMADASA SJB 30,571 Votes 47.33% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 20,348 Votes 31.51% RANIL WICKREMESINGHE IND16 7,182 Votes 11.12% ANURA KUMARA DISSANAYAKE NPP 2,805 Votes 4.34% Division Results 2024 (virakesari.lk)
  20. Polling Division - Kankasanturai SAJITH PREMADASA SJB 8,708 Votes 31.56% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 8,365 Votes 30.32% RANIL WICKREMESINGHE IND16 6,587 Votes 23.87% ANURA KUMARA DISSANAYAKE NPP 1,935 Votes 7.01%
  21. இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் https://www.virakesari.lk/article/194390
  22. Polling Division - Mullaitivu SAJITH PREMADASA SJB 28,301 Votes 51.19% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 12,810 Votes 23.17% RANIL WICKREMESINGHE IND16 7,117 Votes 12.87% ANURA KUMARA DISSANAYAKE NPP 3,453 Votes 6.25% K.K. PIYADASA IND4 1,220 Votes 2.21% WIJEYADASA RAJAPAKSHE JPF 273 Votes 0.49% NAMAL RAJAPAKSA SLPP 215 Votes Division Results 2024 (virakesari.lk)
  23. District Results - Vanni SAJITH PREMADASA SJB 33,200 Votes 48.79% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 13,970 Votes 20.53% RANIL WICKREMESINGHE IND16 11,374 Votes 16.71% ANURA KUMARA DISSANAYAKE NPP 5,545 Votes 8.15% K.K. PIYADASA IND4 1,333 Votes 1.96% NAMAL RAJAPAKSA SLPP 283 Votes District Results 2024 (virakesari.lk)
  24. All Island Results - Cumulative ANURA KUMARA DISSANAYAKE NPP 531,343 Votes 52.67% SAJITH PREMADASA SJB 219,835 Votes 21.79% RANIL WICKREMESINGHE IND16 191,618 Votes 18.99% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 24,768 Votes 2.46% Others 41,301 Votes 4% Election Results 2024 (virakesari.lk)
  25. Jaffna (யாழ் தொகுதி ) Valid Votes: 80,373 25,161 Ranil Wickremesinghe 31.31% 31.31% Complete 22,162 Sajith Premadasa 27.57% 27.57% Complete 21,798 Ariyanethiran Pakkiyaselvam 27.12% 27.12% Complete 8,271 Anura Kumara Dissanayake 10.29% NAMAL RAJAPAKSA SLPP 198 Votes 0.25% District Results 2024 (virakesari.lk)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.