Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் Published By: VISHNU 20 JUN, 2024 | 06:36 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களான விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க, சந்திம வீரக்கொடி ஆகியோர் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு திருத்தங்களை முன்வைத்தனர்.ஆளும் தரப்பினர் உறுப்பினர் சரத் வீரசேகர திருத்தங்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்டமூலம் பெண்களை மாத்திரம் வரையறுத்ததாக அமைய வேண்டும் என்ற திருத்தத்தை முன்வைத்தார்.இந்த திருத்தம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது இந்த திருத்தத்துக்கு ஆதரவாக 05 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 09 மேலதிக வாக்குகளினால் கெவிந்து குமாரதுங்க முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம் குறித்து எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள போவதில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்ட கருத்துக்கு எதிரணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெண்களின் நலனுக்காக முன்வைக்கப்படும் இந்த சட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என பாராளுமன்ற பெண் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே சபையில் வலியுறுத்தினார்.இதனை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபை முதல் சுசில் பிரேமஜயந்த சபைக்கு அறிவித்தார். இதனை தொடர்ந்து சட்டமூலத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் எதிரணியின் உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்கள் வாத பிரதி வாதங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இந்த சட்டமூலத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் சபை முதல்வர் புதிதாக பல திருத்தங்களை முன்வைத்தார்.அத்திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் | Virakesari.lk
  2. Published By: VISHNU 20 JUN, 2024 | 07:06 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 தமிழ் அரசியல் தலைவர்கள் ஒருமித்து சந்தித்து கலந்துரையாடினார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். இச் சந்திப்பில் சாணக்கியன், எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பில் ஈடுபட்ட தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களை ஒருமித்து சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்! | Virakesari.lk
  3. 20 JUN, 2024 | 11:51 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்த வேளை, 200 லீட்டர் கோடா மற்றும் 06 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் , குறித்த வீட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட அளவெட்டி பகுதியை சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது! | Virakesari.lk
  4. 20 JUN, 2024 | 01:25 PM இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்கிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 56 அமர்வில் கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடமசடோனியா ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை தூதுவர் ரிட்டா பிரென்ஞ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் மிக நீண்டகாலமாக காணப்படுவதை வெளிப்படுத்திய இலங்கையின் பலவந்தமாக காணாமல்போதல் குறித்த உங்கள் அறிக்கைக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார். பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டதால் ஏற்பட்ட துயரங்களிற்கும் அதனால் அனைத்து சமூகங்களிற்கும் ஏற்பட்ட பாதிப்புகளிற்கும் தீர்வை காண்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உருவாக்கும்நடைமுறைப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் உட்பட புதிய சட்டமூலம் எதுவும் அதன் மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக காணப்படவேண்டும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை தூதுவர் ரிட்டா பிரென்ஞ் தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்தையும் நாட்டில் சட்ட அமைப்புகளின் சுதந்திரம் வெளிப்படை தன்மையையும் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளால் பதற்ற நிலை காணப்படுவதாக வெளியான தகவல்களால் நாங்கள் கரிசனையடைந்துள்ளோம், என தெரிவித்துள்ள ஜெனீவா தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகள் கண்மூடித்தனமான கைதுகள் ,தேடுதல் நடவடிக்கைகள் ,பொலிஸாரின் நடவடிக்கைகளின் போது தடுத்துவைக்கப்படல் குறித்தும் கரிசனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதிபொறிமுறைகள் சுயாதீனமானவையாக அனைவரையும் உள்வாங்குபவையாக பக்கச்சார்பற்றவையாக வெளிப்படைதன்மை மிக்கவையாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவையாக காணப்படுவதை உறுதி செய்யவேண்டும் என இணை அணுசரணை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளால் பதற்ற நிலை- ஜெனீவாவில் இணை அனுசரணை நாடுகள் கவலை | Virakesari.lk
  5. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளார். மணித்தியால அளவில் இந்த விஜயம் ஏன் அமைய வேண்டும். ஆட்பதிவு திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ள விசேட அடையாள அட்டை உட்பட 10 முதல் 12 வரையிலான செயற்திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அறிய முடிகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் துரித விஜயத்தின் நோக்கம் என்ன ? ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார். இதன்போது எழுந்து பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயம் மற்றும் இந்திய பிரதமரின் உத்தேச விஜயம் தொடர்பில் என்னால் தற்போது ஏதும் குறிப்பிட முடியாது. சரியான தகவல்கள் ஏதும் இல்லாமல் பதிலளிப்பது பொருத்தமானதாக அமையாது. ஆகவே இவ்விடயத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றார். மீண்டும் எழுந்து உரையாற்றி விமல் வீரவன்ச, இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கல், அதானி குழுமத்துக்கு மின்கட்டமைப்பை வழங்கல் உள்ளிட்ட செயற்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் காணப்படுகிறது. ஆகவே உண்மையை பகிரங்கப்படுத்துங்கள் என்றார். ஆட்பதிவு திணைக்கள தரவுக் கட்டமைப்பை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி - விமல் | Virakesari.lk
  6. யாழ்ப்பாணத்தில் மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் கணவனை கைது செய்து யாழ். நீதாவன் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது. தீர்ப்புக்காக நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனை மன்று குற்றவாளியாக கண்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை | Virakesari.lk
  7. 20 JUN, 2024 | 06:22 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அரசியல் நலன் சார்ந்தே இந்த விஜயம் அமைந்துள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (20) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இ ருப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் விவகாரத்துக்காக மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். காற்றாலை உற்பத்தியை இந்தியாவுக்கு வழங்குகின்ற விவகாரம் தொடர்பாகவும் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்துக்கான தரைவழிப் பாதை அமைப்பது சம்பந்தமாகவும் உரையாடிச் சென்றுள்ளார். அவருடைய வருகை அரசியல் ரீதியாக நிறைவேறி இருந்தாலும் மன்னார் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. இங்குள்ள காணி விடுவிப்பு குறித்து எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. கலந்துகொண்டிருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இவ்விடயத்தை வலிமையாக வலியுறுத்தவும் இல்லை. அவர்களும் ஆளும் கட்சி போல் ஜனாதிபதியின் நிகழ்வில் ஆசுவாசமாக கலந்துகொண்டு சென்றுள்ளனர். மன்னாரில் இனி புதிதாக குடியேறுவதற்கு எவ்வித காணியும் இல்லை. வன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காடுகளை பாதுகாத்தல், விலங்குகளை பாதுகாத்தல், கரையோரத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சகல இடங்களையும் வர்த்தமானிக்கு உட்படுத்தப்பட்டு, மன்னாரில் மக்கள் குடியேறாத வகையில் ஒரு துண்டு நிலம் இல்லாத நிலையில் உத்தரவாதத்தை அரசு மீறி விட்டது என தெரிவித்தார். ஜனாதிபதியின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை - வி.எஸ்.சிவகரன் | Virakesari.lk
  8. ஜெய்ஷங்கர் - மஹிந்த சந்திப்பு ; இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவதானம் (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுகள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வியாழக்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இலங்கை - இந்திய இருதரப்பு ஒத்துழைப்புக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுவதாக அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜெய்ஷங்கர் - மஹிந்த சந்திப்பு ; இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவதானம் | Virakesari.lk
  9. பெண் வலுவூட்டல் சட்டமூலம் : பெண் என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை - சரத் வீரசேகர குற்றச்சாட்டு (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கலாச்சாரம் ஊடாக நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் புதிய சட்டமூலங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கும், கலாச்சாரத்துக்கும் முரணானது. பெண் என்பது யார் என்பதற்கு போதுமான வரைவிலக்கணம் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் தொடர்பில் பல பரிந்துகளை நாங்கள் முன்வைத்தோம் இருப்பினும் உரிய தரப்பினரால் அவை சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த சட்டமூலத்தில் பெண் என்பது யார்? என்பதற்கு முறையான வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லை. பிறப்பால் பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டவருக்கு மாத்திரமே பெண்ணுக்கான அந்தஸ்த்தை வழங்க முடியும். ஆணாகப் பிறந்து மருத்துவச் சிகிச்சை ஊடாக பெண்ணாக மாற்றமடைந்தவரை பெண்ணாகக் கருத முடியாது. ஆகவே சட்டமூலத்தில் பெண் என்பதற்கான வரைவிலக்கணம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் திருமணம் என்பதற்கும் உரிய வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. ஆணாக பிறந்த ஒருவருக்கும்,பெண்ணாகப் பிறந்த ஒருவருக்கும் இடையில் நிகழும் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படும்.ஆண்களுக்கு இடையிலான திருமணத்தையும்,பெண்களுக்கு இடையிலான திருமணத்தையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமணமாக அங்கீகரிக்க முடியாது. கர்ப்பிணி என்பது யார் என்பதும் வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை.பிறப்பால் பெண்ணாக பிறந்த ஒருவருக்கு மாத்திரமே கர்ப்பிணி என்ற உயரிய அந்தஸ்தை வழங்க முடியும்.இயற்கைக்கு முரணான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை.இலங்கை தான் உலகில் முதல் பெண் பிரதமரை தோற்றுவித்தது. ஆகவே நாட்டின் அரசியலமைப்பிலும்,பௌத்த மத கோட்பாடுகளிலும் பெண்களுக்கும்,ஆண்டுகளுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது.பெண் வலுவூட்டல் சட்டமூலத்தின் ஊடாக மறைமுகமாக கலாசாரத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பால்நிலை சமத்துவம் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.இலங்கை வரலாற்று ரீதியில் பல ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளது.கலாச்சாரம் ஊடாக நாட்டை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் புதிய சட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.69 இலட்ச மக்களாணைக்கு இது விரோதமானது நாங்கள் ஒருபோதும் இதற்கு இடமளிக்கமாட்டோம் என்றார். பெண் வலுவூட்டல் சட்டமூலம் : பெண் என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை - சரத் வீரசேகர குற்றச்சாட்டு | Virakesari.lk
  10. 19 JUN, 2024 | 06:44 PM பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக் கருதப்படும் ஆனைக்கோட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு பகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் 1980ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் இது பெருங்கற்கால பண்பாடு என உறுதிப்படுத்தும் வகையில் சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த நிலையில் புலம்பெயர் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியர்கள், யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் பணிமனை அதிகாரிகள், யாழ்ப்பாண மரபுரிமை மையம் இந்த அகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளனர். இதன் ஆரம்ப நிகழ்வு 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்தார். ஆனைக் கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன | Virakesari.lk
  11. இந்திய துணைத் தூதரகம் முன் மீனவர்கள் போராட்டம்!!! (இனியபாரதி) இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்திய அரசே எமது கடல் வளத்தை சூறையாடாதே: எம்மையும் வாழவிடுங்கள் எனக் கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளன ஏற்பாட்டில் இன்று (18) காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் டொன் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து இந்திய துணைத்தூதரகம் வரை பேரணியாகச் சென்று தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து; அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ) இந்திய துணைத் தூதரகம் முன் மீனவர்கள் போராட்டம்!!! (newuthayan.com)
  12. சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக 5 முறை மிரட்டல் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Chennai airport - hindutamil.in
  13. இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் . யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர் . கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில், இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறிவருகிறது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிபாபை எதிர்கொள்கின்றனர். நாளைசெவ்வாய்க கிழமை காலை 10 மணிக்கு இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றத்தை முற்றுகையிட எமது அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன. யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் கருத்து தெரிவிக்கையில், இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் எமது மக்கள் வீதிக்கு வந்து பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வரும். சிறுவர் தொடங்கி பெரியவர் இதன்மூலம் பாதிப்புக்களை எதிர்கொள்வர். இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனித நேயத்துடன் இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் செயற்படவேண்டும். இந்தியாவின் மிலேச்சத்தனமாகவே இதனை பார்க்கிறோம். இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து கடற்றொழிலாளர்களையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் - என்றார். யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : யாழ் கடற்தொழிலாளர் அறிவிப்பு | Virakesari.lk
  14. வாய்ப்புக்களைச் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தைக் கோடிட்டுக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை நல்லாட்சி காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூறு வீதம் யாழ் மாவட்டத்தினை சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பான பொருளாதார நன்மைகளை வழங்கிவரும் கடலட்டை உற்பத்திகளை மேலும் விரிவாக்கம் செய்து முன்கொண்டு செல்வதற்கு, பண்ணையாளர்கள் நடைமுறை ரீதியாக உணர்ந்து கொண்ட சவால்களுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும். பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அவசியமானதுமாகும். எமது மக்களே எமது பிரதேசங்களின் வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயன்களைப் பெறவேண்டும். அதுவே எனது எதிர்பார்ப்பாகும் என மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ், வேலணை பிரதேச செயலர் சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk
  15. சில தினங்களிற்கு முன் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த LGBTQIA வினரின் சுயமரியாதை நடைபவனி
  16. தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் Today at 01:01 PM IST ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். Today at 08:10 AM IST Tamil News Live Today: குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்| Tamil News Live Today updates dated on 13 06 2024 - Vikatan
  17. மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். Published:Today at 5 AMUpdated:Today at 5 AM Pradeep k Vijayan 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர் மத்தியில் கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். 'தெகிடி' படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மேயாத மான்', 'என்னோடு விளையாடு', 'மீசைய முறுக்கு', 'ஒரு நாள் கூத்து', 'திருட்டு பயலே 2', 'இரும்புத்திரை', 'ஆடை', 'கென்னடி கிளப்', உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். Pradeep k Vijayan கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ருத்ரன்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரதீப் கே.விஜயன் உயிரிழந்திருக்கிறார். இரண்டு நாட்களாக அவரது வீடு பூட்டியிருந்திருக்கிறது. பிரதீப் வெளியே வரவில்லை. அவரது நண்பர்கள் அவரை போன் மூலம் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இறுதியாக அவரது நண்பர்கள் காவல்துறையை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது அவர் இறந்தநிலையில் கிடந்துள்ளார். Pradeep k Vijayan மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். Pradeep k Vijayan: `பூட்டிய வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த நடிகர்!' - அதிர்ச்சியில் திரையுலகம் |actor pradeep k vijayan passed away - Vikatan
  18. (ஆதவன்) வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது. இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச) மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)
  19. ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (மாதவன்) ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டுக்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிசாஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்றுள்ளது. (ஞ) ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (newuthayan.com)
  20. பால்நிலை சார் வன்முறை; முறைப்பாட்டு முறைமைகள் (அமுதரசி) பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாட்டு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு எனும் தலைப்பில் ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை , இன்று (13) யாழ்ப்பாண மாவட்ட செயலக, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில், கிறிசலிஸ் நிறுவனம்ந டைமுறைப்படுத்தும் பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக முன்னெடுக்கப்பட்ட மேற்படி பயிற்சிப்பட்டறையில் மாவட்ட செயலர், உதவி மாவட்ட செயலர், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவி செயலாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி அலுவலர், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மனித உரிமை ஆணைகுழுவின் பிரதிநிதி, உட்பட பல துறைசார் அரச அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிறிசலிஸ் நிறுவன அலுவலர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (ஏ) பால்நிலை சார் வன்முறை; முறைப்பாட்டு முறைமைகள் (newuthayan.com)
  21. Published By: DIGITAL DESK 3 13 JUN, 2024 | 02:46 PM சுவிற்சர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆதிவாசிகளின் 12 எலும்புக்கூடுகள், 30 மண்டை ஓடுகள் மற்றும் 400 கிலோகிராம் எடையுள்ள கலைப்பொருட்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த வருடம் நெதர்லாந்தில் இருந்து கலைப்பொருட்கள் நாட்டிற்கு வெற்றிகரமாக மீண்டும் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, சுவிற்சர்லாந்தில் இருந்து இந்த மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை மீண்டும் கொண்டு வருவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். சுவிற்சர்லாந்தின் பேசல் அருங்காட்சியகத்தில் இருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பூர்வீக மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (12) கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ கலந்துகொண்டார். கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் தம்பன வாரிக மஹகெதரவின் கோரிக்கைக்கு அமைய சுவிஸ் அரசாங்கத்துடன் இணைந்து முறையான ஒப்பந்தத்தின் மூலம் இந்த பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒஷான் வெடகே சுட்டிக்காட்டியுள்ளார். சுவிற்சர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை ஆதிவாசிகளின் மனித எச்சங்கள், கலைப்பொருட்கள் | Virakesari.lk
  22. 13 JUN, 2024 | 03:39 PM கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கிலக்கான 20 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காற்று வீசி வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (13) குளவிக்கூடு கலைந்துள்ளது. இதனால் மாணவர்களை குளவிகள் தாக்கியுள்ளன. குளவிக் கொட்டுக்கிலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk
  23. 13 JUN, 2024 | 05:02 PM தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்று (13) வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க தான் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார். அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பாரதி திசையை நோக்கி தள்ளப்பட்டார்கள். ரணில் விக்ரமசிங்க வாக்கின் மீது இருந்த நம்பிக்கையை செயல் இழக்க வைத்தார். உணர்வு சார்ந்த அரசியலை முன்னெடுத்து, அரசியல் இருப்புகளை தக்க வைப்பது அரசியல்வாதிகளுக்கு இலகுவான ஒன்று. இம்முறை உணர்வு சார்ந்த அரசியல்களை தவிர்த்து அறிவு சார்ந்த அரசியலை செயல்படுத்துவது தமிழ் சிங்களமாகிய இரண்டு இனங்களுக்கும் தேவையான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் ! | Virakesari.lk
  24. தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - உறவினர்களிடம் டக்ளஸ் தெரிவிப்பு 13 JUN, 2024 | 05:27 PM காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன், அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தேடப்பட்டுவந்த இருவரும் தமிழக கடற்பரப்பில் கரையொதுங்கிய தகவல் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில் குறித்த இருவரது குடுப்பத்தினர் இன்று வியாழக்கிழமை (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இருவரையும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - உறவினர்களிடம் டக்ளஸ் தெரிவிப்பு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.