Everything posted by வாலி
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
அரியத்தை பப்பாவில் ஏத்திவிட்ட நிலாந்தன் மாஸ்டர் இப்ப எஸ்க்கேப்!😂 கொம்பு சீவிவிட்ட பார் சிறிதரன் போன்றவர்கள் தான் பதில்சொல்லவேண்டும்.😂
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பொக்ஸிங் டே டெஸ்ட்டில் பாரத் அணியை வென்ற ஆஸி அணிக்கு பாராட்டுக்கள்.👏 பகிடி என்னவென்றால் பாரத் அணிக்கும் அவர்கள் அடிப்பொடிகளுக்கும் ஐந்தாம் நாளில் கூட தாங்கள் வெற்றிபெறலாம் என்று நம்பிக்கொண்டு இருந்ததுதான்😂
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி நல்லாச் சவர்க்காரம் போட்டு பொச்சுமட்டைத் தும்பினால் முழங்கால் பகுதியை நன்றாகத் தேய்த்துக் கழுவிவிட்டு வந்திருக்கலாம்!👀
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
AUS 474 & 234 IND (26.1 ov, T:340) 369 & 33/3
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
MCG இல் ஐந்தாம் நாள் மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்தியா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்துள்ளது. ரோஹித், ராகுல், கோலி மூவரும் ஆட்டமிழந்துள்ளனர். பட் கம்மின்ஸ் 2 விக்கட்டுக்களையும் மிட்சல் ஸ்டார்க் 1 விக்கட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டத்தில் இன்னும் ஆகக்குறைந்தது 65 ஓவர்களும் 5 பந்துகளும் வீசப்படவேண்டும் இந்திய அணியின் மீதமுள்ள 7 விக்கட்டுக்களையும் இன்னும் 306 ஓட்டங்களுக்குள் வீழ்த்தவேண்டும்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பட் கம்மின்ஸின் விக்கட்டை 65ஆவது ஓவரில் இழந்தவுடன் ஆஸி தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்தி இந்தியாவை ஆட அழைத்திருக்கவேண்டும். பட் கம்மின்ஸ் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 173/9 என்ற நிலையில் இருந்தது. ஆஸி 278 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்றிருந்தது. MCGஇன் லைவ்லி ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களைச் சேஸ் செய்வது கடினமானது. நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி ஒரு மணிநேரத்தில் இந்தியாவை ஆடச்செய்திருந்தால் ஒன்றிரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்க முடியும். இன்று கடைசி நாள் 90 ஓவர்கள் ஆடமுடியும். ஆடுகளத்தில் போதிய வெளிச்சமிருந்தால் மேலதிகமாக 10 ஓவர்கள் ஆடலாம். ஆஸி இப்போது 333 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது. இப்போதாவது ஆட்டத்தை நிறுத்தி இந்தியாவை ஆட அழைக்கவேண்டும். இந்தியாவை ஆஸி காடாத்தவேண்டி வாழ்த்துக்கள்!
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
செத்தகிளி பறவைக்குள் வராதா?!😂
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
செத்தகிளி பெரிய வீரன் தான். பயணிகள் விமானத்தை சுட்டுவிழுத்தி பயணிகளைக் காடாத்திய செத்தகிளி பெரிய வீரன் தான். வெய்ட் பண்ணுங்க ஜனவரி 20 மட்டும். நம்மாள் வந்தாப்பிறகு செத்தகிளிக்கு இருக்கு சீவிச் சிங்காரம்!😂
-
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
கட்டாயமாக இது கண்டிக்கப்படவேண்டிய ஒரு துக்ககரமான நிகழ்வு. அமெரிக்காவின் ஊடகச் சுதந்திரம் இதனை வெளியில் கொண்டுவந்திருக்கின்றது. இப்படியான ஒருநிகழ்வு செத்தகிளியின் நாட்டில் நடந்திருந்தால் ஊடகங்கள் இரட்டடிப்புச் செய்திருக்கும்.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
பாவம் இண்டியன்ஸ். சீனா அணைகட்டுவதைப் பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு நிக்கவேண்டியதுதான்!😂
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பொக்ஸிங் டே டெஸ்ட்: MCG இல் இரண்டாம் நாள் மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அவுஸ்ரேலிய அணி 454 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்திருந்தது. களத்தில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களுடனும் மிட்சல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களுடனும் உள்ளனர். இன்னும் 100 ஓட்டங்களை பெற்று தேநீர் இடைவேளைக்கு பின்னர் பாரத் அணியை குறைந்தது 20 ஓவர்கள் ஆடுமாறு செய்தால் நல்லது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
சாம் கொன்ஸ்டாஸை இன்னொரு ரிக்கி பொன்டிங் என்கிறார்கள் கிரிக்கட் வல்லுனர்கள். வாழ்த்துக்கள்!👋
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
அவரை பார் சிறிதரன் என்று அழைப்பதனை நிறுத்திவிடுவோம்!😂
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
அருச்சுனா விசர்க்கூத்து ஆடாமல் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களில் கவனம் செலுத்துவராயின் மக்கள் இன்னும் அதிக ஆதரவு தருவார்கள்!
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பார் அனுமதிப் பத்திரம் ஆராலை கொடுக்கப்பட்டது அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை வெளியிடவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். திருடன், திருடன் பிடி பிடி என்று முன்னுக்கு கத்திக்கொண்டு ஓடுவானாம்!😂
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்த கேவலங்கெட்ட செயலில் ஈடுபட்ட கேவலங்கெட்ட (uncultured) பாரத வீரர் விராட் கோலி சிட்னி டெஸ்டில் தடைசெய்யப்படவேண்டும். https://www.cricket.com.au/videos/4190673/konstas-kohli-clash-in-middle-of-mcg
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
எந்தத் திருடனும் நீ திருடன் தானா என்று கேட்டால் ஒத்துக்கொள்ளமாட்டான்! இருக்கு என்ன விந்தை இருக்கின்றது!
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
கடந்த ஆண்டில் மட்டும் 16 பார்களுகான அனுமதி ஒருசில சமுகவிரோதிகளின் சிபாரிசின் பேரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மக்கள் இந்த சமுகவிரோதிகளையும் அவர்களுக்கு கூஜா தூக்கும் நபர்களையும் இனங்கண்டு தகுந்த பாடம் புகட்டவேண்டும்!
-
பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!
ஒருவேளை தெல்லிப்பளையில் பயிற்சி எடுத்திருக்கக் கூடும்!😂
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
ஜஸ்டின் ட்ரூடோ என்ற முட்டாள் ஏற்படுத்திய அவலங்களைச் சரிசெய்ய கனடாவுக்கு அடுத்த 20 ஆண்டுகள் எடுக்கும். இனி அடுத்த 2 தேர்தல்களிலும் நம்ம பழமைவாத கட்சிதான் ஆட்சியமைக்கப் போகிறது. ✌️
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
“மவுனம் சம்மதம்” என்று நாலைஞ்சு நாட்களுக்கு முன்னர் ஏதோவொரு திரியில் வாசித்த ஞாபகம். சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகளில் பெரும்பாலானோர் ஜெயராஜுடன் உடன்படுகின்றார்கள் போலத் தெரிகின்றது.😄
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
சாணக்கியனும் சுமந்திரனும் நோர்வே தூதரை சந்திப்பதில் ஒரு லொஜிக் இருக்குது. அது சரிதான். அவர்கள் துரோகிகள். ஆனால் பார் சிறிதரன் தான் சிபாரிசு செத்த பார்களின் உரிமம் நிறுத்தப்பட்டாற் கூட நோர்வே தூதரை மட்டுமல்ல வேறு எந்த நாட்டுத் தூதுவரையும் சந்திக்கமாட்டார். அதன் காரணம் பார் சிறிதரனுக்கு இங்லிஷ் தெரியாதது என்பது அல்ல,😂 இறுதி யுத்தத்தில் நோர்வே உள்ளிட்ட சகல நாடுகளும் தமிழருக்கு துரோகமிழைத்துதான் காரணம். 👀 நீதி: (இங்லிஷ் உனக்கு) கிட்டாதாயின் வெட்டென மற.😂
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
உலகெங்கிலும் பயங்கரவாதத்துக்கான மருந்து இஸ்ரேலிடம் தான் இருக்கின்றது. சிலவேளை கெதியிலை இவையளுக்கு அந்த மருந்து தேவைப்பட்டாலும் தேவைப்படலாம்.
-
அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்
சஜித்தின் இந்தக் கூற்று ஏற்கனவே பார் அநுமதிப் பத்திரத்துக்கு சிபாரிசு செய்த சமூகவிரோதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தமாதிரி இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பிந்தங்கிய மாவட்டமாகிய கிளிநொச்சியில் 16 பார்களுக்கு சமுகவிரோதிகள் சிலர் சிபாரிசு செய்துள்ளமை சகலதரப்பாலும் கண்டிக்கப்படவேண்டியது!
-
அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்
இவ்வாறான சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக இருக்கின்றது. பின் தங்கிய மாவட்டமாகிய கிளிநெச்சியில் சில சமூகவிரோதிகளின் சிபாரிசின் அடிப்படையில் 16 பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமூகவிரோதிகள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இச் சமுகவிரோதிகளை அநுர அரசு காப்பாற்ற முனைந்தால் தமிழ் மக்களின் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் ஒருசில அரசியல்வாதிகள் அநுர அதிபரான மறுநாளே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் காலில் விழாக்குறையகச் சந்தித்தது இங்கு குறிப்பிடப்படவேண்டியது அவசியமாகின்றது!