Everything posted by வாலி
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
கெதியில பார் லைசன்ஸ் வாங்கிக் குடுத்த ஆக்களிண்ட லிஸ்டும் வெளிவருகுதாம். பார் சிறீதரனின்ட சத்தத்தைக் காணேல்லை. விக்கி அய்யா இன்னும் ஒராளுக்கு வாங்கிக் குடுத்திருக்கிறார் எண்டு ஒரு கதை அடிபடுகுது, அதுவும் மேல் மாகாணத்திலையாம். 😂
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
எல்லாம் பாரின் சரக்கின் மாயாஜாலம்!😂
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இரு மாபெரும் புத்திஜீவிகள் சந்திப்பு. இனி தமிழ் மக்களுக்கு விடிவுகாலம்தான் போங்கோ! தமிழ்க் கூட்டமைப்பை முதலில் பாராளுமன்ற கதிரைகளுக்காக உடைத்துக்கொண்டு முதலில் வெளியேறியவர் இந்த கஜே-கயே குழுத்தலைவர் கஜேந்திரகுமார். இது சுமந்திரன் வருவதற்கு முன் நிகழ்ந்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் தமக்குத் தேவையானவர்களைத் தெரிவுசெய்வார்கள். குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களை அனுப்பியுள்ளார்கள். பிக்பாஸ் அதிகம் பார்ப்பதன் விளைவாகக் கூட இது இருக்கலாம். அநுர அரசு சமர்ப்பிக்கப் போகின்ற புதிய அரசிலமைபுத்தொடர்பாக கஜே, பார் சிறீதரன், அருச்சுனா போன்ற புத்திஜீவிகள் மக்களுக்குப் போதிய விளக்கம் அளிப்பார்கள் அல்லது புரியவைப்பார்கள் என நம்பலாம். எனவே சுமந்திரன் தன்னை நிராகரித்த மக்களின் ஆணையைக் கருத்திற்கொண்டு இதுபற்றி வாளாதிருப்பதே சாலச் சிறந்தது!
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
முதலில் அநுர அரசு பாலஸ்தீன பிரதேசத்தில் குடியேறிய அரபிக்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு ஜேவிபியைப் போல ஜனநாயக வழிக்கு வருமாறு கோரவேண்டும்.
- உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
செந்தமிழன் சீமான் அண்ணாவுடன் என்ன பேசினார் என்பதை ரஜனி சார் தாம் மரணமடைய முன்னரே தெரிவித்தால் நல்லது. ஒரு பத்து நிமிட சந்திப்பிலேயே பல விடயங்களைச் சாதித்த சீமான் அண்ணா இரண்டு மணிநேரச் சந்திப்பில் பற்பல விடயங்களைச் சாதித்து இருப்பார். அதனை செந்தமிழன் சீமான் அண்ணா ரஜனி சார் இல்லாத காலங்களில் கதைகளாக சொல்கின்றபோது மக்கள் இது புல்டா போண்டா கஞ்சா கப்ஸா கதையெண்டு சொல்லக்கூடாது. ரஜனி சார் இப்பவே சொன்னால் நல்லது. எனக்கு செந்தமிழன் சீமான் அண்ணவை நினைக்கும்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசெல்லம் தான் நினைவில் வருவார்கள். 1400 வருடங்களுக்கு முன்னரே நாயகம் அவர்கள் விண்வெளிக்கு கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான ஒரு வாகனத்தில் விண்வெளிப் பயணம் செயததாகச் சொல்லியிருக்கின்றார்கள். பவம் சஹாபாக்கள்!😂
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை
தேசத்தின் இளவரசியின் அறிக்கையை, புலம்பெயர் பட்டாசு ரெஜிமெண்டின் அவுஸ்ரேலிய தளபதி பாலசிங்கம் பிரபாகரன் வெளியிட்டுவிட்டாரா?👀
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
பார் சிறீதரன் தனது அரசியல் தில்லாலங்கடிகளுக்காக மூன்று மாவீரர்களைத் தந்த தாயாரை அவமானப்படுத்தி அனுப்பியது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது!
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
கரியாப் போன காசு!
-
சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுங்கள்; பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை; வடக்கு ஆளுநர் அதிரடி
நல்லதொரு ஆளுநர் வடமாகாணத்துக்குக் கிடைத்திருக்கின்றார் போலுள்ளது!
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
அநுரவின் அரசாங்கம் ஈழத் தமிழருக்கு எதிரியா இல்லையா என்பதை ஈழத்தில் வாழும் மக்கள்தான் சொல்லவேண்டும். அதனை வரலாறு தெளிவாகப் பதியும். சும்மா விசர்க் கதைகதைச்சுக்கொண்டு திரியத்தான் பழ. நெடுமாறன் போன்றோர் லாயக்கு. அநுர அரசில் எல்லை தாண்டிவந்து மீன்கொள்ளையில் ஈடுபடும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு ஆபத்து என்பதைத்தான் அய்யா சொல்லியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
தலைவரின் வீரமரணத்தை தெளிவாக அறிவித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்திருக்கவேண்டும். இருக்கிறார் வருவார் என்று பொய்சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிய கூட்டம் + புலம்பெயர் பட்டாசு ரெஜிமண்ட் (இவர்கள் தாயக அரசியலை சின்னாபின்னமாக்கியவர்கள்) தான் இதற்கு முக்கிய காரணிகள். இப்ப ஈழநாடும் மனந்திரும்பி திருமுழுக்கு எடுத்திருக்கு. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
இவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு திருமுழுக்கு எடுத்து பரிசுத்தவான்களாக இருப்பது ஒரு வளர்ச்சிதானே! குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தருமலிங்கம் சித்தார்த்தன் போன்றோர் மகான்களாகிவிட்டனர்!
-
கனேடிய இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ் கணக்காளர் விமான நிலையத்தில் கைது!
படத்தில் இருக்கும் போலீஸ் அம்மணி ரொம்ப அழகா இருக்காங்க! கேவலம் கெட்ட கணக்காளர்
-
அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை
இந்தச் சம்பவத்துக்கு இவர் பேஸ்புக் லைவ் போடேல்லையா?
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பேர்த் கிரிக்கட் ஆடுகளம் கிட்டத்தட்ட இந்திய ஆடுகளங்கள் போல தட்டையான ஆடுகளம். அதனால் முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டவீரர்கள் சொதப்பினாலும் இந்தியர்களால் நன்றாக ஆடமுடிந்தது. அடிலெட்ய்ட், பிறிஸ்பேர்ண், மெல்பேர்ண், சிட்னி ஆடுகளங்களில் இந்தியா எப்படி ஆடுகின்றது என்பதை பார்ப்போமே।😕
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
செந்தமிழன் சீமான் அண்ணா குடிப்பதை நிறுத்திவிட்டால் இப்படிப் பேசமாட்டார். என்ன செய்வது சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்துக்கு கட்டடித்து விட்டு கள்ளடிக்கப் பழகிவிட்டார். அது இப்ப பாரின் சரக்கில வந்து நிக்கிது!😂
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
தமிழர் மனங்களை வெல்லவேண்டும் என் நீண்டகாலத் திட்டத்துடன் செயற்படும் என்பிபி அரசு மாவீரர் தினத்தை கடைப்பிடிப்பதைத் தடைசெய்ய ஒன்றும் முட்டாள் இல்லை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பையன் சார், யாழ்கள டெக்ஸ்ட் எடிட்டரில் இலக்கம் 8 இக்கு பின்னர் ) என்ற அடைப்புக்குறியை டைப் செய்யும்போது 😎 என்ற ஸ்மைலி தானாக வந்துவிடும்!
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கு நான்கு புள்ளிகள் அதிகம் கிடைக்காது. அப்படிக் கிடைத்தாலும் மொத்தப் புள்ளிகள் 60 தான் வரும். எப்படிப் பார்த்தாலும் எனக்கு மூன்றாம் இடம்தான் நிச்சயம்!😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு. எனவே போட்டியில் முதலிடத்தைப் பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இவர்கள் சேரலாம் பிரியலாம் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.