Everything posted by வாலி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்பட்டமான யூதர்களின் வரலாற்றை பொய்யாக எழுதுகிறீர்கள். அல்லது பொய் சொல்லுகிறீர்கள். அல்லது உங்களுக்கு வரலாறு தெரியாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வருத்தத்துக்கு இனிவரும் காலங்களில் நல்ல மருந்து கிடைக்கும்!
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
குடிக்கிறது கூழ் ஆனால் கொப்பளிக்கிறது பன்னீர்!😂😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இப்படித்தான் சிறிலங்கா அரச பயங்கரவாதிகள் நவாலி தேவாலயத்தை தாக்கிவிட்டு அறிக்கை விட்டனர், ரஷ்ய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு சரியான மருந்து இஸ்ரேலிடம்தான் உண்டு.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது எப்பல இருந்து! 😂 வாசிச்சு சிரிக்கத்தான் முடிகின்றது. 😂
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂
-
படம் கூறும் கதைகள்
பழம் வீதி ஆலடிச் சந்தியில தொடங்கி அரசடி வீதியில் முடியும். பிறகு வலப்பக்கமாக கொஞ்சத் தூரம் போக கந்தபுராண வீதி வரும் அதுதான் அம்மன் வீதிக்குப் போகும். பழம் ரோட் அரசடியில் சந்திக்கிற இடத்தில் தான் இந்தியப் படைகளுடனான மோதலில் லெப். கேர்ணல் மதி அவர்கள் வீரச்சாவு அடைந்தவர்!
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
எனக்கு இப்பிடி எழுதமுடியவில்லையே என்று சில நரிகள் தமக்குள்ளா புழுங்கும். வேறுசில நரிகளோ பதிலுக்கு இன்னோரு நரிக்கதை சொல்லும் இல்லாவிட்டால் ஒரு பேய்க்கதை அல்லது கவிதையாவது சொல்லும்!😂 பிற்குறிப்பு: இங்கு சொல்லப்பட்ட நரி நான் தான் என்றால் நம்பவா போகின்றீர்கள் நீங்கள்!😂
-
நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
யாழ் களம் தொடர்ந்தும் இயங்கும். இடைக்கிடை நிப்பாட்ட போவதாக அறிவிப்புக்கள் வரும் ஆனால் நிக்காது. உக்ரேன் ஆக்கிரமிப்பில் ரஸ்யா திருட்டுத்தனமாக உக்ரேன் அதிபரை கொல்ல முயற்சிக்கும். ரஸ்யாவின் பொருளாதாரம் பலத்த அடிவாங்கும். கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வீட்டுவிலை குறையும், வேலையின்மை உயரும். தாராளவாத கட்சி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு தேர்தல் வரும். அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் அதிபராவார். இலங்கையில் புதிய அரசியல் யாப்பு வரையப்பட்டு தொகுதிவாரி பிரதிநிதுத்துவ அடிப்படையிபில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் . ரணில் தொடர்ந்தும் அதிபராக இருப்பார். விக்னேஸ்வரன் ஒதுங்கி அவரது இரண்டாவது மகன் தேர்தலில் இறக்கப்படுவார் . யாழ் மாநகர சபை தேர்தலில் ஈபிடிபி வெல்லும் . ரெமிடியஸ் முதல்வராவார். தமிழ்நாட்டில் அதிமுகவின் இரட்டையிலை முடக்கப்படும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடி-காங்கிரஸ்-திருமா-கமல் கூட்டணி அமையும் . திமுக கூட்டணியில் பாமக தேதிமுக இணையும் .பாஜக-பன்னீர்-டிடிவி இணைவார்கள். பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக வானதி சிறீனிவாசன் நியமிக்கப்படுவார். ஸ்டாலின் ஆட்சி அசைக்க முடியாது உறுதியாக இருக்கும். சீமான் கட்சி குறிப்பிட தக்க வளர்ச்சி (10%-15%)அடையும். இதன் பெறுபேறு 2024 தேர்தலில் தெரியவரும். தென்னகத்தின் இரண்டு இசை ஜாம்பவான்கள் மறைவார்கள். ஒருவர் தமிழ்நாட்டுகாரர் மற்றவர் கேரளத்தவர்.
-
கருத்து படங்கள்
எவர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கைத் தீவின் தலை யாழ்ப்பாணம் தான். என்றைக்கு பேரினவாதிகள் தலையிலை கைவைத்தார்களோ அன்றிலிருந்து தீவுக்குப் பிடித்தது நசல். இப்பவும் எமக்கான நியாயமான தீர்வு ஒன்றை வழங்கினால் மட்டுமே இந்தப்பிணி தீரும்.
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
நாம் அந்தக்காலத்தில விளையாடாத விளையாட்டுக்களே இல்லை😂 எவடம் எவடம் புளியடி புளியடி 1,2,3 பம்பலப்பிட்டி கோழியும் பிராந்தும் பசுவும் புலியும் உருளைக்கிழங்குப் பிரட்டல் ஒரு குடம் தண்ணி வாத்து ஒரு பூ பூத்தது இதுகளோட டப்பாங் கொட்டை 😎
-
அனைவருக்கும் வணக்கம்
உங்கள் பொறுப்பான பதிலிற்கு நன்றி மோகன் அண்ணா. இது யாழிணையத்துக்காகவே எழுதியது அதனைக் கேட்காமலே பதிய யாழிணையத்துக்கு உரிமையுண்டு. எப்போது எழுதினேனென தேடிப்பார்த்தபோது கிடைக்கவில்லை. அதனால் சிறிது வருத்தத்துக்குள்ளானேன். என்னுடைய தவறான புரிதலுக்கு மனம்விழைந்து வருந்துகின்றேன்!
-
அனைவருக்கும் வணக்கம்
யாழ் களத்தின் முகப்பில் பதிந்திருக்கும் தலைவர் பற்றிய அஞ்சலிக் கவிதை முற்றுமுழுவதும் எனக்குச் சொந்தமானது. இதை யாழ் இணையத்துக்காக 2010 மே அல்லது நவம்பரில் எழுதியிருந்தேன். எனது மூலப் பதிவினை யாழ்களம் வேண்டுமென்றே அகற்றிவிட்டிருக்கின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்தத் திரியிலும் திண்ணையிலும் தனிமடலிலும் வாலி வாழவேண்டும் என நினைந்து வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நெகிழ்ந்த நன்றி!
-
கேர்ணல் கிட்டு.. மறந்த தாயகமும்.. மறக்காத புகலிடமும்.
ஒருவேளை கார்ணல் கிட்டு 80களின் நடுப்பகுதியில் செய்த சகோதரப் பகுகொலைகள் காரணமாக இருக்கலாம். எனக்கு இன்னும் நினைவிருக்கு எங்கள் வீடு சுண்டிக்குளி விதானையார் வீதியில் இருந்தது, அப்போது எனக்கு முன்று வயது, யாழ் ஓல்ட் பார்க் வீதியில் டெலோவினரின் வான் ஒன்றிற்குள் குண்டு வைத்து தமிழர்களின் இரத்தமும் சதையும் மரங்களிலும் சுவர்களிலும் சிதறிக்கிடந்த காட்சி. அப்போது அதை புரிந்துகொள்ள முடியவில்லையாயினும் பின்னாட்களில் அந்தச் சகோதரப்படுகொலைகளைப் புரிந்துகொண்டேன்.
-
கருத்து படங்கள்
ஹசந்த விஜேநாயக்க சிறப்பாக (தமிழ் + சிங்கள) மகிந்த அணியினரின் செயற்பாட்டை கேலிச்சித்திரமாகத் தந்திருக்கின்றார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
happy birthday bro. nizhali
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக மீட்பெனும் வேள்வித் தீயில் தம் இன்னுயிரை ஈந்த போராளிகள் அனைவருக்கும் வீரவணக்கம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிலபேரிண்ட கதையைப் பார்த்தால் நாங்கள் திண்ணையைக் களவெடுத்த மாதிரியல்லே கிடக்குது!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணன் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்து PTT!
-
பெயர் மாற்றங்கள்.
முடிந்தால் வாலி என்று மட்டும் மாற்றிவிடுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயிக்கு எனது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
நான் குளித்துச் சுத்தமாகவில்லை என்றால், அடுத்த வீட்டுக்காரனும் குளிக்காமல் அசுத்தமாகத்தானே இருக்கிறான்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
கற்பனைகளில் கதைபுனைந்தால் அகில இந்திய விருதுகளுக்கு அனுப்பலாம்!