Everything posted by குமாரசாமி
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சனாவை நான் எங்கும் குறை சொல்லவில்லையே?
-
தாய்லாந்தின் தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு- தேநீர் கோப்பையில் சயனைட்
இனியும் மலிஞ்ச சாப்பாடு/மசாஜ் எண்டு ரிக்கெட் எடுத்து தாய்லாந்துக்கு போவ..?
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
உங்கள் பேரனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்.☘️
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அப்பன் நீங்களோ நானோ அரசியல்வாதிகளை சாடுவோம்.குற்றம் சாட்டுவோம்.உலக அரசியல்வாதிகளின் கொள்கைகளை கூட விமர்சிப்போம். அது எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி.... ஆனால் நாம் விமர்சிக்கும் அரசியல் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்பதிற்கு பதிலாக எம்மை/தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிப்பவர்கள் தான் அதிகம்..
-
1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேற்றம் - யாழில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
ஐரோப்பிய நாடுகளில் வைத்தியர்கள் தாதிமார்களை பூரண கும்பம் வைத்து வரவேற்கின்றார்கள்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
என்னை விழா,மண்டப வரவேற்பாளர் என நினைத்திருப்பார்களோ? 😀
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
துணிஞ்ச கட்டையள்.😎 ஹோலுக்குள் வந்தது மட்டுமில்லாமல் போற வாற ஆக்களிட்டை குமாரசாமி எண்டவரை சந்திக்க வந்திருக்கிறம் எண்டு வேற விலாசம் குடுத்திருக்கினம். 😂 யாழ்கள குமாரசாமி எண்டால் என்ர மனிசி பிள்ளையளுக்கே தெரியாது எண்டது வேறை விசயம்.... குமாரசாமி எண்டவுடனை மண்டைக்குள்ள ஒண்டுமில்லாதவன் எண்டு நினைச்சால் நியாயம் இருக்கு...ஆனால் குத்தியன் குமாரசாமிக்கு மண்டைக்கு வெளியிலையும் ஒண்டுமிருக்காது எண்டு நினைச்சு இரண்டு பேரும் ஜாம் ஜாம் வந்திருக்கினம். 🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எனக்கு கைத்தொலைபேசியை கையுடன் கொண்டு திரிவது அல்லது இருப்பில் செருகிக்கொண்டு திரிவதெல்லாம் விருப்பமில்லை. தேவையான போது பாவிக்க வேண்டும் அதுதான் என் கொள்கை. ஆனாலும் அவசர நேரங்களில் கையுடன் கொண்டு திரிவதில் தப்பில்லை என நான் நினைக்கின்றேன். சரி...விசயத்துக்கு வருவம். பலகாரம் எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடனும் நான் ரெலிபோனை பார்க்கவேயில்லை. நினையா பிரகாரமாக மண்டப சுற்றாடலை நிமிர்ந்து பார்த்த போது நான் சந்திக்கவிருந்த இருவரும் மண்டபத்திற்குள்ளேயே வந்து நின்றார்கள்!!!!!. எனது மனதில் இவர்கள் வந்ததும் ரெலிபோன் அடிப்பார்கள். காருக்குள்ளேயே இருப்பார்கள் கண்டுபிடிக்க கார் நம்பரை சொல்வார்கள் என நினைத்திருந்தேன்.காரணம் என்னை அவர்களுக்கு தெரியாது அல்லவா?மண்டபத்துக்குள் எப்படி என்னை அடையாளம் காண்பார்கள் என்ற நினைப்பில் இருந்தேன். ஆனால் இருவரின் படங்களையும் ஏற்கனவே ஓரிடத்தில் பார்த்து படங்களை சேகரித்து வைத்திருந்தேன். அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களை சந்தித்த தருணத்தில் என் தொலைபேசியை பார்த்த பின்னர் தான் தெரிந்தது சிறித்தம்பியர் என்னுடன் தொடர்புகொள்ள இரு தடைவைகள் எனக்கு ரெலிபோன் எடுத்துள்ளார் என தெரிய வந்திருந்தது. இவ்வளவு சொல்லியும்,அவதானமாக இருந்தும் அழைப்பை தவற விட்டது அந்த நேரத்திலும் சிறு மன இறுக்கத்தை கொடுத்திருந்தது. இருந்தாலும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் மண்டபத்திற்கு வந்ததில் எனக்கு அதிரடி மகிழ்சியாக இருந்தது. உடனே எழும்பி ஓடிப்போய் இருவரையும் வணக்கம் வாங்கோ என வரவேற்று கைகுலாவி மேசை கதிரைகளை காட்டி அமர வைத்தேன்.பாஞ்ச் ஐயா எதையுமே கேட்டுக்கொள்ளாமல் நாங்கள் குமாரசாமி என்பவரை தேடி வந்திருக்கின்றோம் என என்னிடமே கேட்டார்.சிறித்தம்பியர் என்னை யாரென்று ஊகித்தாரா என தெரியவில்லை. ஆனாலும் இருவரும் எனக்கு முன்னாலேயே என்னை தேடுகின்றார்கள் என அவர்கள் கண்களிலையே தெரிந்து கொண்டேன். நானோ நான் தான் யாழ்கள குமாரசாமி என பாஞ்ச் ஐயாவிடம் சொல்லி விட்டு சிறித்தம்பியிடம் என் குரல் உங்களுக்கு தெரிந்திருக்கும்...கண்டுபிசிருப்பியள் என தொடர அவர்கள் சுதாகரித்து விட்டார்கள் என தெரிந்தது. என்றாலும் பாஞ்ச் ஐயாவின் கண்களில் பல்லாயிரம் கேள்விக்குறிகள் ஓடியதை கவனிக்க முடிந்தது.சிறித்தம்பியர் என் குரல் மூலம் என்னை யாழ்கள குமாரசாமிதான் என உறுதிப்படுத்தி விட்டாரார் என நினைக்கிறேன். நீங்கள் ரெலிபோன் அடிச்சனீங்களோ என நான் சிறித்தம்பியரை கேட்டபடி தொலைபேசியை நோண்டிய போது சிறித்தம்பியர் இரண்டு தரம் என்னை தேடி ரெலிபோன் அடித்திருந்து பதிலளிக்காமல் விட்டதிற்கு என்னை நானே நொந்து கொண்டிருந்த தருணம்...... பாஞ்ச் ஐயா நான் யாழ்கள் குமாரசாமி எண்டால் உப்புடி இருப்பியள் எண்டு எதிர்பார்க்கேல்லை.....தலை முழுக்க மயிர் எண்டு தொடர்ந்தார்....இளமை..... நான் இப்ப என்ன நினைக்கிறன் எண்டால் யாழ்கள குமாரசாமி எண்டால் ஓமக்குச்சி நாராயணன் கொம்பனி வெவல்லை கற்பனை பண்ணி வைச்சிருக்கிறார் எண்டு....🤣
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
டாக்குத்தர் அர்ச்சுனா தான் பாக்க வந்த வேலையை சிவனே எண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம். கனக்க கதைக்க வெளிக்கிட்டு இப்ப டக்ளஸ் தேவானந்த அரசியலில் வந்து நிக்கிறார்.
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
நம்ம ஆளுங்கடா இவனுங்க..🤣 😎
- உலகில் பாம்புகளே இல்லையென்றால் என்ன நடக்கும்?
-
இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!
2009க்கு பிறகு சொரிலங்காவுக்கு வாற நன்கொடையள்,உதவித்தொகையள்,படி அளப்புகள் எல்லாம் நிண்டுட்டுது எல்லோ? சுனாமியும் இல்லை,சூறாவளியும் இல்லை,வெள்ளமும் இல்லை,போரும் இல்லை. இனி எப்பிடி வெளிநாட்டு காசுவரும்? அதுதான் இரத்தினக்கல்லு நிலநடுக்க பேய்ப்பட்டங்கள்...😂
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
மேற்குலக நாடுகளில் கள்ள வேலைக்கு பஞ்சமிருக்காது. ஆனால் ஒண்டு சட்டம் ஆபிரிக்க அடிமைச் சட்டம்.
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
பிளட் இயக்கம் மற்றும் உமாமகேஸ்வரன் பற்றி ஒரு ஊடக பேட்டியில் யாழ்கள உறவு @arjun அவர்களே நல்லமாதிரியாக சொல்லவில்லை.
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
பாராட்டுக்கள் தர்சன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் ஏதோ ஒரு வழியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை தவிர.....☹️
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அங்கால கமலா ஹாரிஸ் இங்கால உஷா சில்லுக்குரி நடுவால சுந்தர் பிச்சை.....ஒரே இண்டியன் கலக்கல் தான் போங்க...🤣
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
உண்மைதான்... ஜேர்மனியிலும் ட்ரம்பை எவ்வளவு கழுவி ஊத்த முடியுமோ அவ்வளவிற்கு கழுவி ஊத்திய ஊடகங்கள் ஒருசில அரசியல்வாதிகள் எல்லாம் இப்பவே டொனால்ட் ரம்ப் அவர்களை "ஐயா" போட வெளிக்கிட்டு விட்டனர். சிஎன்என் ஊடகமும் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என்ற பாணியில் ஊத ஆரம்பித்து விட்டனர்.
-
கோப்பா அமெரிக்கா சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஆர்ஜன்டீனா
கோப்பாய் அமெரிக்கா....😂
-
முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்"
வள்ளியம்மையார் வந்து சேர்ந்தது காந்தர்வ திருமணத்தால் தானே? 🤣
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
உதென்ன பெரிய சான்விச் மசாஜ்....நாங்கள் கம்பெர்க்கர்,பிக் மைக் மசாஜ் எல்லாத்துக்கும் போயிருக்கிறம் தெரியுமே? 😎
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே? ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂 நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
முளைச்சு மூண்டு இலை விடேல்லை அதுக்கிடையிலை கேள் பிரண்ட் வைச்சிருக்கிறாராம் 😂
-
ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை.. துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள் பட்டியல்
ஜனநாயக சுதந்திரம் எண்டால் கண்டபடி துவக்கால சுடுறதும் அதிலை ஒரு அங்கம் கண்டியளோ.....🤣
-
யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்
ஜேர்மனியில் தற்போது ஏராளமான தென்னிந்தியர்கள் வாழ்கின்றார்கள். அதில் தமிழ்நாட்டு தமிழர்களும் அடங்கும். இப்போது ஜேர்மனியில் உள்ள இந்து கோவில்களிலும் சரி,தமிழ் பாடசாலைகளிலும் சரி இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.. இவர்களுக்கு ஈழத்தமிழர்களின் பண்பாடு பிடித்திருக்கின்றது. அதிலும் ஆங்கில கலப்பில்லாத தமிழ் பேச்சு வழக்குகளை மெச்சுகின்றனர். சுத்த தமிழுக்காகவே தமிழ்பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர். புலம்பெயர்ந்து வந்தும் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபிக்கின்றனர்.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்று பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிக்கட்சி தலைவராக அமர்ந்த பெருமை அன்பு அமிர் அவர்களையே சாரும். அந்த அரசியல் பலத்தை வைத்து எதுவுமே செய்யாத மனிதர். அது மட்டுமல்லாமல் சிங்கள தலைவர்களை சந்திக்க பின் கதவால் செல்லும் நற்பழக்கைத்தை ஈழமண்ணில் அறிமுகப்படுத்தியவரும் சாட்சாத் அன்பு அமிர் அவர்கள் தான் என்பதை நினைவு கூர்கின்றேன்.🤪