Everything posted by குமாரசாமி
-
பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் - சி.வி.விக்னேஸ்வரன்
நான் ஒரு காலத்தில் நல்லது நடக்கலாம் என நினைத்து இவரையும் வரவேற்றவன். ஆனால் இப்போது இவர்களைப் போன்றவர்கள் ஏன் அரசியலுக்கு வருகின்றார்கள் என திட்டி தீர்க்கின்றேன் பொழுது போகவில்லை என்றால் வாடி வீட்டில் தங்குபவர்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வந்து தமிழின வாழ்க்கையில் கைவைத்து கழுத்தறுக்கின்றீர்கள்?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அதிகாலை எனக்கு முதலே குடும்பம் எழும்பி ஹொட்டல் அறையை மேக்கப் றூம் மாதிரியே மாற்றிவிட்டிருந்தார்கள்...ஒரு மாதிரி தடக்குப்பட்டு எழுந்து ஏதாவது நல்ல செய்தி தேடி போனை நோண்டிய போது இப்படியான செய்தி ஒன்று என்னைப்பார்த்து புன்னைகை செய்தது.. அதை பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இவர் எதற்கு என்னுடன் அனுமதி கேட்கின்றார் உரிமையுடன் வரவேண்டியது தானே என மனதுக்குள் நினைத்துக்கொண்டு பதில் செய்தியை அனுப்பினேன். தொலைபேசியில் இப்படியே பல சம்பாசணைகள் போய்க்கொண்டிருக்கும் போதே நானும் குளித்து முழுகி கும்பகோண பட்டு உடுத்தி கலாதியாக வெளிக்கிட்டு விட்டேன்.🤪 அப்படியே .....அதே கோலத்துடன் விடுதியின் காலை உணவு பகுதிக்கு சென்றேன். முதலில் எனக்கு காலை சாப்பாடு சாப்பிடும் நோக்கமில்லை(காரணம் நாள் முழுக்க பானை வண்டியை எக்கிக்கொண்டு நிக்க வேண்டிய கட்டாயம் கண்டியளோ சாப்பிட்டால் அது ஏலாது😎). இருந்தாலும் மனைவி இதுக்கெல்லாம் சேர்த்துதான் காசு கட்டினனாங்களப்பா..... கட்டின காசை வீணாக்காமல் போய் சாப்பிட்டிட்டு வாங்கோப்பா எண்டு எண்டு சொல்லி வாய் மூடக்கு முதல்...வரேக்கை எங்களுக்கும் கிடக்கிறதிலை ஏதாவது கட்டிக்கொண்டு வாங்கோப்பா என அறிவுறுத்தப்பட்டது....😂 மறு வார்த்தை பேசாமல் இந்த பாடலை மனதுக்குள் நினைத்தபடி.... மாடி படிகளை நோக்கி பெண்கள் சாறியை தூக்கிக்கொண்டு நடப்பது போல் நானும் பட்டு வேட்டியை தூக்கிக்கொண்டு நகர்ந்தேன்.😊
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அடேய் அது நானில்லை.....அந்தப்படம் பக்கத்து வீட்டுக்காரன்ர.....நான் கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அவர் சாரம் சம்பந்தப்பட்ட திரியை யாழ்களத்தில் தேடினேன் காணவில்லை. லிங்க் பிளீஸ் 😎
-
யாழ். மாவட்டத்தில் இஞ்சி விலை உச்சம்!
இஞ்சி அத்தியாவசிய உணவா?
-
பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின்
யூதர்களை கட்டுப்படுத்தினாலே உலகில் பல்லாயிரம் பிரச்சனைகள் குறையலாம்.
-
28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள்
உங்கள் சகோதரிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். மணமேடையிலேயே வைத்து திருமண பதிவும் நடந்த நிகழ்வுகளை நான் பார்த்திருக்கின்றேன்.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இலங்கை தமிழ் மக்கள் தம் நலன் வேண்டி மாறி மாறித்தான் வாக்களித்து வந்துள்ளார்கள். தனியே ஒரே பெரும்பான்மை இன கட்சிக்கு வாக்களித்த வரலாறு இன்றுவரை இல்லை. அந்த கட்சிக்கு வாக்களித்தால் ஏதாவது பலன் உண்டா அல்லது இந்த கட்சிக்கு வாக்களித்தால் பலன்கள் வருமா என சிந்தித்துத்தான் வாக்களித்து வந்துள்ளார்கள். அப்படியிருந்தும் தமிழினத்திற்கு கிடைத்த பரிசு இரத்தக்களரி மட்டுமே.
-
இந்தப் பீரங்கிக் குண்டு
வலி சொல்லும் கவிதை வரிகள். நன்றி தியா 👍🏼
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
என் வழக்கப்படி எதையுமே பெரிசாக யோசிக்காமல் மூட்டை முடிச்சுகளுடன் வைபவம் நடக்கவிருக்கும் நகரை நோக்கி பயணித்தேன். கிட்டத்தட்ட ஐந்தரை ஆறு மணித்தியாலங்கள் கடந்து தங்கவிருக்கும் விடுதியை வந்தடைந்தோம். வந்தவுடன் முதல் வேலையாக நாங்கள் தங்கியிருக்கும் விடுதியின் முகவரியை கூகிள் மூலம் சிறித்தம்பியருக்கு அறிவித்து விட்டேன். இப்போது கூட சந்திப்பது பற்றி எவ்வித அசுமாத்தங்களும் அறவே இல்லை. 🤣 ஆரம்பத்தில் நூற்றுக்கு நூறு வீதம் சந்திப்போம் என்ற நம்பிக்கை மாறி 50/50 என்ற நிலைக்கு இறங்கி விட்டேன்.இருந்தாலும் கார் தரிப்பிடத்திலாவது அவசர அவசரமாகவது சந்தித்து முகத்தை பார்த்து ஒரு வணக்கமாவது சொல்லிவிடலாம் என்ற நப்பாசை அடி மனதில் உருண்டோட..... நாளை காலை நேரத்துடன் எழும்பிவிட வேண்டும் என்ற கட்டாயத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.😴
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
தனிய போத்தில்களை மட்டும் பாக்காமல் அங்காலை இஞ்சாலை திரும்பி பாக்க வேணும் கண்டியளோ பழக்கதோசம் விடுதில்லை போல...
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
படங்கள் மெல்ல மெல்ல இணைக்கப்படூம். அமைதி காக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
-
மாவை- சிறீதரன் இடையே கருத்து முரண்பாடுகளாம்!
உவையின்ர புடுங்குப்பாட்ட தீர்த்து வைக்க எரிக் சொல்கைம்ட்ட கேட்டுப்பாப்பமோ 🤣
-
யாழில் வைத்தியசாலைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் : கடமையிலிருந்த உத்தியோகத்தர் மீது தாக்குதல்
ஆஸ்பத்திரியிலையே இவர்கள் அட்டகாசம் இந்தளவிற்கு எண்டால்..... மிச்ச இடங்களிலை எப்பிடி இருப்பார்கள் எண்டு ஒருக்கால் கூட்டிக்கழிச்சு பாருங்கோ...
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரே ஜெகஜோதியாய் ஜொலிச்சுக்கொண்டிருந்தன் 🤣 உள்ள சனமெல்லாம் என்னை கண் வெட்டாமல் பார்த்தபடியே.....எண்டால் யோசிச்சு பாருங்கோவன் 😁
-
யாழில் வைத்தியசாலைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் : கடமையிலிருந்த உத்தியோகத்தர் மீது தாக்குதல்
- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த நாம் உமக்கு என்ன தீங்கு செய்தோம் 🤣- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இந்தாளோடை ஒரே ரென்ஞ்சனப்பா..... மனிசன் படம் பாக்கிறதிலையே குறியாய் இருக்குது... பட உபயம் சிறித்தம்பி.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வேறு வேலை அவசரத்தால் சிறித்தம்பியருக்கு எவ்வித பதிலும் உடனடியாக அறிவிக்கவில்லை. அடுத்த நாள் சாப்பாடுகள் ஏதும் தேவையில்லை என கூறி ஏனைய விபரங்களை தொலைபேசியில் நேரடியாக கதைக்கலாம் என செய்தி அனுப்பினேன்.தொலைபேசி கதைப்பதாயின் மிஸ் கோல் போடுங்கோ .நானே உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் எனவும் அறிவித்து விட்டேன். அவரும் நான் இப்போது தெரப்பி செய்யப்போகின்றேன். பின்னர் மதியம் 12.30 தொடர்பு கொள்கின்றேன் என செய்தி அனுப்பினாலும்.... சிங்கம்🦁 11.45 மணிக்கே என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டார். அப்போது பல விஞ்ஞான/ அஞ்ஞான அரசியல் நிகழ்வுகளை நாங்கள் எங்களுக்குள் அலசி ஆராய்ந்த பின்னரும் சந்திப்பது பற்றி எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை🤣.ஏனென்றால் அப்படியான கொண்டாட்ட நிலவர அனுபவங்கள் எனக்கு அத்துப்படி.....- சிறுநீரகம் முதல் உமிழ்நீர் வரை உடலில் எங்கெல்லாம் கற்கள் உருவாகலாம்? அதனை தடுப்பது எப்படி?
இயம வேதனை நான் கிணத்து தண்ணியை பற்றி கதைக்கிறன்..... போத்தில் தண்ணிய இல்ல..... பெருசுக்கு விட்ட குறையாய் தொட்ட குறையாய் எப்ப பார் அதே நினைப்பு- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உவருக்கு பேய் பிசாசு என்னத்தையும் ஏவி விடத்தான் இருக்கு.....💀- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நாட்கள் நெருங்கியதும்..... சிறித்தம்பியருக்கு நாங்கள் வருகின்றோம் என வாட்ஸ் அப் மூலம் அறிவித்தேன். அதனுடன் நாங்கள் புறப்படும் விவரத்தையும் யார் இன்னார் என சகல விபரங்களையும் எவ்வித ஒளிவுமறைவில்லாமலும் அறிவித்தேன்.என்ன நேரம் புறப்படுகின்றேன் எனும் விபரம் உட்பட.... அப்போதும் நாம் சந்திப்பதாயின் உங்கள் உடல் நலங்கள் எப்படி? உங்கள் நேரங்கள் எப்படி? நேரம் இருக்கின்றதா என விலாவாரியாக கேட்டு தெரிந்து கொண்டேன்.ஏனென்றால் நாம் எல்லோரும் அவசர உலகத்தில் வாழ்கின்றோம் அல்லவா...😁 இரவு இன்ன நேரத்திற்கு உங்கள் நகரத்திற்கு நாங்கள் வருகின்றோம் என்றதும் உடனே மறு வார்த்தைகள் இல்லாமல் எத்தனை பேர் வருகின்றீர்கள் சமைக்கின்றோம் என பதில் தகவல் அனுப்பினார்❤️.நானோ மகிழ்சியில் என்ன சொல்வதென தெரியாமல் என் மனைவியிடம் தெரிவித்தேன். தங்கும் விடுதியில் சகல வசதிகளுடனும் தான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என மனைவி சொன்ன பின்னர் தான் எல்லா விபரங்களையும் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
போராட்ட/ யுத்தகாலத்திற்கு முன்னரும் இப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன. இப்படி பெரும்பான்மையாக ஆர்ப்பாட்டமாக இல்லாமல் எல்லாமே நடந்தேறின. அதை எவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அன்றைய காலங்களில் ஊடக வெளிச்சங்களும் இல்லை. தமிழ் மக்களும் அதற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன். நான் மட்டக்களப்பில் இருந்த போது வெசாக் பண்டிகைகளுக்கு சென்றிருக்கின்றேன்.புதினம் பார்க்க சென்றிருக்கின்றேன். தீன் பண்டங்கள் வாங்கி உண்டிருக்கின்றேன்.வித்தியாசமான உணவுகள்.வித்தியாசமான சுவைகள். தமிழ் கலாச்சாரத்தை விட வித்தியாசமான உடை நடை பாவனை மக்கள் கண்ணுக்கு கவர்ச்சி என பலவற்றை சொல்லலாம். ஆனால் ஒன்றுமட்டும் சொல்வேன்.நான் அங்கு சென்று வந்ததால் என் இன விடுதலையும் அல்லது தமிழ் இன பற்றும் தமிழ் உணர்ச்சியும் எள்ளளவும் குறையவே இல்லை. எனினும் சிங்கள பேரினவாதிகள் இப்படியான சம்பவங்களை அரசியலாக்கினால் நாமும் அரசியலாக்குவதில் தவறில்லை. அதே நேரம் எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இல்லை என்றால் அங்கே எமது அரசியல்வாதிகளின் தவறே ஒழிய மக்கள் தவறில்லை.- சிறுநீரகம் முதல் உமிழ்நீர் வரை உடலில் எங்கெல்லாம் கற்கள் உருவாகலாம்? அதனை தடுப்பது எப்படி?
நான் இதுவரைக்கும் மூன்று தடவைகள் சிறுநீரக கற்களைஅகற்றி விட்டேன். அன்று தொடக்கம் நிறைய தண்ணீர் குடிக்கச்சொல்கின்றார்கள்.அநேகமாக 3 லீட்டர் வரை குடிக்கின்றேன். அதை சாப்பிடாத இதை சாப்பிடாத என்றார்கள். சாப்பிடாமல் தவிர்க்கின்றேன். சிறு நீரை அடக்கக்கூடாது என்கிறார்கள். அதையும் செய்கின்றேன். இருந்தாலும்....கற்கள் உருவாவதை தடுக்க முடியவில்லை.😎 எனக்கு டவுட்....நான் விழுங்கித்தள்ளுற குளிசையில தான்.🤣- பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா?
அது மட்டும் தான் காரணமாக இருக்கும் எண்டுறியள்? 🧐 - குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.