Everything posted by குமாரசாமி
-
பாக்குவெட்டி
பாக்கு வெட்டியாலை பிலாக்கொட்டையும் வெட்டலாம். 😂
-
இரண்டும் முரண்பட்டுக் கொண்டன.
இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன. நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை. மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன. இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை. இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும் சண்டைகளும் கூட நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி/விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம். உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை. உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம் மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால். எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம் அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம் விட்டுக்கொடுத்து வாழ்வோம் உறவு செழிக்கும் அன்பு தழைக்கும். 🙏 முகநூலிருந்து......
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மறக்கவில்லை. ஒரு வழக்கிற்கு சாட்சி சொல்லப்போனால் சம்பவத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய கட்டாயம் வரும். நான் சென்ற மாதமே சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகர முடியாது. நீங்கள் முதல் சொன்னது வேறை திரி.....இது வேறை திரி 🤣
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
அந்தக் காலத்தில் எம்மவர்கள் தராசு வைத்து நிறுத்து அளந்து சாப்பிடவில்லை.எரிச்சு பொரிச்சு சாப்பிடவில்லை, தினசரி மச்சம் மாமிசம் சாப்பிடவில்லை. கண்ட கண்ட உப்புகள் சுவையூட்டிகள் பாவிக்கவில்லை அவித்த, ஆவியில் வேக வைத்த சாப்பாடுகளையே உண்டனர். அதனால் இறுக்க களிசான் போட்டுக்கொண்டு ஓடவுமில்லை.ஜிம்முக்கு போய் கண்ட களிசறை பானங்களை குடித்து சிக்ஸ்பேக் வைக்கவுமில்லை 😂 புதிய தொழில்நுட்ப முறையில் வேலை செய்து வாழ்ந்தாலும் உணவு விடயத்தில் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் இன்றியமையாதது.😎
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமான் என்றவுடன் துருவுத்துருவி ஆராய்ச்சி செய்து மணியடிக்கும் தாங்கள் நாடக மேடைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திராவிட கட்சிகளினது சொத்து சுகங்களின் சேகரிப்புகளை கண்டும் காணாமலும் இருப்பது ஏனோ? 😄
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இரண்டாவதாக இருந்து என்ன பயன்? 😂 சாதி எனும் கொடூரனை தலையில் வைத்துக்கொண்டு நூறுவருடம் பின்னோக்கித்தானே இருக்கின்றார்கள்.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
ஒரு சில வருடங்களுக்கு முன் அணுமின் நிலையங்களை இழுத்து மூடும்போது பத்திரிகையில் வந்த செய்தி அது. மற்றும் படி யாமறியோம் பராபரமே 😂
-
இல்ல வடிவங்கள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று நடைபெற்றபோது இல்லங்களின் அலங்காரங்கள்...
- இல்ல வடிவங்கள்.
-
இல்ல வடிவங்கள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று நடைபெற்றபோது இல்லங்களின் அலங்காரங்கள்...
-
இல்ல வடிவங்கள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று நடைபெற்றபோது இல்லங்களின் அலங்காரங்கள்...
- யாழ் நூலகம்.
-
நானும் கவிதாயினியும்.....💕
கொல்லன் உலை போலக் கொதிக்குதடி என் வயிறு நில்லென்று சொன்னால் நிலை நிறுத்த சுடுவதில்லை நில்லென்று சொல்லியெல்லோ நிலை நிறுத்த வல்லார்குக் கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா குடியோடிப் போகானோ..
-
ஒரு சித்தர் பாடல்
- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
ஜேர்மனியில் எங்கு பார்த்தாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள் சுற்றிக்கொண்டிருப்பதை காணலாம். அத விட வெட்ட வெளியெங்கும் சோலார் தகடுகள் காட்சியளிக்கும். இருந்தாலும் மின்சார கட்டணம் குறைவதற்கு பதிலாக 5 மடங்கு விலை கூடியிருக்கின்றது. உலகத்திலேயே மிக பாதுகாப்பான அணுமின்சார நிலையங்களை மூடி விட்டு உலக சூழல் சுற்றாடல் சுகாதாரம் என மக்களை வாட்டி எடுக்கின்றார்கள்.- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
எமது ஊர்களில் மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். தஸ்சு புஸ்சு ஆபீஸர்மார் நான் சொன்ன கருத்து பொருந்தாது. நான் அறிய / நான் உட்பட மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு தான் வளர்ந்தோம்.நவநாகரீக உணவுகள் உண்ணவில்லை. நவநாகரீக நோய்கள் வரவில்லை. பசிக்காமல் உண்ணவில்லை. ஆனால் பசியாற உண்டோம்.உடல் களைக்க வேலை செய்தோம். வியர்வை மணக்க வேலை செய்தோம். நோய்கள் அண்டவில்லை.பசுமதியை கண்டறியோம். வெள்ளை பச்சை அரியை கண்டால் விலகி ஓடினோம். ஆனால் இன்று.....? இன்றைய மானிடர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டு ஐயோ குத்துது குடையுது என்றால் 24 மணி நேரமும் கதவை திறந்து வைத்திருப்பான் தானே அந்த வைத்தியன்....😎- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
ஆஸ்பத்திரியால வெளியில வரேக்க தள்ளு வண்டிலிலை வைச்சு தள்ளிக்கொண்டு வருவாங்கள். 😂 அதை பாத்திட்டு அங்கையிருக்கிற அத்தனை தெய்யோக்களும் சரண்டர் 😄- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எழுதிக்கொடுத்ததையே தடக்குப்பட்டு தடக்குப்பட்டு வாசிப்பவர்கள். ஆதாரமாக பல காணொளிகள் உள்ளது.அதை இங்கே இணைக்கமுடியாது. ஏனெனில் அவை யூரியுப் காணொளிகள். அந்த ஆதாரம் இங்கே செல்லாது.😂 கலைஞர் கருணாநிதியின் தமிழாற்றலும் தமிழறிவும் தமிழ் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அவர் பிள்ளை மற்றும் பேரப்பிள்ளையிடம் அறவே இல்லாமல் போனது அந்த கட்சியின் துர்ப்பாக்கியமே.திராவிட கட்சிகள் கொள்கையால் வளரவில்லை. மாறாக அன்றைய திராவிட கட்சிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சாற்றல்களும் மக்களை கவரும் வீரவசனங்களும் சினிமா கவர்ச்சியுமே ஒழிய வேறொன்றுமில்லை. 👈🏽 திராவிடம் திராவிடம் என கூறிக்கொண்டு சாதிவாரியான தொகுதி பங்கீடும் சாமிகளிடம் ஆசி பெறுவதும், வாக்குகளுக்காக பணத்தை வாரி இறைப்பதும் எந்த கோட்பாட்டுக்குள் வருமென எனக்கு தெரியவில்லை.😎- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எனக்கும் அதுதான் விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகின்றது. துள்ளி குதிப்பவர்கள் சிங்களத்தின் அஜாரகங்களை பற்றி எந்த சந்தர்பத்திலும் கருத்து சொல்லாதவர்கள். நன்றாக கவனித்து பாருங்கள். 🤣- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
பாத்தியளே சிங்கன் தன்ரை விளையட்டை காட்ட தொடங்கீட்டான்.....பின் புலத்திலை பயங்கர ஐடியா ஏதோ இருக்கு 😂- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எம் ஜிஆர் , கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன் ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ?- அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும். - சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
Important Information
By using this site, you agree to our Terms of Use.