Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. அவலங்கள் நடந்து பத்து வருங்களுக்கு மேலாகி விட்டுது. இப்போது புதுக்குரல் வருகின்றது.சம்பந்தன் இருந்திருந்தால் இந்த அறிக்கையை வைத்தே இன்னும் அரசியல் மழையில் நனைந்து வாழ்ந்திருப்பார். 🤣
  2. ரஷ்யாவிற்கு வெற்றி நிச்சயம்.😎 தலைவன் ரம்பிற்கு நோபல் பரிசு நிச்சயம்.😀 மேற்குலகு ரஷ்யா மீது 15,20 வருடங்களாக பொருளாதார தடைகள் விதித்தும் பஞ்சத்தில் வாடவும் இல்லை வங்குரோத்து நிலைக்கும் செல்லவில்லை. மாறாக ஐரோப்பிய மக்கள் தங்கள் வாழ்க்கை செலவிற்கு அதிகம் பணம் ஒதுக்கியதுதான் மிச்சம். ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.ரம்ப்-புட்டின் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால்........? எனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பலத்த தோல்வியாக வரும். ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். ஆனால் ரஷ்யாவின் எல்லை நாடுகளை எந்த கொம்பனாலும் தன் கைக்குள் வைத்திருக்க முடியாது. இதுதான் இன்றைய பிராந்திய அரசியல்.
  3. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே. ஜேர்மன் அரசு சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான் மக்களை அதிகமாக உள்வாங்கும் தருணத்தில் வந்த பிரச்சனைகளை வைத்தே தன்னை சுதாகரித்திருக்க வேண்டும்.இனவாத கட்சிகளுக்கு பல சந்தர்ப்பங்களை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். அகதிகளாக வந்தவர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. களவு,பாலியல் பிரச்சனை,கத்திக்குத்துகள், பாடசாலை மாணவர்களாக இருந்தும் அதே நாச வேலைகளை செய்து ஜமாய்த்து விட்டார்கள். அது ஜேர்மன் மக்களின் மனதில் அகதிகளாக வந்தவர்கள் கொடூரமானவர்கள் என பதிந்து விட்டது. இது இனவாதிகட்சிகளுக்கு வாய்ப்பாகவும் போய் விட்டது. இது இப்படியே போக உக்ரேன் அகதிகள். சொல்லி வேலையில்லை. கலவரம் இல்லாதவர்கள். தாங்களும் தங்கள் பாடும். என்ன ஒன்று வேலைக்கு போக மாட்டார்கள்.😋 இப்படியான நெருக்கங்கள் தலை மேல் பாரமாக இருக்கும் போது இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகம் இன்னும் தலையிடிகளை கொடுக்கலாம். வாக்கு அரசியலுக்காக அடக்கி வாசிக்கப்போகின்றார்கள் என நினைக்கின்றேன்.
  4. நீங்கள் சொல்வது உண்மைதான்.அன்று உங்களைப்போன்ற என்னைப்போன்ற சந்ததியினர்க்கு எந்த தொழில் நுட்பங்களும் இல்லாமல் இருந்த கிரகிப்பு தன்மை இன்றைய சந்ததியினர்களுக்கு இல்லை. கணணியோ கைத்தொலைபேசி இல்லாமல் எந்தவொரு செயல்களையும் செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள். இவர்கள் தான் அப்பா அம்மாவுக்கு ஒண்டும் தெரியாது என ஒரு பட்டத்தை மகுடமாக தலையில் தூக்கி வைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கின்றார்கள்.😃 வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்" அது அன்று...☝ இது இன்று...👇 சனத்தொகை கூடக்கூட வாகனங்கள் கூடும் வாகனங்கள் கூடக்கூட பெற்றொல் விலை கூடும் பெற்றோல் விலை கூடக்கூட சைக்கிள் கூடும் சைக்கிள் கூட ரோட்டுக்கள் சின்னனாகும் நடை பாதைகளும் பெருகும்.😂 இன்றைய சமுதாயத்தினர் சமாளித்து விடுவார்கள். என்னைப்போன்றவர்களோ " தம்பி நான் இந்த பெற்றோல் செட்டுக்கு முன்னால நிக்கிறம் வந்து கூட்டிக்கொண்டு போங்கோ எண்ட சிஷ்டம் கண்டியளோ 🤣
  5. அந்தக்காலங்கள் அளந்த வாழ்க்கை. எல்லோரும் எல்லாம் இருந்தது.அளவோடு உண்டார்கள். ஆனந்தமாய் வாழ்ந்தார்கள்.சுற்றம் சுற்றாடால் பாதிக்கும் வகையில் எதையுமே உருவாக்கவில்லை. இன்றைய காலம் எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எல்லோரும் புத்திசாலிகள். நனைச்சு சுமக்கின்றார்கள்.அவ்வளவுதான். 😂
  6. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் திருவிழாக்கள் என்பது ஒரு களியாட்டம் மாதிரி. இதை விட்டால் அந்த நாட்டு மக்களுக்கு என்ன ஒன்று கூடல் இருக்கின்றது? பிரிந்த உறவுகள் ,குடும்ப உறவுகள் ஒன்று கூடலாகவும் இதை பார்க்கலாம்.ஒவ்வொரு நாடுகளுக்கும் களியாட்டங்கள் வேறுபடும்.ஐரோப்பிய நாடுகளில் இப்படியான கொண்டாட்டங்கள் மத ரீதியாக இல்லாமல் மது தளம்ப ஊர் கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கேயும் கள்ளர் காடையர் ஆக்கினைகள் நிறைய இருக்கும்.காவல் துறையும் அளவிற்கதிகமாக குவிக்கப்பட்டிருப்பர். அப்படியான கொண்டாட்டங்களை யாரும் குறை சொல்வதில்லை. இந்த உலகு களவில்லாத உலகமா? இல்லையே!
  7. மாதம் மும்மாரி என சான்றோர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.அதுதான் இதுவாக இருக்கலாம்.😁
  8. ஓமோம் இவர் பெரிய கண்டுபிடிப்பு கொலம்பஸ்சு....😃 ஸ்ரீலங்கா இந்தியாவின்ர கட்டுப்பாட்டில எண்டு இப்பதான் கண்டு பிடிச்சாராக்கும்.😉 ஸ்ரீலங்கா எண்டால் சீனாவே எட்டத்த நிக்கிறதாய் ஒரு கேள்வி😎
  9. ஒரு காலத்தில் உண்ணும் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றோ உண்ணும் உணவிற்காக நடைப்பயிற்சியும், ஜிம்மிற்கும் போக வேண்டி இருக்கின்றது.ஜிம்மிற்கு போனாலும் ஒரு வகை புரோட்டின் பானம் அருந்த வேண்டும் என்கிறார்கள். நல்ல நவீன உலகம் ஐயா இது 😂
  10. புதிய தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வந்த பின்னர் நினைவுத்திறனும் தனி ஆற்றலும் மங்கி விட்டது. இனி வரும் காலங்களில் காய்கறி வாங்க சந்தைக்கு போய் திரும்பி வீட்டுக்கு வர கூகிள் வழிகாட்டி தேவைப்படலாம்.😄
  11. சிங்களத்துடன் கை கோர்த்தால் அதுவும் சாத்தியம். சும்மா பகிடிக்கு 😂 தமிழர்களுக்கு பிரச்சனை வரும்போது தமக்கென தனி அலகு கேட்டும்,தமக்கும் அழிவுகள் இருக்கின்றது என போராடும் முஸ்லீம்கள் இருக்கும் வரைக்கும் சிங்களத்துடன் நட்புறவு வைத்திருக்க வேண்டும். சிங்களவர்களுக்கும் இலங்கை முஸ்லீம்களைப்பற்றி நன்றாகவே தெரியும்.பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.🤣
  12. தானாக வந்த சொத்துக்களை தம்வசம் வைத்து பாதுகாக்க இன்னும் பல செய்திகள் ஆதாரங்கள் கருத்துக்கள் வரும்.வந்து கொண்டேயிருக்கும். இந்த நாடகங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் கடந்து சென்று நடக்க வேண்டியதை கவனித்தால் நல்லது. தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் உன்னத தலைவர். எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாறாட்டங்களை தவிர்த்து அடுத்த படிக்கு நகர்வோம்.
  13. சினிமா பாடல்கள் எனும் போதையை நிறுத்த எல்லாம் சரிவரும். இலங்கையில் நாடக கலை என்பது கோலோச்சி இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்ச்சி அப்போது வரும்.வெளிக்கிடடி விசுவமடுவுக்கு,அடங்காப்பிடாரி,வடக்கும் தெற்கும்,நல்லதங்காள், அரிச்சந்திர மயான காண்டம்,கறுப்பும் சிவப்பும்,புளுகர் பொன்னையா இப்படி பல நாடகங்களை சொல்லலாம். நிதி சேகரிப்புகளுக்கு நாடகங்களே கை கொடுத்தது.அதை ஏன் இன்று செய்ய முடியவில்லை? சொந்தமாக எதுவும் செய்யாமல் குய்யோ முய்யோ என அலறுவதில் பிரயோசனம் இல்லை. ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் தென்னிந்திய படங்களை பகிஸ்கரித்தார்கள் காரணம் சொல்லத்தேவையில்லை. ஆனால் அதுவும் அவர்களுக்கு வில்லனாக மாறியதுதான் நிதர்சன உண்மை.
  14. இலங்கையில் இந்து, சைவ கிறிஸ்தவ தமிழ் மக்கள் தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் இருக்கும் போது முஸ்லீம் சமூகம் என்பது என்ன வேறுபாட்டை குறி வைக்கின்றது? முஸ்லீம்களின் மொழி தமிழ் தானே?
  15. தமிழர்களுக்கு சொந்த தயாரிப்பு எதுவுமே பிடிக்காது. இரவலில் குளிர்காய ரொம்ப ரொம்ப பிடிக்கும். 🤣
  16. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் அமெரிக்கா அழிவினை நகர்த்தி செல்லாமல் வேறு எதனை நகர்த்தி சென்றது என்பதனை விவரிக்க முடியுமா? எடுத்ததற்கெல்லாம் தலைவன் ரம்ப் அவர்களை குறை சொல்வதும் ஒருவகை வழமையான வசைபாடல்தான்.
  17. சர்வதேசத்தில் கமாஸ் இயக்கத்தை யார் பயங்கரவாதிகள் என்று கூறுகின்றார்களோ அவர்கள் தான் விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதிகள் என கூறி தடை செய்துள்ளார்கள். கமாஸ் இயக்கம் செய்வதெல்லாம் சரியென கூற முடியாவிட்டாலும்...... நீ பயங்கரவாதி என கூறி சுண்டு விரலை நீட்டுபவர்கள் பயங்கரவாதத்தை கையில் எடுத்துத்தான் தங்களுக்கென நாடுகளை உருவாக்கியவர்கள். உதாரணத்திற்கு அமெரிக்கா,அவுஸ்ரேலியா,கனடா போன்ற நாடுகள். ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சனையை ஒப்பிடும் போது புவிசார் அரசியல்களையும் சிந்திக்க வேண்டும்.
  18. நான் ஊரில் இருந்த காலங்களில் ஆசிரியர்களும்,பெற்றோர்களும் மாணவர்களும் கல்விக்கு தன்னிச்சையாக முயற்சி செய்து படிப்பித்து/ படித்து முன்னேறினார்கள்.
  19. சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்காப்பணம் எண்ட கதை போலத்தான் உந்த காற்றாலை திட்டங்களும்.வருவாயை விட செலவுதான் அதிகமாம். 😂
  20. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் இதுதான் நடக்கின்றது.
  21. தமிழ்நாட்டை கையகப்படுத்த நினைக்கும் ஹிந்தியர்களுக்கும்.... இலங்கையின் தமிழ்பகுதிகளை அபகரிக்க முனையும் சிங்கள இனவாதிகளுக்கும் நல்தொரு சிந்தனையும் நல்ல திட்ட வடிவங்களும் இதுவாகத்தான் இருக்கப்போகின்றது. பலஸ்தீனத்திற்கு எப்படி விடிவில்லையோ....அதே போல் இலங்கை தமிழர்களுக்கும் விடிவே வராது. அதிலும் இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் சாம்பார் குழப்பங்களை பார்க்கும் போது தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு இல்லாமல் இருப்பதே மேல்.
  22. மரணச்சடங்கு சரியான நேரத்தில் சரியானவர்களால் நடத்தப்படும். அதை இரு கண்களால் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் அல்லவா?
  23. அது சரி....மாதத்துக்கு மாதம் அமெரிக்கா சுற்றும் வாலிபனுக்கு வெள்ளமேது சூறாவளி ஏது காட்டுத்தீ ஏது? ஓமோம் வைரம் பாய்ஞ்ச பிலாமரத்திலையே சறுக்கி விழுந்த எங்களுக்கு பப்பா மரம் எண்டால் கொஞ்சம் கெடிக்கலக்கம் வரத்தான் செய்யும் 😎
  24. வல்லாதிக்கம் கொண்ட கேடு கெட்ட உலகே ! அதன் அருவருடிகளே,அது தந்த சுக போகங்களை நன்றிக் கடனாக சுமப்பவர்களே. வாருங்கள் வந்து பாருங்கள் இதுவும் நீங்கள் வாழும் உலகில் தான் காட்சியாக இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.