Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நீங்கள் அப்படி எழுதியதை நான் வாசிக்க தவற விட்டுவிட்டேன் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழக கட்சிகள்,இந்திய கட்சிகளை பொறுத்தவரை உங்கள் கருத்துத்தான் எனது எண்ண நிலைப்பாடுகளும்....
  2. வடை தேத்தண்ணி பிரியர் ஆகாஷி அவர்களை சந்தித்து தமிழர்களை எப்படி அழிக்கலாம் என ஆலோசனை கேட்டால் இன்னும் நல்லாய் இருக்கும்.😂.
  3. இந்த ஐஸ் போதைப்பொருள் முதலில் இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனிய போர் வீரர்களுக்காக உற்பத்திசெய்யப்பட்டது என கேள்விப்பட்டுள்ளேன். இது பசி,சோர்வை கட்டுப்படுத்தி செயற்திறன் மற்றும் போர் விகாரத்தை ஊக்குவிக்கும் என சொல்கிறார்கள். இந்த இரசாயன போதைப்பொருள் தொழிற்சாலை ஏன் எப்படி இலங்கைக்குள் நுழைந்தது என்ற கேள்வி வரும்போது..... ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றவாளிகளுக்கு இது அவசியம் தேவைப்பட்டிருக்கலாம். அது இப்போது பொதுமக்கள் பாவனைக்கு வந்து விட்டது.
  4. மேற்குலகு தங்களுக்குள் ஏதோ ஒரு நாடகம் அல்லது தொடர் நாடகம் நடத்துகின்றார்கள் போல் எனக்கு தென்படுகின்றது.
  5. திமுக கட்சியினரிடமும் இதே கேள்வியை/ வேண்டுகோளை வைக்கலாமே நிழலியாரே?
  6. இந்த உலகம் வேறொரு ஒருங்கிணைப்பிற்குள் ஒன்று சேரவேண்டிய காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன். இன்றைய உலக நியதிகளுக்குள்..... ஐநா சாதித்ததென்ன? அவர்களது இதர அமைப்புகள் சாதித்தது என்ன? பல மனித/ மிருக நலன்புரி இயக்கங்கள் கூட இதுவரை எதையுமே சாதித்து காட்டவில்லை.
  7. வாக்காள பெருமக்கள் மரங்களில் ஏறி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
  8. இது ரஷ்யாவின் வழமையான ரோந்து/பயிற்சி நடவடிக்கை என சொல்கிறார்கள்.நேட்டோ எனும் எனும் போர்வையில் ரஷ்ய எல்லை நாடுகளில் படைகளை குவித்து பயிற்சிகளை மேற்கொள்ளும் போது புட்டின் அவர்களை என்ன வெள்ளி பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறார்களா?
  9. எனக்கு தமிழ்நாட்டு வாக்குரிமை இருக்குமெண்டால்....என்ரை வாக்கு ஈழத்து மருமோனுக்குத்தான்.😎
  10. தனது குடும்பம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிர் தப்பிப்பிழைத்த காசாவின் பிஞ்சொன்று இடம் பெயர்வின் போது சோர்வடைந்து மணலில் தூங்குகிறது.☹️😭
  11. ஒவ்வொரு பிரபலங்கள் மரணிக்கும் போது அது குறித்த கட்டுரைகள்,விவாதங்கள்,அறிவுறுத்தல்கள் வருவது அதிகமாக விட்டது. இதை நான் ஏனைய மக்களுக்கான விழிப்புணர்வாகவே பார்க்கின்றேன். எனது சொந்த அனுபவத்தின் படி இன்னாருக்கு இது சாப்பிட்டுத்தான் இந்த வருத்தம் வந்தது என எங்கும் அறுதியாக கூறமுடியாது.மது அருந்துவதால் தான் இந்த வருத்தம் வந்தது எனவும் சொல்ல முடியாது.ஏனென்றால் தினசரி மது அருந்துபவர்களும் நோய் நொடியின்றி வாழ்கின்றார்கள். தினசரி 30 சிகரெட் பிடிப்பவர்களும் நோய் நொடியின்றி வாழ்கின்றார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்பவர்களும் நோயில்லாமல் வைத்தியரிடம் செல்லாமல் வாழ்கின்ற்ர்கள். நோய்களுக்கான முதல் காரணம் அவரவர் உடல்வாகு.அடுத்தது எதிர்ப்பு சக்தி.இன்னொன்று பரம்பரையை காவிக்கொண்டு வரும் உயிரணுக்கள். எனக்கு ஈரல் பிரச்சனை சிறு வயதிலிருந்தே இருக்கின்றது. ஆராய்ச்சி செய்ததில் என் குடும்பத்தினர் அனைவருக்கும் அதே பிரச்சனை உண்டு.அதற்காக தலையை கொண்டுபோய் எங்கேயாவது அடிக்க முடியுமா என்ன?😂
  12. கோஷான்! அவனவன் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பான்.அது போல் இனம் என்று வந்தாலும் தன் இனம் பற்றியே சிந்திப்பான். எம் அரசியல் தலைவர்கள் விடும் /விட்ட தவறுகளுக்கு கேள்வி கேட்டால் அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்கள். ஆரம்ப அரசியல் காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஈழத்தமிழினம் வந்த நல்ல நல்ல சந்தர்ப்பங்களை தவற விட்ட இனமாகவே எனக்கு தென்படுகின்றது. அடுத்தது எம் மக்களின் நிலைப்பாட்டிற்கு வருவோம்... பழைய சோறு சாப்பிட்டாலே கேவலமாக பார்க்கும் எம் சமூகம் பழைய வரலாற்று அடையாளங்களை பாதுகாப்பது பற்றி சிந்திக்கும் என நினைக்கின்றீர்களா? 😂
  13. யாரையும் பழி வாங்க உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இலை நிறம் மாற மரத்திலிருந்து தானக உதிர்ந்து விடும்.
  14. உங்கள் கதைக்கும் எழுத்துக்களுக்கும் நன்றி ரசோதரன். அருமையாக எழுதுகின்றீர்கள்.பிரமிக்க வைக்கின்றது.👍 🙏
  15. கிந்தியாவை மீறி மேற்குலகமோ அல்லது அமெரிக்காவோ வந்து ஈழத்தமிழர் பிரச்சனை தீர்ப்பார்கள் என நம்புபவர்கள். இங்கே வந்து கையை தூக்கவும். அல்லது கையை அசைக்கவும்.
  16. ஒரு முறை மரணத்தின் வாசலிருந்து மீண்டு வந்தவர். பின்னர் ஏனோ தானோ என இருந்து விட்டார் போல் எனக்கு தெரிகிறது. அது மட்டுமில்லாமல் அவரின் மரண நிகழ்வின் பின்னர் பொது ஊடங்களில் அவர் குடும்பத்தினரை பேட்டி எடுக்க முயல்வதெல்லாம் இன்னும் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். அன்னாருக்கு என் அஞ்சலிகள். குடும்பத்தினர்க்கு என் அனுதாபங்கள்.
  17. எதற்கெடுத்தாலும் சிங்களத்தை நொந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என நாம் மட்டும் தான் சொல்லிக்கொண்டு எம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கின்றோம். உலகில் வேறு எந்த இனமும் இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது என சொல்வதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. முன்னர் தமிழர்கள் இந்து கலாச்சார அமைச்சர்களாக இருந்துள்ளார்கள்.பல தமிழர்கள் வேறு அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் இதனை செய்திருக்க வேண்டும் .செய்யவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்துள்ளார்கள்.இருக்கின்றார்கள். ஏன் தமிழர்களின் புராதன அழிவுகளை புனரமைக்க முன் வரவில்லை? ஊருக்கு ஊர்,மூலைக்கு மூலை உள்ள கோவில்களுக்கு ராஜகோபுரம் கட்டி பந்தா காட்டும் புலன்பெயர் தமிழன்களுக்கு சங்கிலியன் பற்றி ஏதாவது தெரியுமா என கேட்டுப்பாருங்கள். முகநூலில் தடவித்தடவி தேடிக்கொண்டிருப்பான்.🤣
  18. ஆசான்களை,பெரியோர்களை எழுந்து நின்று வணக்கம் சொல்வது, வாழ்த்துக்களை பெற்றுக்கொள்வது,காலில் விழுந்து ஆசி வாங்குவது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.சிலர் இரு கைகளாலும் மற்றவர் கைகளை பிடித்து வணக்கம் சொல்வார்கள்.கையை பிடித்து நன்றி/மரியாதை முத்தம் கொடுப்பார்கள். இதெல்லாம் உலக வழக்கமாக இருக்கின்றது. அது போல்.... பலர் கால்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கும் நடைமுறை இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருக்கின்றது.அதை ஏன் மரியாதைகுறைவாக/அடிமைத்தனமாக பார்க்க வேண்டும் என்பது என் கேள்வி? ஏய் காலில் எல்லாம் விழக்கூடாது என்பார்கள். காலைத்தொட்டு ஆசி வாங்குவதையோ காலில் விழுவதையோ ஏன் ஏளனமாக பார்க்க வேண்டும். பெரியவர்கள் காலில் விழுந்தால் அவமானம் எம்மை நாமே தாழ்த்துதல் என்றால் கையை பிடித்தால் எழுமானமா?
  19. இந்த உலகில் ஜேர்மனி ஒரு முக்கிய தொழிற்சாலை நாடு. அது மட்டுமல்லாமல் சமதர்மத்துடன் கூடிய ஒரு முதலாளித்துவ நாடு.இந்த தொழிற்சாலை நாட்டிற்கு எரிசக்தி மிக மிக முக்கியம்.அதற்கு நிலக்கரி மூலம் அந்த சக்தியை தங்குதடையின்றி பெற்றுக்கொண்டார்கள்.அதனுடன் அணுமின்சக்தியும் ஒருங்கிணைய யார் தயவுமின்றி உயர உயர வளர்ந்தார்கள்.made in Germany என்பதற்கு இலக்கணம் வகுத்தார்கள்.இவர்களது தொழில்நுட்பங்களும் இயந்திரவியலும் உலகையே பிரமிக்க வைத்தது. எட்டாத உச்சத்திற்கு சென்றார்கள்.உலக யுத்த அழிவிலிருந்து மீண்டு முன்னேறி ஒரு நிம்மதி பெரு மூச்சு விட ஆரம்பிக்கும் போது புதிதாக முளைத்தது ஒரு புதிய கட்சி. அதுதான் பசுமைக்கட்சி கட்சி.அவர்களது முக்கிய கொள்கை சுற்றம் சுற்றாடல் பசுமையான உலகம். அவர்கள் முதலில் வைத்த ஆப்பு நிலக்கரி சுரங்களுக்கும் அணுமின் நிலையங்களுக்கும் தான்....அங்கே தான் ஜேர்மனியின் பொருளாதாரம் மெல்ல மெல்ல சறுக்க ஆரம்பித்தது.அந்த நிலையில் கைகொடுத்தது ரஷ்ய எரிசக்தி. ஒருவிதத்தில் இருந்த இடத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார்கள்.
  20. மாலை 5மணிக்கு கட்சி கூட்டம் என்றால் அதிகாலை 5மணிக்கே பஸ்சில் ஏற்றிவிடுவார்களாம். காலக்கடன் மதியக்கடன் மாலைக்கடன்களுக்கு மக்கள் எங்கே செல்வார்கள்? 🤣 அந்த மண்ணில் தானே பிறந்து தவழ்ந்து நடந்து நடமாடி புலம் பெயர்ந்தீர்கள்? என்ன? வசதி வந்தவுடன் மண்ணின் நிலமைகளையும் பழையதையும் மறந்து விட்டீர்களா?உங்களைப்போன்றவர்களினால் தான் அங்குள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்களை திட்டியும் நக்கலும் அடிக்கின்றார்கள்.
  21. சுமந்திரன் ஒரு பெரும் கட்சியில் இணைந்து அதுவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பேரால் போட்டியிட்டு இரு தடவை தோல்வியடைந்தவர். அந்த கட்சிக்கு இன்றும் ஒரு பெரிய மரியாதை இலங்கை அளவில் இருக்கின்றது. சர்வதேச அளவில் இலங்கை இனப்பிரச்சனை என்றால் எல்லோரும் அணுகுவது அக்கட்சி தலைமையில் இருப்பவர்களை மட்டுமே.அப்படிப்பட்ட ஒரு மாபெரும் கட்சி முக்கியஸ்தர் தோல்வியடைகின்றார் என்றால் அவர் மீதுள்ள நம்பிக்கை இல்லையென்ற அர்த்தத்தை தவிர வேறொன்றுமில்லை. மற்றவர்கள் பார்வையில் சுமந்திரன் ஒரு தடவை மட்டும் தோல்வியுற்றதாக தெரியலாம். எனது பார்வையில் இரு தடவைகள்.சுமந்திரனின் முதலாவது தோல்வியில் சசிகலா ரவிராஜ் பலிக்கடாவாக்கப்பட்டார்.இரண்டாவது தோல்விக்கு காரணம் மக்கள் இன்னும் நன்றாக தங்களை சுதாகரித்து கொண்டனர். 😂 பெண் சாபமும்/பாவமும் சும்மா விடாது கோஷான் 🤣 மீண்டும் சொல்கிறேன். எனக்கு இரட்டை நிலைப்பாடு எங்கும் எதிலும் இருந்ததில்லை.ஏனென்றால் இந்த உலகில் அரசியல் கொள்கையும் நீதி நியாயங்களும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாதவை. ஒரு இடத்தில் மரண தண்டனை சரியாக தெரியும். இன்னொரு இடத்தில் மரணதண்டனை பிழையாக தெரியும். இதே போல் தான் அரசியல் கொள்கைகளும் என நான் நினைக்கின்றேன். கவனிக்க👉 சீமான் வளர்ந்து வரும் கட்சியை சேர்ந்தவர். அவர் வளர இன்னும் இடமுண்டு. அவரது கொள்கைகளை அடிமட்ட/பாமர மக்கள் புரிந்து கொள்ள கால அவகாசங்கள் நிறைய தேவை.தமிழ்நாட்டு அரசியல் என்பது சினிமா ஆதிக்கம் உள்ள அரசியல்.இரண்டரை மணி நேர சினிமாவில் முதல்வர் ஆவது போல் கனவு இருப்பவர்களுக்கு அது சாத்தியமாகலாம்.ஆனால் சீமான் கட்சி கொள்கை அப்படியல்ல என நினைக்கின்றேன்.எத்தனை தடவைகள் கட்டுப்பணம் இழந்தாலும் ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக வரும் என நான் நினைக்கின்றேன்.
  22. ஒரு காலத்தில் தென்மராட்சி வெள்ளை மண்ணுக்கு பஞ்சமில்லாத இடம். தற்போது சொந்த நிலத்திலேயே மண் அள்ள முடியாத நிலையாம். வைரவருக்கு ஒரு மடம் கட்டுவம் எண்டால் மண் எடுக்க வசதி இல்லை எண்டு மேசன்மார் கைவிரிக்கினமாம்.😎
  23. யாழ்மாநகரசபை ஆரியகுளத்துக்கு காசு செலவளிக்கும்.ஆனால் புராதன வரலாற்று சின்னங்களை எட்டியும் பார்க்காது. நல்லூர் திருவிழாவுற்கு வரும் பக்தர்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் நிதியுதவி சேகரித்தாலே ஒரு பெரிய தொகை வந்துவிடும்.
  24. சுமந்திரன் அவர்கள் தமிழர்களின் ஏகோபித்த அபிமானமும் ஆதரவும் உள்ள கட்சியில் சுயலாபத்திற்காக இணைந்து கொண்டவர். அவர் அக்கட்சியினை வளர்த்தெடுக்கவில்லை. அதற்காக பாடுபடவும் இல்லை. மற்றவர்கள் கட்டி பாதுகாத்த கோட்டையில் சுலபமாக புகுந்த கருநாகம் சுமந்திரன் என்பவர். சீமான் அப்படியல்ல.அவர் உருவாக்கி வளர்ந்துவரும் கட்சி அது.எந்த/எவர் முதலீடும் இல்லாமல் கொள்கை ஒன்றை மட்டும் வைத்து முன்னேறி வரும் கட்சி அது. வாக்குக்கு பணம் செலுத்தாத கட்சி அது. கட்சி கூட்டங்களுக்கு பணம் செலுத்தி மக்களை கூட்டாத கட்சி அது. 😃சும்மா எதற்கெடுத்தாலும் சொப்பன சுந்தரி விஜயலச்சுமி மாதிரி உளறப்படாது.🤣😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.