Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. தலைக்கனம் வெந்நீர் போன்றது. அதை மற்றவர்கள் மீது தெளிக்காதீர்கள். அது உங்கள் மீதே பட்டு விடும்.
  2. வாகன முன் இருக்கையில் குழந்தைகள் இருக்கைகளுடன் அமர்த்த முடியும் என தளர்த்தப்பட்ட சட்டங்கள் கூறினாலும்..... ஏதாவது நடந்தால் காப்புறுதி உத்தரவாதம் எப்படி இருக்குமென தெரியவில்லை.
  3. உக்ரேன் போர் நிறுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை.உக்ரேன் போர் நிறுத்தப்பட்டால் ரஷ்ய எரிசக்திகள் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குள் பாய்ந்து வர சந்தர்ப்பங்கள் உண்டு. ஏனென்றால் எரிசக்தி பொருளாதாரம் மட்டுமே தொழிற்சாலை நாடுகளை வாட்டி எடுக்கின்றது.இணக்க அரசியல் என்றுமே சிறந்தது.
  4. வல்லரசு என எந்த நாடுகளை குறிப்பிடுகின்றீர்கள்? ஸ்ரீலங்காவிற்கு வல்லரசு என்றால் சீனாவும் இந்தியாவும் தான். சும்மா ஒரு கதைக்கு.... ஸ்ரீலங்கா எண்ட குழந்தைக்கு இந்தியா அடிச்சால் சீனா ஓடிவந்து பால் குடுக்கும். சீனா அடிச்சால் இந்தியா ஓடிவந்து பால் குடுக்கும். கதை இப்பிடித்தான் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கு... நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.
  5. இப்படியே தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கெல்லாம் சாத்துப்படி வைக்க வெளிக்கிட்டால் வெகு விரைவில் நொந்து நூடில்ஸ் ஆகி விடுவார்கள். உக்ரேனுக்கு மிண்டு குடுக்க வெளிக்கிட்டு சேடம் இழுக்கிற சத்தம் இன்னும் நல்லவடிவாய் கேக்கேல்லை.🤣
  6. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மண்டைதீவானக இருந்தாலும் சரி. சாவகச்சேரியானாக இருந்தாலும் சரி. 😎
  7. வர வர சாவச்சேரி ஒரு மார்க்கமாய்த்தான் போகுது. 🙃 தனங்கிளப்பு ரோட்டிலை ஒரு நன்னடத்தை பள்ளிக்கூடம் கட்டி திருத்தியெடுக்கத்தான் இருக்கு..... இடம் தவறணைக்கு அங்காலை.....சுடலைக்கு இஞ்சாலை 😂
  8. மொழி, இனம்,மதம் அனைத்தையும் கடந்து வெற்றியடைவது இசை.🎵
  9. கடந்து போக கற்றுக்கொள் மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது.... என சொல்கிறார்கள்.
  10. அதை என்னெண்டு என்ரை வாயால சொல்லுவன்....ஒன்றா இரண்டா எழுதி வைத்து சொல்வதற்கு....😂
  11. என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂
  12. ரஷ்யா உக்ரேனின் முக்கிய பகுதிகளை தாக்கும் போது ஏன் பிரிட்டனும் அமெரிக்காவும் ரஷ்யாவின் தலைநகரை தாக்க கூடாது?
  13. சொந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் பூமியை சுடுகாடாக்கி விட்டு.... தாம் சமாதான புறாக்கள் என கோஷமிடும் உலகில் வாழ்கின்றோம். இது சரியென தலையாட்ட அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்திலும் ஒரு கூட்டம்.
  14. பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன். கண்களை கவனி காமம் என்றனர். வைரமுத்து-
  15. நூறு வீதம் உண்மை. என்னதான் சகல வழிகளிலும் முன்னேறி இருந்தாலும் பக்காவாக சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செவ்வனே திறம்பட செய்பவர்கள். மேற்குலக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் உட்பட பெரிய முதலாளிகள் உட்பட எவ்வளவு சுத்துமாத்து வேலைகளில் ஈடுபட்டு சிக்கி தவிக்கின்றார்கள் என்பது உலகறிந்த விடயம். உதாரண அரசியல்வாதிகளையும்,பிரமுகர்களையும் இங்கு குறிப்பட நான் விரும்பவில்லை.
  16. இதுதான் என் கருத்தும். இருந்தாலும் இப்படியான வரலாற்று நன்றி நவிலல்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மனம் கொதித்துக்கொண்டே இருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை தொடாத அரசியல்வாதிகளும் இல்லை.அரசியல் கட்சிகளும் இல்லை. இதில் சீமானும் விதி விலக்கு அல்ல.ஏன்.........சினிமாக்களில் கூட ஈழத்தமிழர் பிரச்சனையின் ஆதிக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது.... எனக்கு பிடிக்கவில்லை என்றால் உனக்கும் பிடிக்கக்கூடாது என்ற தத்துவம் குண்டுச்சட்டிகளுடன் நிற்கக்கடவது.
  17. நீங்கள் சொல்ல வந்த இரு செய்திகளும் நூறு வீதம் உண்மை என நான் நினைக்கின்றேன்.
  18. பல தினங்களுக்கு முன்னர் பல இணைய ஊடகங்களில் காறித்துப்பப்பட்ட செய்தி.😂 புது நெல்லு புது நாத்து என்பதற்கமைய.... திருமணம் என்பதை விட மனப்பொருத்தம் முக்கியம் என்பதை பலர் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் என தெரியவில்லை? என்னிடமும் இன விசுவாசம் உண்டு.மாற்று கருத்துக்களும் உண்டு. அதை எப்படி கையாள வேண்டும் என்ற சிந்தனையும் உண்டு. நிற்க... கீழ் வரும் காணொளிகளில் வருபவர்களுடன் சிறு தொடர்புகள் உண்டு. அவர்களது காணொளிகளில் என் கருத்துக்களும் உண்டு. அவர்களது காணொளிகளில் எங்கும் தமிழ்மானத்தை விட்டுக்கொடுக்கவேயில்லை. மாறாக தமிழை முன்னெடுத்து செல்கின்றார்கள்.
  19. இல்லை. அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் நான் கோபப்படுவதே இல்லை. சரி மன்னிப்பும் தேவையில்லை. அந்த நடிகனை தேடி வந்தவர்கள் உயிரிழந்ததிற்கு உடனடியாக அனுதாபங்களை தெரிவித்திருக்கலாம். இதற்கும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் உங்களைப்போன்ற விஜய் ரசிகர்கள் மீதுதான் கோபம் வருகின்றது. கரூர் மரணத்திற்கான காரணங்கள் வரும் வரைக்கும் அனுதாபங்களும் அஞ்சலிகளும் காத்திருக்கட்டும். இதற்கும் தமிழ்நாட்டு பட்டிமன்ற பாணியில் பாட்டு வேற போடுகின்றீர்கள்?!?!?!?! அது சரி உங்கள் அபிமான நடிகர் ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன? அவரின் மாற்று அரசியல் கொள்கை என்ன? ஒவ்வொரு கட்சியிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கி எழுதி வைத்து அரசியல் மேடை விண்ணாணம் செய்கின்றார். இதில் கொடுமை என்னவென்றால் சீமானின் அரசியல் வசனங்களைத்தான் திரைப்பட பாணியில் பேசுகின்றார் இந்த ஜோசப்பு விஜய்.
  20. கூட வேலை செய்பவனின் தந்தை ஒரு சமையல்காரன் என அறிந்த கோவிந்தன் அவனை நக்கலாகவும் ஏழனமாகவும் பார்த்து சிரித்து விட்டு...தாய் சமைத்து கட்டித்தந்த சோத்து பார்சலை விரித்து வைத்து ஆகா ஓகோ என ரசித்து உருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
  21. ரஷ்யா, சீனா, மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் தமக்கென புதிய பாதையை அமைக்க தொடங்கி விட்டார்கள். இதனால் அமெரிக்காவிற்கு பெரிய வேலை இருக்காது என நினைக்கின்றேன்.இதில் தென் அமெரிக்காவும் கூட்டு சேர இன்னும் சிறப்பு.😃 சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைக்கும் அமெரிக்கா.😎
  22. அவர் மீது உங்களுக்கு அப்படி என்ன தனிப்பட்ட கோபம்? மக்களால் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட ஒரு அரசியல்வாதியின் காலம் மூன்றோ நான்கு வருடங்கள் மட்டுமே.அதன் பின் அவரை நிகாரிப்பதோ அல்லது மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதோ வாக்காளர்களின் கடமை. இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் சாதித்தது என்னவென்று உங்களால் சொல்ல முடியுமா? அதேபோல் இவர் முதல் தடவையாக வந்திருக்கின்றார். என்ன செய்யப்போகின்றார் என பார்க்கலாம். அதன் கருத்து மழை பொழியலாம்.😎 ஒரு பழமொழி ஒன்று இருக்கின்றது.அதை உங்கள் மேல் இருக்கும் மரியாதையால் இங்கு எழுதவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.