Everything posted by குமாரசாமி
-
ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது
ஜேர்மனி தமது வெற்றி அரசியலுக்காக எதை எதையெல்லாமோ செய்ய ஆரம்பித்து இன்று பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளார்கள். உக்ரேன் ஜேர்மனிக்கு தேவையில்லாத சாக்கடை.👈 ஜேர்மனிக்கு உக்ரேன் போருக்கு பின்பும் ரஷ்யாவிலிருந்து எரிசக்தி வேறு வழியில் பலமடங்கு விலையில் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இதை இங்கு யாழ்களத்தில் எழுதிய போது என்னை சொல்லால் அடித்தார்கள். என்ன செய்ய?அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்!
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்த நாடுகள் தான் இன்று பொருளாதாரத்தில் பின்னோக்கி போகின்றனர்.இதன் மூலம் நான் சொல்ல வருவது ரஷ்யா இன்றி இந்த உலகு இல்லை என சொல்ல வரவில்லை. இந்த உலகு ஒன்றின் மேல் இன்னொன்று தங்கி வாழும் உலகு. அதாவது வியாபார/பண்டமாற்று உலகு. பெரிய பொருளாதார நாடுகளுக்குள் பிளவு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இன்றைய உலக அரசியல் பொருளாதார நிகழ்வுகள்.
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
ரஷ்ய மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புற்றுநோய்க்கான மருந்து பல ஆண்டுகள் பரிசோதிக்கப்பட்டதாகவே பல ஊடக செய்திகளில் வாசிக்க முடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் கொரோனா காலத்தில் எப்படிப்பட்ட ஊசிகளை எல்லாம் கேட்டுக்கேள்வி இல்லாமல் ஏற்றியவர்கள் தான் இன்று பல கால ஆராய்ச்சிகள் செய்து வந்த மருத்துவத்தை பற்றி கேள்வி கேட்பார்கள். மேலைத்தேயம் கண்டு பிடித்த வியாபார மருந்துகளில் பக்க விளைவிகள் இல்லையென்று யாராவது உத்தரவாதம் தருவார்களா?
-
அறிமுகம்
வணக்கம் வாங்கோ...நானும் ஜேர்மன்காரன் தான் 😃
- வணக்கம்
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்..!
-
ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது
விதி வலியது.
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
எல்லாரும் கச்சதீவு கச்சதீவு எண்டு கத்துறாங்கள். அங்கை என்னதான் இருக்கு எண்டொருக்கால் போய் பாப்பம் எண்டுட்டு தான் கச்சதீவுக்கு போனவராம். 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உகாண்டா நாட்டில் பாலம் ஒன்று திறந்து வைக்கும் நிகழ்வு.....😎
-
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை
சீமானுக்கு வேற வேலையில்லை 😜
-
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!
பெண் பாவம் சும்மா விடாது.பொல்லாத பாவம் 😀
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உடலுறுப்புகளை அதிகமாக திருடுகின்றார்கள்.அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.சில தினங்களுக்கு முன் வந்த உடலுறுப்பு திருட்டு பற்றி வந்த செய்தியின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் பிரபல்யங்களுக்கு வயதுக்கு வராதவர்களின் இள இரத்தம் பிடிக்குமாம்.😂 சட்டபூர்வமாக உள்ள கிட்னி மாற்றம்,கண் மாற்றம்,இரத்த மாற்றம்,ஈரல் மாற்றம்,இருதய மாற்றம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?😎
-
'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
நாய்கள் என்றாலே என்றும் பிரச்சனைதான்.அது வீட்டு வளர்ப்பு நாயாக இருந்தாலும் சரி தெரு நாயாக இருந்தாலும் சரி அதற்கென ஒரு தனிக்குணம் இயற்கையாகவே உண்டு. ஜேர்மனியில் வீட்டுக்கு வீடு நாய்கள் பெரும்பாலும் உண்டு. அவை பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களாகவே இருக்கும். கடி நாய்களாக இருந்தலும் அதுகளுக்கு பயிற்சி கொடுக்கப்படிருக்கும். கடி நாய்களை களவாக வளர்ப்பவர்களும் உண்டு. ஏனென்றால் கடி நாய்களுக்கு அனுமதி பத்திரம் வாங்கியிருக்க வேண்டும்.அதற்குரிய கட்டணங்களும் அதிகம்.அது துப்பாக்கி வைத்திருப்பதற்கு சமம். நாய்கள் என்றுமே வில்லங்கமானவை.ஊரில் எல்லாம் அதை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருப்பார்கள்.நடு வீட்டுக்குள் எல்லாம் அனுமதிப்பதில்லை. மேற்குலகில் அப்படியல்ல. அளவு மிகுந்த பாசமும் அன்பும் கொடுக்கின்றர்கள். செலவுமும் அதிகம். நல்ல காலம் ஜேர்மனியில் தெருநாய்கள் இல்லை. அதற்கு அனுமதிகளும் இல்லை. வீட்டு நாய் வெளியில் தனியாக வருவதுமில்லை. தனியே எஜமானுடன் மட்டுமே வெளியே வர அனுமதியுண்டு. நாய் அது ஐந்தறிவுள்ள ஒரு மிருகம். அதனை மனிதனுக்கு சமனாக ஒப்பிடுவது தவறு.வீட்டுக்கு வீடு நாய் இருக்கலாம்.ஆனால் தெருவுக்கு தெரு நாய்கள் என்றும் ஆபத்தானது.
-
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கு கச்சதீவு பேசு பொருள் அல்ல. அத்துடன் மீன் பிடி பிரச்சனைகளும் ஈழத்தமிழர் பிரச்சனைக்குள் அடங்கவில்லை என நினைக்கின்றேன். சிறு செய்திகளுக்கெல்லாம் கொலரை தூக்கி காட்டியதால் தான் தமிழினம் இன்று இந்த நிலையில் நிற்கின்றது.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு தேவை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நானும் முதலாவது வகை தான். நடு ரோட்டிலை நிண்ட அனுபவம் எக்கச்சக்கம். ஜேர்மனியில எரிபொருள் இல்லாமல் கார் நடு ரோட்டில நிண்டால் தண்டம் கட்ட வேண்டும். 😂
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
அரச பதவியில் அல்லது தனியார் பதவியில் உள்ள இலங்கை தமிழன் சிங்களத்தில் சரளமாக பேசுவான்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகும். தமிழ் அரசியல்வாதிகளில் பலர் சரளமாக சிங்களம் பேசக்கூடயவர்கள். இவர்கள் அனைவரும் சிங்கள பகுதியில் சிங்களத்தில் கதைப்பர். தமிழர் பகுதிகளில் தமிழில் கதைப்பர். ஆனால் சிங்களவர்களோ எங்கும் தமது மொழியையே முதன்மைப்படுத்துவர். இங்குதான் இனவாதம் காலூன்றி நிற்கின்றது. அமைதி சூழலை விரும்பும் நாட்டு தலைவர்கள் அந்நாட்டு முக்கிய மொழிகளில் பேசும் தன்மையாகவாவது இருக்க வேண்டும்.அது இங்கு அறவே இல்லை. நீ உன்னை தமிழர் பிரதேசங்களில் சிங்களவனாக முன்னிலைப்படுத்த நினைக்கும் போது தமிழருக்கு தனித்தாயகம் வேண்டுமென்பது சிறு குழந்தைக்கும் வரும்.
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
ஆரோ ஒரு தம்பி மணியாத்தான் யோசிச்சிருக்கிறார். X தளத்தில் சுட்டது 😎
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
செம்மணிக்கு ஜனாதிபதி போகக்கூடாது என்று இளையதளபதி விஜய் சொன்னால் சிலவேளை இந்தா போய்க்காட்டுறன் எண்டு போயிருப்பாரோ?
-
அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா?
இப்பவும் சொல்லுறன்....😂 மேற்குலகம் உக்ரேனுக்காக ரஷ்யாவோட புடுங்குப்படுறத விட்டுட்டு நேசமாக இருந்து...... ரஷ்யாவோட வழமை போல வர்த்தகம் செய்து கொண்டு தாங்களும் வளர்ந்து ரஷ்யாவையும் வளர விட்டால் நல்லது. பனிப்போருக்கு பின்னர் ரஷ்யா மேற்குலகு சார்ந்தே இருந்து வந்துள்ளது.நேட்டோ ஆசை எல்லாத்துக்கும் ஆப்பு வைத்துள்ளது.மேற்குலகு ரஷ்யாவுடன் நட்பாக இருந்தால் இருந்திருந்தால் சீனாவிடம் இருந்து கொஞ்ச பாதுகாப்பாகவாவது இருக்கும். சீனாவின் அபரீத வளர்ச்சி மேற்குலகை மூழ்கடிக்கும் என நான் நம்புகின்றேன். சிரிச்சு சிரிச்சே உலகில் எல்லா இடத்திலும் காலூன்றி விட்டார்கள். கொஞ்சம் கவனித்து பார்த்தால் ரஷ்யாவிடம் பட்டுச்சாலை போன்ற மறைமுக உலகை கைப்பற்றும் திட்டம் இல்லை.
-
உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்
முற்றிலும் உண்மையான செய்தி. ஜேர்மனியில் குத்துச்சண்டை வீரர்களாக இருந்த இந்த இரு உக்ரேனிய சகோதரர்களுமே அங்கே சண்டை சச்சரவுகளுக்கு ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் தூபமிட்டவர்கள்.ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பகாலங்களில் இவர்களை வைத்து தான் உக்ரேனை தங்கள் அரசியலுக்கு பேசு பொருளாக்கினர். https://www.instagram.com/p/CauLxN4qvin/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
-
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
நமது தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்பட்ட வண்ணம் ஆவேச அரசியலை கையில் எடுத்து தமது பிழைப்பை பார்த்தார்களே ஒழிய வேறேதும் இன்றுவரை இல்லை. மாறுபட்ட அரசியல் ஒன்று வருகின்றது போல் இருக்கின்றது.பார்க்கலாம்.
-
ஐரோப்பிய ஒன்றியம் உக்கிரேனில் போர் நிறுத்தத்தினை விரும்பவில்லை மாறாக ஒரு நீண்ட போருக்கு தயாராகுகிறதாக கங்கேரி குற்றச்சாட்டு
ஹங்கேரி சொல்வதெல்லாம் உண்மையே. ரஷ்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இந்த ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும்...
-
இரஸ்சிய உக்கிரேனிய போர் முடிவிற்கு வருவதற்கு ஐரோப்பா முட்டுக்கட்டை போடுவதாக வெள்ளை மாளிகை நம்புகிறது
இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்குமான தன்மான போர்.இதில் உக்ரேன் வெறும் பொம்மை மட்டுமே.
-
நடனங்கள்.
நடன போட்டியின் பிரமாதங்கள். https://youtu.be/PZNdzwVwPRc?si=qXFiRxpHBzFg9in-