Everything posted by குமாரசாமி
-
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்கள் - தமிழ் தேசிய பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு
மேற்கத்தையர்களின் இந்த சந்திப்பு வழமை போல் அல்லாது வேறு பட்ட தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளனர். சம்பந்தம் சுமந்திரத்தின் சந்திப்புகள் போல் அல்லாது நல்ல முடிவுகள் வந்தால் சந்தோசம்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
கிந்தியாவை மறந்து விட்டு சீனாவுடன் கை கோர்ப்பதே ஈழத்தமிழர்களுக்கு மாற்று வழிகளை கொடுக்கும் என நினைக்கின்றேன். நாம் காலம் காலமாக இந்தியா இந்தியா என உருகி விழ....அவர்களோ எம்மை அழிப்பதிலேயே முனைப்பாக நிற்கின்றார்கள்.நாம் பாடசாலைகளில் இலங்கை வரலாற்றை விட இந்திய வரலாறுகளை படித்ததுதான் அதிகம். அந்த நாட்டு தலைவர்களின் சிலை நிறுவி வருடா வருடம் மாலையிட்டு மரியாதை கொடுத்ததுதான் மிச்சம். வெள்ளையர்களிடமிருந்து அகிம்சையால் விடுதலையடைந்தோம் என வாய்க்குவாய் கூறிக்கொண்டு,எழுத்துக்கு எழுத்து அகிம்சை என போதித்துக்கொண்டு.... அயல் நாடுகளில் மனித அழிவுகளை செய்யும்/ செய்யத் துடிக்கும் கேடுகெட்ட நாடு. தமிழ்நாட்டு உறவுகள் மன்னிக்கவும்.எமது பிரச்சனைகளை,உணர்வுகளை புரிந்து கொள்வீர்களாக.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
நீங்கள் சொல்வது சரியே. எனக்கும் இவர்களை பிடிப்பதில்லை. சில வேளைகளில் இவர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டார்களோ என நினைப்பதுண்டு.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஜேர்மனியர்கள் தங்களுக்கு வேலை இல்லை என அழுவதை நீங்கள் பார்க்கவில்லையா?
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
ஓம்... நான் சிலோனுக்கு போன முட்டம் அவவ சந்திக்கப்போனனான். நானும் அவவும் ஜேர்மனியில ஒரே ஊர் எண்டது பரம ரகசியம். 😎
-
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!
திருப்பியும் உங்களோட இணையப் போறம் எண்டு சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂
-
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
தோல்விகள் வெற்றியாவதற்கு காலவரையறை உண்டா?
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
சிங்களத்தின் கொடுமையான இனவாதத்தினை புடம் போட்டுக்காட்டும் இன்னொரு சாட்சி படம். ஒரு புத்த பிக்கு கூட இந்த பொது நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதை விட தமிழ் பேசும் பிக்குகளே கலந்து கொள்ளவில்லை எனும் போது...... சிங்கள இனம் திருந்தவே வாய்யில்லை.
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
போரில் மரணித்த அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.
-
இந்தியாவில் துருக்கியின் ‘ஸெலெபி ஏவியேஷன்’ நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து!
அவனவனுக்கு தன் இனம் தன் மக்கள் தன் மதம் தன் மொழிக்கு ஏதும் என்றால் துடிப்பது இயற்கை.அதைத்தான் துருக்கி செய்துள்ளது. ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் மொழியும் சொந்தமில்லை இனமும் சொந்தமில்லை கலாச்சாரமும் சொந்தமில்லை மதமும் சொந்தமில்லை. அப்படியிருக்க எப்படி என் இனம் என் சொந்தம் ஏன் மொழி என்ற உணர்ச்சிகள் வரும்?
-
இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர்
அறிக்கைகளோடு நின்று விடாமல்... ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்க செயிலிலும் செய்து காட்டுமாறு ஸ்டாமர் அவர்களை வேண்டிக்கொள்கின்றேன்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சிங்கள இனவாத அரசுகள் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியை கொடுப்பார்களேயானால்...... அவர்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம். ஏனென்றால் சுமந்திரன் தமிழர்களை பயங்கரவாதிகளாக படம் போட்டு காட்டாமல் ஓய மாட்டார்.
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
மீன்காரி செந்தமிழ்ல அர்ச்சனை செய்ததிலை நியாயமிருக்கு......🤣 கருவாட்டு விலை கேக்கிறதுக்கும் இடம் வலம் நேரம் இருக்கு...😁
-
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
ஒரே ஒரு பரிகாரம் உண்டு. உக்ரேனில் தேர்தல் வைக்கச் சொல்லுங்கள். கிட்டத்தட்ட செலென்ஸ்கி சர்வாதிகாரியாக மாறிவிட்டார்.
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
தமிழ் மக்கள் என்னென்ன அவலங்களை சந்திக்கப்போகின்றார்களோ????? எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நம்ம நாடும் வெத்திலை துப்பலுக்கு பேர் போன இடம்.🤣 அதே மாதிரி லா சப்பலும் வெத்திலை துப்பலுக்கு பஞ்சமில்லாத இடம்.😂 நமக்கு பீடா கண்கண்ட தெய்வம்😎
-
10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
அன்வர் சதாத் பிரதமராக இருந்த போது எகிப்தில் ஒரு பகுதியை பலஸ்தீனியர்களுக்கு ஒதுக்கி கொடுக்க தயாரக இருந்தார். அதை பலஸ்தீனம் ஏற்கவில்லை.
-
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
செலென்ஸ்கிய பின்னுக்கு இயக்கிறது ஐரோப்பிய யூனியன். அந்த தைரியத்தில தான் அவர் போற வாற இடமெல்லாம் சண்டித்தனம் காட்டுறார்.😉 ஐரோப்பிய யூனியனை டொனால்ட் ரம்புக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.புட்டினுக்கு ஜேர்மனி எண்ட பெயரை கேட்டாலே கொதி நிலைக்கு வந்து விடுவார். ஜேர்மனி ஐரோப்பிய யூனியனுக்கு முக்கிய நாடு. இது எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தால் உக்ரேனுக்கு "நோ சான்ஸ்" எண்ட பதில் வரும்
-
நான்கு இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி
கடலில் நீந்த/ நீராட என அனுமதிக்கப்பட்ட இடங்கள் இருக்கும் போது தன் தோன்றித்தனமாக கடலின் எல்லா இடங்களிலும் இறங்குபவர்களை என்னவென்பது.
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
அண்ணன் அமெரிக்காவின் சொல் கேட்டு நடந்த ஐரோப்பியர்கள் இப்போது தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள்.
-
அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
அர்ச்சுனா தான் செய்த குறளி வித்தைகளை மக்கள் மறக்கவாவது தங்கத்த பாராளுமன்றம் அனுப்பட்டும். 😁
-
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை- அலி சப்ரி
இலங்கை பெரிய பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர்....நடந்த இனக்கலவரங்களும் இனப்படுகொலைகளின் வரலாறுகள் அலி சப்ரிக்கு தெரியவில்லையா? இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள் பற்றியாவது அலிக்கு தெரியுமா? அதிலும் தெருக்களில் சென்ற ஆண்களின் சாரங்களை தூக்கி அடையாளம் பார்த்த நிகழ்வுகளாவது அலிக்கு தெரியுமா?
-
அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
அர்ச்சுனா போனால் அவரின் தங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்ப சட்டங்கள் அனுமதிக்குமா? 😎
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எல்லாம் தேர்தல் அரசியலுக்காக நடத்தப்பட்ட நாடகங்கள். இது எல்லா நாடுகளுக்கும் தெரிந்த விடயம். கிந்தியா கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கும் நாடு. அதன் கள்ள கருமாந்திர நரி வேலைகள் யாவரும் அறிந்ததே.
-
தமிழ் நாடு எப்படி இவ்வளவு விரைவாக வளர்கிறது? வைரல் ஆகும் டிவிட்டர் கேள்வியும், பதிலும்
ஒரு நாட்டில் இயற்கையான பொருளாதார வளம்/வருமானம் இருந்தால் சகலதும் சுபமே.