குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
Everything posted by குமாரசாமி
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபமும் புகழ் வணக்கங்களும்... ஒம் நமச்சிவாய 🙏
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
இல்லை. அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் நான் கோபப்படுவதே இல்லை. சரி மன்னிப்பும் தேவையில்லை. அந்த நடிகனை தேடி வந்தவர்கள் உயிரிழந்ததிற்கு உடனடியாக அனுதாபங்களை தெரிவித்திருக்கலாம். இதற்கும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் உங்களைப்போன்ற விஜய் ரசிகர்கள் மீதுதான் கோபம் வருகின்றது. கரூர் மரணத்திற்கான காரணங்கள் வரும் வரைக்கும் அனுதாபங்களும் அஞ்சலிகளும் காத்திருக்கட்டும். இதற்கும் தமிழ்நாட்டு பட்டிமன்ற பாணியில் பாட்டு வேற போடுகின்றீர்கள்?!?!?!?! அது சரி உங்கள் அபிமான நடிகர் ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன? அவரின் மாற்று அரசியல் கொள்கை என்ன? ஒவ்வொரு கட்சியிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கி எழுதி வைத்து அரசியல் மேடை விண்ணாணம் செய்கின்றார். இதில் கொடுமை என்னவென்றால் சீமானின் அரசியல் வசனங்களைத்தான் திரைப்பட பாணியில் பேசுகின்றார் இந்த ஜோசப்பு விஜய்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கூட வேலை செய்பவனின் தந்தை ஒரு சமையல்காரன் என அறிந்த கோவிந்தன் அவனை நக்கலாகவும் ஏழனமாகவும் பார்த்து சிரித்து விட்டு...தாய் சமைத்து கட்டித்தந்த சோத்து பார்சலை விரித்து வைத்து ஆகா ஓகோ என ரசித்து உருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
-
இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா
ரஷ்யா, சீனா, மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் தமக்கென புதிய பாதையை அமைக்க தொடங்கி விட்டார்கள். இதனால் அமெரிக்காவிற்கு பெரிய வேலை இருக்காது என நினைக்கின்றேன்.இதில் தென் அமெரிக்காவும் கூட்டு சேர இன்னும் சிறப்பு.😃 சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைக்கும் அமெரிக்கா.😎
-
இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
அவர் மீது உங்களுக்கு அப்படி என்ன தனிப்பட்ட கோபம்? மக்களால் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட ஒரு அரசியல்வாதியின் காலம் மூன்றோ நான்கு வருடங்கள் மட்டுமே.அதன் பின் அவரை நிகாரிப்பதோ அல்லது மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதோ வாக்காளர்களின் கடமை. இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் சாதித்தது என்னவென்று உங்களால் சொல்ல முடியுமா? அதேபோல் இவர் முதல் தடவையாக வந்திருக்கின்றார். என்ன செய்யப்போகின்றார் என பார்க்கலாம். அதன் கருத்து மழை பொழியலாம்.😎 ஒரு பழமொழி ஒன்று இருக்கின்றது.அதை உங்கள் மேல் இருக்கும் மரியாதையால் இங்கு எழுதவில்லை.
-
ரஷ்யாவின் கலப்பினப் போரை (Hybrid war) எதிர்கொள்வதற்கான இராணுவ விருப்பங்களை நேட்டோ விவாதிக்கிறது - FT
வெளிப்படையாக இன்னுமொரு உலக யுத்தம் வருமாயின்...... புல் பூண்டு முளைக்காத ஹிரோஷிமா-நாகஷாகி போல் ஜேர்மனியும் வரும்.இரண்டாம் உலக யுத்த அழிவுகளின் பின் மூன்று இலை முளைத்து தளிர் விட முதல் உக்ரேன் சம்பந்தமாக போர்க்குண அரசியல் செய்கின்றார்கள்.😂
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
சேகுவாராவின் கொடியையும் தூக்கி அவர் கொள்கையையையும் கடைப்பிடித்து இனக்கொலை செய்தவர்களையும் இனத்திற்கு எதிராக நிற்பவர்களையும் கண்டு கொள்ளாமல் கடல் கடந்து உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் புனித்தை தேடுகின்றீர்கள்?! அதே போல் கம்யூனிசத்தை கடைப்பிடிப்பவர்கள் கூட இன வெறியை வாந்தி வாந்தியாக எடுக்கின்றார்கள். அங்கே உங்கள் புனிதம் தேடும் மூளை வேலை செய்யவில்லை.சிங்கள பாதிரியார்கள் உட்பட..... சீமான் செய்த தவறை(என் பார்வையில் தவறு அல்ல) விட பலம் வாய்ந்த கட்சிகாரர்களும் பணபலம் மிக்கவர்களும் இன்றும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அங்கே எல்லாம் புனிதர்களை தேடவும் மாட்டார்கள்.சித்திரங்களும் வரைய மாட்டார்கள். காரணம் பணபலம் மக்கள் பலம் அதிகார பலம் வாய்ந்தவர்கள். போட்டு தள்ளிவிடுவார்கள் என்ற பயம். கொள்கை பலம் அறவே இல்லாத அரசியல் கூட்டங்கள்.
-
இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
சற்று முன்னர் ஜேர்மனிய நாளிதலில் கொட்டை எழுத்துக்களில் வந்த செய்தி..😂 Norwegen zittert vor Trump Drohen neue Zölle? Der norwegische Journalist Harald Stanghelle (69) vermutet, dass die Vergeltung von Trump in verschiedenen Formen kommen könnte: als Zölle, als Forderung nach höheren Nato-Beiträgen oder sogar Norwegen zu einem feindlichen Land zu erklären. Vom „Guardian“ wird er zitiert: „Er ist so unberechenbar. Ich will das Wort Angst nicht verwenden, aber es könnte eine herausfordernde Situation werden. Es ist sehr schwierig, Donald Trump zu erklären, dass es sich um ein völlig unabhängiges Komitee handelt.“ டிரம்ப் முன் நார்வே நடுங்குகிறது😂 புதிய வரிகள் விரைவில் வரவிருக்கிறதா?😂 டிரம்பின் பழிவாங்கல் பல்வேறு வடிவங்களில் வரக்கூடும் என்று நோர்வே பத்திரிகையாளர் ஹரால்ட் ஸ்டாங்கல் (69) சந்தேகிக்கிறார்: வரிகள், அதிக நேட்டோ பங்களிப்புகளுக்கான கோரிக்கைகள் அல்லது நோர்வேயை எதிரி நாடாக அறிவிப்பது கூட. அவர் கூறியதாக கார்டியன் மேற்கோள் காட்டியது: "அவர் மிகவும் கணிக்க முடியாதவர். நான் பயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அது ஒரு சவாலான சூழ்நிலையாக இருக்கலாம். இது முற்றிலும் சுதந்திரமான குழு என்பதை டொனால்ட் டிரம்பிற்கு விளக்குவது மிகவும் கடினம்." செய்தியின் மூலத்தளம்
-
இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
வாற வருசமும் நோபல் பரிசு குடுப்பினம் தானே. அப்ப பாப்பம் 😂
-
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !
இவர்கள் செய்யும் பேய்க்காட்டல்களினால்த்தான் இதய பூர்வமான தமிழின விசுவாசிகள் சிங்கள கட்சிகளை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். இன்றுவரை ஒரு சதத்திற்கும் உதவாத சுமந்திரனை ஏன் தான் தலையில் வைத்து கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை.
-
இஸ்ரேல் - ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு கையெழுத்து: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
டொனால்ட் ரம்ப் அவர்களே! நீங்கள் என்னதான் ஆரியக்கூத்தாடி காரியத்தில் கண்ணாய் இருந்தாலும் நோ நோபல் பிறைஸ் 😜
-
காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி
இதெல்லாம் பெரிய முதலாளிகளுக்கான கணக்கு.😎 என்னைப்போல ஆக்களுக்கு லீட்டருக்கு ஒரு சதம் குறையும் அவ்வளவுதான்.☹️
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
மேற்குலகில் உணவு,அன்றாட பாவனை பொருட்கள் எனும் விடயங்களில் கற்காலத்தை நோக்கியே போகின்றார்கள். பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை.இரசாயனம் கலந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்போகின்றார்கள். நீங்கள் குறிப்பிடும் காலம் கற்காலமல்ல.நற்காலம். அந்த கோப்பயை கழுவ பயன்படுத்தப்படும் இரசாயன அழுக்கு நீக்கியின் பக்க விளைவுகள்,எதிர் வினைகள் பற்றி ஏதாவது தெரியுமா?பெரிய ஹொட்டல்களில் கோப்பை கழுவப்படும் அல்லது பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்படும் அந்த கெமிக்கல் மருந்துகள் கையில் பட்டாலே எரிக்கும் தன்மை கொண்டவை. எப்படி கழுவினாலும் அந்த கெமிக்கல்கள் பாத்திரங்களை விட்டு அகலாது.எல்லாம் சாப்பாடுடன் சேர்ந்து எமது வயிற்றுக்குள் தான் போகும். ஊர்களில் ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தாலும் அவரவற்கு என சொந்த கோப்பை இருக்கும். அதில் அண்ணன் தம்பியானாலும் சரி அக்கா தங்கச்சியானாலும் சரி ஒருவர் கோப்பைய மற்றவர் தொடமாட்டார்.அவ்வளவிற்கு சுத்த பத்தம். கோப்பைய சாம்பல் போட்டு கழுவினாலும் பழப்புளி போட்டு மினுக்கினாலும் சொந்தக்கோப்பை சொந்த கோப்பை தான் அதை யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டம்.😂
-
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….
இந்தியா இதை அன்று தொடக்கம் செவ்வனே செய்து வருகின்றது. இதனால் தான் இந்தியனே இந்தியாவை நம்புவதில்லை.
-
யாழில் “அணையா விளக்கு” நினைவுத் தூபி உடைக்கப்பட்டது!
தமிழினத்திற்கு விசமிகள் யார் என்றால் எல்லாம் பக்கத்து வீட்டு அண்ணன் தம்பிகள் தான்...
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
என்ரை கடவுளே! மன்னிப்பு என்பதை வைத்து எந்தெந்த சம்பவங்களை எதனோடு வைத்து சிண்டு முடிகின்றார்கள் பாருங்கள்!!!!!!? சீமான் கேவல பேச்சாளர் விஜயலச்சுமியிடம் மன்னிப்பு கேட்டாலும் கேட்டார் அவ்வளவுதான் நம்ம ஈழத்து தம்பிகள் கொதித்து போய் விட்டனர். மன்னிப்பை விட வேறு என்ன எதிர்பார்கின்றார்கள் என தெரியவில்லை. பலவருட காலமாக இருமனம் ஒருமனமாக குடும்பம் நடத்தியவர்கள். பிரிந்து விட்டார்கள். அதைப்பற்றி பெரிதாக பேசப்படவுமில்லை. உடனடியாக விசய லச்சுமி வழக்கு போடவுமில்லை.ஆச்சடா போச்சடா என வீடியோக்களும் போடவில்லை. சீமானின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் விசய லச்சுமியை ஏவி விட அவரும் காசுக்காக கொக்கரிக்க வெளிக்கிட்டார். கதை அவ்வளவுதான். தங்கள் கருத்து வெற்றிக்காக ஒரு இனத்தை அழித்தவர்களை சீமானின் மன்னிப்புடன் எப்படி கொண்டுவந்து செருகுகின்றார்கள் பார்த்தீர்களா? சீமான் விசயலச்சுமியுடன் கூடி வாழ்ந்த செயல் அநேக நடிகர்களும்,அரசியல்வாதிகளும் சர்வசாதாரணமாக செய்யும் செயல்தான்.சீமான் ஒன்றும் புதிதாக அதிசயம் செய்து காட்டவில்லை. என்ன ஒன்று வந்த செய்திகளை அடக்க ஊடகபலம் இல்லை. கட்சி பலம் இல்லை. ஏனைய பெரிய கட்சிகளில் இருப்பவர்களின் உள்வீட்டு விடயங்களை வெளியில் விட்டால் போட்டு தள்ளிவிடுவார்கள். இல்லையேல் பாத்ரூமில் வழுக்கி விழ வைத்திருப்பார்கள். அதே போல் பெரிய நடிகர்கள் விடயத்திலும் ஊடகங்கள் கப்சிப் ஆக இருக்கும். இதற்குள் ஏன் அந்த அமெரிக்க பாடகரை கொண்டு வருகின்றார்கள் என தெரியவில்லை? Puff Daddy அவர் இசைத்துறைக்கு வந்த நாள் முதலே சர்ச்சைக்குரியவர். பெண்களை தாக்குபவர். சீமான் அந்த வகையில் இல்லை.Puff Daddy தன்னுடன் இருக்கும் பெண்களை தனிப்பட்ட விருந்துகளில் நிர்வாணமாக்கி அழகு பார்ப்பவர்.நண்பர்களுடன் இருக்கும் போது தன் தோழிகளை அரை நிவாணத்தில் நிற்க வைத்து சீண்டல் செய்பவர்.அந்த பாடகர் துப்பாக்கி சூடுகளை நடத்தியவர்.பெண்களை தாக்குபவர் சீமான் அப்படியானவர் அல்ல..இன்றைய முன்னணி பாடகிJennifer Lopez ஐ கூட ஆரம்பகாலங்களில் அரை நிர்வாணமாகத்தான் வைத்திருப்பாராம். மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. சீமான் குற்றம் செய்தவராக இருக்கலாம்.(என்னைப்பொறுத்தவரை இல்லை) ஆனால் இங்கே முழுகுற்றவாளி போல் கருத்து எழுதியதெல்லாம் ஒருவகை அரசியல் காழ்ப்புணர்வு மட்டுமே என நான் நினைக்கின்றேன். இந்திய/தமிழ்நாட்டு அரசியலில் மதுவும் மாதுவும் முக்கிய அம்சம்.சிக்கினால் சிக்கல் சிதம்பரம்.சிக்காவிட்டால் மானஸ்தன். இதே போல் தான் இந்திய சினிமா உலகும். அதிலும் தமிழ்நாட்டு அரசியலில் மாதுகள் பேரம் பேசப்படும்.
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
ஓமோம் விஜயின் அரசியல் கூட்டத்துக்கு வந்த சனம் முழுக்க வாக்குரிமை உள்ளவையும் வாக்காள பெருமக்களும் தான்.அவ்வளவு சனமும் வோட் பண்ணி நடிகன் ஜோசப் விஜய் நேரடியாய் முதல்வர் கதிரையில குந்தி இருப்பார். இவ்வளவு சனம் செத்தும் சம்பந்தப்பட்ட உறவினர்களை போய் சந்தித்தும் மன்னிப்பும் கேட்டும் ஆறுதல் சொல்லாதவனுக்கு முதல்வர் பதவி ஒரு கேடு. மன்னிப்பு கேட்க்கக்கூடாது அது மரியாதை கெட்ட வேலை எண்டு ஈழத்தமிழர் யாராவது விஜயின்ர காதில ஓதியிருக்கலாம் யார் கண்டார்? விஜய் ஈழத்து மருமோன் எண்டது ஒரு பிளஸ் பொயின்ற் கண்டியளோ 😂
-
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !
இலங்கையில் எத்தனையோ தமிழ்கட்சிகள் இருக்க இந்த ஊத்தைவாளிகளை தேடி வெளிநாட்டு பிரதிநிதிகள் தேடிவந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மர்மம் என்ன? இந்த கேள்வி 40 வருட கால அனுபவத்தில் வந்தது.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
அதைப்பற்றி உங்களுக்கு ஏன் தேவையில்லாத கவலை? யாழ்களத்தில் இருக்கும் சிங்கங்கள் உண்மைகளை ஏற்பவர்கள்.ஜால்ரா போடுபவர்கள் அல்லர். தூசண விஜயலட்சுமிக்கு ஜால்ரா போடுபவர்கள் இல்லை.அவரது பொது வெளி காணொளி பேச்சுக்களை கேட்டு பார்த்த பின்னரும் அவருக்காக வக்காளத்து வாங்குபவர்கள் இங்கேயும் இருக்கின்றார்கள் என்பதை எண்ணி வெட்கி தலை குனிகின்றேன். ஏன் உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்? இந்தியா சம்பந்தப்பட்டதெல்லாம் பிடிக்காதெல்லோ! அது அவர்கள் அரசியல். வாருங்கள் ஈழ அரசியல் பேசி மகிழ்வோம் உங்கள் அன்பிற்குரிய விஜயலட்சுமி சீமானை கீழ்தரமாகவும்,தூசண வார்த்தைகளாலும் பேசியதை குறித்து உங்கள் கருத்து என்ன? அது பற்றி உங்கள் செல்லம் விஜயலச்சுமி மன்னிப்பு கேட்டாரா? என்ன சார்! உங்க மதிப்பீட்டிற்கு அளவே இல்லையா? அதென்ன ஆனானப்பட்ட? ரொம்ப ரொம்ப கொடுமைக்காரன் சார் நீங்க..😂
-
தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் - ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை
உவர் நீர் தடுப்பணையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தடுப்பு பாலம் கட்டலாம்.கோடைகாலத்தில் பூட்டி விட்டு மாரிகாலத்தில் திறந்து விடலாம். இப்படிக்கு.. அந்த இடத்தில் அடிக்கடி கால் நடையாக சென்றவர்.😜
-
தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!
இனிவரும் காலங்களில் மதம் சம்பந்தமான கொண்டாட்டங்களுக்கு விடுமுறை வேண்டும் என்பவர்கள் தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சம்பளம் கிடைக்காது என ஒரு அறிக்கையை விட்டுப்பாருங்கள்.ஒரு காக்கா குருவி கூட லீவு எடுக்காது. 🤣
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
என்ரை கவலை என்னெண்டால்...... இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂 அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
நல்லதொரு விடயம். சுற்றச்சுற்றாடலுக்கு உகந்த விடயம். தாமரை இலையில்,வாழை இலையில் சாப்பிடும் போதெல்லாம் மனதிற்கு குளிர்ச்சியும் சந்தோசத்தையும் தரும். 💚 இது என் சொந்த அனுபவம் மட்டுமே☝. ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.😎
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
"மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்" என்பது, தவறு செய்த ஒருவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது மிகவும் உயர்வான பண்பு என்பதைக் குறிக்கிறது. இந்த பழமொழி, தவறு இழைத்தவர்கள் அனைவரும் மனிதர்கள் என்றாலும், அவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் கொண்டவர்களே மாமனிதர்கள் அல்லது பெரிய மனிதர்கள் என்பதை வலியுறுத்துகிறது. தவறு செய்வது இயல்பு, மனித இயல்பு அது. ஆனால், அந்த தவறை உணர்ந்து, அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது என்பது, ஒருவரின் பெருந்தன்மை மற்றும் மனிதநேயத்தைக் காட்டுகிறது. சீமான் அவர்கள் விஜயலச்சுமியுடன் தொடர்பில் இருக்கவில்லை என எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.மனைவி துணைவி என மக்களை பேய்க்காட்டவுமில்லை. எனவே மன்னிப்பு என்பதன் மூலம் சீமான் உயர்ந்து நிற்கிறார்.💪
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
சமூகம் சார்ந்த நல்லதொரு இணைப்பு. விவசாயியாக வாழ்ந்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்ததுண்டு.அதாவது யாரையும் கையேந்தி வாழாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பது.❤️ மற்றும் படி..... நானறிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.சில நாடுகளில் தடையும் உண்டு. கூடுதலாக மழைநீரை நீர்த்தேக்கங்களில் சேகரித்தே நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு கூரையிலிருந்து வழிந்து வரும் மழை நீரை சேகரித்து வீட்டுத்தோட்டம் மற்றும் பூ மரங்களுக்கு பாவிப்பார்கள். அது சரி.... சேகரித்த மழை நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிக்க முடியுமா?