Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. நல்லா திண்டு, படுத்தெழும்பி, தொப்பை வண்டியோட சமஸடி பற்றி அலம்பறை பண்ணுற இந்த ஈர வெங்காயத்துக்கு யாராவது சொல்லுங்கப்பா தெற்கில சீனனும், வடக்கு கிழக்கில இந்தியனும் வந்திட்டாங்கள், கிடந்து நுழையிற கள்ளருக்கு, கீழால நுழையிற எமகாதக கள்ளன் மாதிரி, அமேரிக்கன் கிழக்கில பூர நிக்கிறான். இந்த நட்டு கழண்டது எங்கையோ நிக்குது. 🤦‍♂️
  2. அடங் கொய்யால கோத்தாவை இறக்கி, இவரை ஏத்தினது அமெரிக்க வல்லரசு என்று சொல்ல மாட்டாரே. மௌனித்திருக்கும் நரி
  3. அடக் கோதாரி... 52 பேர் பார்த்துப்போட்டு நித்தி கதைக்கு ஓடி விட்டினம். மகிந்த செய்தியை ஏப்பிரல் பூல் செய்தியாக எடுக்கவும் தயாரில்லை. அவ்வளவு நம்பிக்கை. 🤣🤦‍♂️
  4. அவர்களை பொறுப்பில் எடுக்க, நம்ம உடான்ஸ் சுவாமிகள், கிளிநொச்சிக்கு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். 😁
  5. அது அரசியல் தொடர்பு கொண்டவர்கள். ஊரில பணக்காரர்கள் என்று பீலா விடுபவர்கள் மீது. இது சாதாரண பொதுமக்கள். பயம் வர காரணம் இருக்க முடியாதே. 👍
  6. இன்று காலை ஜனாதிபதி ரணிலை சந்தித்த மகிந்த, நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தேசசத்தின் சிதைந்து போயுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னாலான அணைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார். கடன் வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதால், நாடு வேறு வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்என்றார். மகிந்தவின்இந்த முன்னெடுப்பு, அரசியல், ராஜதந்திர வட்டாரத்தில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. முன்னர் போல இனவாத அரசியல் செய்து கொண்டே, சர்வதேச ராஜதந்திர அரசியலுக்கு வாய்ப்பில்லை என்பதால், அரசியல் ஜாம்பவனான மகிந்த, பசுத்தோல் போர்த்தியவாறு கிளம்புகிறாரோ என்ன தமிழ் பத்திரிகையாளர் கருத்து தெரிவித்தார். எதுவாயினும் நல்லது நடந்தால் சரிதான்.
  7. வற்றிய குளத்தை பறவைகள் நாடி வருவது கிடையாது. வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது உறவுகள் கிடையாது. பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் பலன் ஒன்றும் கிடையாது… உப்புத் தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பு செய்தவன் தண்டணை பெறுவான்!
      • 1
      • Haha
  8. கிஸ்புல்லா தமிழர் காணிகள் எப்படி மடக்கினார் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே. சம்பந்தரின் நல்லிணக்க அரசியலில், பியசேன எம்பியானதும், இந்தாள் கிழக்கு முதல்வரானதும் தான் கண்ட மிச்சம்.
  9. மோகன் அண்ணை, 100% ஒதுங்கி, ஓய்வெடுக்காது, வேண்டாப்பிள்ளையை தத்துக் கொடுத்து விட்டுப் போன அப்பா போல இராமல், அப்பப்ப, குறைந்தது மாதம் ஒரு முறையாவது வந்து, குரல் விட வேண்டும். என்னப்பா, எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா என்றாவது விசாரித்துப் போகவேணும். 🙏
  10. என்னப்பா, எங்கண்ட அமேரிக்கன் எல்லாரும் வந்திட்டினம். இவர் ஆள் அப்படி இப்படி தான். ஆனால், புட்டினை ராசதந்திரத்தால வெட்டியாட தன்னை விட்டா யாருமில்லையாமே!
  11. நான் ஆரம்பத்தில், வாஸ்கொட காமா குறித்து கேட்டேன். அவர் இந்தியாவை வந்தடைந்த நாள் எல்லாம் சொல்லியது. ஆனால் இந்தியா என்ற நாடு அப்போது இருக்கவில்லையே என்று சொன்னால், நீ சொல்வது சரியானது, பிரிட்டிஷ்காரர் உருவாக்கும் வரை இந்தியா இல்லை. அநேகமாக இந்திய துணைக்கண்டம் என்பதே சரி என்கிறது. ஆகவே, உரையாடலுக்கு, சரியான பதிலை தருகிறது என்பது வியப்புக்குரியது. உங்கள் அடுத்த கதைக்கான கருவினையும், அது குறித்த உரையாடல்களையும் நீங்கள் செய்து கொள்ள முடியும் என்பதால் அதன் உபயோகம் நீங்கள் முயலும் போதே தெரியும்.
  12. தகவல் தொழில் நுட்பவியல் புரட்சி. இது கல்வியளாளர்கள், மாணவர்கள், content creators போன்றவர்களை பரவசப்படுத்துகிறது. வணிகவியலில் எப்படி பயன்படும் என்பதை காலம் சொல்லும்.
  13. இதை இப்படி பாருங்கோ. எனக்கு ஏதாவது தகவல் தேவை எண்டால், உங்களிடம் கேட்டால், தேடி தருவீர்கள். அது தவறு என்றால், அப்படியா? வருந்துகிறேன், என்று சொல்லி, மீண்டும் தேடி தருவீர்கள். ஆனால், உந்த கடையில், பன்றி இறைச்சி கிடைக்கும் என்று சொல்கிறீர். அதை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் தாரும் என்றால், நான் இருப்பது, லண்டனில், நீங்கள் இருப்பது கனடாவில் என்று சொல்வீர்கள். இப்போது இந்த டெக் ஜாம்பவான்கள் சிந்திப்பது எப்படி தெரியுமா? என்னையும், நான் கேட்ட அந்த பன்றி இறைச்சியையும் இணைத்து, பணம் பார்ப்பது எப்படி என்று😄 ஆனால், இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், இந்த AI hype இலவசமாக இருக்கும் வரை தான். மாசம் $10, அல்லது $20 எண்டால், வேணாம், நான் கூகுளை கிளறுகிறேன் என்று கிளம்பி விடுவார்கள்.
  14. Y2K என்று போட்டுத் தாக்கினார்கள். புஸ்வானமாகியது. இப்ப இப்படி உருட்டுகிறார்கள். தகவல் தொழில் நுட்பத்தில் மாறுதல். அதை எப்படி கையாளுவது என்பதை புரிந்தவனுக்கு வேலை.
  15. கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் - அன்று கடன் பெற்று விட்டோம் என்று களிப்புற்றார் இலங்கை வேந்தன் - இன்று
  16. எம்ஜியார் தொப்பி, கண்னாடி, சால்வை போட்டு வந்த அழகைப் பார்க்க வேணுமே!
  17. அடுத்தவன் மொக்கன் என்று நினைப்பது மனித இயல்பு. மோட்டு சிங்களவன் என்பது போல. அந்த வகையில் ஒரு இங்கிலாந்து ஜோக். ஐரிஷ் காரர் ஒருவர் £1 னை கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிப்போட்டார். பல மில்லியன் காசு விழுந்துட்டுது. மகிழ்வுடன் கொண்டாடி, தாரை, தப்பட்டை உடன், நல்ல தண்ணியில போறார் பரிசு வாங்க. அவர்கள், வாருங்கோ... விசயம் என்ன எண்டா, முழுக்காசும் உங்களுக்கு வராது. மாசம் £25,000 படி 10 வருசத்துக்கு என்று தான் வரும். ஆளுக்கு பேக் கொதி வந்துட்டுது. நீங்களும், உங்கட சுத்துமாத்துக்களும்... உண்ட டிக்கெட்டை நீயே வைத்திரு. எண்ட £1 னை மரியாதையா திருப்பி தந்துடு. நான் வாங்கிக்கொண்டு கிளம்புறன். 🤣😁
  18. என்ற புரக்கிறாசி சிநேகிதரை கட்டிலால எழுப்பி விசாரிச்சன். இதில மனிசிட முக்கிய வாதம், வெள்ளையா காட்டிறது தான் பரிசு எண்டு எங்க சொல்லியிருக்குது? Match any of the winning numbers to any of your number to win prize. இந்த வசனத்தை பிரட்டி நிமித்தி, பிச்சுப் பிடுங்குகினம். அநேகமா, மனிசி வெல்லக் கூடும். மொத்தமா, £1,000,010 + வழக்குச் செலவு.
  19. பிரிட்டனில் தேசிய அதிஸ்ட சீட்டிப்பு அமைப்பான தேசிய லாட்டரி, குலுக்கள் மட்டுமல்லாது சுரண்டல் ரிக்கற்றும் விக்குது. ஓன்லைன்ல வாங்கி, அங்கையே சுரண்டி பரிசு விழுந்திருக்கா எண்டு உடனயே அறியலாம். ஒரு வெள்ளையம்மா ரிக்கற்றை வாங்கியிருக்கிறா. என்ன பஞ்சாயத்து எண்டு நீங்களே பாருங்கோ. அதாவது கீழே இருக்கிற உங்கள் நம்பர், மேலஇருக்கிற அவயட நம்பரோட பொருந்தினால், எது வெள்ளையா கம்பூட்டர் காட்டுதோ அதன்படி பரிசு. அவோ, 1 ம் பொருந்துது, ஆக பத்து பவுணா தர நிக்கிறியள், சேர்ப்பில்ல, ஒரு மில்லியன் எண்ணி வையுங்கடா எண்டு நிக்க விசயம் கோட்டில போய் நிக்குது. ரிக்கற் வேண்டி சுரண்டின இரவு கம்பனி சேவர்கம்பூயீட்டரில தொழில் நுட்ப கோளாறு எண்டு உள்வீட்டு விசயத்தை துப்பறிந்து, கோட்டில சொல்லிப் போட்டா. கம்பனி புறக்கிறாசிமார், முன்னரே தீர்மானிக்கப்பட்ட வெற்றி. ஆகவே பத்துப் பவுண் தான் என்கிறார்கள். மனிசிட புறக்கிறாசிமார், அது சேர்ப்பில்ல, நம்பர்களில் இரண்டு பொருந்தக் கூடியதாக செற் பண்ணியதே தவறு. அந்த தவறை மறைக்க கம்பியூட்டரில் பழி போட ஏலாதே. கம்பூட்டர் முடிவு செய்ய, மனிதர் கொடுத்த தரவுகளே காரணம். இங்கே இரு இலக்கங்கள் பொருந்துவதை அறியாத மனித தவறு நடந்துள்ளது. ஆக அம்மணி பரிசு ஒரு மில்லியனும், வழக்குச் செலவும் வேணுமாம். சரி, வாருங்கோ, நியாயப்பிளப்புக்கு.... எங்கப்பா @goshan_che@தமிழ் சிறி@குமாரசாமி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.