Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. நொச்சி, வெள்ளைக்காரர் கிளம்ப முதல், இந்தியாவில் இருந்து வெட்டிக்கொண்டு ஓடிய முதல் நாடு பர்மா. பின்னர் சுதந்திரம் வாங்க முதல் ஓடியது பாகிஸ்தான். அத்துடன் சேர்த்து கிழக்கு பாகிஸ்தானாக கிளம்பி ஓடியது இன்றய பங்களாதேஸ். ஆக, படித்த முட்டாள்களாக, எமது தமிழ் தலைமைகள் சிங்கள தலைமைகளினால் ஏமாத்தப்பட்ட நிகழ்வின் துயரமே இன்றும் தொடர்கிறது. பிரித்தானியா இனி மீண்டும் வரவோ, இந்திய பேரரசினை மீறி, ஆதிக்கம் செலுத்தவோ சந்தர்ப்பம் இல்லை. ஆயினும் அமெரிக்கா நினைத்தால் நீங்கள் சொல்வது நிகழும். அப்படி நிகழ, சீனாவின் முனைவால், இந்தியா வேறு வழி இன்றி அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளின் முனைவுக்கு வழக்கம் போலல்லாமல் வழி விட வேண்டும். ஆக, இன்றய நிலையில் சீனாவே எமது நண்பன்.
  2. நாட்டின் அரசியல் அமைப்பு சொல்வதை இவர் தடுக்க முடியாதே...🤔
  3. உங்கை seven sisters tube ஸ்டேஷன் முன்னால் ஒரு மலையாளி இருக்கிறார். போனால், முதலில் ஒரு கோவணத்துண்டு (புதுசு தான்) தருவார். அதை போட்டுக்கொண்டு போய் நிண்டால், மனிசன் எண்ணையை பூசி, படுக்க வைச்சு முதுகில காலால மசாஜ் பண்ணி, சோனாவிலே ஒரு மணித்தியாலம் இருக்க வைச்சு, குளிக்க வைச்சு, ஒரு £50 உருவிக்கொண்டு விடுவார், பாருங்கோ... அது....👍
  4. கெஹலிய சொல்லிப்போட்டார்.அது பொய் கதை எண்டு. இப்பத்தான் நிம்மதி. கலதாரில்ல சுது நோனாவை பார்க்கேலாமல் போடுமோ எண்டு யோசிச்சுக் கொண்டு இருந்தன். 😜 😁
  5. இந்தாளுக்கு மறை கழண்டு போட்டுது. ஜயா, உங்கண்ட மக்களாணை மொட்டுக் கட்சி தானே அரசாங்கம். 🤦‍♂️
  6. நாலு ரசியாகாரர்?🤔 புட்டினோடை கொழுவின ஆட்கள் ஒருத்தர் இருந்தாலும், புட்டின் வேலையாயிருக்கும் 😎
  7. இது இழுத்து மூடப்படவில்லை. வங்கியோ, அரசோ உதவாத நிலையில், அங்குள்ள பணம் இருப்பவர் கைக்கு மாறுவது வழக்கமான நிகழ்வுகள். அதன் அர்த்தம் புலம் பெயர் தமிழருக்கான முதலீடு செய்வதற்கான அழைப்பல்ல. வாரிசு செய்ய விரும்பாத இந்தியர்களின் தெரு முணை (கோணர் சொப்) கடைகள் தமிழர் வாங்குவது பிரித்தானியாவில் வழக்கம். அதை கனடாவில் இருக்கும் ஒருவர் வாங்க முணைவதில் அர்த்தம் இல்லை. இந்த ஆலைகள் பிரச்சணை பணமல்ல. கோத்தாவின் உர தடையால், நெல் உற்பத்தி குறைந்து, இவர்களது மூலப்பொருள் இல்லாமல் வியாபாரம் நலிந்து போனதால் கை மாத்துகிறார்கள். வெளிநாட்டு பணம் இதில் எவ்வாறு உதவமுடியும்? வாங்கி பூட்டி வைக்கலாம் அல்லது மூலப்பொருள் கிடைக்கும் வரை வேலை ஆட்களுக்கு சும்மா சம்பளம் கொடுத்து திறந்து வைத்திருக்கலாம்.
  8. சக்கி சாமியார் போல, இந்த உடான்சு சுவாமியாரும் புரியாத புதிர். 😁 நானும் சாமியார் ஆவப் போறேன்... குமாரசாமியாரை, குருவாக ஏற்று..... 😎
  9. புக்க இல்லை, புற்கை (நன்றி தனியர்) ரிசி செய்தி, தமிழர் எண்டு சொல்லாமல், பொங்கல் கொண்டாடுற (புக்கை அடிக்கப்போற) எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். முதல் தரமாக அவுஸ்திரேலியா பிரதமரும் வாழ்த்தி இருக்கிறார். நாளை ஞாயிறு லீவு எண்ட படியால, கரோவில சனம் வீட்டுக்கு முன்னம் அல்லது காடினுக்குள்ள பொங்கல் வைக்க அலைமோதுகினம். சிலர் வெடி போட ரெடி. நம்ப பக்கத்து வீட்டில் இருக்கும் வெள்ளை புக்கை அடிக்க ரெடி. 😎
  10. ஒரு typo ப்ரோ. 🤦‍♂️ திண்ணையில வலு பிஸி எண்டு பார்த்தால், உங்கை, நிக்கிறியள்? 😁 எப்படி பொங்கல் விசேசம்? 👍 BIA = Business Investment Advice 😎
  11. உங்கள் கருத்து புரிந்தாலும், அனுராதபுரம் போன்ற இடங்களில், நீங்கள் முதலிட, பிரச்சனை என்று வரும் போது, நெருப்பு எடுத்துக்கொண்டு வருபவன், அடுத்தநாள், வேலை இல்லாமல், சாப்பாடு இல்லாமல் தடுமாறுவது குறித்து கவலைப்படாமல், உள்ளே வேலை செய்பவன். இதனை 58, 77, 83 எல்லாம் நன்றாக பார்த்தபின்னும் புத்தி வரவேண்டாமா? தீர்வு வந்தால், சகலருக்கும் நன்மை என்ற புரிதல் சிங்கள அரசுக்கு வரும் வரை, வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் புலம் பெயர்ந்தவராக, முறையாக அனுமதி பெற்று, அரசு அனுமதித்துள்ளவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. (BIA). அப்படி இருந்தும், தமிழக அரசியல்வாதி ஜெகதரட்சகன், அவரது மனைவி, மகள் இலங்கையில் முதலிட அனுப்பிய 1000 கோடி மகிந்த கம்பெனியால் கோவிந்தா.
  12. ராணுவம் - மெதுவாக ஊசி அடிக்கும் ரணில் அடுத்த ஆண்டுக்கு முன்னர் இலங்கை இராணுவம் 200,000 ல் இருந்து 135,000 ஆக குறைக்கப்படும். https://www.dailymirror.lk/breaking_news/SL-Armys-strength-to-be-trimmed-from-200-000-to-135-000-by-next-year/108-252123 படிப்படியாக குறைக்கப்பட்டு, 2030ம் ஆண்டளவில் 100,000 அளவில் மட்டுப்படுத்தப்படும். இது வெளியே சொல்லப்படாத, உலக வங்கியின் நிபந்தனை என்று சொல்லப்படுகிறது. @நியாயத்தை கதைப்போம் வீட்டுக்கு அனுப்பும் ஊசி. பெரிய பட்ஜெட்டை போட்டு, உங்களுக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லிப் போட்டு, திரத்தினா, என்ன நிலை? அரசுக்கு எதிராக போராடுவார்கள் என்று மெதுவாக ஊசி அடிக்கிறார்.
  13. birthday இந்தமாதிரி வருகுது எண்டால்...சீதனம்? சொல்லி வேலை இல்லை. 😜 இதைத்தான் சொல்லுறது, தம்பியன் பிடிச்சாலும் பிடிச்சான், புளியம் கொப்பை எல்லோ பிடிச்சான். 🧐
  14. இரண்டு காதிலயும் நல்லா பஞ்சை இறுக்கமா சொருக்கிக் போட்டு போய் குந்தி இருந்து சிரிச்சுப் போட்டு வந்திருப்பார். 😁
  15. மொக்குப்பயல்..... வடக்கு, கிழக்கு பக்கத்தில புத்தர் அவ்விடம் வந்தவர் எண்டு கனவிலை வந்து சொன்னவர் எண்டு கதை விட்டு, கட்ட வெளிக்கிட்டு இருந்தால், முதுகில தட்டி, காசையும் அள்ளிக் கொடுத்திருப்பாங்கள்.
  16. 1995ல் உலகம் எங்கும் ஒரு அதிர்வலையினை உண்டாக்கினார் ஒரு ஸ்காட்லாந்துக்காரர். அவர் பெயர் Brian MacKinnon. இவர் 1974 - 1980 ஆண்டு வரை ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவ் நகரில் Bearsden Academy யில் உயர்தரம் முடித்து சிறந்த பெறுபேறுகளுடன் மருத்துவம் படிக்க பல்கலைக்கழகம் சென்றார். 18 years ஆனால் அங்கே இரண்டாவது வருடத்தில், இரண்டு முறை பெயிலாகி, 1983ல் வெளியேறினார். வேலை எதுவும் செய்யாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். 30 வயதாகியது. பின்னர் நோயாளியான தனது தந்தையினை கவனித்து வந்தார். தந்தைக்கு புற்றுநோய் என்று அறிந்ததும், அடேடே கவனமாக படித்து இருந்தால், தந்தைக்கு மருத்துவம் செய்து காத்திருக்கலாமே என்று நினைத்தார். தந்தை இறந்ததும், அதனையே ஒரு வைராக்கியமாக எடுத்து மருத்துவம் மீண்டும் செய்ய முடிவு செய்தார். ஆனால் அவர் செய்த காரியம், முட்டாள் தனமானதும், மோசடி மிக்கதாகவும் உலகத்தையே திடுக்கிட வைப்பதாகவும் இருந்ததுதான் வியப்பானது. அந்நாளில் குங்பூ கலையின் பிரசித்தி பெற்று இருந்த புரூஸ் லீயின் விசிறியான பிரண்டன், அவர் போலவே தலையினை வாரிக்கொள்வார். லீயின் மகன் தீடீரென இறக்க, அவரது பெயரை தனது பெயராக வைத்துக் கொண்டு, அதே Bearsden Academy யில் 5C வகுப்பறையில், Brenden Lee என்னும் 30 வயது Brian, ஒரு அனாதை கனேடியராக, தனது பாட்டனாரால் பிரிட்டனுக்கு கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்ட ஒருவராக போலி, கனேடிய accent உடன் சேர்ந்து கொண்டார். 30 years அவரது பெரிய தவறு, அதே academy வளர்ந்தோருக்கானா வகுப்புகளையும் கொண்டிருந்தது. ஆனால் இவர், தனது பழைய வகுப்பில், 18 வயதானவராக சேர்ந்து இருந்தார். அவரது ஓய்வு பெற்ற 78 வயது வகுப்பு ஆசிரியை, அவர் பதிவுக்கு வந்தமையினை நினைவு கூர்ந்தார். அவர் வயதானவராக தெரிந்தார். கொஞ்சம் வெளியேயே நில், இங்கே பதிவுகளை முடித்துக்கொண்டு வருகிறேன். உனது வகுப்புக்கு அழைத்து செல்கிறேன் என்றேன். அவரோ, நான் உங்கள் வகுப்பு தான் மிஸ் என்றார். பின்னர் இன்னும் ஒரு ஆசிரியருடன் இது குறித்து பேசி, ஆச்சரிய பட்டோம். பயல் வெளிநாட்டுக்காரர், கனேடியர்... அதனால் முதிர்ச்சியாக தெரிகிறார் போலும் என்று பேசினோம் என்றார். இவர், மிக சிறந்த பெறுபேறுகளை பெற்று, Dundee பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மருத்துவம் படிக்க நுழைந்தார். Second Try: Medical Student at Dundee - மிகுந்த மகிழ்வுடன் இருக்கும் போது, ஒரு நாள் நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு சென்றால், அங்கே அவரது முன்னாள் அயலவர், இருந்து, Brian எப்படி இருக்கிறாய். பார்த்து கனகாலம்.... அப்பா, அம்மா போனப்புறம், என்ன பண்ணுறாய். அந்த மருத்துவ கல்லூரியில் இருந்து நீ முடிக்காமல் வெளியே வந்தது உனது தாய், தந்தைக்கு பெரிய கவலை. நீ அதை எப்படியாவது முடித்திருக்கலாம்.... சரி இப்ப என்னப்பா செய்கிறாய் என்று, அன்பாக சிலை போல அதிர்ந்து நின்ற Brenden இடம் கேட்க, சுதாகரித்துக் கொண்டே... யாரு நீங்கள் என்று போட..... அவ்வளவுதான். உலகமெல்லாம் அவரது செய்தி சக்கை போடு போட்டது. Dundee பல்கலைக்கழக chancellor, நேர்மையீனம் காரணமா அவரை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே அனுப்புவதாக அறிவித்தார். அத்துடன் அவரது மருத்துவ கனவும் இரண்டாவது முறையாக கலைந்து போனது. 😥 அவரது கதையே My Old School என்ற பெயரில் படமாக வருகிறது. 58 வயதாகும், வேலை இல்லாத Brian ஸ்காட்லாந்தில் ஒரு அபார்ட்மெண்டில் தனியாக வசிக்கிறார். நிருபர்கள் அவரை தேடிப்பிடித்து படம் குறித்து கேட்ட போது, அது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி விட்டார் அவர். இவர் மீது எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. As of today: 58 years old Doctor Brain https://www.dailymail.co.uk/news/article-10443539/The-boy-went-old-school-aged-THIRTY.html
  17. இந்த மேர்வின் டீ சில்வா, எந்த மதத்தவர் என்று குழப்பம் உள்ளதே. இவர் பௌத்தமதம் குறித்து இந்த வேலையை செய்வதாக காட்டிக்கொள்ளும் அதேவேளை, முன்னேஸ்வர ஆலய காளி கோவிலிலும், பலியிட கொண்டு போன ஆடுகளை அவ்வாறு செய்யக்கூடாது என்று, தனது வாகனத்தில் கடத்திக்கொண்டு போனார். வேறென்ன, கொண்டு போய் திண்டு இருப்பார். பின்னர், அவரது வீட்டுக்கு அண்மையில் பெருமாள் கோவில் ஒன்றையும் அமைப்பதாக, காணொளியில் காண்பித்தார். இடையே, துட்டகெமுனு போல யானையில் ஏறி, ஒரு படத்தில் நடித்திருந்தார் என்று நினைவு. மேலும், இவர், ராஜபக்சேக்களின் அடிப்பொடியாக இருந்த போது, ரணில் தந்தை ஆகவில்லை என்பதை குறித்து மோசமாக சொல்லி, தான் உதவ தயார் என்று பகிரங்கமாக சொன்னவர். நரி அதனை காமெடியா எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். இல்லாவிடில் இப்போது சிக்கலில் மாட்டி இருப்பார். இவர் மேலே பேசும்போதும், அவரை ஒரு காமெடியனாகவே பார்த்து சிரிக்கிறார்கள். மொத்தத்தில் இவர் ஒரு குழப்பவாதி காமெடியன்.🤦‍♂️
  18. நன்றி. என்ன தமிழை விட்டுடீங்க. உங்கை லண்டன் பக்கம் வந்தால், ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போனால், தமிழில பேசி விபரம் பெறலாம். அதேபோல சுவிஸ்சிலும் இருக்கும். நம்ம ஆட்கள் முகம் அப்படியே தமிழர் என்று சொல்லுமே.
  19. அதுசரி, சும்மா எழுதுவதே வேஸ்டு. இந்த சாப்பாடு, ஒரு லட்ச்சம் கூட வராது போல இருக்குதே... இது விமர்சனத்துக்கு ஆளானதின் காரணம் கொழும்பு மேஜருக்கும், வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும் தொடர் பேதும் இல்லை. ஆகவே இது வீண் விரயம். வெளிநாட்டு அமைச்சர் கொடுத்தால் ஒரு நியாயம் இருக்கும்.
  20. நம்ம உடான்சு சுவாமியார் பத்தி இல்லைதானே. சரி இந்த சாமியார்கள் பற்றி சொல்லும் போது நேற்று பார்த்த செய்தி ஒன்றை பகிர விரும்புகிறேன். இந்திய பம்பாய் பக்கத்தில் ஒரு ரீச்சர், ரெயினிங் போன இடத்தில், அவர் படிப்பிக்கும் ஊரில் இருந்து பின் அங்கே இடம்மாறி வந்த முன்னாள் மாணவி வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். மாணவியின் தாயார், அவரிடம், கலியாணம் ஆகி கண நாளாகியும் பிள்ளை இல்லாமல் இருப்பது குறித்து விசாரித்து இருக்கிறார். அவரும் கண்ணீர் விட, பக்கத்து தெருவில், அருள் பாலிக்கும் திருநங்கை சாமியார் குறித்து சொல்லி, போய் பார்த்து ஆசி வாங்கி வருமாறு, மகளுடன் அனுப்பி வைத்தார். அவரது பிரச்சணையை கேட்ட சாமியார், மாணவியை, வெளியே இருக்கச் சொல்லி விட்டு, உடனடியாக பூசையை ஆரம்பித்தார். எதையோ பூச, ஆசிரியை மயக்கமாக, அவரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார். இதை அரை மயக்கத்தில் உணர்ந்த போதும் தடுக்க முடியவில்லை. வெளியே வந்த அவருக்கு என்ன நடந்தது என்று தெளிவின்மை இருந்தாலும் அவரது உடைகள் வரும் போது இருந்தது போலல்லாமல் களைந்திருந்ததை மாணவி கவனித்திருக்கிறார். மாணவியின் வீடு திரும்பிய ஆசிரியை மயக்கம் முமுவதுமாக திருப்பிய போது என்ன நடந்தது என புரியவும், திருநங்கை சுவாமியார், போலீசுக்கு போயிருப்பாரோ அல்லது ஊருக்குப் போயிருப்பாரோ என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மாணவி வீட்டுப்பக்கம் விசாரணைக்கு வர, ஆசிரியை கோவத்தில், தாக்க..... ஊரே கூடிவிட்டது. போலீசாரும் வர, சாமியார் பக்தர்கள், அவ(ரு) தான் திருநங்கையாச்சே என்று, ஆசிரியை மேல் சந்தேகத்துடன் பேசத் தொடங்கினர். இறுதியில் போலீசார், திருநங்கை சாமியாரை கொண்டு போய் செக் பண்ணி அவர், திருநங்கை அல்ல, அப்படி வேடத்தில் இருந்த ஆண் சாமியார் என்று அறிவித்ததுடன், ஆசிரியை குற்றச்சாட்டை வைத்து கைதும் செய்துள்ளனர். இது புது ரெக்னிக் ஆக இருக்குதே. படித்த ஒரு ஆசிரியரே இப்படி ஏமாறும் போது, படிக்காத பாமர மக்களை நம்பித்தான் இந்த சாமியார்கள் கிளம்புகிறார்கள் போல உள்ளதே.
  21. வெடி வைக்கிற எண்டால், பேட்டை ரவுடியே? உளவுத்துறை ஏன் இருக்கிறது ?
  22. தாய் மனிசியின் எகிப்து முஸ்லீம் கனக்சனால வெடி விழுந்தது. இப்ப இவரது கனக்சனால + கதையால என்ன நடந்து தொலையுதோ தெரியவில்லையே... 🤨 🤦‍♂️
  23. ஓமோம்ம் உடான்சர் பெயரலிலயும் சொல்லுறனே. அது மட்டும் கண்ணுக்கு தெரியாது. அது சரி, இந்த புட்டின் டாபிக் என்றால், உடான்சருக்கு குளுக்கோசு ஏத்தின மாதிரிதான் என்ன? 😁 குட் நைட் 👋
  24. அடங்கும், அடங்கும்.... உடான்சு சுவாமியார் இங்கை தான் இருந்து புறுபுறுத்துக் கொண்டிருக்கிறார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.