Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. கூலிப்படை மூலம் தனது கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி – இலங்கையில் பதிவான சோக சம்பவம் யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தரே இதில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி அதிகாலை வெளிமாவட்டத்தில் இருந்து வாகனம் ஒன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டு , அவருக்கு விநியோகம் செய்த பின்னர் வாகனம் திரும்பி சென்றுள்ளது. அதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்த போது, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்த போது, வாள் முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது. வாள் வெட்டில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அந்நிலையில், குடும்பஸ்தரின் கொலையை , நகைக்கான கொலையாக மாற்றவே நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்த நிலையில், கொலையானவரின் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://madawalaenews.com/1577.html
  2. அதாவது கனடாவில் விசிட் விசாவில் வந்திருப்பவர்கள் இப்படி ரோட்டில் அசிங்க்ம் செய்கின்றார்களா?
  3. "தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள்" தமிழர்கள் வழமைபோல் பிரிந்து நீயா நான என அடிபட்டு தங்களாது "ஒற்றுமையை" நிருபிப்பார்கள். இப்பொழுதெல்லாஅம் சியத்த சிங்கள டீ வியில் செய்தியின் ஒரு பகுதியான "டெலிவிசன் டெலிவெகிய" என்னும் நிகழ்சியே விரும்பிப் பார்க்கின்றேன். இதில் அரச ஊழல்களை அப்பட்டமாக அம்பலபடுத்துவார்கள்
  4. இதுதான் ஐயா எனது பிறந்த இடம். மலிபனுக்கு முன்னால் இருக்கும் St. Paul's ஆஸ்பத்திரியிலேயே, நான் பிறந்த்தேன், 5 ‍- 19 வயது வரை இந்த வாசத்தை முகர்ந்து கொண்டல்லவா முன்னால் இருக்கும் பாடசாலயில் படித்து வந்தேன். எந்த திருவிழா என்றாலும் எங்கள் வீட்டில் மெலிமன் இருக்கும். தவழ்ந்து, ஒடி விளையாடிய தெருவல்லவ இது. மெலிபனும் அதன் சுற்றுவட்டமும் என் வாழ்வின் ஒரு அங்கம். போன மாதம் ஒரு நாள் இங்கு வந்து பனிசை சாப்பிட்டுகொண்டு, குளிர் பானத்தை குடித்தவாறு பழைய நினைவுகளை மீட்டினேன்.
  5. ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்-முபாறக் அப்துல் மஜித் பாறுக் ஷிஹான் ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது.நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது முன்னாள் ஜனாதிபதி அவர்கள் தான் ஜனாதிபதியாக இருந்து ஏன் விரட்டி அடிக்கப்பட்டேன் என்பதை புத்தகம் ஒன்றினை எழுதி வெளியீட்டிருக்கின்றார்.என்னை பொறத்தமட்டில் இந்த புத்தகமானது தற்போது வெளியீட வேண்டிய அவசியம் இல்லை என்றே கூற முடியும்.இந்த புத்தகத்தை எழுதிவிட்டு அவர் இறந்த பின்னர் இந்த புத்தகம் வெளிவந்து இருந்தால் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை அவருக்கு கொடுத்து இருக்கும்.இப்போது இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டு தான் ஒரு குற்றமும் செய்யவில்லை .தன்னை சிலர் பழிவாங்கி விட்டார்கள் என்பது போன்று கூறுகின்றார். ஆனால் அவர் வெளியிட்ட புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை.அந்த புத்தகம் தொடர்பில் வெளிவந்த செய்திகளை நாங்கள் பார்க்கின்ற போது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது. நாடு இவ்வாறு தான் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.ஜனாசா எரிப்பை நிறுத்துங்கள்.அது தொடர்பில் பேச எங்களுக்கு அனுமதி தாருங்கள் என கேட்டிருந்தோம்.இது குறித்து பேச பல கடிதங்கள் அனுப்பி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை. ஒரு பெருமை பிடித்த மனிதனாக அவர் காணப்பட்டதனால் தான் இறைவன் அவருக்கு தண்டனை கொடுத்து இந்த நாட்டின் வரலாற்றிலே எந்தவொரு ஜனாதிபதிக்கும் நிகழாத ஒன்றை வழங்கி இருந்தான்.நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலைக்கு கோட்டபாய சென்றார்.இவரது புத்தகம் தற்போது உள்ள இனவாத சிந்தனையுடைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.ஜனாதிபதியின் அதிகாரம் என்பது சாதாரணமான அதிகாரமல்ல.சர்வதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம் ஆகும்.இந்த அதிகாரத்தை அவர் வைத்துக்கொண்டு மஹிந்த உட்பட தனக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளை ஒதுக்கினார். ஒரு கர்வம் உள்ள நபராக செயற்பட்ட காரணத்தினால் தான் அவர் தலை குப்புறமாக விழுந்தார்.இவ்வாறு விழுந்ததற்காக சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பழி போடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவர் ஒரு நேர்மையான மனிதனாக இருந்திருந்தால் வெளியிட்ட புத்தகத்தில் தான் தவறு செய்தமையினால் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓடி ஒளிய வேண்டி ஏற்பட்டிருந்தது என்பதை பகிரங்கமாக ஏற்று எழுதி இருந்தால் உண்மையில் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். யுத்த காலங்களில் கோட்டபாய ராஜபக்ச ஒரு ஹிரோவாக இருந்தார் என சொல்லப்பட்டாலும் முதலாவது ஹிரோவாக மகிந்த ராஜபக்ஸவே இருந்தார்.இவர் இரண்டாவது ஹிரோவாக இருந்தார் என்பதை இங்கு கூற முடியும்.மஹிந்த ராஜபக்ஸ தான் நாட்டினையும் யுத்தத்தையும் அக்காலப்பகுதியில் சரியாக கொண்டு சென்றவர்.அவரத உத்தரவினை செயற்படுத்தும் நபராகவே கோட்டபாய ராஜபக்ஸ என்பவர் இருந்தார். ஆனால் சில சினிமா படங்களில் ஜோக்கர்கள் சில வெளை கதாநாயகர்களாக மாறுகின்ற மாதிரி தன்னால் தான் யுத்தம் நிறைவு பெற்றது என்ற திமிர் அவரிடம் காணப்பட்டது.இப்போது அவர் ஒரு பூச்சியமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு புத்தகத்தை எழுதி அரசியலுக்கு மீண்டும் வருவார் என சிலர் நினைக்கின்றார்கள்.என்றார். https://madawalaenews.com/1205.html
  6. கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். சென்னையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதன்படி மோதல் நடக்கிறது. இதில் எதிர்பாராதவிதமாக தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார். இந்த மோதலில் சரவணனின் மகன் கொலை செய்யப்பட, சரவணன் கோவத்தில் சந்தீப்பை வீட்டுக்கு அனுப்ப சொல்கிறார். ஆனால், தனுஷ் தன் தம்பிகளோடு சரவணன் வீட்டுக்கு சென்று கொலை செய்கிறார். சரவணனை கொலை செய்தது யார் என்று ஒரு பக்கம் போலீசும், ஒரு பக்கம் எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்களும் தேடுகிறார்கள். இறுதியில் தனுஷின் வாழ்க்கை என்ன ஆனது? தம்பிகள், தங்கையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், ராயன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். தம்பிகள் மற்றும் தங்கை மீது பாசம் காட்டுவது, தம்பிக்கு ஆபத்து என்றவுடன் வெகுண்டு எழுவது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு சபாஷ் போட வைத்து இருக்கிறது. நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார் துஷாரா விஜயன். அன்ணனுக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நடிப்பு அரசி என்றே சொல்லலாம். துறுதுறு இளைஜனாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார் சந்தீப் கிஷன். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். செல்வராகவனின் நடிப்பு பிரமிப்பு. சரவணன், வரலட்சுமி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் அசுரன் என்று ஏற்கனவே நிரூபித்த தனுஷ், தற்போது இயக்கத்தில் அசுரன் என்று நிரூபித்து இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் போட்டி போட்டு நடிக்க வைத்து இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் என சபாஷ் போட வைத்திருக்கிறார் தனுஷ். படத்திற்கு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமான் இசை. பின்னணியில் மிரட்டி இருக்கிறார். பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். https://www.tamilstar.com/raayan-movie-review/
  7. தலைங்கம் அதிருகின்ற‌து. யாழ் கொள்ளைக்காரி!! ரிவெல்வர் ரீட்டா, பிஸ்டல் பரிமளா, கன் பயிட் காஞ்சனா, அரிவாள் சொர்ணக்கா வரிசையில், பேதையவள் பெயர் என்னவோ?
  8. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி யார் என்பதை இந்த நாட்டு முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். கல்முனையில் நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். “வடக்கில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது தெற்கில் 03 வேட்பாளர்கள் பக்கம் சிங்கள மக்கள் பிரிந்திருக்கும் பொழுது இந்த நாட்டு முஸ்லிம்கள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பர். இதனை எந்த அரசியல் ஆய்வாளரும் மறுக்க மாட்டார்கள். எந்த ஊடகவியலாளரும் மறுக்க மாட்டார்கள். எங்கள் முன்னாள் தலைவர் அஷ்ரப் செய்தது போன்று அந்த வேட்பாளர்களிடம் எழுத்து மூலம் பேரம் பேசும் விடயங்களை ஆவணப்படுத்த வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். https://madawalaenews.com/1169.html
  9. சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை! முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை. அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர முஸ்லீம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார். அம்பாறை - கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதலில் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்த மனிதனும் மரணித்தாலும் இரங்கலை நாங்கள் தெரிவிப்பது சம்பிரதாயம் ஆகும். ஆனால் தற்போது முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதை நாங்கள் தைரியத்துடன் கூற விரும்புகின்றோம். அதனால் தான் எங்கள் கட்சி அவர் தொடர்பிலான எந்தபொரு அறிக்கையும் வெளியிடவில்லை. அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர தமிழ் முஸ்லீம் உறவிற்கு பங்களிப்பு செலுத்தவில்லை. கல்முனை என்பது எந்த கால பிரச்சினை. சம்பந்தன் தலைவராக இருந்த காலத்தில் இருந்து காணப்படும் பிரச்சினை. நாங்களும் ஊடகங்கள் வாயிலாக பல வருடங்களாக கூறி வருகின்றோம். சம்பந்தன் ஏன் இதில் தலையிடாமல் இருக்கின்றார். அவர் கல்முனையில் உள்ள அரசியல்வாதிகளை அழைத்து கல்முனை பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஹென்றி மகேந்திரன் உட்பட நானும் கலந்து கொண்டிருந்தேன். இங்கு சம்பந்தன் கட்சி தலைவர் ஒருவர் வந்திருக்கின்றார். ஏன் இங்கு கலந்துரையாடுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் (றவூப் ஹக்கீம்) வரவில்லை. அப்போது நான் அங்கு ஒரு பிரச்சினை எழுப்பினேன். இந்த கலந்துரையாடலில் தலைவர்கள் தான் பேச வேண்டும். ஒரு பிரதி தலைவரோ அல்லது உப தலைவரோ கலந்து கொண்டால் சமத்துவமாக அமையாது என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டேன். அப்போது அந்த நேரத்திலாவது சம்பந்தன் முஸ்லீம் தரப்பின் சார்பாக ஹக்கீமை வரவழைத்திருக்க வேண்டும். அதனூடாக இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு தீர்வினை பெற்றிருக்க முடியும். மிக இலகுவாக தீர்வு காண வேண்டிய பிரச்சினையை ஹக்கீமுடன் இணைந்து சம்பந்தனும் இழுத்தடித்தார் என்பதே கவலைக்குரியதாகும். ஆகவே மறைந்த ஒருவரை நாங்கள் வேண்டும் என குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் முஸ்லீம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அத்துடன் தமிழ் முஸ்லீம் உறவிற்கு கூட ஒன்றும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகின்றோம் என தெரிவித்தார். - அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான் - https://tamil.adaderana.lk/news.php?nid=189776
  10. சம்­பந்தனின் மித­வாத அர­சி­யல் கொள்­கை பின்­பற்றப்­பட வேண்­டும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரும் முது­பெரும் தமிழ் அரசி­யல்­வா­தி­யு­மான இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்­தனின் மறைவு இலங்­கையின் தேசி­ய அர­சி­ய­லில் பாரிய வெற்­றி­டத்தைத் தோற்­று­வித்­துள்­ளது என்­பதை அவ­ருக்கு பல்­வேறு தரப்­பு­க­ளி­லி­ருந்தும் முன்­வைக்­கப்­படும் அனு­தா­பங்கள் மற்றும் அஞ்­ச­லி­க­ள் உணர்த்தி நிற்­கின்­ற­ன. தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகளை வென்­று கொடு­ப்­­ப­தையே தனது ஒரே இலக்­காகக் கொண்டு அர­சியல் செய்த அவரை எந்­த­வொரு சக்­தி­யாலும் விலை­பேச முடி­ய­வில்லை. இறுதி வரை மிக எளி­மை­யான வாழ்க்­கையையே வாழ்ந்து வந்த அவர் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வை மரணிப்­ப­தற்கு முன்­னரே பெற்றுக் கொடுப்பேன் என்ற உறு­தி­யோ­டுதான் அர­சியல் பணியை முன்­னெ­டுத்து வந்தார். எனினும் அவ­ரது முது­மை அதற்கு இடம்­­­­கொ­டுக்­கவில்லை. அதே­­போன்று தென்­னி­லங்­கையின் அர­சியல் மாற்­றங்­களும் சமீ­பத்­திய நிகழ்­வு­களும் அரசியல் தீர்வு பற்­றிய பேச்­சுக்­களை பின்­தள்­ளி­யி­ருந்­த­­ன. கோத்­த­பாய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்பட்ட பின்னர் அர­சியல் தீர்வு பற்­றிய பேச்­சுக்கே இட­மில்லை என்ற நிலையே தோற்றம் பெற்­றது. அவர் பதவி வில­கிய பின்னர் ரணில் விக்­ர­ம­சிங்­க ஜனாதி­பதி­யானார். அவ­ரும் தைப்­பொங்­க­லுக்கு முன் தீர்­வு, சித்­­திரைப் புத்­தாண்­டுக்கு முன் தீர்வு என அறிக்­கை­களை விட்­டாரே தவிர உருப்­ப­டி­யான எந்த முயற்­சி­க­ளை­யும் முன்­­னெ­டுக்­க­வில்லை. தற்­போது சம்பந்தன் உயி­ருடன் இருக்கும் காலத்தில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடி­யாமல் போன­மை கவ­லைக்­கு­ரி­யது என ஜனா­தி­ப­தி தெரி­வித்­தி­ருப்­பது வேடிக்­கை­யா­ன­தாகும். அந்த வகையில் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு என்பது இனி எட்­டாக்­க­னியே என்­ப­தையே சம்பந்­தனின் மறைவு எடுத்­துக் கூறு­வ­தா­க­வுள்­ள­து. தமிழ் முஸ்லிம் உறவைப் பொறுத்­த­வரை சம்­பந்தன் மிகவும் நிதான­மா­ன­தொரு பாத்­தி­ரத்தை வகித்தார் என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொள்­வர். விடு­தலைப் புலி­களால் முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் இழைக்­கப்­பட்­டது என்பதை அவர் ஏற்றுக் கொண்­டி­ருந்தார். முஸ்லிம் மக்­க­ளும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க அர­சியல் தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் அவர் உறு­தி­யா­­க­­வி­ருந்தார். வடக்கும் கிழக்­கும் இணைக்கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டிந்த அவர் முஸ்லிம் மக்­களின் ஒத்­து­ழைப்­பின்றி அதனை சாத்­தி­ய­மாக்க முடி­யாது என்ற யதார்த்­தத்­தையும் பகி­ரங்­க­மா­கவே ஒப்புக் கொண்­­டி­ருந்தார். கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒரு­வரை நிய­மிப்­பதற்கு அவர் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல் நடந்­த­போது இத் தாக்­கு­த­லுக்­கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் எந்­த­வித சம்­பந்­த­மு­மில்லை என அவர் அடித்துக் கூறி­னார். இலங்­கையில் பெரும்­பான்­மை சமூ­கத்­தி­ட­மி­ருந்து பாது­காப்பைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மானால் தமி­­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்டும் என்­பதை அவர் எப்போதும் வலி­யு­றுத்தி வந்தார். இதற்­காக அவர் பல தட­வை­கள் முஸ்லிம் தலை­வர்­க­ளுடன் பேச்­சுக்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தார். இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்­திற்கும் தமிழ் சமூ­கத்­திற்­கு­மி­டையில் உறவுப் பால­மாக விளங்­கிய அன்­னாரின் மறைவு இரு சமூ­கத்­திற்கும் பேரி­ழப்பு என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யா­து. சம்பந்தன் ஐயாவின் வெற்­றிடம் எந்­த­வ­கை­யிலும் நிரப்­பப்­பட முடி­யா­தது. ஆனால் அவ­ரது சிந்­த­னைகள், அவ­ரது எதிர்­பார்ப்­புகள், அபி­லா­ஷைகள் அவ­ருக்குப் பின் வரும் தமிழ் தலை­மை­களால் முன்­கொண்டு செல்­லப்­பட வேண்டும். அவர் காட்­டிய மித­வாத அர­சி­யல்­பாதை கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும். நாட்டைப் பிளவு­ப­டுத்­தாது அனை­வரும் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் சகல உரி­மை­க­ளையும் வளங்­க­ளையும் பெற்று வாழ வேண்டும் என அவர் காட்­டிய அர­சி­யல்­பா­தையில் பய­ணிக்க அனை­வரும் முன்­வர வேண்டும். குறிப்பாக­ அவர் விரும்­பி­யது போன்­றே எதிர்­கா­லத்­திலும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒன்றுபட்ட அர­சியல் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அன்­னாரின் ஆத்­மா சாந்­தி­ய­டைய பிரார்த்­திப்போம்.- Vidivelli https://www.vidivelli.lk/article/17302
  11. , அம்பாறை நூருல் ஹுதா உமர்- முஸ்லிம்களின் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் எனும் சிங்கத்தின் ஆளுமைகளை கண்டு அவரின் பாசறையில் வளர்ந்த நாங்கள் இப்போது நடக்கின்ற சில்லறை அரசியலை பார்த்து, முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு பயந்து ஒடுங்குபவர்களாக இருக்க முடியாது. இருக்கவும் மாட்டோம். அப்படியான ஒரு வீர தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது தலைவரின் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க வேண்டும் அல்லது தலைவரின் மகனை அமைச்சராக்க வேண்டும் என்று அல்ல. அப்படியான கொள்கையில் அவர் வாழவும் இல்லை. இந்த மண்ணில் நாங்கள் அடிமைகளாக எங்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, நிம்மதியாக வாழ்வதற்கான பயத்தில் இருந்த போது தான் ஒரு பாதுகாப்பு கேடயமாக முஸ்லிம் காங்கிரஸ் உருவாகியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில் நாட்டின் நாலா பக்கங்களிலும் முஸ்லிம்கள் அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அப்போது இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஆளும் தரப்புக்கு ஆதரவாக ஆட்சியாளர்களின் பங்காளிகளாக மாறி மௌனமாக இருந்தபோது தலைவர் அஷ்ரப் மட்டும் சாதாரணமான சட்டத்தரணியாக இருந்து கொண்டே முஸ்லிம்களுக்காக உரிமைக் குரல் கொடுத்தார். அந்த நாட்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்காக தலைவர் அஷ்ரபின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தையும், ஆளுமையையும் தலைவனுடைய அம்மன் கோயில் வீதிக்கு முன்பாக வசித்தவன் என்ற ரீதியில் அவருக்கு பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன்.அவருடைய எண்ணங்களையும், முஸ்லிம் சமூகம் நாட்டில் எவ்வாறு கௌரவமாக வாழ வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக முன்வைத்துள்ளார். நான் அவரை எட்டு - ஒன்பதாவது வயதிலிருந்து பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவரை நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பார்த்திருப்பீர்கள், ஒரு அமைச்சராக பார்த்திருப்பீர்கள், ஒரு தலைவராக பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அவரை கண்டது ஒரு நல்ல நியாயவாதியாக. சமூக நீதிக்கு முதன்மையான மகன் ஒரு ஆள் இருப்பாரானால் இந்த நாட்டில் அது தலைவர் அஸ்ரப் தான். அம்பாறை மாவட்டத்தில் அவருடைய குடும்பம் ஒரு செல்வந்த, கல்வி கற்ற குடும்பம். காரியப்பர் குடும்பம் என்பது மிகவும் உயர்ந்த குடும்பமாக கௌரவமாக நோக்கப்பட்டவர்கள். அந்த குடும்பத்தில் ஒரு வாரிசாக அஷ்ரப் அவர்கள் இருந்தாலும் எளிய மக்களின் தோழனாகவே அவர் வாழ்ந்தார்.தலைவர் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றம் நுழைவதற்கு முன்பே சமூகப் பிரச்சினைகளை கங்கணம் கட்டிக்கொண்டு தீர்வு கொடுத்தவர். துறைமுக அமைச்சராக இருந்த அவருக்கு கிட்டத்தட்ட துறைமுக நிலம் தலைவரின் சொந்த இடம் போலவே இருந்தது. ஆனால் தலைவர் அஸ்ரப் அதை வைத்து மற்றவர்களிடம் பணம் கேட்கும் மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. 10 சதமேனும் தனக்காக பெறாத நமது தலைவரை பற்றி ஏனைய நாடுகளின் தொழிலதிபர்கள் பேசி கேட்டிருக்கிறோம். சுத்தமான பொதுநல அரசியலையே முன்னெடுத்தார். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான துறைமுகத்தை உருவாக்கினார். பல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார். இப்படியான தலைவரின் பாசறையில் பயின்ற நாங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு எதை இழந்தேனும் தீர்வை பெற்றுக் கொடுப்போம். உரிமைகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க தலைவர் அஸ்ரப் எங்களை பயிற்றுவிக்க வில்லை என்றார் https://www.importmirror.com/2024/07/blog-post_69.html
  12. இலங்ககை ஆங்கிலத்தில் Shramadana campaign உ+ம் A Shramadana campaign was held on 13th of May 2023 என பாவிக்கப்படும்
  13. 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு சிலாகித்து பேசியிருப்பார்களோ அதற்கு ரிவர்ஸாக காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன. எதுவாக இருந்தாலும் படத்தை பார்த்து விட்டு விமர்சனத்தை முழுமையாக கொடுக்கலாம் என இந்தியன் 2 படத்தை பார்த்து விட்டு வந்த நிலையில், அதன் நிறை மற்றும் குறைகளை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியானது இந்தியன் 2 கதை: 'பார்க்கிங் டாக்ஸ்' எனும் யூடியூப் சேனலை சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜகன் உள்ளிட்டோருடன் நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களை யூடியூப் வீடியோக்களால் தட்டிக் கேட்கின்றனர். ஆனால், அதன்மூலம் எந்தவொரு பயனும் இல்லை என்றதும், இந்தியன் தாத்தா வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கும் அவர்கள் #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்குகின்றனர். அதை தாய்பெய் நாட்டில் உள்ள காளிதாஸ் ஜெயராம் பார்க்க, இந்தியன் தாத்தா இங்கே தான் இருக்கிறார் என்கிறார். அவரை இந்தியாவுக்கு போகவும் சொல்கிறார். இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தாவை நெடுமுடி வேணுவின் மகனான பாபி சிம்ஹா கைது செய்ய துடிக்க, அவரிடம் இருந்து தப்பித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக போட்டுத் தள்ளும் இந்தியன் தாத்தா கடைசியில் கைதானாரா? தப்பித்தாரா? என்பது தான் இந்தியன் 2 படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: கதை ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் நிச்சயம் இந்திய மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் இந்தியன் 2. இயக்குநர் ஷங்கர் அதற்காக மெனக்கெட்டு கதையையும் இந்தியன் தாத்தா மட்டுமே இந்த நாட்டை திருத்த முடியாது இளைஞர்கள் உங்கள் வீட்டில் உள்ள களைகளை பிடுங்க முயற்சியுங்கள் என்கிற இரு வழி பாதை கதைக்கு நல்ல வலு சேர்த்துள்ளது. ஷங்கரின் புத்திசாலித்தனமும் அங்கே விளையாடி இருக்கிறது. ஆனால், அதை படமாக்கிய விதத்தில் ஷங்கரின் புத்திசாலித்தனம் பெரிதாக ஷைன் ஆகவில்லை என்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக மாறியுள்ளது. இந்தியன் தாத்தாவையும் அந்நியனையும் மிக்ஸ் செய்து விட்டாரே ஷங்கர் என்று தான் பல இடங்களில் தோன்றுகிறது. விவேக்கின் ஒரு சில காமெடிகள் வொர்க்கவுட் ஆகிறது. ஆனால், பாபி சிம்ஹா காட்சிகள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. வர்மக் கலையை லேசாக இந்தியன் படத்தில் தொட்டுக் கொண்ட ஷங்கர் இந்த படத்தையே அதை மட்டுமே நம்பி எடுத்திருப்பது ஆடியன்ஸை திருப்திப்படுத்தவில்லை. அதிலும், வர்மக் கலை மூலமாக தொங்கியிருக்கும் வயதான உடம்பை ஒரு நொடியில் சிக்ஸ்பேக் உடம்பாக மாற்றும் காட்சிகளை ஷங்கர் எதை நம்பி வைத்தார் என தெரியவில்லை. பாசிட்டிவ்: இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங் அடிக்கடி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே போல கமல்ஹாசன் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளை செய்திருப்பதும், அந்த மெட்ரோ டிரெயின் ஃபைட் சீனும் மாஸ். விஜய் மல்லையாவை இந்த படத்திலும் போட்டு பொளந்துள்ளனர். கேலண்டர் சாங் குறியீடு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோடீஸ்வரர் என அவரை காட்டியதும், பெரிய திருமணத்தை குஜராத்தை சேர்ந்த நபர் நடத்துவதும், அவரது வீட்டில் தங்க டாய்லெட் உள்ளதாக காட்டும் காட்சிகள் எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது. மார்ஸ் கிரகத்துக்கு செல்வதாக இன்னொரு கோடீஸ்வரர் ஜீரோ கிராவிட்டியில் பயிற்சி செய்யும் இடத்திற்கே சென்று கமல்ஹாசன் அவரும் பறந்துக் கொண்டே சண்டை போட்டு அவரை வர்மக் கலை மூலமாக போட்டுத் தள்ளுவதும் சிறப்பு. இரண்டாம் பாதியில் சித்தார்த் உள்ளிட்ட அவரது யூடியூப் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதும் அதனால் அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளும் படத்திற்கு எமோஷனல் கனெக்ட்டை நன்றாகவே கடத்துகின்றன. கமல்ஹாசனை தாண்டி சமுத்திரகனியின் நடிப்பு சூப்பர். சித்தார்த் முடிந்த வரை நடிக்க முயற்சித்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தியன் பட பின்னணி இசை பலம் சேர்க்கிறது. நெகட்டிவ்: இந்தியன் தாத்தாவை காட்டுவதற்கு முன்பாக சித்தார்த் மற்றும் அவரது டீம் யூடியூப் மூலம் செய்யும் காட்சிகள் தொடங்கி கடைசியில் கிளைமேக்ஸில் வரும் டாம் அண்ட் ஜெர்ரி கேம் வரை சொதப்பலான திரைக்கதையை கொடுத்து ரசிகர்களை தியேட்டரில் சோதித்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புள்ளியான சகலகலா வல்லவன் என்கிற பெயரில் வரும் எஸ்.ஜே. சூர்யாவை விட்டு விட்டு மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை கமல்ஹாசன் போட்டுத் தள்ளுவது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. அடுத்த பாகத்தில் தான் அவருடன் மோத போகிறார் என தெரிகிறது. கம்பேக் இந்தியனில் தொடங்கும் படம் கோபேக் இந்தியனாக முடிவடைவதை போலவே இந்தியன் படத்தை பார்த்த உணர்வு இந்தியன் 2வில் குறைந்து விடுகிறது. ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே ரொம்பவே வீக்கான படமாக இந்தியன் 2 உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு இந்தியரும் இந்த படத்தை பார்த்து தங்கள் மனசாட்சி உறுத்தினாலே அதுதான் இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படும். https://tamil.filmibeat.com/reviews/kamal-haasans-indian-2-review-in-tamil-is-here-137447.html w-in-tamil-is-here-137447.html
  14. பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்ஸ்மாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே பியுமி ஹன்ஸ்மாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவே பயப்பட அவசியம் தனக்கு இல்லை என கூறினார். ''எனக்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்க வரசொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரச்சொல்லி இருக்கிறார்கள், ஆனால் எனக்கு சனிக்கிழமை தான் கடிதம் வந்தது. இன்னும் தேவையான பல ஆவணங்களை செய்து கொள்ள முடியவில்லை. 25,000 கிரீம் ஓடர்களும் உள்ளது. எனது கிரீம் ஒன்றின் விலை சுமார் 35,000 ரூபாய். அதனால் இலங்கை மக்கள் எனது வருமானம் குறித்து தீர்மானிக்க முடியும். அப்போது தெரியும் பியூமி ஹன்சமாலிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று''. https://www.madawalaenews.com/2024/07/35000-25000.html
  15. நானும் எனது தங்கையின் வீட்டில் இருக்கும் நாயுடன் இப்பொழுது நன்கு பழகி விட்டேன். வெளியே போய் வந்தால் பாய்ந்து பிடிக்கும், முன்னங்கால்காலால் தாவி பாயும். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மா மரத்து நிழலின் கீழ் இருவரும் விளையாடுவோம். மரத்தில் ஓடும் அணில், பறக்கும் வண்ணத்துபூச்சி, சிறு பறவைகள், எல்லாவற்றையும் விரட்டி பிடிக்கும். நாய்களை எவ்வாறு கருணை கொலை செய்வார்கள்? இதற்கு சட்டரீதியனா முறைககள் என்ன? @Justin(ஜஸ்டின் ஐயா மிருக வைத்தியர் என்ற படியால் இதை பற்றி மேலதிக தகவல்களை தரவும்) இங்கு இலங்கையில் ஒரு சிறிய புத்தகம் வைத்துள்ளோம் அதில் பெயர் விபரங்கள் உண்டு, ஊசி போட்ட தினமும் குறிப்பிட்டு மிருக வைத்தியர் கையெழுத்து வைத்துள்ளார். பல வருடங்களுக்கு முன் என்னுடய மேலதிகாரி ஒர் பெண், ஒர் நாள் இவர் தன் நாயை பற்றி கூறும்போது " I will put her sleep" என‌ ஆங்கிலத்தில் கூறினார். அதன் அர்த்தம் அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. நாயை கருணை கொலை செய்யப் போகிறதைதான் இப்படி கூறியிருப்பார் என நினைக்கிறேன்.
  16. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திடம் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆறு நட்சத்திர ஜெனரலாக கருதப்படும் "மார்ஷல்" பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கின் யுத்த வெற்றிக்காக பொன்சேகா ஆற்றிய தியாகத்தை கருத்தில் கொண்டு இதற்கு முன்னர் பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு இம்முறை வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட மார்ஷல் பதவி இதற்கு முன்னர் உலகின் பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருந்தது. யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மார்ஷல் டிட்டோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின், சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோ சேதுங், வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் இல் சுங், ஜெர்மனியின் முன்னாள் போர்த் தலைவர் ஹெர்மன் கோரிங் மற்றும் பிற உயர்மட்ட ரஷ்யாவின் தலைவர்கள் இதற்கு முன் மார்ஷல் பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டனர். https://www.jaffnamuslim.com/2024/06/blog-post_744.html
  17. எந்த ஒரு பொருளுக்கும் 4 நிலைகள் உள்ளதள்ளாவா? Introduction, growth, maturity and decline என‌ இவைகள் கருத்தில் கொள்ளப்பட்டதா?
  18. எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி அழுதுள்ளனர். 29 வயதுடைய பெண் ஒரு ஆசிரியை என்பதுடன் 35 வயதுடைய தாய் ஒருவருடன் ஓரின உறவில் பழகி உள்ளார். குறிப்பிட்ட தாய் தனது குழந்தையுடன் பாடசாலைக்கு செல்லும் போது ஆசிரியை உடன் காதல் உறவு கொண்டுள்ளார் . கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் காணாமல் போயுள்ளதாக கணவர்கள் வத்தளை பொலிஸாரிலும் கந்தானை பொலிஸாரிலும் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த வாரம் முதலாம் திகதி இந்த இரண்டு பெண்களும் கண்டி தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்த போது, இரு பெண்களின் நடத்தையில் கடும் வித்தியாசம் காணப்பட்டதை அவதானித்த தலதா மாளிகை பொலிஸார் அவர்களை கைது செய்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் வத்தளை மற்றும் கந்தானையில் காணாமல் போன பெண்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இரு பெண்களும் எச்சரிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். https://www.madawalaenews.com/2024/06/i_73.html
  19. படிக்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்ரது ஐயா. வாழ்வில் நடந்த இனிய சம்பவங்களை அசைபோடுவது எவ்வளவு மன மகிழ்சியை கொடுக்கின்ற்து. இப்பொழுது இந்த காக்கை தீவு மட்டக்குளி மிகவும் மாறி விட்டது. அருமையான காதலர் பூங்கா ஒன்றுள்ளது. இன்னும் இங்கு காதலர்கள் கைகோர்த்து திரிகின்றார்கள். மாலை மயங்கும் நேரத்தில் இங்கு சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு பூங்காவில் நடப்பது / உடற்பயிற்சி செய்வது எனக்கு மிகவும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
  20. இவர்களுடன் வேலை செய்துள்ளேன், பழகியுள்ளேன். ஊத்தைகள் எந்த நாடும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க கூடாது.
  21. கட்டியிருந்தால் கணவன் மீது காட்டியுருப்பார்
  22. விண்ணப்ப படிவங்கள் எப்படியென்றால் கனடா விசா விண்ணப்பிக்கும்போது கனடா செர்வீஸ் இணய தளத்திலேயே செய்யவேண்டும், எல்லா விபரங்களையும் பதிவு செய்து "அனுப்பு' பொத்தானை அழுத்திய பின்பு இவை பிரிடிஸ் கொலம்பியாவில் உள்ள பிரதான க‌னடிய எல்லை கட்டுப்பாட்டு காரியாலயத்திற்கு செல்லும், சில நாட்களின் பின் கைரேகை பதிவுக்காக VFS போகச்சொல்லி மின்னஞல் கடிதம் வரும். (இந்த முகவர் VFS) முதலில் கைகளிள் இரண்டையும் விரித்து கமராவில் காட்டிய பின் ஒவ்வொரு விரலாக ஸ்கான் செய்வார்கள். பிறகு சில வாரங்களின் பின் விசா அப்ரூவல் ஆனவுடன் மின்னஞல் கடிதம் வரும் அதை எடுத்துக்கொண்டு, பாஸ்போட்டுடன் இடம் கொடுத்தால் இவர்கள் இதை கனேடியன் ஹைகமிசனுக்கு அனுப்பி விசாவை குத்தி வைத்திருப்பார்கள் 5 நாட்களின் பின் பெற்றுக்கொள்ளாலாம். பொதுவாக இன்டெர்வியூ நடைபெறுவதில்லை. அமெரிக்க விசாவும் இவ்வாறே ஆனால் ஒன்லைனில் விண்ணப்பித்த பின் சிஸ்டம் தானாக இன்டெர்வியு நேரத்தை எடுக்க சொல்லும், எடுத்தவுடன் ஒதுக்கப்பட்ட அந்த நேரத்திற்கு கட்டாயமாக செல்லவேண்டும். எம்பஸியெலேயே கைவிரல் பதிவு செய்யப்படும். கவுண்டருக்கு அந்தப்பக்கத்தில் இருக்கும் வீசா ஆபீசாருடன் 2 ‍தொடக்கம் 3 நிமிடங்கள் வரை அவர் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும், இது மிகவும் சவாலுக்குறியது, அது முடிதவுடன் அவர் பாஸ் என்றால் பாஸ்போட்டை கொடுக்க சொல்வார், பெயில் என்றால் முகத்திற்கு சொல்லிவிடுவார். அதேபோல் அமெரிக்க வீசா விண்ணபம் ஒர் மிக நீண்ட கேள்விக்கொத்து, Facebook, LinkedIn போன்ற சமூக தளங்களின் தரவுகளையும் கேட்பார்கள். மேலும் அமேரிக்க விசா இருந்தால் மெக்ஸிகோ, போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம் என்பதும் ஒரு காரணமாகும்.
  23. இவர்கள் ஆவணங்களை சரிபார்த்து ஏற்றுக்கொள்வது மட்டும்தான் செய்கின்றார்கள். யூ.கே இற்கும் இவர்கள்தான் கடந்த 20 வருடங்களாக செய்கின்றார்கள்.
  24. வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை இந்த தரப்படுத்தல் வௌிக்காட்டுவதாக குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்து பதிவாகி வருகின்றது. 2,95,000-இற்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மலைநாடு, ஆயுர்வேத சிகிச்சை, ரயில் பயணங்கள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் பயணிகளுக்கு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலாசாரம் மற்றும் பண்பாட்டு மரபுகள் நிறைந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆரோக்கியமான காலை உணவு என்பனவும் இலங்கையின் தனித்துவமான சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.jaffnamuslim.com/2024/04/5_28.html ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.