Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. புலிகளால் அப்பாவிகள் கொல்லப்பட்டது உண்மைதான் உதாரணமாக, மத்திய வங்கி குண்டு வெடிப்பு, அதிபர் ஆனந்தராஜ, கெபிடிகொல்லாவா படுகொலை போன்றவைகள்.
  2. நன்றி நன்னி அவர்களே. உங்களுக்கும் சேர்த்துதான் இந்த கேள்வி அனால் எழுதும்போது விடுபட்டுவிட்டது. குறிப்பு நான் இவ்வளவு காலமும் நினைத்தேன். நீங்கள் ஆண் என்று, இன்று தான் பர்த்தேன் நீங்கள் உங்கள் ப்ரொபைலில் பெண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
  3. இந்த திரியில் கருத்தெழுத நான் தகுதியற்றவன் ஆனால் மனதில் பட்டதை எழுதுகின்றேன். இறந்து போன துவாராகவை மீண்டும் அவர் உயிரோடு எழுந்து வந்து மக்கள் மத்தியில் வாழுகின்றார் என்று கூறி அதன் மூலம் தாங்கள் வியாபாரத்தை நடத்த முயல்வது கடைந்தெடுத்த அயோக்கியதனம். இது இறந்த ஆன்மாக்களை நினவு கூறும் இந்த நவம்பர் மாதத்தில் இப்படிபட்ட‌ ஈனசெயல் மிகவும் அருவருக்கத்தக்கது. நிழலி அவர்களின் இந்த கருத்துடன் நான் ஒத்துபபோகின்றேன். இது எனக்கும் பொருந்தும் இங்கு என் மனம் இன்னும் நம்ம மறுப்பது, பொட்டு அம்மான் இறந்து போனதைதான், ஒரு வசீகரமான முகவெட்டுடைய திரைப்பட கதாநாயன் போன்ற‌ இவர் எங்கோ இன்னும் இருக்கின்றார் என்றே என் மனம் சொல்கின்றது. இவருடய சடலம் இன்னும் கிடைக்கவில்லை. டீ என் ஏ அறிக்கையும் இல்லை. ஒரு சாதாரண வியாபாரியே பிளான் ‍ஏ இல்லா விட்டால் பிளான் பீ வைத்திருப்பார். இவ்வளவு திறமை வாய்ந்த இவர் கடைசி நேரத்தில் ஒரு எக்ஸிட் ப்ளான் வைத்திருந்திருப்பர் என்பது, இவர் திறமை மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கைதான். மாவீரர் என்பவர் யார்? வரைவிலக்கனம் என்ன? இவர்கள் புலிகளின் அமைப்பில் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்கள் மட்டுமா? அல்லது வேறு சகோதர இயக்கங்களிலும் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களும் உள்ளடங்குவார்களா?
  4. எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வரலாற்றை நோக்கும் அவதானிகள். 1985 ஏப்ரலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதலிற்கும், 1987 ஓகஸ்டில் இந்திய இராணுவ வருகைக்கும் இடைப்பட்ட அந்தக் கனாக் காலத்தின் கதாநாயகன் கிட்டர், கிட்டண்ணா அல்லது கிட்டு மாமா தான். கேணல் கிட்டு ஒரு ஆளுமை என்றால் அவரைச் சூழு இருந்த அவரது அணியிலும் ஆளுமைகள் மிகுதியாகவே இருந்தார்கள். ரஹீம், ஜொனி, திலீபன், ஊத்தை ரவி, வாசு, கேடில்ஸ், சூசை என்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நிஜ வாழ்க்கை நாயகர்களின் நாமமாகவே இருந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் குரங்கோடு, கிட்டர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவார். கிட்டரின் குரங்கிற்கு பெயர் Bell. அந்தக் காலத்தில் இலங்கை விமானப்படை பாவித்த Bell ரக உலங்குவார்த்திகளின் பெயரையே கிட்டு தனது குரங்கிற்கும் வைத்திருந்தாராம். கட்டையான ஆள், தலையில் மொட்டை வேறு, ஆனால் அவர் தான் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்று சொன்னால் நம்பியே ஆகவேண்டும். ஆனையிறவு, பலாலி, கோட்டை, நாவற்குழி, பலாலி, காரைநகர், பருத்தித்துறை, என்று யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை இரண்டு வருடங்களிற்கு மேலாக முடக்கி வைத்து, யாழ்ப்பாணத்தை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, கிட்டுவின் காலத்தில் தான். கிட்டுவின் காலத்தில் தான், முதன்முறையாக சண்டையில் உயிரிழந்த இராணுவத்தின் உடலங்களை புலிகள் இராணுவத்திடம் நேரடியாக கையளித்தார்கள். தனியொருவராக ரஹீம் அந்த உடலங்களை லெப் கேணல் ஆனந்த வீரசேகரவிடமும் கப்டன் ஜெயந்த கொத்தலாவிடமும் சென்று கையளித்த கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கும். லெப் கேணல் ஆனந்த வீரசேகர, இராணுவத்தில் இருந்து விலகி பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டு விட்டார். அவரின் தம்பி தான் ஜெனிவாக்கு போய் இனவாதம் கக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. தற்போதைய ஆட்சியில் சரத் வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பாராளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அடிக்கடி மோதுபவர். விக்டர் விழுதான மன்னார் சண்டையில் சிறை பிடித்த சிப்பாய்களை வைத்து, முதன் முதலில் கைதிகள் பரிமாற்றம் நடந்ததும் கிட்டரின் காலத்தில் தான். அதுவும் மட்டக்களப்பு தளபதியாக இருந்து, இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் பிடிபட்டு, வேறு பெயரில் இலங்கைச் சிறையில் இருந்த அருணாவை, இலங்கை அரசை சாதுரியமாக ஏமாற்றி, கைதிகள் பரிமாற்றத்தில் மீட்டெடுத்த கதைகள் எல்லாம் கனாக் காலக் கதைகள் தான். அது ஒரு காலமடாப்பா... என்று அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அங்கலாய்த்து ஏங்கும் காலங்கள் அவை.. அது ஒரு கனாக்காலம்! Posted 24th November 2020 by Jude Prakash Labels: நினைவுகள் வரலாறு https://kanavuninaivu.blogspot.com/
  5. ஆண்டாண்டு காலமாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டு, ஆக்கிரமிப்பாளர்களால் ஆண்டுக்காண்டு அடித்துத் துரத்தும் போது ஓடி ஒளிந்து கொண்டிருந்த மென்மையான சுபாவம் கொண்ட இனத்திற்குள், வீரத்தையும் ஓர்மத்தையும் விதைத்து, அடித்த எதிரியை திரும்ப அடித்து ஓட ஓட விரட்டிய வரலாற்றைப் படைத்த வரலாற்று நாயகன் தான் எங்கள் தலைவர். ஓரு குட்டித் தீவில், அதியுச்ச சுயநலமிக்க, ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிறுபான்மை இனத்திற்காக, அந்த இனத்தின் ஆட்பலத்தையும் வளங்களையும் வைத்தே, எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமின்றி, முப்படைகளையும் உருவாக்கி, சர்வதேச ஆதரவுடன் போரிட்ட ஒரு அரசாங்கத்தை தோல்வியின் விளிம்புவரை கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த இராணுவ வித்தகன் தான் எங்கள் தலைவர். தன்னலம் துறந்து, இனத்திற்காகச் சகல விதமான அர்ப்பணிப்புகளையும் புரிந்து, தளராத கொள்கையுடன் இறுதிவரை போராடிய ஒரு யுக புருஷன் தான் எங்கள் தலைவர். அந்த யுக புருஷன் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வதா, இல்லை அந்த யுக புருஷன் காலத்திலும் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்காமல் போய் விட்டதே என்று ஏங்கித் தவிப்பதா? “விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ் வீடுகள் யாவிலும் மலரனான் படுகளம் மீதிலொரு புலியானான் பிரபாகரன் எங்கள் உயிரானான் பொங்கிடும் கடற்கரையோரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே தங்கத் தமிழீழ மண்ணில் எங்கள் தலைவன் பிறந்தான்” Posted 26th November 2020 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/
  6. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது ராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்கு பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார். "உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது கோத்தாவின் அமைச்சராக இருந்து கொண்டு இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை. அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கேப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார். கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்து கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே புலிகள் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் அறிவிக்கின்றார். அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்க இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள். தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள். ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்… பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன. இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்க தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள். சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தை சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் அணிகளோ அமைதி காக்கிறார்கள். புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார். கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது. கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்கை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள். மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தில் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை. ட்ரக்கை reverseல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கூறப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் டர்க்கை புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம். ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாலவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார். ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமை சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்களை போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க, பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முனவந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பை சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார். பின்னர் இராணுவத் தளபதிகளுடனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வர, ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில், முதல் நாளிரவு அமைதியாக நடந்தேறிய வரலாற்று சம்பவத்தை பற்றிய செய்தி பின்வரும் தலையங்கத்தில் பதிவாகியது. “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” Posted 5th December 2021 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/2022/01/blog-post_10.html
  7. யூதர்களின் புனித நூலான டோரா எனப்படுவது பைபிளில் உள்ள முதல் 5 புத்தக‌ங்களுமே. அவையாவன ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பவயே. மேலும் கிறீஸ்து பிறந்தவுடன் கிறிஸ்த‌வம் தோன்றவில்லை அவர், பிறந்து,வாழ்ந்து ம‌ரித்து, விண்ணேற்றம் அடந்த பின்பு ஒரு மதமாக உருவாகியது. புனித பவுல் இந்த மத்தை பரப்ப ஒரு ஊக்கியாக இருந்தார். இதை அப்பொஸ்தலர் ந‌டபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம்.
  8. ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும் ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும்
  9. ஆம் கர்த்தர் ஆபிராகாமுக்கு உன் சந்ததியை மணலைபோலவும், வானத்தின் நட்சத்திரங்களை போலவும் பொருகப் பண்னுவேன் என்றார்.
  10. ஆம் யோவான் புத்தகத்தில் இது குறிப்பிடபட்டுள்ளது. அருமை கோசான் இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
  11. ஆம் ஆகர் எனும் அடிமைப்பெண்ணுக்கு பிறந்தவனே இஸ்மவேல்.
  12. பலஸ்தீனியர்களுடன் நொருங்கி பழகியவர்கள் என்னும் அனுபவத்தில் சொல்கின்றேன். இவர்கள் சக மனிதர்களை, விசேடமாக எம்போன்ற ஆசியர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார்கள். இவர்களுடன் வேலை செய்வது மிகவும் கஷ்டம்.
  13. ஜூலை மாதம் 23ஆம் திகதி, வவுனியா, தோணிக்கல் பிரதேசம் அந்த வீட்டில், அதிகப்படியான சந்தேசம் நிறைந்து காணப்பட்டது. அதற்குக் காரணம், அனைவரின் பாசத்துக்குப் பாத்திரமான மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமாகும். எனினும், அந்தக் குதூகலம் நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை. நேரம், நள்ளிரவு 12.05ஐ அண்மித்துக் கொண்டிருந்தது.... வீட்டுக்குள் நுழைந்த கூலிப்படை, அங்கிருந்தவர்களை வெட்டியும் குத்தியும் வீட்டுக்கு தீவைத்தும் படுபயங்கர கொடூர அட்டகாசங்களில் ஈடுபட்டது. வவுனியாவில் வர்த்தகம் செய்யும் ‘சுரேஸ்’ என்கின்ற முஹமட் இக்ஸாட், தோணிக்கல்லில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 19 வயதான பாத்திமா சஜானாவுக்கு, இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட, தனது நண்பர்கள், உறவினர்கள் என சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தார். கொழும்பில் இருந்து வந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த இக்ஸாட்டின் சித்தி, சித்தியின் கணவன் மற்றும் மகளான 21 வயதான பாத்திமா சசீமா சைனி, அவருடைய கணவன் சுகந்தன் ஆகியோரும் அன்றைய தினம் சஜானாவின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இரவு 12.05 மணியளவில் வீட்டின் முன் வாயில் கதவு (கேற்) தட்டப்பட்டது. வீட்டின் உரிமையாளரான ‘சுரேஸ்’, தனது மகளுக்கு ‘சப்பிரைஸ் கிப்ட்’ வந்துள்ளதாக நினைத்து, முன் கதவை திறந்து பிரதான வாயிலுக்கு சென்றிருந்தார். கூடவே, அவரின் மனைவியும் சசீமா சைனியின் தாயாரும் சென்றிருந்தனர். வாயில் கதவை திறந்ததும், அங்கு முகமூடி அணிந்திருந்த 10 இற்கும் மேற்பட்டவர்கள் “சுகந்தன் எங்கே” எனக் கேட்டனர். இதனால் அச்சமடைந்த ‘சுரேஸ்’, “எற்காக சுகந்தனைத் தேடுகின்றீர்கள்; நீங்கள் யார்” எனக் கேட்ட, மறுகணமே அவர் மீது வாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து ‘சுரேஸ்’, ஓடிச்சென்று தனது வீட்டில் ஒளிந்து கொண்டார். அவருடன் கூடவே சென்ற மற்றைய இரண்டு பெண்களும் பயத்தில் கத்தியுள்ளனர். இந்நிலையில், வீட்டின் முன் கதவு திறந்து காணப்படவே, வீட்டுக்குள் சென்ற கூலிப்படை, வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறி, சுகந்தனைத் தேடியுள்ளனர். இதன்போது, பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள், என்ன நடக்கின்றது என்பதை உணர முடியாத நிலையில், பயத்தால் உறைந்து, அறைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். இதன்போது, பெற்றோல் மற்றும் ஒயில் கலந்த கலன்களுடன் வந்த கூலிப்படை வீட்டுக்குத் தீவைத்தனர். இந்நிலையில் அறைக்குள் ஒளித்திருந்த சுகந்தன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறியபோது, வீட்டின் முன்புறம் அதிகளவில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. சுகந்தனின் மனைவியான சசீமா சைனி, தடக்கி விழுந்துவிடவே, அவரைத் தூக்குவதற்கு சுகந்தன் முயன்றுள்ளார். எனினும், அது சாத்தியப்படாத நிலையில், சுகந்தனிலும் தீபற்றியது. அதனால் தனது மனைவியை தூக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, வெளியில் சென்று மண்ணில் புரண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். இதற்கிடையில், அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்தபோது, வீடு முழுமையாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இந்நிலையில், அறைகளுக்குள் ஒளித்து இருந்தவர்களை மீட்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு, அவர்களை மீட்டெடுக்க முயலும்போதே, பொலிஸாருக்கும் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கும் தகவலை அயலவர்கள் வழங்கினர். எரியும் வீட்டுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் அயலவர்கள் ஈடுபட்டு, மூன்று வயது முதல் 46 வயது வரையான ஒன்பது பேரை தீக்காயங்களுடன் மீட்டனர். இந்நிலையில், வீட்டுக்கு தீ வைத்த கும்பல் தப்பியோடி இருந்தது. வீட்டுக்குள் விழுந்து கிடந்த சசீமா சைனியை எவரும் காணாததால், அவர் வீட்டுக்குள்ளேயே தீக்காயம் மற்றும் மூச்சு திணறலால் மரணித்த நிலையில், தீயணைப்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட வவுனியா மாவட்ட பதில் நீதிவான் த. ஆர்த்தி ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில், சுகந்தன் (35 வயது), பாத்திமா சஜானா (19 வயது), தேவராணி (33 வயது), தாரணி (46 வயது), சுதர்சினி (46 வயது), ஆக்ஸட்டினா (ஏழு வயது), தர்வின் சுதர்சினி, தனுசா, முஹமட் இக்ஸாட் (40 வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கடும் காயங்களுக்குள்ளான சுகந்தன், வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மறுநாள் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். சி.சி.ரி.வி காணொளிகளை முதலில் ஆராய்ந்தபோது, வீட்டின் வெளியில் இருந்த சி.சி.ரி.வி கமெரா உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டின் உட்பகுதியில் இருந்த கமெராக்களும் செயற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், அயல் வீடுகளில் உள்ள சி.சி.ரி.வி கமெராக்களை பரிசோதித்தபோது, முகமூடியும் கையுறையும் அணிந்த சிலர், கைகளில் கலன்கள், வாள்களுடன் வரிசையாக நடந்து வருவதையும் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதையும் கண்டுகொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவிலவின் கண்காணிப்புடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுஆராச்சியின் ஆலோசனையில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்தன. இதையடுத்து, தோணிக்கல் பகுதியில் உள்ள மயானத்தில் இருந்து கையுறை, கல்வனைஸ் பைப் என்பன, மோப்ப நாயின் உதவியுடன் மீட்கப்பட்டன. பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவில, வவுனியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட நிலையில், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு, சிவில் புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்தன. இந்தக் குற்றச்செயலுக்கான திட்டம், தவசிகுளம் குளக்கட்டுப்பகுதியில் இருந்து திட்டமிடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கசிந்த நிலையில், குறித்த கிராமத்தில் விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தினர். இவ்வேளை, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது. இத்தொலைபேசி அழைப்பு, அப்பகுதியில் பல குற்றங்களைச் செய்திருந்த ஒருவருடைய அழைப்பாக இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக, தனக்கு சில தகவல்கள் தெரியும் என அவர் தெரிவித்திருந்தார். குற்றத்தடுப்பு பொலிஸார் அவரிடம் நேரடியாகத் தகவல்களைப் பெற்றபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வௌிவந்தன. இதன் பிரகாரம், குறித்த இடத்துக்கான அலைபேசி கோபுரத்தின் ஊடான அழைப்புகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள், மரணடைந்த சுகந்தன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படை மற்றும் அந்தக் கிராம மக்கள் வழங்கிய தகவல் என்பவற்றின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். தவசிகுளம் பகுதியில் வைத்து, 31 ஆம் திகதி முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, நான்கு பேர் கைதாகினர். இந்நிலையில், இச்சம்பவத்தை செய்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட நபர், வவுனியாவில் இருந்து தப்பி ஓடியிருந்தார். கைதுசெய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள்கள், அலைபேசிகள் என்பன மீட்கப்பட்டன. இந்நிலையில், மிகுதி விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கமாறு பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்ட நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தொடங்கினர். இதன் பிரகாரம், சந்தேக நபர்களை தடுப்பு காவலுக்கு எடுத்து, விசாரணைமேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐந்து வாள்கள், கையுறைகள் உட்பட சில எரிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுத்து வைத்து விசாரணைமேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, உயிரிழந்த சுகந்தனின் நண்பராக இருந்த ஒருவர், பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் மூன்றாம் திகதி கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுப்பு காவல் உத்தரவை பெற்று விசாரணை செய்யப்பட்டார். விசாரணைகள் முடிவடைந்து, வைத்திய பரிசோதனைகளின் பின்னர், நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடந்த, 11ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெற இருந்தபோதிலும், சாட்சி சிகிச்சை பெற்று வருவதால் அவர் நீதிமன்றத்துக்கு வர முடியாமையால், அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டதுடன், சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் வவுனியா நீதிவான் உத்தரவு வழங்கியிருந்தார். குறித்த சம்பவம் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு விவகாரத்தால் சம்பவித்தது என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ( சுகந்தன் பாத்திமாவை திருமணம் செய்வதற்கு முன்னர் வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கொலை குற்றம் ஒன்றில் சிறைக்கு சென்ற வேளையில் அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் தகராறுகள் ஏற்பட்டுள்ளன ) அத்துடன் போதைப்பொருள் வியாபாரமும் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்குமா என்பது தொடர்பிலான சந்தேகமும் மக்கள் மத்தியில் நிறைந்து காணப்படுகின்றது. ஏனெனில், மரணமடைந்த சுகந்தனும் பிரதான சந்தேக நபராக கைதானவரும் அடிதடி மற்றும் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமையையும் மக்கள் மறுப்பதற்கில்லை. இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. . எது எவ்வாறாயினும், சட்டம் தன் கடமையை செய்யும் நிலையில், தனி நபர்கள் தீர்ப்பு வழங்கும் ‘ரவுடீஸ’ போக்கு, ஒழுக்கமுள்ள சமூகத்துக்கு ஏற்புடையதல்ல. எனவே, உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை நீதியினூடாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். https://www.madawalaenews.com/2023/08/i_875.html
  14. நல்லொதொரு அனுபவப பகிர்வு. ஏழப்பிரியன் ஐயா இது போன மார்கழியில் குளிரான காலப்பகுதியில் நடந்த சம்பவமா? மே, ஜுன் ஆகிய மாதங்களில் காலனிலை எப்படி இருக்கும்? ஏனென்றால் நான் அடுத்த மாதம் லாஸ் ஏஞலஸ், சன் ப்ரான்சிச்கோ, நியூ யேர்க், ஹூஸ்டன் மற்றும் ஓர்லாண்டோ ஆகிய பகுதிகளையும் கன‌டாவின் டொரோன்டாவுக்கும் விசிட் பண்ணலாம் என இருக்கின்றேன். இப்பொழுது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதா?
  15. க‌ட்டாரில் இருந்து எனக்கு கோல் / ஈமைல் பண்னியிருந்தால் நான் நல்ல உடை வாங்கி தந்திருப்பேனே.
  16. நிதர்சனமான கருத்து. கோசான் நிறைய பேர் இப்பொழுது நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். படிக்கவோ, வேலை வாய்ப்புக்னெவோ. பணம் உள்ளவர்களும் வசதியாக சொத்துக்களுடன் வாழ்பவர்களும் நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். பலர் நல்ல தகவல்களுடன் யூ ரிப் வீடியோக்களை வெளியிடுகின்றார்கள். இங்கிலந்தில் இப்பொழுது வேலை அனுமதி இலகுவாக நிறைய கிடைக்கின்றது, சாதரண கடை வைதிருப்பவர்கள் கூட தங்களுக்கு விருபமானவர்களை எடுக்கலாம் என இந்த வீடியோவில் கூறுகின்றார்கள். என்னுடைய நண்பர்கள் 4 அல்லது 5 பேர் வ்ரை இந்த‌ 2 வருடங்ளில் (50 வயதில்) கனடா சென்றவர்கள். திழர்கள் இந்த நாட்டை விட்டு போவதே நல்லது. ஆம் மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக இலகுவாக குடியுரிமயும் எடுக்கலாம். இலங்கை போலாவே இந்த நாடுகளின் கால நிலையும் இருக்கின்றது.
  17. டொரொன்டொவில் சிங்களவனின் கடைகள் உள்ளதா? இங்கு போல் அங்கு பொல்ச‌ம்போல், கட்ட சம்பல், கிரிபத், மாலு எபுல் கறி, சிறிய ரோஸ்பாண், பருப்பிகறி, கொலகெத எல்லாம் கிடக்குமா?
  18. கொழும்பிம் புறந‌கர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக‌ சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க‌ ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக‌ ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொட‌ங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்த‌வன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட‌ என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்க‌வும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. ம‌ரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன‌ அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
  19. 1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிக‌லா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிற‌ந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கற‌ல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்ட‌ரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக‌ இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட‌ பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற‌ கதற‌ அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் ‍ அனுபவம்-1
  20. ஐசே வா சரி சிரிப்பு..Epic வா. எங்களுக்கு பாக்கிஸ்தான் ஈக்கிவா.. அதிலும் முதல் வெடிசத்தம்......🤣
  21. நல்லதொரு கட்டுரை ஈழப்பிரியன் ஐயா ஆம் புங்கை நானும் இதை பற்றி கேள்விப்ட்டேன். என்னுடைய முன்னாள் மேலாளர் ஒரு மெக்க்சிகன். அடிக்கடி இலங்கைக்கு விடுமுறைக்கும் வருவான். அவன் கூறிய ஒரு விடையன் என்னவென்றால் ஆங்கிலேயர்கள் தாங்கள் பிடித்த நாடுகளை அபிவிருத்தி செய்தார்களாம் உ+ம் ரயில் பாதைகள் போன்றவற்றை அமைத்துள்ளார்கள். ஆனால் ஸ்பானிய ஆக்கிரமிப்ள‌ர்கள் அப்படி எதுவும் செய்வதிலையாம்.
  22. சுவி ஐயா இந்த பாடல் முந்தனை முடிச்சு படத்தில் என நினக்கின்றேன். அப்பொழுது எனக்கு பதிம வயது. நடிகை தீபாவை இந்த பாடலில் பார்த்த்து பலமுறை மனம் கிறங்கியுள்ளேன்.
  23. சித்தெறும்பு கடித்திருக்கும். ராசாவே சிந்த்தெறும்பு என்னை கடித்தது என்று பாட்டும் உண்டல்லவா
  24. ஆம் இது உண்மை, ஆனால் ஜபெல் அலி சுதந்திர வர்த்தக வலயத்தில் அப்படி அல்ல என நினக்கின்றேன். 100% வெளிநாட்டவரை கொண்டு உருவாக்கலாம்
  25. இங்கிருந்தால் கட்டாயமாக நானும் வருவேன். (அடுத்த வருடம் சிலகாலம் நண்பனுடன் டோக்கியோ, ஜப்பானில் வேலை செய்ய நினத்துள்ளேன். செலவுகள் / வாழ்க்கைதரம் எப்படியோ தெரியாது)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.