Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3242
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. கோட்டா GO கம மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் https://www.madawalaenews.com/2022/05/live-video-go.html
  2. (அஷ்ரப் ஏ சமத்) ஊவா மாகாணசபையின் ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின் மகள் ஷஸ்னா முஸம்மில் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகின்றாா். அவா் லண்டனில் இருந்து தனக்கு தொலைபேசி மூலம் தந்த விபரங்கள் பின்வருமாறு அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 2022 மே 5ஆம் திகதி நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளுராட்சித் தோ்தலில் கொன்சவேட் கட்சியில் ஊடாக போட்டியிட்டு கூடிய வாக்குகளைப் பெற்று அந்த வட்டார உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டுள்ளாா் . கடந்த வருடமும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற மில்டன் நகரில் குறிப்பிட்ட தோ்தலில் போட்டியிட்டு 135 வாக்குகளினால் தோல்விகண்டாா் இம்முறை டொட்டஹன்வட்டராததில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அப்பிரதேசததில் இலங்கை வாக்காளா்கள் இல்லாதபோதிலும் இந் நகரை தெரிபு செய்து அப் பிரதேசத்தில் தனது பிரச்சார சமூக சேவை களைச் செய்து அங்கு வாழும் வெளிநாட்டவா்கள் மனதை வென்று வெற்றிபெற்றார். இலங்கை முஸ்லிம் பெண் அதாவது ஜக்கிய இராச்சியத்தின் கொண்சவேட் கட்சியில் உறுப்புரிமை பெறுவது கஸ்டமாக இருநதாலும் அவா்களது மனதை வென்று அதில் உறுப்புரிமை பெற்றது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இங்கிலாந்திலுள்ள திறந்த பல்கலைக்கழகத்திலுள்ள எம்.பி.ஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஷம்மில் திறந்த பல்கலைக்கழகம் சமுக சேவை அமைப்புக்களில் தொண்டராக பல்வேறு அமைப்புக்களில் உறுப்பிணராக இருந்து வயதுவந்தவா்களுக்கு உதவுதல், கெயினாஷ் இளைஞா் அமைப்பு,ஊடாக சிறுவா்கள் சிறையில் உள்ள பெற்றோா்கள் அவா்களது குழந்தைகள் பராமரிப்பு போன்ற சமுக சேவைகளைச் செய்து வருகின்றாா். அத்துடன் லண்டனில் கொவிட் 19 தொற்று நோய் சம்பந்தமான சுகாதார சங்கத்தில் இணைந்து வக்சின் வழங்கும் நிறுவனத்தின் தொண்டராகவும் அங்கு பணிபுரிந்து வருகின்றாா். அயலவர்களின் நிலைமையினை மேம்படுத்துவதற்கு சிறிய மற்றும் பாரிய உள்நாட்டு வா்த்தகத்திற்கு உதபுவவா். இலங்கையில் கொழும்பு 7 ல் உள்ள மகளிா் கல்லுாாியில் ஆங்கில மொழி மூலம் கல்விகற்றவா், கொழும்பு மாநகர சபையில் அவரது தந்தை முஸம்மில் மேயராக இருந்த காலத்தில் அவரது பிரத்தியோக செயலாளராக கடமையாற்றினாா். அத்துடன் இலங்கை பெண்கள் வியாபார அமைப்பின் 2018 பணிப்பாளா் சபை உறுப்பிணராகவும் கடமையாற்றியுள்ளாா். அமேரிக்க அமைப்பான வியாபார அமைப்பொன்றின் துாதுவர் பதவியையும் வகித்துள்ளா். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பாராளுமன்றத் தோ்தல் காலத்தில் இலங்கை வந்து பிரச்சார பணிகளையும் மேற்கெண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.madawalaenews.com/2022/05/i_23.html
  3. கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் கைப்பேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு பிரச்சினைகள் அவருக்கு இருக்கவில்லை” என்று மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் சடலம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் இளவாலையைச் சேர்ந்த இளைஞன் இதே போன்ற காரணத்தினால் தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது https://www.jaffnamuslim.com/2022/05/2-2.html
  4. பல லட்சம் பணம் கொடுத்து அகதியாக இல்லாமல் வேறு பல சட்டரிதியான முறையில் வரலாம். பலவழிகள் உண்டு. மேலும் இப்பொழுது பிரித்தானியவிற்கு வரும் அகதிகள் ருவாண்டவிற்கு அனுப்பபடுவார்கள் என சமீபத்தில் ஒரு செய்தி வந்தது.
  5. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியதே பெரிய விடயமாக அமையாது. ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம். எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை. அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம். சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள். 12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள் அதனை நிறைவேற்ற முடியவில்லை. சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள் அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை. இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது. நான் மாகாண சபை அமைச்சராக இருந்தபோது பதுளை மாவட்டத்தில் 150 பாடசாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தேன். 120 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து கொடுத்தேன் ,200 மேற்பட்ட வீதிகளை அமைத்துக் கொடுத்தேன். அதுமட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு பலதரப்பட்ட வழங்கலை மக்களுக்காக பெற்றுக் கொடுத்தேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.jaffnamuslim.com/2022/05/blog-post_38.html
  6. இங்கை முஸ்லிம்கள் இன்று செவ்வாய்கிழமை 3 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். சமகாலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலகம் முன் காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களின் முக்கிய பண்புகளில் ஒன்றான விருந்தோபல் அடிப்படையில் இன்று காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புரியாணி வழங்கப்பட்டது. இதில் பௌத்த பிக்குகளும் பற்கேற்றார்கள். முஸ்லிம்கள் தமது கைளினாலே சுவைமிகு உணவுகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வோருக்கு பறிமாறினர். https://video.fdoh1-2.fna.fbcdn.net/v/t42.1790-2/279616446_1108351843368849_8034052222961774752_n.mp4?_nc_cat=103&ccb=1-5&_nc_sid=985c63&efg=eyJybHIiOjU1MiwicmxhIjo1MTIsInZlbmNvZGVfdGFnIjoic3ZlX3NkIn0%3D&_nc_ohc=81IYeTbw_hYAX9Ng05U&rl=552&vabr=307&_nc_ht=video.fdoh1-2.fna&edm=AGo2L-IEAAAA&oh=00_AT8bp-BfnSRW5_1gDDJ4Au6t_0dRRi33bmuIQ-sruOF0NQ&oe=627130B2 https://www.jaffnamuslim.com/2022/05/blog-post_57.html
  7. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 4100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும். சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருக்கும் நிலையில், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியுள்ளது. குறித்த நிறுவனம் நடேசனுக்கு சொந்தமானது. ரூட் இன்டர்நேஷனல் நிறுவனம், கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை வங்கிக்கு நிதியை மாற்றியுள்ளது. அந்தக் கணக்கில் வைப்பு செய்யப்பட்ட பணத்தில் மல்வானையில் உள்ள பிரபல சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்களை இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார். அதன்படி பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் முதல் பிரதேசசபை உறுப்பினர்கள் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி இன்றைய தினம் குறித்த ஊடக சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் அங்கு பெருமளவான கோப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒவ்வொரு கோப்பாக அவர் தெளிவுப்படுத்தும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்றை வெளிப்படுத்தியுள்ளார். அனுர இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கலாச்சார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது. 146 செலவு அறிக்கைள். நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர். பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை. பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பாக கோப்பே இது என சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின் பெயரில் 32 இடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லுாரியில் இன்று இடம்பெற்ற மோசடிகளை வெளிக்கொணரும் நிகழ்விலேயே அவர் இதனை வெளிப்படுத்தினார். எவன்கார்ட் நிறுவத்துடன் கடற்படையினர் செய்துக் கொண்ட உடன்படிக்கையின்படி 25வீத வருமானம் கடற்படைக்கு தரப்படவேண்டும். எனினும் முன்னர் கடற்படை தளபதிகள் சிலர், கடற்படைக்கு வரும் வருமான வீதத்தை குறைத்தனர். அதாவது எவன்காட் நிறுவனத்துக்கு கிடைக்கவேண்டிய வருமானம் அதிகரிக்க செய்யப்பட்டது. இதற்கு பதிலாக குறித்த முன்னாள் தளபதிகள் ஓய்வுப்பெற்றதும் அவர்களுக்கு எவன்கார்ட் நிறுவனத்தில் தொழில் வழங்கப்பட்டதாக அனுரகுமார தெரிவித்தார். மற்றும் ஒரு ஊழல் நடவடிக்கையின்போது அமைச்சர் ஒருவர் தமது காலம் முடிவடைந்து வாகனத்தை அமைச்சுக்கு திருப்பி கொடுத்தபோது, அதில் உள்ள இயந்திரத்துக்கு பதிலாக பழுதடைந்த இயந்திரம் பொருத்தப்பட்டு அது திருப்பிக் கொடுக்கப்பட்டதாக அனுர குமார குறிப்பிட்டார். அதேநேரம் நாமல் ராஜபக்ச தொடர்பான மோசடி ஆவணம் தம்மிடம் இருப்பதாக கூறிய அனுரகுமார,“சந்தஹிரு செய” என்ற படையினரின் நினைவகம் ஒன்றை அமைப்பதற்காக சுங்கத்திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை தங்கத்தின் மூலம் செய்யப்பட்ட ஒரு அடி உயரமுள்ள புத்தபெருமானின் சிலைக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். இலங்கை கடற்படையினர் வடபகுதி கடலில் 45 கிலோ கிராம் தங்கத்தை கைப்பற்றினர் அதனை கைபற்றி 24 மணி நேரம் செல்லும் முன்னர் கடற்படை தளபதி, சந்தஹிரு சேயவை புதையலாக வைக்க கைப்பற்றிய தங்கத்தில் 8 கிலோ கிராம் தங்கத்தை தருமாறு சுங்க திணைக்களத்திடம் கோருகிறார். எனினும் கைப்பற்றிய தங்கத்தின் உரிமை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நாங்கள் ஒரு மாத கால அவகாசம் வழங்குவோம், இதனால் நேற்று கைப்பற்றிய தங்கத்தை இன்று வழங்க முடியாது என சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர், கடற்படை தளபதிக்கு பதில் அனுப்புகிறார். இந்த கோரிக்கை காரணமாக கைப்பற்றிய புதிய தங்கத்திற்கு பதிலாக ஏற்கனவே கைப்பற்றி அரசுடமையாக்கப்பட்ட தங்கத்தில் இருந்து 8 கிலோ கிராம் தங்கத்தை சுங்க திணைக்களம் வழங்கியுள்ளது. இதனை தவிர இலங்கை வங்கியிடம் இருந்து சுமார் மூன்று கிலோ கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்கின்றனர். மொத்தமாக சுமார் 11 கிலோ கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த தங்கத்தை வெலிசரயில் உள்ள கடற்படை முகாமுக்கு அனுப்பி வைத்து சந்தஹிரு சேயவில் புதையலாக புதைக்க ஒரு அடி உயரமான புத்தர் சிலையை ஒன்றை நிர்மாணிக்கின்றனர். அத்துடன் தங்க சிலையை செய்ய பயன்படுத்திய அச்சை பயன்படுத்தி வெங்கலத்திலும் இரண்டு புத்தர் சிலைகளை செய்யப்படுகின்றன. கண்டி பிலிமத்தலாவை நாராம்பொத்த என்ற பிரதேசத்தில் ஒன்றரை அடி மற்றும் இரண்டரை அடி உயரமான இரண்டு புத்தர் சிலைகளை வெங்கலத்தில் செய்கின்றனர். அந்த சிலைகளுக்கு தங்கமூலம் பூசுகின்றனர். இந்த புத்தர் சிலைகளை அனுராபுரத்தில் கண்காட்சியிலும் வைக்கின்றனர். இறுதியில் புதையலில் வைக்க செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர தங்க புத்தர் சிலை காணாமல் போய் விடுகிறது. புதையலாக புகைப்பட்டது தங்க சிலையா அல்லது தங்கமூலாம் பூசப்பட்ட சிலையா என்பது இன்னும் கண்டறியப்பட முடியாமல் இருக்கின்றது. அதனை கண்டுபிடிக்க முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அனுரகுமார குறிப்பிட்டார். https://www.jaffnamuslim.com/2022/05/blog-post_93.html
  8. இவர் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார் என சிங்கள மக்கள் இவரை குற்றம் சாட்டுவார்கள்
  9. - எம்.எல்.எம். மன்சூர் - 2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ச ஈட்­டிய அமோக வெற்றி சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்ட மூன்­றா­வது சிங்­கள பௌத்த எழுச்சி என்றும், முன்­னெப்­பொ­ழுதும் இருந்­தி­ராத பேரெ­ழுச்சி என்றும் வர்­ணிக்­கப்­பட்­டது (முத­லா­வது, இரண்­டா­வது எழுச்­சிகள் முறையே 1956 இலும், 2010 இலும் இடம்­பெற்­றி­ருந்­தன). இலங்கை இன்று எதிர்­கொண்டு வரும் பெரும் நெருக்­க­டிக்­கான விதைகள் அந்த வெற்­றியை அடுத்தே ஊன்­றப்­பட்­டன. குறிப்­பாக விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் சிங்­கள இன­வா­திகள், அத்­து­ர­லியே ரத்ன தேரர் போன்­ற­வர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் காவி உடைத் துற­வி­களின் ஒரு குழு­வினர், வியத்­மக அறிஞர் குழாம் மற்றும் சிங்­கள செய்தி ஊட­கங்கள் ஆகிய நான்கு தரப்­புக்கள் கட்­ட­மைத்த போலித் தேசி­ய­வாத பெரு­மி­த­வு­ணர்­வுடன் இணைந்த விதத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வெறி மற்றும் மத­வெறிப் பிரச்­சா­ரங்­களின் மறை­முக மற்றும் நேரடி விளை­வொன்­றா­கவே இன்­றைய நெருக்­கடி தோன்­றி­யி­ருக்­கின்­றது. சிங்­கள – பௌத்த மக்­களின் நலன்­களை பேணு­வது எப்­படி என்ற விட­யத்தை இந்தத் தரப்­பினர் முற்­றிலும் பிழை­யாக புரிந்து கொண்­டதே இங்­குள்ள பிரச்­சினை. சிறு­பான்மை சமூ­கங்­களின் உரி­மை­களைப் பறிப்­பதன் மூலமும், அவர்­க­ளு­டைய மத உணர்­வு­களை புண்­ப­டுத்­து­வதன் மூலமும், பல ஆண்டு காலம் அச்­ச­மூகங்கள் அனு­ப­வித்து வந்­தி­ருக்கும் தனித்­து­வ­மான கலா­சார உரி­மை­களை மறுப்­பதன் மூலமும், பௌத்த மக்கள் எவரும் வாழாத முல்­லைத்­தீவு மற்றும் பால­முனை போன்ற இடங்­களில் புத்தர் சிலை­களைக் கொண்டு போய் வைப்­பதன் மூலமும், கிழக்­குக்­கான தொல்­லியல் செய­லணி என்ற போர்­வையில் தமிழ், முஸ்லிம் மக்­களின் காணி­களை அடா­வ­டித்­த­ன­மாக அப­க­ரிப்­பதன் மூலமும் சிங்­கள மக்­களின் நலன்­களை நிறை­வேற்றி வைக்க முடியும் என இவர்கள் தவ­றாகப் புரிந்து கொண்­டி­ருந்­தார்கள். அதன் ஊடாக அவர்கள் இலங்கைச் சமூ­கத்தை பெரும்­பான்மை – சிறு­பான்மை என இரு பிரி­வு­க­ளாக பிள­வு­ப­டுத்­தி­னார்கள். இந்த இன­வாதக் கோஷங்­களின் பேரோ­சையும், சிங்­கள பௌத்த பெர­ஹ­ராவின் மெய் சிலிர்க்க வைக்கும் காட்­சி­களும் சாதா­ரண சிங்­கள மக்­களின் காது­க­ளையும், கண்­க­ளையும் அடைக்கச் செய்­தி­ருந்­தன. இந்தக் களே­ப­ரத்தில் இலங்கைத் தீவு சர்­வ­தேச ரீதியில் படிப்­ப­டி­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­த­னையும், அது மிக வேக­மாக தனது நண்­பர்­களை இழந்து வரு­வ­த­னையும் எவ­ராலும் பார்க்க முடி­ய­வில்லை. இந்த வெற்றுக் கூச்­சல்கள் இது­வ­ரையில் தமக்கு அழிவைத் தவிர வேறு எத­னையும் பெற்றுத் தர­வில்லை என்­ப­தனை சிங்­கள மக்கள் சற்றுத் தாம­த­மாக இப்­பொ­ழுது புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்தப் புரி­தலை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அவர்கள் செலுத்­தி­யி­ருக்கும் விலை தான் இன்­றைய இலங்­கையின் நெருக்­கடி. சுதந்­தி­ரத்­திற்குப் பிற்­பட்ட வர­லாற்றில் முதல் தட­வை­யாக இன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் நிரா­க­ரிக்கும் விதத்­தி­லான ஒரு சிந்­தனை மாற்றம் பரந்த சிங்­கள சமூ­கத்தில் மெது­வாக, ஆனால் உறு­தி­யாக நிகழ்ந்து வரும்; ஒரு பின்­பு­லத்தில், இலங்­கையின் இன்­றைய நெருக்­க­டியை அல­சு­கி­றது இக்­கட்­டுரை. ஏப்ரல் மாதம் சிங்­கள மக்­களை பொறுத்­த­வ­ரையில் குதூ­க­லமும், கொண்­டாட்­டங்­களும் நிறைந்த ஒரு மாதம். நெல் அறு­வ­டைக்கு பின்னர் சாதா­ரண மக்­களின் கைகளில் காசு புழங்கும் காலம். தமது பாரம்­ப­ரிய புத்­தாண்டு பண்­டி­கையை கொண்­டா­டு­வ­தற்கு அவர்கள் வித வித­மான உணவுப் பண்­டங்­க­ளையும், உடு துணி­க­ளையும், பரிசுப் பொருட்­க­ளையும், வீட்­டுக்குத் தேவை­யான தள­பாடச் சாமான்­க­ளையும் வாங்­கு­வது வரு­டாந்த வழமை. அந்தக் கொள்­மு­தல்­க­ளுக்­கென தமது ஆண்டு வரு­மா­னத்தில் சுமார் கால்­வாசிப் பகு­தியை இந்த மாதத்தில் அவர்கள் செல­வி­டு­வார்கள். ஆனால், இந்தத் தடவை எல்­லாமே தலைகீழ். கொண்­டாட்­டங்­களின் பூமி­யாக மாற வேண்­டிய சிங்­களப் பெரு­நிலம் கொந்­த­ளிப்­புக்­களின் பூமி­யாக மாறி­யி­ருக்­கின்­றது. விலை­வா­சி­களில் பன்­ம­டங்­காக ஏற்­பட்­டி­ருக்கும் உயர்வு, அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் தட்­டுப்­பாடு என்­ப­வற்­றுடன் இணைந்த விதத்தில் பதுக்கல் வியா­பாரம் மற்றும் கறுப்புச் சந்தை என்­பன நாட்டில் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன. 1970 களின் பின்னர் பிறந்த தலை­மு­றை­யினர் தமது வாழ்­நாளில் முதல் தட­வை­யாக இத்­த­கை­ய­தொரு பொரு­ளா­தார நெருக்­க­டியைச் சந்­திக்­கி­றார்கள். இந்த நிலையில் மக்­களின் ஆவே­சமும், விரக்­தியும் தன்­னி­யல்­பாக வெளி­யேறிக் கொண்­டி­ருக்­கின்­றன. பொது­வாக சிங்­கள பேச்சு வழக்கில் பயன்­ப­டுத்­தப்­படும் இரு சொற்­களை அவர்கள் அதிகம் அதிகம் இப்­பொ­ழுது உச்­ச­ரித்து வரு­வதைப் பார்க்க முடி­கி­றது. ஒன்று ‘பரிப்­புவக் கேவா’ என்­பது (‘பருப்பு கணவா’ என்ற சிங்­களச் சொல் ‘நம்பி மோசம் போனோம்’ என்ற அர்த்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ‘நாங்­க­ளா­கவே தேடிக் கொண்ட கேடு’ என்றும் சொல்­லலாம்). அதே நேரத்தில், ராஜபக்ஷ அர­சாங்­கத்தை வசை­பா­டு­வ­தற்கு மட்­டு­மன்றி முன்­சொன்ன நான்கு தரப்­புக்­களை சபிப்­ப­தற்கும் அவர்கள் ‘கால­கண்ணி’ என்ற சொல்லை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள் (‘கால­கண்ணி’ என்ற சொல்­லுக்கு தமிழில் ‘படு பாவிகள்’ என்ற விதத்தில் பொருள் கொள்­ளலாம்). இங்­குள்ள விசேஷம் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஏற்­க­னவே ‘தின்­றி­ருக்கும் பருப்பை’ இப்­பொ­ழுது சிங்­கள மக்கள் தின்­றி­ருக்­கி­றார்கள் என்­ப­துதான். அதா­வது, தேர்­தல்­களில் வாக்­கு­களை அள்ளிக் கொள்­வ­தற்­காக இன­வா­தத்தை தூண்டி, மக்­களை உசுப்­பேற்றி முன்­னெ­டுக்­கப்­படும் சந்­தர்ப்­ப­வாத அர­சியல் இறு­தியில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்கும் அழிவை மட்­டுமே எடுத்து வர முடியும் என்ற கசப்­பான பாடத்தை ஏற்­க­னவே தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் படித்­தி­ருக்­கின்­றார்கள். இப்­பொ­ழுது சிங்­க­ள­வர்­களின் முறை வந்­தி­ருக்­கின்­றது. இன்று நாடெங்­கிலும் பர­வ­லாக இடம்­பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களின் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒரு சிறப்­பம்சம் அவை முழுக்க முழுக்க சிங்­கள மக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாகும். இன­வா­தி­களும், சிங்­கள ஊட­கங்­களும் உரு­வாக்­கிய சமூகப் பிளவின் (Ethnic Polarisation) ஒரு பிர­தி­ப­லிப்­பா­கவே இதனைப் பார்க்க முடி­கி­றது. இந்தப் பொரு­ளா­தார நெருக்­கடி இன மத பேத­மில்­லாமல் எல்­லோ­ரையும் மிகவும் மோச­மான விதத்தில் பாதித்­தி­ருந்த போதிலும், தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­க­ளிலோ அல்­லது பெருந்­தோட்டப் பிர­தே­சங்­க­ளிலோ குறிப்­பி­டத்­தக்க அள­வி­லான அரச எதிர்ப்பு செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தாகத் தெரி­ய­வில்லை. ‘இது அவர்கள் வலிந்து தேடிக்­கொண்ட ஒரு நெருக்­கடி. அதனால் அவர்­களே இதனை தீர்த்துக் கொள்­ளட்டும்’ என்ற விதத்­தி­லான ஒரு அலட்­சிய மனப்­பாங்கு சிறு­பான்மை மக்­க­ளுக்கு மத்­தியில் நிலவி வரு­வது போல் தெரி­கி­றது. ‘இந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளிலோ அல்­லது அரச எதிர்ப்பு செயற்­பா­டு­க­ளிலோ பங்­கேற்­பதை முஸ்­லிம்கள் முற்­றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற விதத்தில் ஒரு சில முஸ்லிம் அமைப்­புக்கள் விடுத்­தி­ருக்கும் வேண்­டுகோள் மற்­றொரு சுவா­ர­சியம். அத்­த­கைய ஒரு வேண்­டுகோள் தேசிய நீரோட்­டத்­தி­லி­ருந்து தம்மை அன்­னி­யப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்து வந்த போதிலும், இந்த அரச எதிர்ப்பு அலைகள் எந்த ஒரு நேரத்­திலும் தமக்கு எதி­ராக திருப்பி விடப்­பட முடியும் என்ற அச்சம் கார­ண­மாக முஸ்­லிம்கள் அப்­ப­டி­யான ஒரு அணு­கு­மு­றையை எடுத்­தி­ருக்க முடியும். சிங்­கள மக்­களின் எழுச்சி இடம்­பெற்­றி­ருப்­ப­தாக கூறப்­பட்ட ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஓர் எதி­ரியை உரு­வாக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருந்­தது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் முத­லா­வது சிங்­கள – பௌத்த எழுச்சி 1956 இல் ஏற்­பட்­டது. தமி­ழர்­களை இலக்கு வைத்து நிகழ்த்­தப்­பட்ட மிகக் கொடூ­ர­மான வன்­முறைச் சம்­ப­வங்­க­ள் ஊடாக அந்த எழுச்சி ‘தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­னது’ என்ற தோற்­றத்தை உரு­வாக்­கி­னார்கள் சிங்­கள இன­வா­திகள். யாழ்ப்­பா­ணத்தில் 1958 இல் வாகன இலக்கத் தக­டு­களில் தமிழ் ‘ஸ்ரீ’ எழுத்து பொறிக்­கப்­பட்ட பொழுது மீண்டும் ஒரு கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தி 1956 இன் அர­சியல் மாற்றம் சிங்­கள மொழியின் எழுச்­சியின் ஒரு குறி­யீடு என்­ப­தையும், அங்கு தமிழ்­மொ­ழிக்கு இட­மில்லை என்­ப­தையும் அவர்கள் எடுத்துக் காட்­டி­னார்கள். 2010 இல் போர் முடிவை அடுத்து மகிந்த ராஜ­பக்ச ஜனா­தி­பதித் தேர்­தலில் ஈட்­டிய வெற்­றியை சிங்­கள – பௌத்த மக்­களின் இரண்­டா­வது எழுச்சி என்று சொன்­னார்கள் அவர்கள். அந்தச் சந்­தர்ப்­பத்­திலும் விடு­தலைப் புலிகள் இயக்கம் நேரடி எதி­ரி­யா­கவும், அவர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்த தமிழ்ச் சமூகம் மறை­முக எதி­ரி­யா­கவும் சித்­த­ரித்துக் காட்­டப்­பட்­டது. 2019 ஜனா­தி­பதித் தேர்தல் இந்தப் போக்கின் உச்ச கட்­ட­மாக இருந்­தது. கோத்­தா­பய ராஜ­பக்ச தரப்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பிரச்­சா­ரங்­களில் ‘இஸ்­லா­மிய தீவி­ர­வாதம்’ சிங்­கள மக்­களின் நேரடி எதி­ரி­யா­கவும், இலங்கை முஸ்லிம் சமூகம் மறை­முக எதி­ரி­யா­கவும் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. ‘சிங்­கள மக்­களின் நலன்கள்’ என்ற தலைப்பு இலங்­கையில் 2010 இன் பின்­ன­ரேயே பகி­ரங்க உரை­யா­ட­லுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. எதனை பொது வெளியில் பேசு­வது, எதனை தனிப்­பட்ட உரை­யா­டல்­களின் போது பேசு­வது என்ற சூட்­சு­மத்தை அறிந்­தி­ராத ஒரு சில சிறு­பான்மை அர­சியல் கட்சித் தலை­வர்கள் தொடர்ந்து முன்­வைத்து வந்த ‘இலங்­கையில் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் ஆத­ரவு இல்­லாமல் எவரும் அரச தலை­வ­ராக வர முடி­யாது; யாரும் அர­சாங்கம் அமைக்க முடி­யாது’ என்ற வாதம் இறு­தியில் சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கே வினை­யாக வந்து முடிந்­தது. 2010 ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் அந்த வாதத்தை பொய்­யாக்­கின. அந்த திருப்­பு­முனை நிகழ்வு 2010 இன் பின்னர் இலங்கை அர­சி­யலில் பெரும்­பான்மை – சிறு­பான்மை இயங்­கி­யலை வடி­வ­மைப்­பதில் பெரும் செல்­வாக்குச் செலுத்­தி­யது. மகிந்த ராஜ­பக்­சவின் சிங்­கள – பௌத்த அர­சியல் செயல்­திட்­டத்தை சித்­தாந்த ரீதியில் வடி­வ­மைத்துக் கொடுத்த நளின் டி சில்வா, குண­தாச அம­ர­சே­கர, கெவிந்து குமா­ர­துங்க போன்ற தேசி­ய­வா­திகள் சிங்­கள மக்­களின் இந்த எழுச்சித் தரு­ணத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச முழு­மை­யாக பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென தொடர்ந்தும் பரப்­புரை செய்து வந்­தார்கள். ‘சிறு­பான்மை கட்­சிகள் இனி­மேலும் சிங்­கள மக்­களை பணயக் கைதி­க­ளாக எடுத்து, காரியம் சாதித்துக் கொள்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது’ என்ற கருத்தை வலி­யு­றுத்தும் விதத்தில் நளின் டி சில்வா தொடர்ந்து எழுதி வந்தார். அர­சியல் மேடை­களை பயன்­ப­டுத்தி அந்தக் கருத்தை சாதா­ரண சிங்­கள மக்கள் மத்­தியில் எடுத்துச் சென்­றார்கள் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில மற்றும் அத்­து­ர­லியே ரத்ன தேரர் போன்ற தரப்­பினர். அந்த எண்­ணத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்­வ­தற்கு பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்­களும் கணி­ச­மான ஒரு பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்­தார்கள் என்­ப­தனை இங்கு ஒரு மேல­திக தக­வ­லாக குறிப்­பிட வேண்டும். 2010 – 2015 மகிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் இலங்­கையில் ஆட்­சிக்கு வந்த ஊழல்­களும், முறை­கே­டு­களும் மலிந்த ஒரு அர­சாங்­க­மாக இருந்து வந்த போதிலும், அதை சிங்­கள தேசி­ய­வா­திகள் கண்டும் காணா­மலும் இருந்­தார்கள். அதற்கு அவர்கள் வெளியில் சொல்­லாத காரணம் ‘அப்­ப­டி­யான கடு­மை­யான ஒரு விமர்­சனம் சிங்­கள – பௌத்த அர­சியல் செயல்­திட்­டத்தை பல­வீ­னப்­ப­டுத்த முடியும்’ என்­பது. ‘ஒரு மாபெரும் நீரோட்டம் சேற்­றையும், சக­தி­யையும் அள்ளிச் செல்­வது சகஜம்’ என்று சொல்லி, அதனை எளிதில் கடந்து சென்றார் நளின் டி சில்வா. ஆனால், இன்­றைய நெருக்­க­டியை அப்­படிக் கடந்து செல்ல முடி­யாது என்­ப­தனை அவர்கள் நன்கு அறிந்­துள்­ளார்கள். சிங்­கள மக்­களின் ஆவே­சத்தைப் பார்த்து இன­வா­தி­களும், தேசிய வாதி­களும் கதி கலங்கி நிற்­கி­றார்கள். தமது குற்ற உணர்ச்­சியை மறைத்துக் கொள்­வ­தற்­காக எதிர்க் கட்­சி­யுடன் சேர்ந்து இவர்­களும் ராஜ­பக்­ச­களை வசை பாடிக்­கொண்டு இருக்­கி­றார்கள். ஆனால், இன்­றைய இலங்­கையின் நெருக்­க­டியை தீவி­ரப்­ப­டுத்­திய பல பிழை­யான முடி­வு­களை எடுப்­ப­தற்கு ஜனா­தி­ப­தியை தூண்­டி­ய­வர்கள், அவர் மீது அழுத்தம் பிர­யோ­கித்­த­வர்கள் இதே ஆட்கள் தான். கோத்­தா­பய ராஜ­பக்­சவின் சிங்­கள – பௌத்த அரசு எந்­த­தெந்தக் காரி­யங்­களை செய்­யக்­கூ­டாது என்றும், ஒரு போதும் செய்ய மாட்­டாது என்றும் இவர்கள் உரத்துச் சொல்லி வந்­தார்­களோ, இப்­பொ­ழுது அந்தக் காரி­யங்கள் அனைத்­தையும் ஒவ்­வொன்­றாக செய்ய வேண்­டிய நிலைக்கு இலங்கை அரசு பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கி­றது. இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளிடம் மண்­டி­யிட வேண்­டிய துர்ப்­பாக்­கியம்; சர்­வ­தேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பன்­னாட்டு நிதி நிறு­வ­னங்­க­ளிடம் மன்­றாடி, உத­வி­களை யாசிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம்; சிங்­கள மக்­களின் பொதுப் புத்­தியில் ‘பிச்­சைக்­கார நாடு’ என்று முத்­திரை குத்­தப்­பட்­டி­ருக்கும் பங்­க­ளாதேஷின் கத­வு­களைத் தட்டி, கடன் கேட்டு நிற்கும் சிறுமை; மத்­திய கிழக்கு நாடு­க­ளு­ட­னான நட்­பு­ற­வு­களை புதுப்­பித்து, பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கென ராஜ­தந்­திர ரீதி­யி­லான இர­க­சிய நகர்­வுகள்; ‘ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்தின் அடி­வ­ருடி’ என இவர்­களால் வர்­ணிக்­கப்­பட்டு வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு வெற்­றிலை வைத்து அழைத்து, பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­ழுப்­புவ­தற்கு யோசனை கேட்க வேண்­டிய அள­வுக்கு வாசல் வரையில் வந்­தி­ருக்கும் வெள்ளம். நாட்டை இந்த நிலைக்கு தள்ளி விடு­வ­தற்கு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் பங்­க­ளிப்புச் செய்த வீர­வன்ச – கம்­மன்­பில சோடி­யையும் உள்­ள­டக்­கிய பலர் இப்­பொ­ழுது திடீ­ரென நேரெதிர் திசையில் நின்று, ‘ராஜ­பக்­ச­ாக்களை ஒழித்துக் கட்­டுவோம்’ என தொண்டை கிழியக் கத்­து­வது தான் வர­லாற்றின் மாபெரும் முரண்­நகை. சிங்­கள செய்தி ஊட­கங்­களைப் பற்றி சொல்­லவே வேண்டாம். சரிந்து வரும் ‘Ratings’ களை உயர்த்திக் கொள்ளும் ஒரே நோக்­கத்­திற்­காக ‘தெரண’ மற்றும் ‘ஹிரு’ போன்ற ஊட­கங்கள் ஒரு போலி அரச எதிர்ப்பு நாட­கத்தை அரங்­கேற்றி வரு­கின்­றன. 1987 ஏப்ரல் – மே காலப் பிரிவில் ஜே. ஆர். ஜய­வர்­தன ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசு எந்த அள­வுக்கு பல­வீ­ன­ம­டைந்­தி­ருந்­ததோ அதே அள­வுக்கு இப்­பொ­ழுதும் பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கி­றது. இதற்கு அப­ரி­மி­த­மான அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆட்சி முறையும் ஒரு காரணம். 1978 இல் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக முடி சூடிக்­கொண்ட ஜே ஆர் .ஜய­வர்­தன, ஓர் ஆணைப் பெண்­ணாக மாற்­று­வதைத் தவிர, தன்னால் எந்­த­வொரு காரி­யத்­தையும் செய்ய முடி­யு­மென ஆண­வத்­துடன் சொன்னார். 1983 கல­வ­ரங்­களில் பல நூற்­றுக்­க­ணக்­கான தமி­ழர்கள் கொல்­லப்­படும் வரையில், கோடிக்­க­ணக்­கான ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் சூறை­யாடி அழிக்­கப்­படும் வரையில் வெறு­மனே வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்தார் அவர். யூலை 24 ஆந் திகதி மாலை பொரள்ளையில் தோன்­றிய கல­வரம், அதன் உச்ச கட்­டத்தை அடைந்­தி­ருந்த நிலையில் 28ஆம் திகதி அரச தொலைக்­காட்­சியில் தோன்றி எவ்­வி­த­மான குற்ற உணர்ச்­சியும் இல்­லாத தொனியில் இன­வா­தி­க­ளுக்கு மேலும் தூப­மிடும் விதத்தில் அவர் நிகழ்த்­திய உரை, இலங்கை ஜன­நா­ய­கத்தின் மீது படிந்த ஒரு பெரும் கறை. அந்த ஆண­வமே அடுத்து வந்த சில ஆண்­டு­களில் இலங்கை ஆசி­யாவின் மிகப் பெரும் கொலைக் கள­மாக மாறு­வ­தற்கு வழி­கோ­லி­யி­ருந்­தது. 1983 கல­வ­ரத்தை அடுத்து ஜே. ஆர். தூர­நோக்­கற்ற விதத்தில் ஜேவிபி இயக்­கத்தை தடை செய்­த­துடன் இணைந்த விதத்தில், அக்­கட்­சியின் தலை­வர்கள் மீண்டும் ஒரு முறை தலை­ம­றை­வா­கின்­றார்கள். அத­னை­ய­டுத்து 1987 – 1989 கால கட்­டத்தில் நாட்டில் ஓடிய இரத்த ஆறு வர­லாற்றின் மற்­றொரு ஆறாத வடு. அதற்கு வழி­கோ­லி­யவர் அதி­கார மம­தையில் தன்­னிச்­சை­யாக முடி­வு­களை எடுத்த ஜே. ஆர். ஜய­வர்­தன. இலங்கை அரசு பல­வீ­ன­மாக இருந்த அந்தத் தரு­ணத்தை பயன்­ப­டுத்­திய ராஜீவ் காந்தி ஜே.ஆரை மிரட்டி, அடி­ப­ணிய வைத்தார். 1987 ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் திகதி இந்­திய விமா­னப்­ப­டையைச் சேர்ந்த ஐந்து விமா­னங்கள் இலங்­கையின் வான் பரப்பில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து, யாழ் தீப­கற்­பத்தில் 25 தொன் உணவுப் பொருட்­க­ளையும், மருந்துப் பொருட்­க­ளையும் வான்­வ­ழி­யாக வீசி எறிந்து, இலங்­கையின் இறை­மையை அவ­ம­தித்த பொழுது சர்வ வல்­லமை பொருந்­திய ஜே. ஆர். ஜய­வர்­தன அதனை வாய் மூடி பார்த்துக் கொண்­டி­ருந்தார். இன்­றைய இலங்கை மீண்டும் ஒரு தடவை 35 ஆண்­டுகள் பின்­நோக்கி 1987 க்கு சென்­றி­ருக்­கின்­றது. வர­லாற்­றி­லி­ருந்து பாடங்­களை படிக்­கா­த­வர்­களை வர­லாறு மீண்டும் மீண்டும் தண்­டித்துக் கொண்டே இருக்கும் என்ற கூற்றின் பிர­காரம், இலங்­கையை இப்­பொ­ழுது மீண்டும் ஒரு முறை இந்­தியா அடி­ப­ணிய வைத்­தி­ருக்­கின்­றது. அண்­மையில் அது இலங்­கைக்கு வழங்­கிய டொலர் கடன் தொகை மற்றும் வெளியில் சொல்­லப்­ப­டாத அது குறித்த நிபந்­த­னைகள் அனைத்தும் அதனைத் தெட்டத் தெளி­வாக எடுத்துக் காட்டும் சான்­றுகள். சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட இலங்கை வர­லாற்றில் பகுத்­த­றி­வுக்கு ஒவ்­வாத இத்­த­கைய காரி­யங்­க­ளுக்கு நிறைய உதா­ர­ணங்கள் உள்­ளன. ‘தமி­ழர்­களின் விடு­தலை’ என்றால் என்ன என்­ப­தனை விடு­தலைப் புலிகள் இயக்­கமும் இதே விதத்தில் தப்­பாக புரிந்து கொண்­டி­ருந்­தது. முஸ்லிம் மக்கள் பல நூறாண்டு காலம் வாழ்ந்து வந்த பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­க­ளி­லி­ருந்து அவர்­களை துரத்­தி­ய­டிப்­பதன் மூலமும், பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருக்கும் நூற்­றுக்­க­ணக்­கான மக்­களை கொன்று குவிப்­பதன் மூலமும், தென்­னி­லங்­கையில் கெப்­பித்­தி­கொல்­லா­வை­யிலும், புத்­த­ளை­யிலும் வறிய சிங்­கள மக்­களை இலக்கு வைத்து பேருந்­து­களில் குண்­டு­களை வெடிக்கச் செய்­வதன் மூலமும், இத்­த­கைய கொடூ­ரங்­களை துணி­வுடன் தட்டிக் கேட்க முன்­வந்த தமது இனத்­தையே சேர்ந்த புத்­தி­ஜீ­வி­க­ளையும், மித­வாத அர­சியல் தலை­வர்­க­ளையும் ‘போட்டுத் தள்­ளு­வதன்’ மூலமும்; தமி­ழர்­க­ளுக்கு விடு­த­லையை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென அவர்கள் நம்­பி­னார்கள். அந்த நம்­பிக்கை இறு­தியில் எந்த மாதி­ரி­யான அழி­வு­களை எடுத்து வந்­தி­ருந்­தது என்­ப­தனை நாங்கள் பார்த்தோம். தமிழ் அர­சி­ய­லையும், தமிழ் சமூ­கத்­தையும் 50 ஆண்­டுகள் பின்னால் கொண்டு சென்று வைத்து விட்டு 2009 இல் களத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னார்கள் அவர்கள். ஓர் அரச தலைவர் காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­டனும், வக்­கிர புத்­தி­யு­டனும் செயல்­பட்டால், தனது அதி­கா­ரங்­களை துஷ்பிர­யோகம் செய்தால் அது எத்­த­கைய விளை­வு­களை எடுத்து வர முடியும் என்ற கசப்­பான பாடத்தை கோட்­டா­பய ராஜ­பக்ச, ஜே.ஆர் ஜய­வர்­த­ன­வி­ட­மி­ருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு கண்­ணி­ய­மாக வெளி­யேறிச் செல்லக் கூடிய வாய்ப்பு (Diginified Exit) ஜே ஆருக்கு கிடைக்­க­வில்லை. இரத்த ஆறு ஓடும் ஒரு நாட்டை, பார்க்கும் இடங்­க­ளி­லெல்லாம் பிணக் குவி­யல்கள் தென்­படும் ஒரு நாட்டை 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ‘Legacy’ யாக அவர் விட்டுச் சென்றார். இந்த நெருக்­க­டி­யான தரு­ணத்தில் ஜனா­தி­பதி முத­லா­வ­தாக செய்ய வேண்­டிய காரியம் இந்த நெருக்­க­டியை திட­சங்­கற்­பத்­துடன் எதிர்­கொண்டு, கடந்து செல்­வ­தற்கு மக்­களை தயார்­ப­டுத்தும் பொருட்டு சிங்­கள – தமிழ் – முஸ்லிம் மக்கள் அனை­வரும் இலங்கைப் பிர­ஜைகள் என்ற முறையில் ஓர­ணியில் திரள வேண்டும் என்ற வேண்­டு­கோளை விடுப்­ப­தாகும். ஆனால், அவ­ருக்கு உரை­களை எழுதிக் கொடுக்கும் ஆலோ­ச­கர்கள் தேசிய ஒற்­றுமை, இன ஐக்­கியம், இலங்கை ஒரு பல்­லின, பல் கலா­சார நாடு போன்ற சொற்­களை இது­வ­ரையில் வேண்­டு­மென்றே தவிர்த்து வந்­துள்­ளார்கள். இரண்­டா­வ­தாக, அர­சாங்­கத்தின் ஒரு சில தரப்­புக்கள் மற்றும் அரச ஆத­ரவு செய்தி ஊட­கங்கள் என்­பன கடந்த இரண்­டரை ஆண்­டு­களில் முன்­வைத்து வந்­தி­ருக்கும் பகுத்­த­றி­வுக்கும், யதார்த்­தத்­திற்கும் கொஞ்­சமும் பொருந்­தாத பரப்­புரைச் செயற்­பா­டு­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும். இதுவரை காலமும் மிக மோசமான இனவாத / மதவாத பிரச்சாரங்களை மட்டற்ற விதத்தில் முன்னெடுத்து வந்திருக்கும் புத்த பிக்குகளையும் உள்ளடக்கிய அனைத்துப் தரப்புக்களுக்கும் ஒரு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்து வந்தாலும் சரி ‘சட்டம் அவர்கள் மீது பாயும்’ என்ற செய்தி தெளிவாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஆட்களை எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறு கையாள்வதற்கு உசிதமான ஒரு சூழல் நாட்டில் இப்பொழுது தோன்றியுள்ளது என்ற விடயம் இதற்கான ஒரு கூடுதல் அனுகூலம். சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் முதல் தட­வை­யாக சிங்­கள இன­வா­தி­களின் கொடி மட்­டு­மல்­லாமல் தமிழ் இன­வா­தி­களின் கொடியும், முஸ்லிம் இன­வா­தி­களின் கொடியும் ஒரே நேரத்தில் மிக மிக தாழ்ந்து பறக்கும் ஒரு யுக சந்­தியில் நாங்கள் நின்றிருக்கிறோம். அந்தக் கொடிகள் அவ்வண்ணம் மிக மிக தாழ்ந்து பறக்க வேண்டுமென்பதே எம் அனைவரினதும் பிரார்த்தனை. ராஜபக்சாக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்லும் சிங்கள இனவாதத்தின் கொடியை ஏந்திப் பிடிப்பதற்கு விமல் வீரவன்ச தரப்பையும் உள்ளிட்ட எவருக்கும் சிங்கள மக்கள் இனிமேலும் ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரித்து, ஒரே குரலில் பேசும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும். அதற்கு உசிதமான ஒரு சூழலை நாட்டில் உருவாக்குவது இன்றைய நிலையில் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய முதல் முன்னுரிமையாக உள்ளது. அந்த நிலையிலேயே ஓர் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பி, எமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நிம்மதியாக, சந்தோசமாக வாழக்கூடிய ஒரு நாட்டை எம்மால் அவர்களுக்கு விட்டுச் செல்ல முடியும். அந்த மாற்றத்திற்கான பயணத்தை சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து முன்னெடுப்பதற்கான வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்திருக்கிறது என்பதன் குறியீடே இன்றைய மக்கள் எழுச்சி.- Vidivelli https://www.jaffnamuslim.com/2022/04/blog-post_998.html
  10. யாழ் சண்டிலிப்பாயை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், பிரபல இணைய விற்பனைத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஜெனெரேட்டர் இயந்திரத்தை வாங்குவதற்காக சிங்கள பிரதேசத்திற்கு சென்றிருந்த வேளையில், போலி விற்பனை முகவரும் அவரின் சகாக்களும் இணைந்து, ஆசிரியரை கடுமையாக தாக்கிய பின், பணத்தையும் நகைகளையும் அபகரித்த சம்பவம் அறிய வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையின் பிரபல ஒன்லைன் விற்பனை தளம் மூலம்,ஜெனெரேட்டர் ஒன்றினை வாங்கவதற்காக விற்பனையாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டுள்ளார். விற்பனையாளர் பாதி பணத்தை முற்பணமாக வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்க, யாழ் ஆசிரியர் அதற்கு மறுப்பு தெரிவித்து, நேரில் தான் பணத்துடன் வருவதாக கூறி, புறப்பட்டு சென்றுள்ளார். பணத்துடன் புறப்பட்டு சென்ற நபரை, குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்து, போலி விற்பனை முகவரும் அவரின் சகாக்களும் இணைந்து, கடுமையாக தாக்கியத்துடன் பணத்தையும், அவர் அணிந்திருந்த நகைகளையும்அபகரித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இணையத்தள மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://zeelanka.com/article/2022/04/1690/
  11. மணமக்களுக்கு வாழ்த்துகள் மணமகன் இடது கை பழக்கம் உள்ளவர் போல் தெரிகின்றது.
  12. இப்படி நீங்கள் செல்லிறீங்க. அங்க ஹிசபுல்லா ரெடியா இருக்கார். அவரிட்ட அரபு சேக் பணமுள்ளது. அங்க போய் ஒரு அரபு சேக்கிடம் கதைத்து ஒரு இஸ்லாமிய கம்பஸ் கட்டும் அளவிற்க்கு பணம் வாங்கி வந்தார். கட்டியும் முடித்தார். இப்படி நாடு விற்பனக்கு வந்தால், அவர் உடனடியாக காசு கொடுத்து வாங்க ரெடி. அரபு பணத்துடன் மோத முடியாது. மாசா அல்லா என்று அள்ளி கொடுக்க அவர்கள் தயார். ஒரு குவைத் தினான் 1000 மேல் போகுது. ஒரு இங்கிலந்து பவுன்ஸ் என்ன் 420 தான். வாங்கினார் என்ன்றால் எங்கட கிழக்கு மாகண தமிழர்கள் எங்கே போவார்கள்? ஈச்சரங்கள் எல்லால் இறச்சி கடையாகும். ராசாக்களே கோவில்கள் எல்லாம் மதரசாக்கள் ஆகிரும். நாங்கள்தான் அவர்களை தமிழர்கள் என்கிறேம். ஒழுவில் பிரகடனத்தில் நாங்கள் வேட்டி வீசப்பட்ட நுனித்தோலுக்கு ஒப்பிடப்ப்ட்டுள்ளேம்.
  13. ருப்பிதேர மஸ்தானா... மெரே மித்துவா.. ஏ.. தோஸ்து கீ ... போன்ற பல அருமையான ஹிந்தி பாடல்கள் மறுபடி ரேடியோவில் கேட்கலாம் போல் தெரிகின்றது.
  14. கோல்பேஸ் போராட்டங்களில் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமியர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொதுபல சேனா (BBS) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் முழக்கங்களை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://www.madawalaenews.com/2022/04/blog-post_51.html
  15. டொரொன்டொவில் சிங்களவனின் கடைகள் உள்ளதா? இங்கு போல் அங்கு பொல்ச‌ம்போல், கட்ட சம்பல், கிரிபத், மாலு எபுல் கறி, சிறிய ரோஸ்பாண், பருப்பிகறி, கொலகெத எல்லாம் கிடக்குமா?
  16. நாங்கள் இப்படி சிங்கவர்களை தூற்றுகின்றேம். இன்று நான் தமிழ் செய்தியில் இந்த நினைவுதின அனுஸ்டிப்பை பார்த்தேன். வெருகல் படுகொலை நினைவு நாள். பிள்ளையான் தீபமேற்றி மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றார். தாய்மார்கள் அழுவதை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. எம்து உடலை நாமே காயப்படுத்தி கொண்டுள்ளோம் இது உண்மையாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலா? இது எப்படி நடந்தது ? யாரும் விபரம் தெரிந்தால் எழுதவும்.
  17. இது நல்லதொரு ஐடியாதான். ஆனல் இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? ஹிஸ்புல்லவிடம் அரபு நாடு காசு நிறைந்துள்ளது அவன் தமிழர்கள் கேட்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க தயாரகவுள்ளான்
  18. திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். சென்னை: திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக, அங்குள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளில், ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். 2ஆவது நாளாக நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் துறையினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் மயங்கி விழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் சீமான் மயங்கி விழுந்திருக்கலாம் என்றும்; அதற்கான காரணங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் சீமானுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/seeman-felt-giddiness-during-press-meet/tamil-nadu20220402160546917
  19. கொழும்பிம் புறந‌கர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக‌ சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க‌ ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக‌ ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொட‌ங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்த‌வன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட‌ என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்க‌வும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. ம‌ரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன‌ அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
  20. 1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிக‌லா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிற‌ந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கற‌ல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்ட‌ரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக‌ இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட‌ பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற‌ கதற‌ அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் ‍ அனுபவம்-1
  21. பூனைகளில் கள்ளப்பூனை என்று ஒன்றுன்டா. இயல்பாகவே இந்த மிருகம் கள்ளத்தன்மை கொண்டதல்ல்லவா?
  22. ஐசே வா சரி சிரிப்பு..Epic வா. எங்களுக்கு பாக்கிஸ்தான் ஈக்கிவா.. அதிலும் முதல் வெடிசத்தம்......🤣
  23. புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும். இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இந்த நிதியம் உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்துள்ளது. இதனைப் பற்றி தொடரந்து பேசி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயா் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு. அவர்கள் இங்கு வருறவதற்கோ அல்லது இங்கு வந்து முதலீடுகளை செயவதற்கோ அச்சப்பட தேவையில்லை. அநவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும். அதனை உறுதி செய்யும். இதுதொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் முன்வைக்கலாம். அவற்றை கவனிக்க அரசு தயாராக இருக்கிறது. அதன் மூலம் புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை தருவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்கும் என்றாா் ஜனாதிபதி கோட்டாபய. https://www.madawalaenews.com/2022/03/i_981.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.