-
Posts
2019 -
Joined
-
Last visited
-
Days Won
15
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Sasi_varnam
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
Sasi_varnam replied to valavan's topic in வாழும் புலம்
https://www.facebook.com/reel/971391998082130 Toronto ஓணம் பண்டிகை -
என்னவோதெரியலை எனக்கு இந்த அம்மணி மேல் ஒரு பிடிப்பும் மரியாதையும் இருக்கிறது.
-
அதிர்ச்சி தரும் சுமந்திரனின் சதிகள் ஆதாரபூர்வமாக அம்பலம்: சுமந்திரனும் இத்தியாதிகளும் ஈழத்தமிழ்த்தேசியத்தை எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஊடாக முற்றாகச் சிதைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை இந்த ஒரு மணி நேர காட்சிப்படுத்தலுடனான நேர்காணலில் தமிழ்நெற் ஆசிரியர் முன்வைக்கிறார்.
-
சிறியர், குருவி தலையில பணியாரம் வைக்கலாம் .. பனங்காய் வைக்கலாமா!! 😄 இந்த அரசியல் சாணக்கிய கேள்விகள் எல்லாம் 8ஆம் வகுப்பு பொடியனுக்கு A/L பேப்பர் தந்து, எக்ஸாம் எழுதச் சொன்னதை போல இருக்கு!!! சரி பார்ப்போம் ஒரு 5 கேள்வியாவது சரிவரும் தானே.
-
பனை அபிவிருத்தி சபையின் பெயர் பலகையை கூட, மரத்திலே ஆணி அறைந்து வைத்திருக்கும் தலைமை காரியாலயம் நல்லாவே அபிவிருத்தி செய்வாய்ங்க!!!
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
Sasi_varnam replied to சுண்டல்'s topic in யாழ் அரிச்சுவடி
"அம்மா சுண்டல்" பொடியேன் மறுக்கா வந்துட்டான்வா. ஆத்தலா நாலு விசயங்கள் எழுத்துங்க சுண்டல், நாங்களும் வாசிப்பம் தானே!! -
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்
Sasi_varnam replied to ஏராளன்'s topic in அரசியல் அலசல்
அமைப்புகள் என்று அழுத்திச் சொல்லுங்கள் ... புலம்பெயர் மக்கள் என்று யாரும் நினைத்துக்கொள்ள கூடாது. -
ராஜ்குமார் ரஜீவின் செவ்வியை கொஞ்சம் கேளுங்கள்.
Sasi_varnam replied to ஈழப்பிரியன்'s topic in அரசியல் அலசல்
ரஜீவ் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். மேலே சொன்னதை போல எமது தமிழ் மக்கள் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சார்ந்தே இவரது அரசியல் இருக்கிறது. சிறிதுங்க விஜயசூரியவோடு சேர்ந்து வேலை செய்கிறார் என நினைக்கிறேன். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட அரசியல் முன்னெடுப்பு அது. -
புத்தசாசன பிரிவின் கீழ் தான் கீழே உள்ள அனைத்து பிரிவுகளும் வருகின்றன பௌத்த அலுவல்கள் திணைக்களம் முஸ்லீம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்துசமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய அரும்பொருள் காட்சியக திணைக்களம் தேசிய சுவடிகள் திணைக்களம் மத்திய கலாசார நிதியம் Art council of Sri Lanka, National Heritage division, Department of Archeology ... இப்படி இன்னும் பல
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
Sasi_varnam replied to மோகன்'s topic in துயர் பகிர்வோம்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். 💐 -
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கொடுக்கப்பட்டதை திரும்பவும் கொடுக்கச்சொல்லி ஏனாம் காலில் விழவேனும் புரியலையே சகோ... இருக்கு ஆனால் இல்லை , தருவம் ஆனால் தரமாட்டோம், ஒப்பந்தம் போடுவோம் ஆனால் நிறைவேற்ற மாட்டோம், வாக்குறுதி கொடுப்போம் ஆனால் காற்றில் பறக்கவிடுவோம் இந்த பௌத்த பேரினவாத அரசியலையும் அதற்கு முட்டு கொடுக்கும் இந்தியாவையும், இதற்கெல்லாம் அன்னக்காவடி தூக்கும் நமது அரசியல் கட்சி மற்றும் அது சார்ந்த விசுவாசிகளை என்ன செய்யலாம். இதையெல்லாம் தாண்டி தமிழர்கள் தான் குழப்பினார்கள் என்று சிங்களம் சொல்லும் ஒரு செய்தியை பரப்பும் நம்மவர் மனநிலையை எப்படி பார்ப்பது. -
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
உங்களுடைய முதலாவது கருத்தில் எழுதப்பட்ட முதலாவது வரி... இது பற்றித்தான் இந்த தொடர் உரையாடல்கள். 4 பக்கத்துக்கு கருத்துகளை நீட்டி எழுதிய நீங்கள், ஒரு இடத்தில் கூட சரியான தரவுகளை வைத்து கதைக்கவில்லை. புரிந்துகொள்ளுங்கள். -
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
முற்றிலும் பிழையான கருத்து!!! அப்படி 13 சார்ந்த தீர்வை திரும்ப தாருங்கள் என்று பேசுபவர்கள் ஒரு சில புலம்பெயர் அரசியல் வியாபாரிகளும், உள்நாட்டு சுமந்திரன் வகையாறாக்களுமே. மற்றும்படி தமிழ் மக்கள் தொடர் இனஅழிப்பு, அது சார்ந்த நீதி, ஒற்றையாட்சி தவிர்ந்த (சுயநிர்ணய உரிமை சார்ந்த) தீர்வு நோக்கியே அரசியலை பார்க்கிறார்கள். அவர்களை சரியாக வழிநடத்தக்கூடிய தமிழ் அரசியல்வாதிகள் இன்று இல்லை. பெரும்பாலும் இந்தியா எதை சொல்கிறதோ அதை செய்துமுடிக்கும் விண்ணர்களாகவே இருக்கிறார்கள். அது எங்கள் துரதிஷ்டம்!!! -
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 37 வருடங்கள், அதன் பங்குதாரர்கள் இந்திய இலங்கை அரசு. அது இன்று நடைமுறை படுத்துங்கள் என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அப்படியென்றால் 1987 இல் இரு நாட்டு தலைவர்களும் கைச்சார்த்திட்டது வெண்டிக்காய் முருக்கங்காய் ஏற்றுமதி ஒப்பந்தமா? அதுசரி இன்றும் கூட அதை தலையில் தூக்கி பிடித்துக்கொண்டு பாராளுமன்றில் அது சார்ந்தே தீர்வு என்று பேசும் நபர்கள் , அரசியல்வாதிகள் யார்? மாகாண சபையாம்.. அதுக்கொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனராம் .. அவர் நினைத்தால் எதையும் எப்பொழுதும் முடக்கக் கூடிய அதிகாரமாம்... இதுதான் தீர்வாம்!!! இந்திய ராணுவம் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் பின்னர், எப்படி எல்லாம் தமிழர் பிரதேசங்களில் நடந்து கொண்டது என்பது மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு பக்கத்தில் புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்க சொல்லிவிட்டு, மறு பக்கத்தில் ஒட்டுக்குழு, ஓணான் குழுவுக்கு ஆயுதம் வழங்கி அவர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவந்து அரவணைத்து, அவர்களை வைத்தே புலிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக வேட்டையாடியது, ஈழநாதம் பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து தகர்த்தது, திலீபன் அண்ணா உண்ணாவிரத கோரிக்கைகள், அவரின் இழப்பு, குமரப்பா , புலேந்திரன் போன்ற தலைவர்களின் கைதில் இந்தியாவின் வகிபாகம் .. பட்டியல் இன்னும் நீளும். உங்கள் வசதிக்கு கருத்தெழுத்தாமல் முடிந்தால் உண்மையை பிரதிபலித்து எழுதுங்கள். கேட்பவர்கள் ஈழத்தில் வாழ்ந்த மக்கள். -
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஐயா இவை வரலாறு||| நிகழ்வு பட்டவர்தன ஆவணமாய் மேலே இருக்கிறது... இதில் எங்கே பக்தி விசுவாசம் கண்டுபிடித்தீர்கள்? காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் நீங்களே சொல்லுங்களேன். அதைத்தானே மேலே நான் கேட்டேன் தாழ்மையான கருத்து - கருத்துக்களை உருட்டுவது நீங்களே ஆனாலும் கேட்பது எங்கள் காதுகள். ஆகையினால் பார்த்து உருட்டுங்கள் சார். -
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தில் வாழ்ந்த மக்களுக்கு யதார்த்த புரிதல் ஒன்று இருக்கின்றது.