Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2056
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by Sasi_varnam

  1. கொடுக்கப்பட்டதை திரும்பவும் கொடுக்கச்சொல்லி ஏனாம் காலில் விழவேனும் புரியலையே சகோ... இருக்கு ஆனால் இல்லை , தருவம் ஆனால் தரமாட்டோம், ஒப்பந்தம் போடுவோம் ஆனால் நிறைவேற்ற மாட்டோம், வாக்குறுதி கொடுப்போம் ஆனால் காற்றில் பறக்கவிடுவோம் இந்த பௌத்த பேரினவாத அரசியலையும் அதற்கு முட்டு கொடுக்கும் இந்தியாவையும், இதற்கெல்லாம் அன்னக்காவடி தூக்கும் நமது அரசியல் கட்சி மற்றும் அது சார்ந்த விசுவாசிகளை என்ன செய்யலாம். இதையெல்லாம் தாண்டி தமிழர்கள் தான் குழப்பினார்கள் என்று சிங்களம் சொல்லும் ஒரு செய்தியை பரப்பும் நம்மவர் மனநிலையை எப்படி பார்ப்பது.
  2. உங்களுடைய முதலாவது கருத்தில் எழுதப்பட்ட முதலாவது வரி... இது பற்றித்தான் இந்த தொடர் உரையாடல்கள். 4 பக்கத்துக்கு கருத்துகளை நீட்டி எழுதிய நீங்கள், ஒரு இடத்தில் கூட சரியான தரவுகளை வைத்து கதைக்கவில்லை. புரிந்துகொள்ளுங்கள்.
  3. முற்றிலும் பிழையான கருத்து!!! அப்படி 13 சார்ந்த தீர்வை திரும்ப தாருங்கள் என்று பேசுபவர்கள் ஒரு சில புலம்பெயர் அரசியல் வியாபாரிகளும், உள்நாட்டு சுமந்திரன் வகையாறாக்களுமே. மற்றும்படி தமிழ் மக்கள் தொடர் இனஅழிப்பு, அது சார்ந்த நீதி, ஒற்றையாட்சி தவிர்ந்த (சுயநிர்ணய உரிமை சார்ந்த) தீர்வு நோக்கியே அரசியலை பார்க்கிறார்கள். அவர்களை சரியாக வழிநடத்தக்கூடிய தமிழ் அரசியல்வாதிகள் இன்று இல்லை. பெரும்பாலும் இந்தியா எதை சொல்கிறதோ அதை செய்துமுடிக்கும் விண்ணர்களாகவே இருக்கிறார்கள். அது எங்கள் துரதிஷ்டம்!!!
  4. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 37 வருடங்கள், அதன் பங்குதாரர்கள் இந்திய இலங்கை அரசு. அது இன்று நடைமுறை படுத்துங்கள் என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அப்படியென்றால் 1987 இல் இரு நாட்டு தலைவர்களும் கைச்சார்த்திட்டது வெண்டிக்காய் முருக்கங்காய் ஏற்றுமதி ஒப்பந்தமா? அதுசரி இன்றும் கூட அதை தலையில் தூக்கி பிடித்துக்கொண்டு பாராளுமன்றில் அது சார்ந்தே தீர்வு என்று பேசும் நபர்கள் , அரசியல்வாதிகள் யார்? மாகாண சபையாம்.. அதுக்கொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனராம் .. அவர் நினைத்தால் எதையும் எப்பொழுதும் முடக்கக் கூடிய அதிகாரமாம்... இதுதான் தீர்வாம்!!! இந்திய ராணுவம் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் பின்னர், எப்படி எல்லாம் தமிழர் பிரதேசங்களில் நடந்து கொண்டது என்பது மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு பக்கத்தில் புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்க சொல்லிவிட்டு, மறு பக்கத்தில் ஒட்டுக்குழு, ஓணான் குழுவுக்கு ஆயுதம் வழங்கி அவர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவந்து அரவணைத்து, அவர்களை வைத்தே புலிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக வேட்டையாடியது, ஈழநாதம் பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து தகர்த்தது, திலீபன் அண்ணா உண்ணாவிரத கோரிக்கைகள், அவரின் இழப்பு, குமரப்பா , புலேந்திரன் போன்ற தலைவர்களின் கைதில் இந்தியாவின் வகிபாகம் .. பட்டியல் இன்னும் நீளும். உங்கள் வசதிக்கு கருத்தெழுத்தாமல் முடிந்தால் உண்மையை பிரதிபலித்து எழுதுங்கள். கேட்பவர்கள் ஈழத்தில் வாழ்ந்த மக்கள்.
  5. ஐயா இவை வரலாறு||| நிகழ்வு பட்டவர்தன ஆவணமாய் மேலே இருக்கிறது... இதில் எங்கே பக்தி விசுவாசம் கண்டுபிடித்தீர்கள்? காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் நீங்களே சொல்லுங்களேன். அதைத்தானே மேலே நான் கேட்டேன் தாழ்மையான கருத்து - கருத்துக்களை உருட்டுவது நீங்களே ஆனாலும் கேட்பது எங்கள் காதுகள். ஆகையினால் பார்த்து உருட்டுங்கள் சார்.
  6. 1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தில் வாழ்ந்த மக்களுக்கு யதார்த்த புரிதல் ஒன்று இருக்கின்றது.
  7. 10 ஆயிரத்துக்குள்ள பரமானந்தம் என்று போய் வந்து சொல்பவர்கள் கதை எல்லாம் பொய்யா கோபாலு? 🤑☺️
  8. 1987 காலப்பகுதியில் அண்ணர் அங்கு இருந்தவரே இல்லையென்றால் காத்து வாக்கில கதை கேட்டு அரசியல் கருத்து எழுதுபவரா? இலங்கை இந்திய ஒப்பந்தம் JR ருக்கும் ராஜீவுக்கு இடையில் ஒருதலை பட்சமாக நடந்து, எம்மீது திணிக்கப்பட்டது. சரி அதையும் தாண்டி, எழுதிய ஒப்பந்தத்தைகூட அன்றே சரியாக நடைமுறைபடுத்த வக்கு இல்லாத அரசியல் வறட்சிதான் அந்த ஒப்பந்தம் இன்று வரையிலும் கிடப்பில் இருக்கிறது. இன்றுவரைக்கும் 37 வருஷங்கள் "நொ(இ)ந்தியா" என்ன மசிரை புடுங்கி இருக்கிறது.
  9. மரத்தில் ஏறுவதை விட்டு மனைவிமீது ஏறு மானிடா!! சம்பளமும் உன்பலமும் சேர்ந்தே கூடினால்.. மதனோற்சவம் பதியோடுதான் மதியில் கொள்ளடா!! பின்குறிப்பு - "மனைவிமீது ஏறு" என்பது மனைவியின் இதயத்தில் இடம்கொள் என்ற பொருளோடு வாசிக்க 😉
  10. தமிழ் அரசியல் பரப்பின் சித்து விளையாட்டின் கனவான்கள், மிதவாதிகள் , சந்தர்ப்பவாதிகள், குழப்பவாதிகள் யாரென்று அடையாளப்படுத்தி ஆணிகளை இறுக்கி கொஞ்சமாவது ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்தால் சிறப்பு.
  11. தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை பற்றி தெளிவாக பேசப்பட்டுள்ளது. சில இடங்களில் சொற்பதங்கள் தெளிவு இல்லை. மலையக மக்கள் தேசிய இனம் என்று கூறியிருந்தால் சிறப்பு.
  12. காத்தான்குடி பள்ளிவாசலில் உயிர்களை கபாலிகாரம் செய்தவர்கள் திரும்பி பத்திரமாய் போய் சேர்ந்த இடமும் பக்கத்தில் இருந்த சிங்களராணுவ முகாம் என்றும் பதிவுகள் உள்ளன. தவிர புலிகள் இல்லாத காலத்தில் அதுவும் 2019 இல் ஈஸ்டர் தாக்குதலை எப்படியெல்லாம் கட்டமைத்து அரசியல் ஆதாயம் தேடிய கூட்டம் என்பதையும் மறக்கலாகாது.
  13. ம்ம்.. இப்படியான சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த இந்தியரும் அப்படித்தான் என்று வன்மம் கட்டத்தேவையில்லை. புதிதாக குடியேறிய இந்தியர்களால் பல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக சமூக பிரக்ஞய் குறைவாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வசாகா பீச் தொடர்பான கதைகள் இந்தியர்களுக்கு எதிராக ஒரு சில tiktok பதிவுகளின் விளைவுதான் இது என்றும் பேசப்படுகிறது. அங்கே பணிபுரிபவர்கள் யாரும் இப்படியான சம்பவங்களை அல்லது மலக்கழிவுகளை காணவில்லை என்றும் கூட செய்தி சொல்கிறது. பக்கத்தில் போனால் மணக்கும் என்றால்... கீர்த்தி சுரேஷ், நமீதா ரெட்டி, ஹன்சிகா மொட்டவானி நயன், த்ரிஷா வுக்கு ஜொள்ளுவிட்டுக்கொண்டு நாங்க இப்படி பேசலாமா?
  14. கு.சா அண்ணா, நான் பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை வாசிப்பவன். அந்த வகையில் உங்கள் சோப்பிளங்கித்தனமான கருத்துக்கு அதை வாசித்த கணத்தில் ஒரு அதிருப்திப் புள்ளியை வழங்கி இருந்தேன். பிறகு உங்கள் புரிதலை மாற்றி, கருத்தில் இருந்த தவறை உணர்ந்தது சிறப்பு. -1 புள்ளியை நானும் வாபஸ் வாங்கி இருக்கிறேன். இன்னும் இந்த திரியில் நிறைய வாசிக்க இருக்கிறது, நேரம் இல்லை. ஆனாலும் பாப்பரசர் எண்டால் என்ன அவரின் கொப்பர் பெய்ப் பரசர் எண்டால் என்ன தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைத்தால் வளர்ச்சியடைந்த சமூகங்களில் இருந்து அடி பலமாய் தான் இருக்கும். "Trans rights are Human Rights"
  15. "தமிழீழ அரசாங்கம்" என்ற பெயரை வைத்திருக்க யோக்கியதை இல்லாத "நட்டு கலண்டவங்கள்"
  16. சுமந்திரன் ஐயா சொன்னதை சிங்கள ஊடகம் ஒன்று இப்படித்தான் விபரித்து இருந்தது, அதைத்தான் நான் என்னுடைய பாணியில் எழுதினேன் மற்றும்படி Sometimes டாம் வேணவா ... டூம் வேணவா 😀
  17. இதில் நான் சொன்னதும்... ஐயா சொன்னதும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.. ஒரு கொஞ்ச வித்தியாசம் தான் Sometimes டாம் வேணவா ... டூம் வேணவா 😀 Thank you Mr. President for this opportunity to address you as the representative of the people of Jaffna. As many has said on this stage before me, We thank you for giving priority to events here and personally coming over. As my Colleague Hon. Siddhaarthan said, this is not the only time you have done, last two years during your tenure as the prime minister in the previous regime, you came here many occasions and relived our people from lot of hardships that they were facing. As Professor Amarathunga said you have a soft corner for Jaffna, perhaps it is due to the fact that it was North that tripped you up in 2005. I think the people of North also remember that with some regret. I wondered weather the stage was an election propaganda stage, it is not yet. Therefore I will desist form saying anything more. Let's be interpreted that way we do welcome the president most warmly and appreciate all that you are doing during this visit and all of your visits to north.
  18. ஒரு சின்ன உதாரணம் திரு சுமந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது சில பொன்(_) மொழிகளை உதிர்த்து இருந்தார். "எஜமான் நீங்க ரொம்ப நல்லவரு, யாழ்ப்பாண மக்கள் மீது உங்களுக்கு சிறப்பு பிரியம் உண்டு. நீங்கள் இந்த மக்களுக்கு கடந்த வருடங்களில் நிறைய நல்லது செய்திருக்கிறீர்கள். 2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்" ... இந்த செய்தியை சிங்கள ஊடங்கங்கள், யூ டியூபர்ஸ் வீடியோ வடிவில் வெளியிட்டு சிங்கள இனவெறி அரசியலை வெள்ளை அடிக்கிறார்கள். வடக்கு மக்களுக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!! பாருங்களேன் நம்ம ஜனாதிபதிக்கு ஏன்னா ஒரு வரவேற்பு அங்கே. இந்த டயஸ்போரா தமிழருக்கு தான் இங்குள்ள சுமூக சகஜீவன வாழ்வியலை குழப்பி இனவாதத்தை தூண்டி விடும் அவசரம் தெரிகிறது. ஆகவே கவனமாக இருங்கள் மக்களே. சுமந்திரனை போல நாட்டுப் பற்றாளரை மதிப்போம், ஆதரவு வழங்குவோம் என்று செய்தி போட்டு அவர்கள் சுய இன்பம் அடைகிறார்கள். முதிர்ச்சியான அரசியல்வாதியே இந்த தரம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்!!! பொன்(_) - தவிர்க்க வெண்டிய ஒரு வார்த்தையை பிரயோகித்தமைக்கு மன்னிப்புகோருகிறேன். திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
  19. ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த கருத்து எப்படி துரோகிகள் என்ற முத்திரை குத்தலுக்குள் நகர்ந்தது?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.