Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Sasi_varnam

  1. தமிழ் கஞ்சா குடுக்கிகலோ, மறத்தமிழ் காவலிகளோ போவார்களோ, இல்லையோ என்று கவலைகொள்வோர், தமிழருக்கு நீதி, நியாயம் வேண்டி எதிர்ப்பு காட்டிய மானத்தமிழர்கள் ஒருசிலரை பாராட்டலாமே. இனப்படுகொலை செய்தவர்களை காவிய நாயகர்களாக புகழ்ந்து இசை பாடியவர்களை, அவர்களின் கொலைச் சாய முகங்களை கழுவி ஒப்பனை போட்டு கௌரவ படுத்தியவர்களை அவர்களின் அந்த செயல் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை.
  2. இங்கு கருத்தெழுதும் பலரைப்போல, உங்களுக்கும் கூட தமிழர்கள் குறித்த பொதுவான நேர்மறை எண்ணங்கள் வீழ்ச்சியுற்றிருப்பது கவலைக்குரியது சகோ. 🥹
  3. காலையில் நீங்கள் போட்ட பதிவை பார்த்து ஒரு மணித்தியாலத்தில் நான் எழுதியது பாதியில் நிற்கிறது. இப்பொழுதெல்லாம் யாழின் போக்கு யாரையாவது கரித்து கொட்டுவதும், முஷ்டியை தட்டுவதும், மீசையை முறுக்குவதுமாகத் தானே போகிறது. அதுபோகட்டும் விடுங்கள், லிபரல் கட்சி விழாது மண் மீசையில் படாது என்று நான் சொல்லவில்லை. மாறாக நீங்கள் ஆசைப்பட்ட அந்த துடைத்தெறியும் நிகழ்வு நிகழ்ந்தேறவில்லை அவ்வளவுதான் சாமியார். 34 வருஷம் ஒண்டாரியோவில் குப்பை கொட்டுகிறோம் அரசியல் நிலவரம், யார் வெல்வார்கள் தோற்பார்கள் என்ற புரிதல் இல்லாமலா வாழ்வோம்? பின் குறிப்பு - கடந்த 3 தேர்தலிலும் PC கட்சிக்குத்தான் நான் உட்பட எங்கள் குடும்பத்தின் மொத்த வாக்குகளும் சென்றன. பொதுவாக லிபரல் காட்ச்சியை எனக்கு பிடிக்கும் என்ற தகவலையும் சொல்லி வைக்கிறேன். :)
  4. லிபரல் கட்சி 8 சீட்டில் இருந்து 14 சீட்டுகள் எடுத்து எகிறி குதித்து உத்தியோக பூர்வ கட்சி அந்தஸ்தையும் வாங்கி இருக்கிறது. ஒரு பாரம்பரிய காட்ச்சியை துடைத்து எறிவதெல்லாம் ஒன்னும் சுலபம் இல்லை நிழலியர்.
  5. பாவம் இந்த அக்கா... தமிழ் தேசிய பரப்பில் காளியாக நின்று பேசியவர்.. இனி எங்காவது சேர்ந்து கூலியாக பேச வேண்டி வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். 🫶🙏
  6. சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️
  7. மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்கள் உண்மை. "அரக்கர் கூட்டம்", "ஆயிரம் பூக்கள்", "புதியவன் டீம்", "ஒன்றாக" ... இப்படியான பல பெயர் தாங்கிய குழுக்கள் சேர்ந்து விடுதலை புலிகள் தலைவரையும், போராளிகளையும், குறிப்பாக பெண் போராளிகளை மிகவும் கொச்சையாக விமர்சித்து சில இலங்கை முஸ்லீம் தனி நபர்கள் , ஒட்டுக்குழு நபர்களையும் ஒன்றிணைத்து 2 வருடங்களாக தொடர்ந்து பரப்புரை செய்து வந்தது உண்மை.
  8. இந்த பைத்தியரை கொஞ்சம் பக்குவப்படுத்தி தெளிவோடு வெளியே கொண்டுவந்து, புரிதலோடு வலம் வருவாரேயானால் நல்ல எதிர்காலம் இருக்கு. இந்த சிங்கள பேட்டியில் கூட யதார்த்தமான பதில்களை அனாசியமாக தருகிறார்.
  9. விஜி அண்ணின்னு யாரோ பெரியவாள் வீடியோ ரிலீசாம் கூட்டம் அங்க அலைமோதுது. நீங்க புள்ளினம், வல்லினம், வண்ணத்து பூச்சி பத்தி பேசுறீங்க... தொடரட்டும் இந்த மென்மை ✍️
  10. நிறைய எழுதுவதாலோ என்னவோ உங்களுக்கு மற்றவர்கள் சிந்தனைகள், எழுத்துக்கள் குறித்து தீர்ப்பு சொல்லும் அதிகாரம் அதிகமாக கிடைத்து விடுகிறது. உங்களுக்கு இருக்கும் சிந்தனை தெளிவு இன்னும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் நீங்கள் வாதாடுகின்றீர்கள். மேலதிகமாக பேச ஒன்றும் இல்லை. ஒரு ஆத்தலான திரியில நாங்க பேசலாம் அதுவரை அப்பிட (சீமான் + பெரியார்) நெவ கிளுநத் பான்சூன்.
  11. "Liberation Tigers of Thamil Eelam எப்போது Tamil Eelam என்று மாற்றினார்கள். ஆச்சரியம்!!
  12. நன்றி ரசோதரன் உங்களை போல விரிவாக பந்தியை எழுதவில்லை. ஆனாலும் நீங்கள் எழுதிய அடிப்படை புரிதல் இருந்தது. தேவையில்லாத ஆணிகளை தேடித் தேடி சரிநிகர் பார்க்கும் தேவையில் நான் இல்லை. நமது தலைவர்கள் சொல்லிச் சென்ற தத்துவங்கள் கொள்கைகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சிவனே என்று அதை கவனிக்கலாம் என்பதையே உள்ளுணர்வு சொல்கிறது.
  13. அரசியல் பாமரன் எனக்கு அப்படித்தான் படுகிறது. அதனாலேயே நான் அந்த கருத்தை கேள்வியாக வைத்தேன்.
  14. நான் நாறிய என்று எழுதியது "சீமானிசம்".. "சாமானிசம்" எல்லாத்தையும் தான். சக கருத்தாளர்களை ஒரு "பக்கட்டுக்குள்" Bucket போட்டு வாதாட வராதீர்கள். படித்த உங்களுக்கு அழகல்ல. I don't give a flying F about Seeman or Periyaar. Thank You!!
  15. என்னுடைய கேள்வி மிகவும் சாதாரணமானது. நான் நாறிய இந்திய அரசியல் சாக்கடையில் இருந்து பதில் தேடவில்லை. இயல்பாக எம்மவர்கள் ஏன் அப்படி அடையாளப்படுத்த முனையவில்லை என்றே கேட்டேன். கட்டுரையில் ஜெயவர்த்தனா நம்மை திராவிடர் என்றும் அவர்களை ஆரியர் என்றும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.
  16. ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள் அனைத்தும் "தமிழ் ஈழ" என்ற பெயருடன் தான் ஆரம்பித்து இயங்கினார்கள் தவிர திராவிட ஈழ விடுதலை புலிகள் என்றோ.. திராவிட மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றோ திராவிட ஈழ விடுதலை இயக்கம் என்றோ ஆரம்பித்து செயல் படவில்லையே ஏன்? Just wondering!! 😏
  17. இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்... கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் அய்யாவுடைய பாடல்களை தேடித்தேடி கேட்டுவருகிறேன். ஒரு விடயம் அவதானிக்க கூடியவாறு இருந்தது. அவர் பாடிய எந்த ஒரு பாடலையும் கடந்து போகவோ, இந்த பாட்டு நல்லா இல்லை என்ற உணர்வோ மேலோங்கவில்லை. SPB , KJY இவர்கள் பாடிய பாட்டுகளில் கூட இந்த பாட்டு சரியாக இல்லை என்ற உணர்வுகள் மேலிட்டதுண்டு. ஆனால் ஜெயச்சந்திரன் ஐயா பாடிய எல்லா தமிழ் பாட்டுகளுமே தனிச்சிறப்பு!! நான் நினைக்கிறன் அவரின் முதல் பாடல் நான் கேட்டது, பொன்னென்ன பூவென்ன கண்ணே - படம் அலைகள். எனக்கு 5 வயது இருக்கும். அம்மா, அக்காமாரோடு கம்பளை ஆனந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம். ஹீரோ சைக்கிள் ஒடி ஓடி இந்த பாட்டை பாடுவார் என்று ஞாபகம்.
  18. ஆடி வெள்ளி, தேடி உன்னை வசந்த கால நதிகளிலே இரண்டு பாடல்களும் 'அந்தாதி' இலக்கணத்தை பின்பற்றி இயற்றப் பட்ட பாடல்கள் ... அதாவது ஆண் பாடகர் முடிக்கும் வார்த்தையை பயன்படுத்தி பெண் பாடகர் பாட ஆரம்பிப்பார்... இரண்டு பாடல்களும் அது போன்றே புனையப்பட்டவை ஆண் : {வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்} (2) {நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2) பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்} (2) பெண்: கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள் ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்} ** இரண்டு பாடல்களுமே இதே விதத்தில் தான் இயற்றப்பட்டிருக்கும்
  19. அப்ப இந்த வரிக் குதிரையை யார், என்ன தடவு தடவி இருப்பார்கள்? 😧
  20. நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நிலம், உழைப்பு, சாதியம், வர்க்க விடுதலை, ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை பேசிய முதல் தமிழ் திரைப்படமாக விடுதலை இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தங்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.