Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரிட்டனுக்கு செல்வோர் அங்கு திருமணம் செய்யத் தடை

Featured Replies

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரிட்டனுக்கு செல்வோர் அங்கு திருமணம் செய்யத் தடை

பிரிட்டனில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக செல்லும் விளையாட்டு வீரர்கள், பயற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு திருமணம் செய்துகொள்வதை பிரித்தானிய அதிகாரிகள் தடை செய்யவுள்ளனர்.

வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமை பெறுவதற்காக ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேருக்கு 6 மாத காலத்திற்கான பிரித்தானிய விஸா வழங்கப்படவுள்ளது. எனினும் அவர்கள் திருமணம் மற்றும் வேறு வகையான சிவில் வாழ்க்கை பந்தங்களில் இணைவது தடுக்கப்படும். அத்துடன் பிரிட்டனில் கல்வி கற்பதற்கு விண்ணப்பிப்பதும் தடுக்கப்படவுள்ளது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளும் பயங்கரவாதிகளும் பிரிட்டனை இலக்கு வைப்பதற்கு ஒலிம்பிக்கை பயன்படுத்தலாம் என்ற கருத்துக்களின் மத்தியில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பொதுநலவாய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய கெமடூனைச் சேர்ந்த 16 வயது இளைஞர்கள் இருவர் மன்செஸ்டர் விமான நிலையத்தில் வைத்து தலைமறைவாகினர். மன்செஸ்டர் நகரில்நடைபெற்ற 2002 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பின்னர் சியரா லியோனைச் சேர்ந்த சுமார் 30 பேர், தலைமறைவாகியமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரிட்டனுக்குச் செல்வோர் 6 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்க மாட்டார்கள் என்பதற்கும் அங்கு தொழில்வாய்ப்பு எதையும் பெற மாட்டார்கள் என்பதற்கும் தங்கிருக்கும் காலத்திற்கான செலவுக்கும் திரும்பி வருவதற்கான செலவுக்கும் போதிய பணத்தை கொண்டுள்ளார்கள் என்பதற்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிட்டனில் தங்கியிருப்பதிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளையாட்டுப் போட்டியாளர்கள், பயிற்றுநர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு 204 தேசிய ஒலிம்பிக் குழுக்களுக்கு பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

http://www.tamilmirr...9-12-01-29.html

Edited by akootha

இது நல்ல சட்டம்.

வாறதில எத்தனை பேர் 'அசைலம்' அடிக்கப் போகின்றார்கள் என்பது ஆண்டவுக்கே வெளிச்சம். பேசாம 'ஒலிம்பிக் கிராமத்தை' போட்டி முடிய 'அசைலம் சென்ரர்' ஆக மாற்றி விட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல சட்டம்.

வாறதில எத்தனை பேர் 'அசைலம்' அடிக்கப் போகின்றார்கள் என்பது ஆண்டவுக்கே வெளிச்சம். பேசாம 'ஒலிம்பிக் கிராமத்தை' போட்டி முடிய 'அசைலம் சென்ரர்' ஆக மாற்றி விட்டால் நல்லது.

ஏன் தப்பிலி.. இதையே 1983 இல் கொண்டு வந்திருந்து ஒரு சிறீலங்கன் தமிழ் ஆக்களையும் அசைலம் அடிக்க விடல்லை என்று வைச்சுக்குங்களேன்.. அப்பவும் இதையே தான் நீங்கள்.. எழுதி இருப்பீங்களா..??!

அதென்ன.. அசைலம் அடிக்கிற தமிழர்களுக்கு ஒரு சட்டம்... மற்றவர்களுக்கு இன்னொரு சட்டமா..??! அதிலும் அசைலம் அடிச்சவையே மற்றவனை அசைலம் அடிக்காதை என்று சொல்லுறது.. கொஞ்சம் ஓவர்..! இந்த மனப்பான்மை எம்மவரிடம் எப்படியோ வந்து ஒட்டிக் கொள்கிறது. எல்லா நன்மையும்.. தான் தான் அனுபவிக்க வேண்டும். தன்னைப் போல.. மற்றவன் அனுபவிக்க விடக்கூடாது..! (உங்களைச் சொல்லேல்ல.. பொதுவாச் சொன்னேன்.) :):icon_idea:

தாய் நாட்டின் உதவியுடன் வசதியாக விளையாட வருபவர்கள் இங்கு வந்தவுடன் பிளேட்டை மாற்றி அந்த நாட்டின் மீதே குற்றம் சுமத்தி 'அசைலம்' அடிப்பார்கள்.

(ஏன் நம்மவர்கள் செய்யாதா என்று நீங்கள் கேட்பது விளங்குகிறது. :lol: )

83 இற்கு முன்பே மேற்குலக நாடுகள் இறுக்கமான குடிவரவுச் சட்டங்களைக் கொண்டுவந்திருந்தால், எப்போதோ தனிநாடு கிடைத்திருக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இருவரது கருத்தையும் ஏற்கமுடியவில்லை.

அந்தரப்பட்டு ஓடி வந்த ஒரு இனத்தினை அரவணைப்பதற்கும் பல மில்லியன் வருவாய்வரும் உழைப்புடன் வாழ்ந்து

கொண்டு விளையாட்டுக்காக வரும் எந்தவித ஆபத்துமற்றவர்களை அரவணைக்க மாட்டேன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதது மனவருத்தம் தருகிறது.

எம்மை அரவணைத்ததன் மூலம் அங்கு இனவழிப்பு நடக்கிறது என உலகம் எப்போதோ கண்டு கொண்டதை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதை தவறாக பாவித்த ஒரு சிலரை மனத்தில் வைத்து ஒடடுமொத்த இனத்தையும் அதை தெரிந்தும் தம் தவறினால் ஒரு உண்மையான அகதி பதிப்புக்குள்ளாகக்கூடாது என அவர்களையும் சேர்த்து அரவணைத்த சர்வதேசத்தை நாம் இகழ்வது தாயைப்பழிப்பதற்கு சமனாகும். :( :( :(

ஏன் விசுகு அண்ணா.. நீங்களா இப்படி...

அந்தரப்பட்ட மக்களை 1983 இல் சிங்களவன் கப்பலேற்றி.. லண்டனுக்கு அனுப்பவில்லையே. யாழ்ப்பாணத்திற்குத் தானே அனுப்பினான். 1986 இல் யாழ்ப்பாணத்தில் ஒப்பரேசன் லிபரேசன் ஆரம்பமான போது.. எவரையும் லண்டனுக்கு அனுப்பவில்லையே.. தமிழ்நாட்டுக்குத் தானே தப்பி ஓடினார்கள். அகதிகள் என்போர் அதெப்படி.. சரியா.. கரெக்டா... அசைலம் அடிச்சால் நிரந்தர வதிவுரிமையும்.. செல்வச்செழிப்பு மிக்க வாழ்வும் கிடக்கும் என்று தெரிஞ்சு.. எத்தனையோ விமானங்கள் ஏறி வந்து இறங்கிச்சினம்..????!

இதோட ஒப்பிடேக்க.. ஒரு திறமையுள்ள விளையாட்டு வீரன்.. அந்தத் திறமைக்கு.. தொடர்ந்து மதிப்பும்..நல்ல வாய்ப்பும் இருக்கிற இடத்தில.. ஏன் அசைலம் அடிக்கக் கூடாது..?????????????! ஒரு ஒலிம்பிக் மெடல் எடுத்தால் போல அந்த வீரனின் அல்லது வீராங்கனையின் வாழ்க்கை.. என்பது ஏதோ சிறப்பான ஒன்றாக ஆகிவிடப் போறதில்லை. அந்தந்த நாடுகளால்.. இடையில் கைவிடப்பட்ட வீரர்களே அதிகம். ஏன் அப்படியானவர்கள் அகதிகளாகி.. நிரந்தர வதிவுரிமை பெற்று.. அல்லது திருமணமாகி.. நிரந்தர வதிவுரிமை பெற்று... தங்கள் சொந்தம்.. சுற்றம் எல்லாத்தையும் பொன்சர் செய்து கூப்பிட்டு.. சந்தோசமா வாழக்கூடாது..?????!

இன்று கூட.. அமைதி திரும்பினால்.. ஏன் தமிழீழம் கிடைத்தால்.. எத்தனை அசைலத் தமிழர்கள் நாடு திரும்புவார்கள்..????????????! அப்பவும் பிரச்சனை என்றா சொல்வார்கள்.. அல்லது நாங்கள் பிள்ளை குட்டியலோட இங்க செற்றிலாகிட்டம் எப்படி போறது.. இந்த வாழ்க்கைக்குப் பழகிட்டம் என்று சொல்லுவினமா..???! அல்லது இல்ல உடனவே நாடு திரும்பிறம் என்று போவினமா...?????!

இந்தக் கேள்விகளுக்கு இதய சுத்தியோடு.. நீங்கள் பதில் சொல்லி விட்டு.. அந்த வீரர்கள் மீது உங்கள் கருத்தைச் சொல்லலாம்..! அது தான் நியாயம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது நாடுகளிலும் சிங்களவன் போன்றவன் ஆண்டால் அவர்களும் அரவணைக்கப்படவேண்டியவர்களே. :icon_idea:

மீதியாக உள்ள வடகிழக்கு தமிழர்களையும் புலத்திற்கு வரவழைத்தால், சர்வதேசத்துடன் சேர்ந்து போராட வசதியாக இருக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் விசுகு அண்ணா.. நீங்களா இப்படி...

அந்தரப்பட்ட மக்களை 1983 இல் சிங்களவன் கப்பலேற்றி.. லண்டனுக்கு அனுப்பவில்லையே. யாழ்ப்பாணத்திற்குத் தானே அனுப்பினான். 1986 இல் யாழ்ப்பாணத்தில் ஒப்பரேசன் லிபரேசன் ஆரம்பமான போது.. எவரையும் லண்டனுக்கு அனுப்பவில்லையே.. தமிழ்நாட்டுக்குத் தானே தப்பி ஓடினார்கள். அகதிகள் என்போர் அதெப்படி.. சரியா.. கரெக்டா... அசைலம் அடிச்சால் நிரந்தர வதிவுரிமையும்.. செல்வச்செழிப்பு மிக்க வாழ்வும் கிடக்கும் என்று தெரிஞ்சு.. எத்தனையோ விமானங்கள் ஏறி வந்து இறங்கிச்சினம்..????!

இதோட ஒப்பிடேக்க.. ஒரு திறமையுள்ள விளையாட்டு வீரன்.. அந்தத் திறமைக்கு.. தொடர்ந்து மதிப்பும்..நல்ல வாய்ப்பும் இருக்கிற இடத்தில.. ஏன் அசைலம் அடிக்கக் கூடாது..?????????????! ஒரு ஒலிம்பிக் மெடல் எடுத்தால் போல அந்த வீரனின் அல்லது வீராங்கனையின் வாழ்க்கை.. என்பது ஏதோ சிறப்பான ஒன்றாக ஆகிவிடப் போறதில்லை. அந்தந்த நாடுகளால்.. இடையில் கைவிடப்பட்ட வீரர்களே அதிகம். ஏன் அப்படியானவர்கள் அகதிகளாகி.. நிரந்தர வதிவுரிமை பெற்று.. அல்லது திருமணமாகி.. நிரந்தர வதிவுரிமை பெற்று... தங்கள் சொந்தம்.. சுற்றம் எல்லாத்தையும் பொன்சர் செய்து கூப்பிட்டு.. சந்தோசமா வாழக்கூடாது..?????!

இன்று கூட.. அமைதி திரும்பினால்.. ஏன் தமிழீழம் கிடைத்தால்.. எத்தனை அசைலத் தமிழர்கள் நாடு திரும்புவார்கள்..????????????! அப்பவும் பிரச்சனை என்றா சொல்வார்கள்.. அல்லது நாங்கள் பிள்ளை குட்டியலோட இங்க செற்றிலாகிட்டம் எப்படி போறது.. இந்த வாழ்க்கைக்குப் பழகிட்டம் என்று சொல்லுவினமா..???! அல்லது இல்ல உடனவே நாடு திரும்பிறம் என்று போவினமா...?????!

இந்தக் கேள்விகளுக்கு இதய சுத்தியோடு.. நீங்கள் பதில் சொல்லி விட்டு.. அந்த வீரர்கள் மீது உங்கள் கருத்தைச் சொல்லலாம்..! அது தான் நியாயம்..! :):icon_idea:

யாழில் இப்படியான கருத்துக்களும்தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்.தலைவரின் அண்மைக்கால மாவீரர் உரையை உன்னிப்பாக கேட்டவர்களுக்கு தெரியும் புலம்பெயர்மக்களின் சக்தி!இன்றுவரை தலைவரோ......ஏனைய ஈழவிரும்பிகளோ புலம்பெயர் ஈழத்தமிழர்களை பழித்ததில்லை.புலம்பெயர்தேசங்களில் தமிழ்ச்செல்வனை சந்திந்தவர்கள் ஆதரவு கொடுத்தவர்கள் ....இதர பெயர்கள் வேண்டாம்...இவர்கள் எல்லாம் யார்????

நெடுக்காலபோவான் அவர்களே!இனியுமொருமுறை புலம்பெயர்மக்களை நோக்கி உங்கள் சுட்டுவிரலை நீட்டாதீர்கள்.

நெடுக்ஸ் பழிப்பதாகக்கருதினால் அந்தப்பழிப்பைச்சகித்துக்கொண்டு உங்கள் வழியிற்போனால் அவருடன் வாதம்செய்து இரத்தஅழுத்தத்தை அதிகரிக்கவேண்டிவராது. அவங்கள் இளரத்தங்கள், கையில் உயர்ந்த படிப்பு, பட்டங்கள் வேறு. உங்களால் நெடுக்குடன் கருத்துப்பரிமாறி தாக்குப்பிடிக்கமுடியுமா குமாரசாமி அண்ணா?

தம்பி மாப்பு?நீங்கள் வேறு எந்தப்பெயரில் வந்தாலும்......நீங்கள் எனக்கு மாப்புதான். சரி விடுவம்.....இளமை.முதுமை,பணக்காரன் ஏழை.படித்தவன் படிக்காதவன்...தெரிஞ்சவன் தெரியாதவன்...முட்டுக்காய் செத்தல்காய் எல்லாத்துக்கும் சமன்....... உண்மை...அது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.