Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார்?

Featured Replies

பிரான்சின் ஐந்தாவது குடியரசின் பத்தாவது ஜனாதிபதித்தேர்தலின் முதற்சுற்று எதிர்வரும் 22.04.2012ல் நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று 6.5.2012ல் நடைபெறுகிறது. பிரான்சிலும் அரசியல் சட்டங்கள் காலத்திற்கு காலம் மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டு வந்திருக்கிறது.

ஐந்தாவது தடவையாக 1958ல் நடைபெற்ற இவ்வாறான மாற்றத்தின் பின் ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் கீழ் 1965ல் முதல்முறையாக சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்யும்முறை

அறிமுகமானது. ஐந்தாவது குடியரசினை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் சாள்துகோலே சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாவார்.

ஏழாண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வந்த பிரான்சின் ஜனாதிபதி தேர்தல் 2002ம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகிறது. 22.4.2012ல் நடைபெறும் முதலாவது சுற்றில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்குரிய இலக்க பட்டியல் சீட்டுக்குலுக்கல் முறைமூலம் தயாரிக்கப்படுகிறது. பட்டியல் ஒழுங்கின் பிரகாரம் வேட்பாளர் விபரங்கள்.

1.EVA Joly

2012-03-30T090301Z_1_APAE82T0P5900_RTROPTP_3_OFRTP-FRANCE-BETTENCOURT-JOLY-20120330.JPG

ஐரோப்பிய சுற்றுச்சூழல் பசுமைக்கட்சி (EELV - Europe Ecologie les Verts) பிரெஞ்சுக்குடியுரிமை

பெற்ற நோர்வே நாட்டவரான இவர் 0,5 வீதமான வாக்குகளைப் பெறுவாரென கணிக்கப்படுகிறது.

2. Marine le Pen

marine-le-pen.jpg

தேசிய முன்னணி (Front National) தீவிர வலதுசாரியான ஜோன் மரி லுப்பெனின் மகளான இவர் தற்போது தேசியமுன்னணியின் தலைவராகவும் இருக்கிறார். 15 வீதமான வாக்குகளைப்பெற்று மூன்றாம் இடத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. Nicolas Sarkozy

nicolas-sarkozy.jpg

மக்கள் இயக்க ஒன்றியம் (UMP) 2007ம் ஆண்டு முதல் ஜனாதிபதி பதவி வகிக்கும் இவர்

இரண்டாம் தடவை போட்டியிடுகிறார். முதற்சுற்றில் 27,5 வீதமான வாக்குகளைப்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. Jean Luc Melenchon

jean-luc_melenchon_reference.jpg

இடது முன்னணி (Front de Gauche) இந்த இடது முன்னணியில் பிரெஞ்சு கொம்யூனிஸ்ட் கட்சி (Partie de Gauche) இடது கட்சி, ஐக்கிய இடது கட்சி (Gauche Unitaire) என்பன அங்கம் வகிக்கின்றன. இவர் 11,5 வீதமான வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

5. Philippe Poutou

Philippe-Poutou.jpg

முதலாளித்துவத்திற்கு எதிரான புதியகட்சி (NPA - Nouveau Parti Anticapitaliste) ரொக்சியவாதியான இவர் 0,5 வீதமான வாக்குகளைப்பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

6. Nathalie Arthard

nathalie-arthaud-lutte-ouvriere-presidentielle_pics_390.jpg

போராடும் தொழிலாளர் (LO -Lutte Ouvrière) தொழிலாளருக்காக பிரத்தியேகமாக குரலெழுப்பும் தீவிர இடதுசாரிக்கட்சியான இக்கட்சியின் வேட்பாளரும் 0,5 வீதமான வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

7. Jacques Cheminade

Jacques-Cheminade.jpg

(Solidarité et Progrès) யூத இனத்தவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கட்சி 1995ல் போட்டியிட்டது. 2002 - 2007 தேர்தல்களில் 500 பிரமுகர்களின் ஆதரவு எட்டாத காரணத்தினால் போட்டியிட முடியவில்லை. இந்தத்தேர்தலில் 0,5 இற்கும் குறைவான வாக்குகளையே இக்கட்சி வேட்பாளர் பெறுவார் என கணிக்கப்படுகிறது.

8. François Bayrou

75269_francois-bayrou-president-du-mouvement-democrate-modem-lors-d-une-conference-le-12-fevrier-2011-a-paris.jpg

(Movement Démocrate) ஜனநாயகத்திற்கான இயக்கம் என்கிற இக்கட்சி Modem என பரவலாக

அழைக்கப்படுகிறது. மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் சரித்திர ஆசிரியரும் இலக்கிய ஆர்வலருமாவார். தற்போதைய நிலையில் 13,0 வீதமான வாக்குகளைக் பெற்று நான்காம் இடத்தைப்பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

9. Nicolas Dupont Aignan

20111214-Nicolas-Dupont-Aignan.jpg

(DLR- Debout la République) கட்சியின் தலைவரா கவும், நகரபிதாவாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். UMP கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகிய பின் அக்கட்சியைவிட்டு வெளியேறியவர். ஐரோப்பிய ஒன்றியத்திடம் அதிக அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டோம் என எதிர்ப்புக்குரலெழுப்பும் இவர் 1,5 வீதமான வாக்குகளைப்பெறுவார் என கணிக்கப்படுகிறது.

10. François Hollande

Fran%C3%A7ois%20Hollande.jpg

(சோசலிசக்கட்சி) (PS – Parti Socialiste ) இவர் Parti Radical de Gauche (PRG), Mouvement Républicain et Citoyen, Génération écologie, Mouvement progressiste, Nouvel espace ஆகிய கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறார். கட்சிக்குள் கடுமையான போட்டிகளின் பின்பே இவர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டார். முதற்சுற்றில் 28,5 வீதமான வாக்குகளைப்பெற்று முதலாமிடத்தைப்பெறுவார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. 22.4.2012ல் நடைபெறும் முதற்சுற்றில் தெரிவாகும் முதல் இருவர் மட்டும் 2ம் சுற்றிற்குத் தகுதி பெறுவர். இரண்டாவது சுற்றில் ஏனையகட்சிகளின் ஆதரவே இவர்களின் வெற்றிவாய்ப்பினை பெருமளவில் தீர்மானிப்பவையாக அமையும்.

நன்றி : நிலா

www.tamilkathir.com

அண்மையில் துலூசில் கொல்லப்பட்ட பயங்கரவாதி சர்கோசிக்கு ஒரு 'பூஸ்ட்' தந்துள்ளார் போலுள்ளது. மக்களும் பொருளாதார பிரச்சனைகளை விட இந்தப்பிரச்சனையில் முழுகியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் துலூசில் கொல்லப்பட்ட பயங்கரவாதி சர்கோசிக்கு ஒரு 'பூஸ்ட்' தந்துள்ளார் போலுள்ளது. மக்களும் பொருளாதார பிரச்சனைகளை விட இந்தப்பிரச்சனையில் முழுகியுள்ளனர்.

சார்கோசிக்கு இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காரணம் இவர் உள்நாட்டமைச்சராகவும் 5 வருடம் ஐனாதிபதியாகவும் ஏற்கனவே இருந்தமையால் பயங்கரவாதத்தை வேரறுக்க இவரால் முடியவில்லை என்றநிலையில் அதி தீவிரவாத மரி லு பென்னுக்கே அந்தவகை மக்களது செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதை மரி லு பென்னும்(Marie LE PEN) மிகவும் சாதகமாக பிரசாரம் செய்து வருகின்றார்.

உண்மையைச்சொன்னால் எனக்கே யாருக்கு ஓட்டுப்போடுவது என்று தெரியவில்லை. முடிவெடுக்கவில்லை. எனது வீட்டில் 5 வோடடுக்கள் உள்ளன. பிள்ளைகள் வெள்ளைத்துண்டு வாக்கு அளிக்கப்போவதாக சொன்னார்கள். அவரர்கள்முடிவிலேயே இந்தமுறை விட்டுவிட்டேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருந்தாலும் இவர்களினால் ஈழ தமிழர்களுக்கு ஏதாவது நன்மைகள் கிட்டுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருந்தாலும் இவர்களினால் ஈழ தமிழர்களுக்கு ஏதாவது நன்மைகள் கிட்டுமா ?

மிகவும் சிக்கலான கேள்வி தமிழ் அரசு

காரணம் சர்வதேசநிலை தலை கீழாக மாறியுள்ளது. அந்தவகையில் எம்மை ஆதரிப்பார்கள் என்று நாம் மலைபோல் நம்பிய விடுதலை தேசியம் கொள்கைப்பிடிப்பாளர்கள் என்று நாம் நம்பிய சமீபமாக விடுதலை பெற்ற தேசங்கள் யாவும் எம்மை கைவிட்டுவிட்ட நிலையில்.....

நான் ஒரு சோசலிச கட்சியின் அங்கத்தவன் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக. அவர்களுக்கே எனது ஓட்டு மற்றும் கடந்த முறையும் பிள்ளைகளுக்கான எனது உத்தரவு சோசலிச கட்சிக்கே. ஆனாலும் நானே விரும்பி அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எமது தாயகத்திற்கு ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கையைத்தவிர வேறெதுவும் பிடிக்கவில்லை. இந்தமுறை அதுவும் கேள்விக்குரியதாகியுள்ளது. காரணம் இவர்களில் அநேகர் சீனாவை ஆதரிப்பவர்கள். திபெக்கை வெறுப்பவர்கள். இந்தநிலையில் பொல்லைக்கொடுத்து ........???

அதேநேரம் சார்கோசியின் அரசுதான் போர்க்குற்றம் சம்பந்தமாக நல்லநிலையெடுத்துள்ளதால்தான் எமக்கான பலபடிகளை அவர்கள் தொடர்ந்து ஆதரித்தே வருகிறார்கள்.....ஆனாலும் கொள்கை ரீதியாக பல முரண்பாடுண்டு. பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

nicolas-sarkozy.jpg

சார்க்கோஸியின் அரசியல் பிரான்ஸ் மக்களுக்கு திருப்தியோ, இல்லையோ... தெரியாது.

ஆனால்.... ஜனாதிபதிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில், சார்க்கோசியே.... அழகாகவும் , உசாரான ஆம்பிளையாகவும் தெரிகின்றார்.

எனக்கு வாக்கு இருந்தால்.... சாக்கோசிக்குத் தான்... போடுவேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

அழகு என்று பார்த்தால் இவருக்குத்தான் போடணும்

அத்துடன் இவர் இலவசமாக தாயகம் செல்ல பயண ஒழுங்கும் செய்து தருவார். ஆனால் ஒன்று போக மட்டும். திரும்பி வரவே முடியாது.... :lol::D :D

marine-le-pen.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அழகு என்று பார்த்தால் இவருக்குத்தான் போடணும்

அத்துடன் இவர் இலவசமாக தாயகம் செல்ல பயண ஒழுங்கும் செய்து தருவார். ஆனால் ஒன்று போக மட்டும். திரும்பி வரவே முடியாது.... :lol::D :D

நீங்கள் தாயகம் என்று, குறிப்பிடுவது.... கருப் பையா விசுகு. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::icon_idea: :icon_idea:

நீங்கள் தாயகம் என்று, குறிப்பிடுவது.... கருப் பையா விசுகு. :lol::icon_idea:

இல்லை

கறுப்பை :lol::icon_idea: :icon_idea:

சார்கோசிக்கு இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காரணம் இவர் உள்நாட்டமைச்சராகவும் 5 வருடம் ஐனாதிபதியாகவும் ஏற்கனவே இருந்தமையால் பயங்கரவாதத்தை வேரறுக்க இவரால் முடியவில்லை என்றநிலையில் அதி தீவிரவாத மரி லு பென்னுக்கே அந்தவகை மக்களது செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதை மரி லு பென்னும்(Marie LE PEN) மிகவும் சாதகமாக பிரசாரம் செய்து வருகின்றார்.

உண்மையைச்சொன்னால் எனக்கே யாருக்கு ஓட்டுப்போடுவது என்று தெரியவில்லை. முடிவெடுக்கவில்லை. எனது வீட்டில் 5 வோடடுக்கள் உள்ளன. பிள்ளைகள் வெள்ளைத்துண்டு வாக்கு அளிக்கப்போவதாக சொன்னார்கள். அவரர்கள்முடிவிலேயே இந்தமுறை விட்டுவிட்டேன்.

வெள்ளைத்துண்டு வாக்கு என்றால் என்ன?

உதாரணத்திற்கு ' பிரான்சுக்கான தமிழர் ' எனற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பிரான்ஸ் வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, எம்மிடம் உள்ள வாக்கு பலத்தை யாருக்கு அளிப்பது என்பதை முடிவெடுக்க சகல வேட்பாளர்களையும் அழைக்கலாம். இதன் மூலம் அடுத்த தலைமுறையும் அரசியலில் ஆர்வம் எடுக்க உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு முயற்சி போன முறை அரச அதிபர் தேர்தலில் புதுவையைச்சேர்ந்த பேராசிரியர் யூலியர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு அவரே நேரடியாக போட்டியில் பங்கு பற்றியிருந்தார். இந்த வருடம் அவர் பங்கு பற்றவில்லை. ஆனால் தொடர்ந்து பேச்சுக்களிலும் தொடர்புகளும் பேணப்படும் என நினைக்கின்றேன். ஆனால் ஒரு பகுதிக்கென்று ஒதுங்காமல் பல பக்கமும் நிற்பதே நன்று.

வெள்ளைத்துண்டு என்றால்

வேட்பாளர்கள் அனைவரது பெயர்களும் அத்துடன் இதில் எவருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக வெள்ளைத்துண்டும் வைக்கப்படும். சிலர் தமது எதிர்ப்பைக்காட்ட வெள்ளைத்துண்டைப்பாவிப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

Sarkozy ku thaan chancenu the australian paperla vanthirukku

சார்கோசியை பெரும்பாலான பிரெஞ்சுக்காரருக்குப் பிடிப்பதில்லை.

அதேநேரம் அவர்கள் சார்க்கோசிக்கு எதிராகப் போட்டியிடுபவர்களில் முன்னணியில் உள்ள François Hollande ற்கு வாக்களித்து தமது தலையில் தாமே மண்ணை வாரிப் போட மாட்டார்கள்.

இரண்டு *** களில் யாரைத் தெரிவு செய்வது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. விகுசு அண்ணா சொன்னதுபோல் வெள்ளைத் துண்டு போட்டு இருவரையும் வெறுப்பதை வெளிக்காட்டலாம். ஆனால் எல்லோரும் வெள்ளைத்துண்டு போடப்போய் இடையில் Marine le Pen நுளைந்து விட்டால் நிலமை கவலைக்கிடமாகும்.

சிறந்த பொருளாதார / வேலைவாய்ப்பு திட்டத்தை முன்வைப்பவருக்கு வாக்களிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சார்கோசியை பெரும்பாலான பிரெஞ்சுக்காரருக்குப் பிடிப்பதில்லை.

அதேநேரம் அவர்கள் சார்க்கோசிக்கு எதிராகப் போட்டியிடுபவர்களில் முன்னணியில் உள்ள François Hollande ற்கு வாக்களித்து தமது தலையில் தாமே மண்ணை வாரிப் போட மாட்டார்கள்.

இரண்டு *** களில் யாரைத் தெரிவு செய்வது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. விகுசு அண்ணா சொன்னதுபோல் வெள்ளைத் துண்டு போட்டு இருவரையும் வெறுப்பதை வெளிக்காட்டலாம். ஆனால் எல்லோரும் வெள்ளைத்துண்டு போடப்போய் இடையில் Marine le Pen நுளைந்து விட்டால் நிலமை கவலைக்கிடமாகும்.

முடியல.... :rolleyes::D:lol:ratte.gif

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலாக இணையவனும் எம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

(குறிப்பு: இணையவன் இதை வைத்து இவரைத்தடைசெய்ய முடியாதா?. ரொம்ப குதிக்கிறார்? :lol::D :D )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.