Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kaasuu.jpg

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, இன்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது.

கடந்த மார்ச் 19ம் நாள் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்று 131.60 ரூபாவாக விற்கப்பட்டது.

இதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க முனைந்தது.

இந்தநிலையில் கடந்தவாரம் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 125 ஆக உயர்ந்தது.

எனினும் இந்தவாரம் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு சுனாமி வராமல் போகலாம், ஆனால் பொருளாதாரத்தில் வந்திருக்கும் சுனாமிக்கு அரசு தாக்கு பிடிக்குமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கு சுனாமி வராமல் போகலாம், ஆனால் பொருளாதாரத்தில் வந்திருக்கும் சுனாமிக்கு அரசு தாக்கு பிடிக்குமா ?

தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்து விடபட்டிருக்கும் இராணுவ கொடுங்கோல் ஆட்சியை ஸ்ரீ லங்காவில் கட்டவிழ்த்தால் பிரச்சினை முடிந்தது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்து விடபட்டிருக்கும் இராணுவ கொடுங்கோல் ஆட்சியை ஸ்ரீ லங்காவில் கட்டவிழ்த்தால் பிரச்சினை முடிந்தது.

பாதக நிலையில் இலங்கைப் பொருளாதாரம்

ஏற்கனவே எதிர்வு கூறியபடி இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில், இலங்கையின் பொருளாதாரம் பாதக நிலை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதனை அண்மைக் காலப்பொருளாதார புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தினை வெளிப்படுத்தும் பணவீக்கம், வட்டி வீதம், நாணய மாற்று வீதம், வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு நாணய ஒதுக்கு மற்றும் பங்குச் சந்தை நிலவரம் ஆகிய குறிகாட்டிகள், இலங்கைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலைமை தொடர்பாக பாதக நிலையினை சமிஞ்யை செய்துள்ளன.

உள்நாட்டுப் போர் ஓய்ந்த பின்னர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பில் கடந்த சில வருடங்களாகவே நல்ல நம்பிக்கை காணப்பட்டு வருகின்றது. எனினும், அண்மைக் காலமாக மேற்படி பொருளாதார குறிகாட்டிகள் பொருளாதார உறுதிப்பாடு, உயர் வருமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாழ்கைத் தரம் போன்றன பாதக நிலையினை நோக்கி நகர்வதனை வெளிப்படுத்துகின்றன.

இதனால், ஏற்கனவே எதிர் பார்க்கப்பட்டது போல இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு குறைவடையும் அதேவேளை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமடையும் என பொருளியலாளர்கள் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(என்.சிவரூபன்)

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=26

புத்தன் சரண்டர், கடன் தாங்கோ சீன் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

இடி அமின் காலத்து உகண்டாவையும், ரொபர்ட் முகாபே காலத்து சிம்பாப்வேயையும் சிங்களத்தின் பணவீக்கம் நினைவு படுத்துகின்றது! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலர் கலரா வெளிநாட்டு காசுமாதிரி அடிச்சுவிட்டால் மட்டும் மதிப்பு வந்திடுமோ ^_^ , இவங்கள் கண்டபாட்டுக்கு இப்பிடி அடிச்சுவிட்டு பாக்கிற காசெல்லாம் கள்ளக்காசு மாதிரியே தெரியுது :rolleyes:

சாதாரண உழைப்பாளிகள் வாழ்க்கைக்குச் சிரமப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தீர்வை வைத்து தமிழரை அரவணைத்து செல்வதால் மட்டுமே இதனை எதிர்கொண்டு தடுக்கமுடியும்.

புரிந்து கொள்ளுமா சிங்களம்??

வராத சுனாமியை வந்ததாக சொல்லி காசு கேட்கப் போகிறான் ராஜபக்ச, கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தீர்வை வைத்து தமிழரை அரவணைத்து செல்வதால் மட்டுமே இதனை எதிர்கொண்டு தடுக்கமுடியும்.

புரிந்து கொள்ளுமா சிங்களம்??

அந்தத் தீர்வு ஈழமாக இருந்தால்....

அயல்நாடு ஸ்ரீலங்கா என்னும் முறையில், நாங்களே சரிந்த பொருளாதாரத்தை தட்டி நிமித்துவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தீர்வு ஈழமாக இருந்தால்....

அயல்நாடு ஸ்ரீலங்கா என்னும் முறையில், நாங்களே சரிந்த பொருளாதாரத்தை தட்டி நிமித்துவோம்.

உண்மைதான், எப்போதும் தமிழர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் அவர்கள் தாம் வளர்வதுடன் பிறரையும் வாழவைப்பதிலும் வல்லவர்கள் புலம்பெயர் தேசங்களில் அவர்கள் அதை நிரூபித்து காட்டியுள்ளார்கள்.

தமிழ் ஈழத்தினை பிரிந்து கொடுத்தால் நாமும் முன்னேறி அயல்நாடான சிறிலங்காவையும் பொருளாதார சரிவில் இருந்து காப்பாற்றி விடுவோம்.

என்னையா நீங்கள் எல்லாம் விழுகுத்தெண்டிரியள்.NASDAQ வில் 2013/2014 எழும்பிடும் எண்டு போட்டிருக்கு?

http://www.nasdaq.com/article/sri-lankan-economy-set-to-expand-8-in-2013-central-bank-20120409-00356

சிங்கள, தமிழ் புதுவருடத்தின் பின்னர் பொருட்களின் விலை உயர்வடையும் சாத்தியம் நிலவுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர்.

இதனோடு சேவைகளின் கட்டணமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலைகளும் இதன்போது உயர்வடையலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை, இறக்குமதி மீதான தீர்வை அதிகரிப்பு போன்ற காரணிகளே இவ்விலை உயர்வுக்கான காரணிகளாக அமையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ___

http://www.virakesar...asp?key_c=37584

Edited by akootha

என்னையா நீங்கள் எல்லாம் விழுகுத்தெண்டிரியள்.NASDAQ வில் 2013/2014 எழும்பிடும் எண்டு போட்டிருக்கு?

http://www.nasdaq.co...-20120409-00356

ஒரு வீட்டில்/நாட்டில் போன ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் கூடுதலாக உள்ளது என்பது வீட்டிலோ/நாட்டிலோ செல்வம் அதிகரித்துள்ளது என்பது ஆகாது.

2009 ஆம் ஆண்டும் இலங்கையின் வெளிநாட்டு பணக்கையிருப்பு 7-8 பில்லியன்கள் இன்றோ 4 க்கும் கீழே

அன்று சில அரச நிறுவனங்களே நட்டத்தில் இயங்கியது இன்று ஒன்பதில் ஏழு நட்டத்தில்!

மகிந்த ஒரு பொருளாதார வல்லுனரை நியமிக்காமல் பசிலை நியமித்தார். அவரோ எதிலும் பத்து வீதத்தை தனது கணக்கில் சேர்த்துவிடுவார்.

குறிப்பாக அரச பெற்றோலிய, மின்சார நிறுவனம் மற்றும் சிறிலங்கன் விமான சேவை ...வங்குரோத்து நிலையில்

உணவுப் பொருள் விலைகள் ஓரிரு தினங்களில் அதிகரிப்பு; அவற்றின் இறக்குமதி வரிகளை அதிகரிக்கிறது அரசு

உணவுப் பொருள்களின் விலைகள் இன்னும் ஓரிரு தினங்களில் மீண்டும் அதிகரிக்கவுள்ளன. கோதுமை மா, சீனி, பருப்பு, கடலை, கௌபி, பால்மா, எரிபொருள், சமையல் வாயு ஆகியவற்றின் விலைகளே அதிகரிக்கப்பட உள்ளன. இவற்றின் மீதான இறக்குமதி வரிகளை அரசு அதிகரிக்க உள்ளதால் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"ஏற்கனவே இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ் சிங்கள புதுவருடத்தையொட்டி அதனை அரசு தள்ளிப்போட்டது. இனியும் தாமதிக்க முடியாது என்பதால் ஓரிரு தினங்களில் வரிகள் அதிகரிக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

புது வருடத்துக்கு முன்பாக ஏற்கனவே வாகனங்களுக்கான இறக்குமதி வரியை அரசு திடீரென பெருமளவில் அதிகரித்திருந்தது. இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட உள்ள அதேவேளையில் அரசு பல்வேறு துறைகளிலும் வழங்கி வரும் மானியங்களைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக சமுர்த்தி உதவி வழங்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைத் தடுக்க கையிருப்பில் இருந்த பெருமளவு டொலரை சந்தைக்கு விடவேண்டியிருந்ததால், வரி விதிப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்று மத்திய வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மூன்றாவதும் கடைசியுமான கடன் தொகையைப் பெறுவதற்காக அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காகவே வரி அதிகரிப்பை அரசு மேற்கொள்கிறது என்று பொருளாதார நிபுணர்களும் எதிர்க் கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=54856975715155648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.