Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுகவும் தமது பிரதிநிதியை சுஸ்மா குழுவிலிருந்து விலக்கிக்கொள்ள உத்தேசம்! ஈழ மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்கிறார் கருணாநிதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi150_afp.jpg

இலங்கைக்கு ஆறு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் "ரைம்ஸ் ஒவ் இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வரும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமது கட்சியின் சார்பில் பாராளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் திமுக தலைமை இருப்பதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்தக் குழுவுக்கு பெயர் குறிக்கப்பட்ட அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னாட்டை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கை அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியும் இதே கருத்தையே தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடும் போது வெளிப்படுத்தியுள்ளார். புனர்வாழ்வுக்காக இதுவரை முகாம்களில் காத்திருக்கும் தமிழ்மக்களின் சார்பில் பேசுவதற்கு அனுமதிக்காத இந்தப் பயணத்தினால் என்ன பயன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

இணைக்க பட்ட செய்திகளை திரும்ப திரும்ப ஏன் இணைக்கிறீர்கள் தமிழரசு இணைப்பதாயின் இணைத்த தலைப்பின் கீழ் இணைக்கலாமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா செல்லும் குழுவில் இருந்து திமுகவும் விலகியது - கருணாநிதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு

kalainger%20karunanithi.jpg

சிறிலங்காவில் தமிழர் நிலைமையைப் பார்வையிடச் செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிலிருந்து திமுகவும் வெளியேறியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிப்பை திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று வெளியிட்டார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு. கருணாநிதி,

“இந்த நாடாளுமன்றக் குழுவின் பயணத்தினால் எந்தப் பயனும் இல்லை என்பதை கடந்த கால குழுக்களின் பயணம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இதனால் நாளை சிறிலங்கா செல்லும் நாடாளுமன்றக் குழுவின் பயணத்தில் திமுக இடம்பெறாது“ என்று கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120415105996

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைக்க பட்ட செய்திகளை திரும்ப திரும்ப ஏன் இணைக்கிறீர்கள் தமிழரசு இணைப்பதாயின் இணைத்த தலைப்பின் கீழ் இணைக்கலாமே

தவறுதலாக இணைக்கப்பட்டது இந்த திரியை நீக்குமாறு ரிப்போட் செய்து இருந்தேன், அதற்குள் அவசரப்பட்டு ...... எனக்கு எழுதியுள்ளீர்கள்.

தவறுதலாக இணைக்கப்பட்டது இந்த திரியை நீக்குமாறு ரிப்போட் செய்து இருந்தேன், அதற்குள் அவசரப்பட்டு ...... எனக்கு எழுதியுள்ளீர்கள்.

மன்னிக்கணும்...... நானும் ரிப்போர்ட் பண்ணிட்டு தான் உங்களுக்கும் எழுதினான்

  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi150_afp.jpg

இலங்கைக்கு ஆறு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் "ரைம்ஸ் ஒவ் இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வரும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமது கட்சியின் சார்பில் பாராளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் திமுக தலைமை இருப்பதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்தக் குழுவுக்கு பெயர் குறிக்கப்பட்ட அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னாட்டை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கை அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியும் இதே கருத்தையே தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடும் போது வெளிப்படுத்தியுள்ளார். புனர்வாழ்வுக்காக இதுவரை முகாம்களில் காத்திருக்கும் தமிழ்மக்களின் சார்பில் பேசுவதற்கு அனுமதிக்காத இந்தப் பயணத்தினால் என்ன பயன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

போரினால் பாதிக்க பட்ட மக்களின் உண்மை நிலையை ..................?

முப்பது கிலோமீட்டர் துரத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் அறியவில்லை ஆயின். நீங்கள் இனி அதை அறிந்து யாருக்கு என்ன இலாபம்?

போரினால் பாதிக்க பட்ட மக்களின் உண்மை நிலையை ..................?

முப்பது கிலோமீட்டர் துரத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் அறியவில்லை ஆயின். நீங்கள் இனி அதை அறிந்து யாருக்கு என்ன இலாபம்?

வேண்டாம் காழ்ப்புணர்ச்சி . இது போன்ற விசயங்களில் ஈழ தமிழர் என பீற்றி கொள்வோர் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே நல்லது என எனக்கு படுகிறது . ஈழ விடயங்களில் மட்டும் தற்போது ஆளும் கட்சி எதிர் கட்சி வித்தியாசம் பாராமல் ஒரே அடியை இரு கட்சிகளும் எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளன . ஆயிரம் இருந்தாலும் எதுவாக இருந்தாலும் ஒன்று சேராமலேயே இரு கட்சிகளும் ஒரே முடிவை ஈழ விசயத்தில் எடுக்க தொடங்கி இருப்பது ஒரு ஆரோக்கியமான ஆரம்பம் . மீண்டும் வழக்கம் போல வெறுப்பை உமிழ்ந்து எந்த கட்சியையாவது எதிர் முடிவு எடுக்க வைத்து விட வேண்டாம் . எதிர் முடிவு எடுத்தால் தானே சிலருக்கு பொழப்பு / வேலை ஓடும் என்றால் அவரவர் விருப்பம் மற்றும் அது தமிழனின் தலை விதி ஆகட்டும் .

தமிழகத்தின் இரு கட்சிகளும் ஒரே கோட்டில் இருந்ததால் தான் ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது . நீர்த்துபோன தீர்மானம் என ஒப்பாரி வேண்டாம் . இந்த தீர்மானம் தோல்வியில் முடிந்திருந்தால் படுகொலை குற்றச்சாட்டுகள் அனைத்தும் மறைந்து போயிருக்கும். இப்போது அந்த தீர்மானத்தால் திக்கற்று கிடந்த தமிழ் ஈழ சிந்தனைக்கு சிறு வழி கிடைத்து இருக்கிறது . கடுமையான தீர்மானங்கள் ஐநாவில் நிறைவேற்றுவது அத்தனை சுலபமல்ல. உங்களுக்கு உடனே தனி நாடு தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும் என நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை.

இனிமேல் யாருக்கும் எந்த லாபமும் இல்லை என்றால் அப்புறம் எதற்கு தமிழ் ஈழம் பற்றி கதைக்கிறீர்கள் ??? பேசாமல் சிங்களனின் காலில் விழுந்து புத்தம் சரணம் கச்சாமி பாட வேண்டியது தானே . அப்புறம் எதற்கு புலம்பல் அலம்பல். எல்லா பிரச்சினையும் ஒரே நொடியில் முடிந்து விடுமே . தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் முயற்சி மற்றும் முடிவுகள் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு கேவலம் இல்லை .ஈழ சிந்தனைக்கு அரசியல் வடிவம் கொடுத்தவர்கள் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் . அவர்களை விமர்சிக்கும் பொது மிகுந்த கவனம் தேவை .

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்க ஆரம்பித்தது போல அங்கே இங்கே என்று கடைசியாக தமிழ் நாட்டு தலைவர்களையே சில காலங்களாக கடிக்க ஆரம்பித்து இருப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல .

ஒரு முக்கியமான விடயம்

தமிழ் நாடு என வரும்போது எழு கோடி தமிழர்களை பாதிக்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது முப்பத்தி சொச்சம் தமிழ் ஈழ மக்கள் பிரச்சினைகளை முதல் பிரச்சினையாக கருதும் தமிழக அரசியல்வாதிகளை கேலி செய்யாதீர். அவர்களின் ஈழ நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்று பார்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள் . அதுதான் உங்களுக்கு தேவை . மற்ற விஷயங்கள் தேவையற்றது

Edited by tamil paithiyam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.