Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய குழுவுடன் இராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும் மெனிக்பாம் முகாமுக்கு விஜயம்!

Featured Replies

இந்திய நாடாளுமன்றக்குழு இன்று காலை 10 மணிக்கு வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினர். எனினும் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர், அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் சென்றதால் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உலங்குவானூர்தி மூலம் வவுனியாவுக்கு சென்ற அவர்களுடன் மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் வன்னிக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுனந்த பெரேரா உட்பட சிறிலங்கா அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் என பெருந்தொகையானோர் மெனிக்பாம் முகாமுக்கு சென்றனர்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தின் தாமதம் மற்றும் எவ்வாறான சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது போன்றவற்றை இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கு விளக்கினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அங்குள்ள மக்களைவிட மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன், வன்னிக்கட்டளைத்தளபதி சுனந்த பெரேரா ஆகியோரே பதிலளித்திருந்தனர்.

இந்த சந்திப்புக்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் ஒளிப்பதிவு செய்தனர். மீள்குடியேற்றத்தில் உள்ள தாமதத்திற்கு மிதிவெடி அகற்றப்படாமையே காரணம் என வன்னி கட்டளை தளபதி தெரிவித்தார்.

தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்றும் வேறு இடங்களில் தங்களால் மீளக்குடியமர முடியாது என்றும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மீன்பிடி தொழிலை செய்து வந்த தங்களை அத்தொழிலை செய்ய முடியாத இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வன்னி இராணுவ கட்டளைத்தளபதியால் நலன்புரி நிலையத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமும் இடம்பெற்றிருந்தது.

http://thaaitamil.com/?p=16079

இந்த பலனாய்வு /புலனாய்வுகளுக்கு இடையே உண்மைகளை துணிந்து கூறும் எமது மக்கள் :

V01(19).jpg

V04(3).jpg

V06(1).jpg

V08.jpg

ind1(9).jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து வந்த பாராளுமன்றக் குழுவினர், முகாமுக்கு போகும் போது, அங்குள்ள மக்களை சுதந்திரமாக பேசவிடாமல்.....

தாங்களும் ஒரு ஆக்கள் என்று... டக்ளஸும், கருணாவும், புலனாய்வுப் பிரிவும், இராணுவமும் என்ன இழவுக்கு பின்னாலை போறாங்கள்.

ஈணவும் விடாத, நக்கவும் மாட்டாத..... நாதாரிக் கூட்டங்கள்.

ind1(9).jpg

இதோ மனிதர்கள் சிரிக்கிறார்கள் ......................பாருங்கள் ....

யாராவது முகத்தில் உண்மை ஏதாவது தெரிகிறதா .....................இங்கே எனக்கு ஒரு பாடலின் வரியும்,அந்த வரிக்குரியவரும் தான் நினைவுக்கு வருகிறது..........

மனிதனுக்குரிய மதிமுகச்சிரிப்பு தமிழனுக்கென்ற தமிழ்செல்வா.................

செந்தமிழனுக்கென்ற தமிழ்ச்செல்வா.....................................................

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் எல்லோருடனும் சேர்ந்து பார்த்துவிட்டு

எப்படி அறிக்கை விடுகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.