Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

Featured Replies

  • தொடங்கியவர்

சொந்தக் கதையா? <_<

நன்றாகப் போகிறது கவிதை. தொடருங்கள்.

ஈஸ்... இந்தக் கதையினை உன்னிப்பாக கவனித்தால்... சட்டென்று ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அது..... இந்தக் கதையில் வரும் எல்லா ஆக்களுக்கும் பெயர் இருக்கும். ஆனால், கதையின் நாயகனுக்கு பெயர் இருக்காது. "அவன்" அல்லது "இவன்" என்றுதான் எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கும்.

அந்த அவனும் இவனும் ..... என்பது நீங்களோ நானோ அல்லது இதைப்போல சம்பவங்களை அனுபவமாகப் பெற்றவர்களோ இருக்கலாம்.

பெரும்பாலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் எனும் விடயம் ஒருதடவையாவது வந்து போயிருக்கும்.

அந்தக் காதல் படுத்தும் பாடு..... எப்படி "ஒருவனை" மாற்றுகின்றது என்பதைத்தான் உண்மையான சம்பவங்களினூடு இக்கதை சொல்லவருகின்றது.

நன்றி ஈஸ்! :)

தொடர்கின்றேன்....!

  • Replies 73
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Kavithai Anna nalla irukku.......

  • தொடங்கியவர்

கதை நன்றாக போகிறது. படங்களின்தேர்வு அருமை . :lol:

நன்றி நிலாக்கா!

கதையினை வாசிக்கும்போது... கண்முன் வரும் காட்சிகளுக்கு, ஒரு வடிவத்தினைக் கொடுப்பதற்காக படங்களையும் இணைத்துக்கொண்டு வருகின்றேன்.

சில இடங்களில் அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட படங்களையும் இணைக்க முயற்சிக்கின்றேன். :)

உதாரணத்துக்கு... பகுதி 06 இல் இணைக்கப்பட்ட Omega Inn- Spice & Ice - Coffee Shop படத்தில் அந்த ஓரஞ்ச்+கறுப்பு சட்டை அணிந்தவரின் முன்னாலுள்ள மேசையில்தான் அவனுடன் அஞ்சலி,விமல்,றிஷானா அமர்ந்திருந்தனர்.

hotel-omega-inn.jpg

தொடர்கின்றேன்....:)

  • தொடங்கியவர்

இறால் வடையின் படத்தைப் பார்த்தால் வடை வேகவில்லை போல இருக்குது :D ...வயசுப் பொண்ணுங்கள இளந்தாரிப் பெரியங்களுட்ட படிக்க விட்டால் இது தான் நடக்கும் :lol: ...தொடருங்கள் கவிதை :)

தண்ணியடிக்கைக்குள்ள வடை வேகிட்டுது வேகேல்ல எண்டு பார்க்க மாட்டாங்கள் அக்கா இந்த இளந்தாரிப்பெடியள். :D

போதையில கண் மண் தெரியாது எண்டு சொல்லுவாங்களே... அது தண்ணிக்கு மட்டும் இல்ல.... காதல் என்கிறதுக்கும் பொருந்தும். :(

என்ன பண்ணுறது....? ஆம்பிளையாப் பிறந்தா இப்பிடித்தான்..... எல்லாப் பழி பாவத்தையும் தலையில தாங்கணும்! :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியடிக்கைக்குள்ள வடை வேகிட்டுது வேகேல்ல எண்டு பார்க்க மாட்டாங்கள் அக்கா இந்த இளந்தாரிப்பெடியள். :D

போதையில கண் மண் தெரியாது எண்டு சொல்லுவாங்களே... அது தண்ணிக்கு மட்டும் இல்ல.... காதல் என்கிறதுக்கும் பொருந்தும். :(

என்ன பண்ணுறது....? ஆம்பிளையாப் பிறந்தா இப்பிடித்தான்..... எல்லாப் பழி பாவத்தையும் தலையில தாங்கணும்! :lol: :icon_idea:

கிளை அழுதா ஊர் அறியும்...வேர் அழுதா யார் அறிவார்..? எங்க கண்ணீரை யாருமே புரிஞ்சுக்குவதில்லை... :(

கிளை அழுதா ஊர் அறியும்...வேர் அழுதா யார் அறிவார்..? எங்க கண்ணீரை யாருமே புரிஞ்சுக்குவதில்லை... :(

ஓமோம் உண்மை தான் "வேர் அழுதா யார் அறிவார்" என்று புதுப் பதிவு ஒன்றைத் தொடங்குங்கோவன்!

:wub::rolleyes::lol::D

:wub::rolleyes::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் உண்மை தான் "வேர் அழுதா யார் அறிவார்" என்று புதுப் பதிவு ஒன்றைத் தொடங்குங்கோவன்!

:wub::rolleyes::lol::D

:wub::rolleyes::lol::D

ஜ..ஆசை..தோசை... :lol: :lol:

  • தொடங்கியவர்

கதையின் பகுதி[07] உம்..... பகுதி [01] , [02] , [03] , [04] , [05] , [06] உடன் வாசிப்பதற்கு இலகுவாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மூச்சில் வாசித்து முடிச்சிட்டன்.. உங்கள் எழுத்துநடை கலக்கலா இருக்கு..! :) ஆனால் நிறைவேறாத காதல் என்று நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமா இருக்கு.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் புகழ்பெற்ற பல படைப்புக்கள் கூட பலரின் சொந்த வாழ்வின் வலிகளைப் பதிவு செய்தவையாக இருக்கின்றன....எங்களுக்கு இது ஒரு அருமையான கதையாக இருக்கிறது...உங்களுக்கு இது ஒரு வலியாக இருக்கலாம்...எழுதும் விதம் நன்றாக இருக்கிறது கவிதை...பாராட்டுக்கள்..

கவி! கதை மிக அருமை. கவிதையை இவ்வளவு நாளும் ஒரு பொயற் ஆகவே நினத்தேன். இப்ப ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் பார்க்கின்றேன்!!! :) வாழ்த்துக்கள் பல தம்பி கவி!

  • தொடங்கியவர்

வாசிக்க ஆவலாக இருக்கு தொடருங்கள் .

பியர் ,போன் ,இப்படி காதல் எல்லாம் எங்கட நாட்டில இருந்ததா?

வயசுப் பொண்ணுங்கள இளந்தாரிப் பெரியங்களுட்ட படிக்க விட்டால் இது தான் நடக்கும் :lol: .-ரதி

வெலிங்டன் தியேட்டர் மனேஜர் தனது மகளுக்கு டியூசன் கொடுக்க ஒரு ஆளை ஒழுங்கு செய்யும்படி செக்கியுரிட்டியிடம் சொல்ல ,அவர் எனது நண்பனை ஒழுங்கு பண்ணினார் .முதல் நாள் டியூசன் கிளாசுக்கு நண்பன் போக மனேஜர் "தம்பி நாளைக்கு வரவேண்டாம் " என்று ஒரு நாளுடன் அனுப்பிவிட்டார் .

செக்கியுரிட்டியிடம் போய் என்ன விடயம் என்று கேட்க ,மனேஜர் சொன்னாராம் "தன்ரை மகளும் கொஞ்சம் குழப்படி பெடியனும் வடிவாக இருக்கின்றான் வில்லங்கம் வேண்டாம் என்று " ..

என்ன அர்ஜுன் அண்ணை... இப்பிடிக் கேட்டுப்புட்டியள்...? :rolleyes:

இப்ப இன்னும் டெவலெப்பாகி பேஸ்புக்,ஸ்கைப் என்றெல்லாம் போய்க்கொண்டிருக்கு... :wub: :lol:

தியேட்டர் மனேஜர் கொஞ்சம் அலேர்ட்டான ஆள் போல... பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில வச்சால்... அது பத்திப்போடும் என்பது தெரிந்து..... :o ஆரம்பத்திலேயே சுதாரித்துவிட்டார். :rolleyes:

தொடர்ந்து எழுதுகின்றேன்...

தங்களுது கருத்துக்கு மிக்க நன்றி :)

அது.............................................

அது அப்பிடித்தான்.... :rolleyes: ஆனால், இது இப்பிடித்தான். :lol:

  • தொடங்கியவர்

இங்கு தலைப்பே கொஞ்சம் குளப்புகிறது..காதலை எப்படி விற்பது..??

விற்றுத் தீர்ந்த காதல் - கதை

இந்த தலைப்புக்கு இரண்டு அர்த்தம் இருக்கு...

1.விற்றுத் தீர்ந்த காதல் : அதாவது காதலும் பணமும் சம்மந்தப்படுவது

2.விற்றுத் தீர்ந்த காதற்கதை : எல்லோருடைய வாழ்க்கையிலும்.... ஏற்கனவே அனுபவித்ததோ அல்லது கண்டதோ,கேள்விப்பட்டதாகவோ இருக்கக் கூடிய உண்மையான சம்பவங்களை உள்ளடக்கியது...

நன்றி யாயினி அக்கா...

தொடர்ந்து வாசியுங்கள்.... புரிந்து கொள்வீர்கள். :)

  • தொடங்கியவர்

அந்த மாதிரி எழுதி இருக்கிறியள் கவிதை பச்சை முடிஞ்சு போச்சு, பிறகு குத்தி விடுறன். கெதியில பத்து வருசக் கதையையும் எழுதி முடியுங்கோ. இதை தான் வடலி வளர்த்து கள்ளுக் குடிக்கிறது எண்டு சொல்லுறது :wub: . அது சரி O/L கணிதமே படிப்பிச்சனியல்? :lol:

நன்றி தும்ஸ்................! :)

வடலி வளர்க்கிறதோ........... :o :( :o வடலியும் வேணாம்! கள்ளும் வேணாம்!! :o:lol:

அவன் என்ன படிப்பிச்சவன் என்று கதையின் பகுதி 06 இல் ஒரு இடத்தில் சற்று மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கு. :rolleyes:

தொடர்ந்து வாசியுங்கள் தும்ஸ்... நன்றிகள் பல தங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துக்களுக்கு :)

நல்ல கதை, நடை. சினிமாத் தனமான நடையை கொஞ்ச்சம் களைந்து யதார்த்தமாக ,உண்மையாக எழுதினால் மேலும் மெருகுறும்.

தொடர்ந்து எழுதவும். ரசித்து வாசித்தேன் , சில இடங்கள் மனிதர்கள் வந்து போனார்கள்.

  • தொடங்கியவர்

அது என்னெண்டு சொன்னால், முதல் ஒருத்தியை காதலிக்கிறது, பிறகு அதைவிட வசதியான அழகான இன்னொருத்தி அம்பிட்டால் முதலாவதை கழட்டிப் போட்டு இரண்டாவதுக்கு ரூட் போடுவது. இது தான் காதலை விக்கிறது எண்டுறது :icon_idea: .

அது தான் அஞ்சலி மீதான காதலை விற்றதன் விளைவு அமுதினி. கவிதை வந்து தான் நான் நினைச்சது சரியோ எண்டு சொல்லோனும் :rolleyes: .

தும்ஸ்.... இந்தக் கதையில காதல் எப்படி விலைபோகின்றது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

பாப்பம் எப்பிடிப் போகுது என்று.... ஏனென்றால், இது நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்படும்... கதை. :unsure:

ஒரு காதலின் சந்தோசங்களையும் வலிகளையும் சுமந்து வரும் கதை. :(:)

கதையின் தலைப்பு சொல்ல வரும் விடயங்களை கதை இன்னும் நெருங்கவில்லை.

தொடர்ந்து வரும்....!

நன்றி தும்ஸ். :)

  • கருத்துக்கள உறவுகள்

கவி! கதை மிக அருமை. கவிதையை இவ்வளவு நாளும் ஒரு பொயற் ஆகவே நினத்தேன். இப்ப ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் பார்க்கின்றேன்!!! :) வாழ்த்துக்கள் பல தம்பி கவி!

யாழ்கள பொயற் ஜெயபலன் வந்து குளம்பப் போறார். :lol: :lol:

  • தொடங்கியவர்

கதையில் சினிமா நெடியும் தென்னிந்திய வாரப் பத்திரிகைகளின் தாக்கமும் தெரிகின்றன. இரண்டையும் விட்டு விட்டு எழுதினால் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர்.

மிக்க நன்றி... கறுவல், தங்களது ஆரோக்கியமான கருத்துக்களுக்கு. :)

"Visual"அதாவது..... கதை சொல்லும்போது அந்த காட்சி கண்முன்னே வரவேண்டும் என்ற நோக்குடன் எழுதும்போது சினிமா மாதிரி தெரியலாம். ஆனால் தென்னிந்திய வாரப்பத்திரிகைகளின் சாயல் வருகின்றது என்றீர்கள். முடிந்தவரை அதை முற்றாக தவிர்க்க முயற்சிக்கின்றேன்.

இக்கதையில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானது என்றவகையில்... அதை எழுதிக்கொண்டு வருகின்றேன். தொடர்ந்தும் உங்கள் கருத்தினை முன்வையுங்கள்!

நன்றிகள் பல! :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடை வாசிக்க நல்லா இருக்கு கவிதை.. :rolleyes: கறுவலுக்கு எண்டு தனியா ஒரு திரியில் எழுதலாம்.. :lol:

  • தொடங்கியவர்

உங்கள் எழுத்து நடை வாசிக்க நல்லா இருக்கு கவிதை.. :rolleyes: கறுவலுக்கு எண்டு தனியா ஒரு திரியில் எழுதலாம்.. :lol:

புரிகின்றது இசை!

எல்லாருக்கும் எல்லாமே பிடிக்காது. எல்லோருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கின்றேன். நான் தென்னிந்திய நாவல்களை வாசிப்பவன் இல்லை. என் மனதில் தோன்றுவதை... முடிந்தவரை... யதார்த்தமான பேச்சுநடை வரக்கூடிய வகையில்... உண்மையில் நடந்த பல உரையாடல்களை மனதில் நிறுத்தியே எழுதி வருகின்றேன்.

அவனுடைய வாழ்க்கை... சினிமா என்பதனையும் தாண்டியதாய் இருந்தது.

அவனது காதல்... உண்மையானது. இப்போதைக்கு அதனை மட்டுந்தான் சொல்ல முடியும்..... :( தொடர்கின்றேன். முடிந்தவரை நல்லபடி எழுதுகின்றேன்! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

நன்றாக இருக்கிறது, தொடருங்கள்,

"..! நான் உங்களுக்கு படிப்பிக்கிற ரீச்சர். எப்பிடி.......??? இது எல்லாத்தையும் மறந்திட்டு... படிப்பில கவனம் செலுத்துங்கோ. எக்ஸாம் வேற வருது....!" என்று தொடர்ந்தவன்...... என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தான்....."

வீட்டுக்கு வீடு வாசல் படி, அது ஒரு கனக்காலம்..ம்...ம்...ம்...

மிகவும் நன்றி உடையார் உங்கள் கருத்துக்களுக்கு! :)

உண்மையில் காதல் என்பது கனாக்காலங்களைத்தான் பெரும்பாலும் ஞாபகப்படுத்துகின்றன. :(

ம்ம்ம்ம்ம்.... அப்ப, உங்களுக்குள்ளும் ஒரு கதை இருக்கு! :rolleyes:

  • தொடங்கியவர்

கதை நன்றாகப் போகிறது. பருவ வயதில் ஏற்படும் நேசத்தை மிக அழகாக சொல்லியிருப்பது நன்று. வாசிக்க ஆர்வமாக இருக்கிறோம் . தொடருங்கள்...

ஒருவனின் உண்மையான காதலும் அதற்கு உரியவளும் அவனும் அவனைச்சுற்றி நடக்கும் சம்பவங்களும் அவனது வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்க எத்தனிக்கிறது என்பதைத்தான் இந்தக் கதை சொல்ல வருகின்றது. அதில் அவன் அவள் மேல் வைத்த அளவிட முடியாத ஆத்மார்த்தமான காதலும் புரியும். தொடர்ந்து வாசியுங்கள்.

மிக்க நன்றி கல்கி! :)

  • தொடங்கியவர்

கவிதை.. இன்றைக்குத்தான் கதையை வாசிக்க ஆரம்பிக்கிறேன்.. :unsure: ஒரு பாகம்தான் படிச்சிருக்கிறன்.. :( ஆளைக் கெடுத்திடும் போலை இருக்கு.. :lol: சில தியான வேலைகளை மேற்கொண்டு மனதைக் கட்டுப்படுத்திவிட்டு மீண்டும் வந்து படிக்கிறேன்..! :lol:

இசை..! தங்களது ஆர்வத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். :)

அதுசரி... இதுக்கெல்லாம் தியானத்துக்கு போகக் கூடாது, முள்ளை முள்ளாலதான் எடுக்க வேணும்!! அதைப்போல இதையும்.... ஒருக்கா Try பண்ணிப் பாருங்களேன். :wub:

அதுக்குப்பிறகு... சிலமணி நேரங்களுக்கு நீங்களும் சாமியார் ஆகிவிடுவியள். :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

சுடச் சுட வாசித்துவிட்டேன் கவிதை. காத்திருக்கும் போது வரும் தவிப்பு - அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாது. :lol:

அப்பொழுது காத்திருந்ததில் ஒரு அர்த்தம் இருந்தது...! ஒரு ...."கிக்" என்று கூட சொல்லலாம் அதை. :wub:

ஆனால் இப்ப... காத்திருத்தல் வெறுக்கின்றது. :(

என்ன காரணத்தை சொல்வதென்று யாருக்கும் புரியவில்லையே! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.