Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடல் பரப்பிற்குள் தேவானந்தா பிரவேசித்தால் கைது செய்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Duglas.3_CI.jpg

இந்திய கடல் பரப்பிற்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரவேசித்தால் கைது செய்வோம் என தமிழகத்தின் பிரபல சட்டத்தரணியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடுவதனை எதிர்த்து டக்ளஸ் தேவானந்தா பாரியளவில் படகுப் போராட்டம் ஒன்றை நடாத்த உத்தேசித்துள்ளார்.

தமிழக கடற்பரப்பிற்குள் டக்ளஸ் தேவானந்தா அத்து மீறி பிரவேசித்தால், தமிழகத்தின் எந்தவொரு பிரஜையும் அவரை கைது செய்ய முடியும் என சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அத்து மீறி பிரவேசித்தால் அமைச்சர் டக்ளஸை கைது செய்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரிடம் ஒப்படைக்கும் அதிகாரம் தமிழக மாநிலத்தின் சகல பிரஜைகளுக்கும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1986ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து தமிழகத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltam...IN/article.aspx

மக்கள் திலகம் எம்ஜிஆரை ,மகிந்தனின் வடபகுதி குறுநில மன்னன் டக்ளசோடு ஒப்பிடும் அளவிற்கு நாச்சியப்பனின் அறிவு கீழிறங்கிப் போயுள்ளது. இது ஜெயலலிதா அம்மையார் இந்திய நாடாளுமன்ற குழுவிற்குள் வரவில்லை என்ற கோபத்தால் வந்த பிதற்றல். நல்லவேளை, பிள்ளையானைப் பார்த்து 'ஈழத்து' அண்ணா என்று சொல்லாமல் விட்டுவிட்டார். கருணாநிதி தமது 'பங்காளி' என்பதால் தவிர்த்துக் கொண்டாரோ !. யாமறியோம் !

போகிற போக்கில் இந்த 'இந்தியக் கருணா', கோடம்பாக்கம் சூளைமேட்டில் 'ஈழத்து எம்ஜிஆர் '[?]டக்ளசிற்கு சிலை திறந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. 'ஈழத்துக் காந்தி' தந்தை செல்வாவின் சிலை திருமலையில் நொறுக்கப்பட்ட போதும், மட்டக்களப்பில் 'காந்தி' சிலை உடைக்கப்பட்ட போதும் இந்த இந்தியக் கருணாக்கள் வாய் திறக்கவில்லை. அப்படித் திறந்தால் மகிந்தருக்கு கோபம் வந்துவிடும் என்ற பயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணும் போடணும் அல்லது இந்தாளுக்கு அரசியலில் ரிவிட்டு வைக்கணும்.. சுக்கிரதிசையில் பிறந்துட்டார் போல கிடக்கு ..! ஆயுசு கெட்டி ..! குல்மா வேலைகளிலும் இவர் சுட்டி..!சாக்கடையில் கல்லெடுத்து போட்டால் முகத்தில் அமிர்தம் தெளிக்காது சாக்கடைதான் தெறிக்கும்..

டிஸ்கி:

1947 ஆம் ஆண்டு யாழ்களம் ஆரம்பித்ததில் இருந்து இவர் வளர்ந்து கொண்டு தான் போகிறார். நல்லதோ கெட்டதோ ஆனால் தன்னை பற்றி பரபரப்புக்கு தினமும் குறைவில்லாமல் பார்த்து கொள்ளுகிறார்.

"ஒருவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் நாம் அளிக்கிறோமோ அந்த அளவுக்கு நம்மை அறியாமல் அவர் முக்கியத்துவம் பெறுகிறார்"

மலையை பார்த்து நாய் குரைத்தால் மலைகுத்தான் பெருமை . இந்த மாறி கேசுகளுக்கு முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து குரைக்க விட வேணும்..பதிலுக்கு நாம குரைத்தால் நம்ம ஸ்டேடஸ் இறங்கி போகும்..!

எவ்வளவு பேருக்கு தண்ணி காட்டிய டக்கிலசுக்கு உது சிம்பிள் .

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பேருக்கும் தண்ணி காட்டலாம்.

ஆனால் உலகிலே சிறந்த காவல்துறை எனக் கூறிக்கொள்ளும்

தமிழ் நாட்டுக் காவல்த்துறைக்கே தண்ணி காட்டுவது தான்

யோசிக்க வேண்டிய விடயம்

எவ்வளவு பேருக்கும் தண்ணி காட்டலாம்.

ஆனால் உலகிலே சிறந்த காவல்துறை எனக் கூறிக்கொள்ளும்

தமிழ் நாட்டுக் காவல்த்துறைக்கே தண்ணி காட்டுவது தான்

யோசிக்க வேண்டிய விடயம்

Oh.. Please :D :D :lol: :lol: :D

டக்கீஸ் வாயில் வந்ததைச் சொல்லிவிட்டார். அதையும் விடமாடேன் என்கிறீர்களே. சொன்னாப் போல அவர் வரவா போகிறார். எவனாவது பிடித்து கடலில் தள்ளிவிடப் போகிறான். :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.