Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது!

Featured Replies

புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது!

[சனிக்கிழமை, 25 மார்ச் 2006, 17:19 ஈழம்] [கொழும்பு நிருபர்]

புத்தளம் கற்பிட்டி கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகொன்று இன்று சனிக்கிழமை வெடித்துச் சிதறி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் 8 கடற்படையினரைக் காணவில்லை என்றும் 10 கடற்படையினர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

http://www.eelampage.com/?cn=25049

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபாஷ்!! நல்ல செய்தி!!! தொடர வேண்டும்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

உடனே புலிகளில் பழி போட்டு விடுவினமே? :roll: :roll:

Tamil rebels 'blow themselves up'

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4845004.stm

Eight Sri Lankan sailors presumed dead in Tamil Tiger Suicide blast

http://www.turkishpress.com/news.asp?id=114979

Sri Lanka sailors feared dead in rebel sea blast - Navy

http://in.today.reuters.com/news/newsArtic...&archived=False

Tamil rebels blow up boat to avoid capture

http://www.iol.co.za/index.php?set_id=1&cl...43288901195B264

Six suspected Tamil Tigers killed in boat blast off western Sri Lanka, military says

http://english.ohmynews.com/ArticleView/ar...281630&rel_no=1

புலிகள் தாக்குவில்லை. ஆனால் தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே தமது படகை வெடிக்க வைத்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிபிசி தமிழ் ஓசையிட்டம் தெரிவித்து உள்ளாரே

மீன்பிடி படகு வெடித்ததில் சோதனையிட முயன்ற கடற்படையினர் 8 பேரைக் காணவில்லை

20060211165536lankanavyboat203.jpg

இலங்கையின் வடக்கே மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் குதிரமலை என்னுமிடத்தில் மீன்பிடி இழுவைப் படகொன்றைக் கண்ட அதிவேக டோரா படகில் சென்ற கடற்படையினர் அதனைச் சோதனையிட முயன்றபோது அந்தப் படகு வெடித்துச் சிதறியதில் கடற்படையினர் 8 பேர் காணாமல் போயிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளனர்.

கடற்படையின் படகிலிருந்த எஞ்சிய 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி இழுவைப்படகும். கடற்படையின் டோரா படகும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெடித்துச் சிதறிய மீன்பிடி படகில் 6 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

- பீபீசி தமிழ்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

கல்பிட்டி கடலில் 8 கடற்படையினரை காணவில்லை; 11 பேர் காயங்களுடன் மீட்பு 6 புலிகள் உயிரிழந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு

doora.jpg

கற்பிட்டி குதிரைமலை கடற்பரப்பில் நேற்று மாலை றோலர் மீன்பிடிப்படகு ஒன்றை கடற்படையின் டோறா பீரங்கிப்படகு அண்மித்ததையடுத்து அந்த மீன்பிடிப்படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறாப் படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

கடற்பிட்டி கடலில் டோறா வெடித்துச் சிதறியது - எட்டு கடற்படையினரைக் காணவில்லை

புத்தளம் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற் படைக்குச் சொந்தமான டோறா பீரங்கிப் படகு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தப் படகில் பயணித்த எட்டுக் கடற் படையினர் காணாமல் போயு ள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குதிரைமலைக் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கடல் ரோந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா கடற்படையினரின் படகொன்று வெடித்துச் சேதமடைந்ததுடன் இதில் 19 கடற்படையினர் படகில் இருந்ததாகவும் 11 கடற்படையினர் உயிருடன் மீட்க்கப்பட்டதாகவும் ஏனைய 8 கடற்படையினரது நிலை இதுவரை தெரியவில்லை.

கரையில் இருந்து பல கடல்மைல் து}ரத்திற்கு அப்பால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் மன்னாரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சிறீலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிடுகையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படைப் படகு நெருங்கிச் சென்றபோது, ஆறுபேரைக் கொண்ட அந்தப் படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறா படகு பாரிய சேதமடைந்துள்ளது. இதில் பயணித்த 11 கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வழமை போன்று விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடற்படையின் இந்த குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

செய்தி: சங்கதி

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.