Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி.....

Featured Replies

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் சூழலே" - அதுவல்லால் வேறல்ல என தனது கருத்துக்களை தனதணிக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் முன்வைத்துச் சென்றார் அருவி அவர்கள்.

"குற்றம் செய்பவரை விட, அவரைக் குற்றம் செய்யத் தூண்டியவரே அதிக தண்டனைக்குரியவர்" என்பதற்கிணங்க - பெற்றோர் பிள்ளைகளிடை இடைவெளியை தூண்டிவிடக் காரணமாக அமைவது சூழலே என்று அருமையான கருத்தை முன்வைத்தார். சூழல் என்பது மரஞ் செடி கொடியல்ல - எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், வாழும் மனிதர்கள் என அது விரிந்து பரந்தது என்கிறார்.

மற்ற அணியினால் வைக்கப்பட்ட வாதமான "பதின்ம வயதில் தான் இடைவெளி அதிகம் காணப்படுகிறது" என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான காரணம் சுரழலில்தான் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தினார். பதின்ம வயதுப் பிள்ளைகளை சமூகம் சந்தேகக் கண்ணோடே அதிகம் பார்க்கிறது என்று குறிப்பிட்டார். அதற்கோர் உதாரணத்தையும் முன்வைத்தார்.

அடக்குமுறையும், வெருட்டலும், பயப்படலும், திணித்தலும் நிறைந்து உள்ள இந்தச் சூழலில் அன்பும் அரவணைப்பும் இல்லாதபோது இடைவெளி மேலும் மேலும் அதிகரித்துச்செல்கிறது என்பதை விளக்கிச் சென்றார்.

அகதிவாழ்வு, ஆடம்பரவாழ்வு என்பன எல்லாம் சூழலால் உருவாக்கிவிடப்பட்டனவே. எனவே இவற்றால் தூண்டப்பட்டே இடைவெளி உருவாகின்றன என்பதையும் எதிரணியினரின் வாதங்களை தமக்கு சாதகமாக்கி விளக்கினார்.

மொத்தத்தில் பெற்றோர் பிள்ளைகளிடையே இடைவெளித் தோற்றத்தை தூண்டுவது சூழலே எனத் தனது அணிக்கு பலம் சேர்த்துச் சென்றார்.

இதுவரை மூன்று அணியனரும் தமது அணி சார்பான கருத்துக்களை முன்வைத்தார்கள். இனி அணித்தலைவர்கள் தமது அணியினரின் கருத்துக்களைத் தொகுத்து தொகுப்புரை ஒன்றினை முன்வைக்க வருமாறு அழைக்கப்படுகிறார்கள். அந்தவகையில், பெற்றோர் பிள்ளைகளிடையேயான இடைவெளிக்குக் காரணம் சூழலே என அதன் அணித்தலைவர் நிதர்சன் அவர்கள் முதலாவதாகவும், பெற்றோரே என அதன் அணித்தலைவர் தல அவர்கள் இரண்டாவதாகவும், பிள்ளைகளே என அதன் அணித்தலைவர் சாத்திரி அவர்கள் மூன்றாவதாகவும் தமது தொகுப்புரையினை வரிசையாக முன்வைக்க களமேடைக்கு அழைக்கிறோம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் இந்த சமூதாயத்தின் மீதுள்ள பொறுப்பின் காரணமாகவும், பெற்றோர் பிள்ளைக்களுக்கிடையேயான இடைவெளியை சிறதாவது குறைக்கலாம்எ ன்ற எண்ணப்பாடுடன் இறுதிக்கருத்தை வைக்க வந்துள்ளேன்!

அனைவருக்கும் மீண்டும் எனது வணக்கங்கள்!

சாத்திரி எழுதியது:

அடுத்தது பிள்ளை கணணியில் ஏதொ பாடம் சம்பந்தமா தான் பாவம் கணணியை போட்டு உருட்டிகொண்டிருக்கு அதற்கு எந்த தொந்தரவும் குடுக்க கூடாது என்று பெற்றோர் அவருக்கு தனியறை குடுத்து விடிய விடிய எரியிற மின்விளக்கு கணணிக்கு எண்டு கரண் பில்லும் கட்டி கொண்டிருக்க அந்த பிள்ளை பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார் தலைமை தாங்கும் இளைஞனைதான் சொல்லுறன்.

சேற்றிலிருந்து கொண்டு சேறு படாமல் இருக்க முடியுமா? என்று எங்கள் கடமைகளை நாம் சரிவரச் செய்ய இந்தச் சூழல் விடவில்லை என்று தானே ஐயா நாம் வாதடிக் கொண்டிருக்கின்றோம், ஒவ்வொரு பிரச்சினைக்குள்ளும் சூழல் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழல் மாறட்டும், இந்த சமூக கட்டமைப்பு மாறட்டும் என்று முன்னரே நான் தெரிவித்திருக்கின்றேன். அதையே மீண்டும் அடித்து கூறவும் விரும்கின்றேன். நீங்கள் மட்டும் பெற்றவர் என்ற பொறுப்பின்றி, பிள்ளைகள் என்ற பொறுப்பின்றி ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவதில் என்ன பயன்? இந்த இருவருக்கும் இடையே இடைவெளி வர இந்த சூழல் போதாதா? பட்டிமன்றம் வைத்தது ஒரு சூழல், அதை ஒழுங்கு செய்தது ஒரு சூழல், ஆனால் சண்டை பிடிப்பது இன்னோரு சூழல். அந்த சூழல் தான் இதன் நேரடி விளைவுகளை அனுபவிக்க போகின்றது. ஒரு பிள்ளை என்றால் அது பிள்ளை, ஒரு பெற்றோர் என்றால் அது பெற்றோர், ஆனால் அதே நாலு பிள்ளைகள் சேர்ந்தாலே அல்லது நாலு பெற்றோர் சேர்ந்தாலோ அது சூழல் வெறுமனே நீங்கள் பிள்ளை என்றோ, பெற்றோர் என்றோ சொல்ல முடியாது. அதை அறிய அறிவிலிகளாக இருப்பீர்கள் என்று நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கேட்டால் ஏதேதோ புரியாதவற்றை தெழில் நுட்ப யுகம் நவ நாகரீகம் இயந்திர வாழ்க்கை தன்னிறைவு சொந்த காலில் நிக்கிறோம் என்று கதை விடுகிறனர்.இவையெல்லாத்தையும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றோர்கள் பிள்ளைகள் மீதும், பிள்ளைகள் பெற்றோர்கள் மீதும் சுமத்தும் இந்த குற்றச்சாட்டு பாரிய இடைவெளியை ஏற்படுத்துமேயன்றி. ஒற்றுமைக்கு வழிசமைக்காது. இவர்களின் பிரச்சினைக்கு அடிப்படைக்காரணம், இந்த இடைவெளியின் மூல காரலணம் சூழல் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாப்பிரச்சினைகளுக்கும் மூல காரணம் சூழல் என்றா, அந்த பிரச்சினைகளால் வரும் இடைவெளிக்கும் காரணம் சூழலாகத்தான் இருக்க முடியுமேன்றி வேறென்ன?

எனவே இறுதியாய் உறுதியாய் சூழலே பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையேயான இடைவெளிக்கு கூல காரணம் என்று கூறி விடை பெறுகின்றேன்.

நன்றி

வணக்கம்

நடுவருக்கு வணக்கங்கள்..!

யாழ்களம் எட்டு வயதை நிறைவு செய்த போது ஆரம்பிக்க பட்ட பட்டிமற்றன் 9ம் ஆண்டை நிறைவு செய்யும் தறுவாயில் பட்டிமண்றத்தை நிறைவு செய்கிண்றது இந்த வரலாறு காணாத பட்டிமண்றத்தில் ஒரு அணியின் தலைவராக பங்கு பற்றுவதில் மிகவும் மனமகிழ்கிறேன்... அதேபோல எமது அணியின் கருத்துக்களை ஆணித்தரமாக வைத்துவிட்டு வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கும்... சுயித்தன், புயல், எல்லாளன் எல்லோருக்கும் கூட்டு நண்றிகளுடன்... எதிரணியினருக்கு வணக்கங்களையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்...

இங்கு பட்டிமண்றன் விரைவினில் முடியவேண்டும் எண்று சில பெரியவர்கள் பட்டிமண்றத்துக்கு வெளியில் உள்ள தலைப்புக்களில் முண்டியடித்ததை பார்த்தோம்.... இளையவர்கள் யாரும் அவசரப்படவில்லை பொறுமையாகவும் மெதுவாகவும் வாந்தங்களை வைத்ததையும் நிதானமாக இருந்ததையிட்டு விசனப்பட்டார்கள் அந்த பெரியவர்கள்... இதில் நடுவர் அவர்களையும் அவர்கள் விடவில்லை என்பது கொசுறுத்தகவல்.... நடுவர் அவர்களே... இளையோர் மற்றவரின் கடின உளைப்பை நன்கு புரிந்து கொண்டு அவர்களின் கல்விக்காய், வேலைக்காய் மற்றவரின் கஸ்ரங்களுக்கு புரிந்துணர்வோடு மௌனமாய் இருந்ததையும்... பெரியவர்கள் கட்டளையிடும் பாணியில் அடிச்சாட்டூளியமாக நடந்து கொண்டதையும் பார்த்தே புரிந்திருக்கும் விட்டுக்கொடுப்போடு இளையவர்கள் இருந்தாலும் பெரியவர்கள்தான் அவர்களை உசுப்பேற்றி விடுகிறார்கள் எண்று....!

நடுவர் பட்டி மண்றத்தில் எம்மவர்கள் சொல்லி சென்ற விடயங்களில், குறிப்பான சிலவிடயங்களை நீங்கள் கவனிக்காமல் விட்டவைகளை இங்கு குறிப்பிட விரும்புகிண்றேன்.... அதாவது சூழல் என்பது பலபெற்றோர்கள், பிள்ளைகள், சில தனிநபர்களால் ஆனதுதான்....! இதில் வீடுவிடாக பிரித்து பார்த்தால் அங்கு இருக்கும் பெறோரே இந்த சூழலை இயக்குபவர்களாக இருப்பதால், பெற்றோரைத்தாண்டி ஒரு சூழலை உருவாக்க முடியவில்லை....! பெற்றோர்களே சூழலின் மூல காரணியாகவும் அதை இயக்குபவர்களாயும் இருக்கிறார்கள்.... அதனால் நாங்கள் பொதுவான பெற்றோரை பற்றிய விடயங்களையே இங்கு எதிராக பேச விளைகிண்றோம்..

இயற்கையால் வரும் துன்பங்களில் இருந்து காக்க வீடுகட்டி உடை கொடுத்து காக்கும் பெற்றோர் இங்கு தனிநபர்கள் எனும் வெளிச்சூழல் என்பவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் பிள்ளைகளை அண்டவிடாது காப்பதில்லை என்பதையும் அவர்களால் பிள்ளைகளை தீமைகள் அண்ட விடாது தடுக்க முடியாது என்பதை ஏற்க முடியாது.. அது முக்கியமான பெற்றோர் ஆற்றாத கண்டுகொள்ளாத பொறுப்பு என்பதையும். சொல்லிக்கொள்ளவேண்டும்...!

இப்படி எல்லாம் பிள்ளைகளை காக்கவேண்டிய பெற்றோர்... பிள்ளைகளுக்கு வேண்டியதும் அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரம் என்பதுதான் பெற்றோரால் கொடுக்க முடியவில்லை...! அதனாலேயே பிள்ளைகளை பெற்றோரை வெறுக்கும் நிலைக்கு உள்ளாகின்றான்... எதிலும் பிள்ளை தன் சொல்லை கேட்க்க வேணும் என நினைக்கும் பெற்றோர் பிள்ளைகள் படும் பல அவமானத்துக்கு காரணமாகின்றனர்... உதாரணமாக புலம்பெயர் நாட்டில் ஒரு பிள்ளை தன் சில நண்பர்களைப்போல தமிழ் படிக்க விரும்புகின்றான்... பெற்றோர் தங்களின் விருப்பாய் ஆங்கிலம் மட்டும்படிக்க வைக்க விரும்புகிண்றனர்... அது அவர்களுக்கு பெருமையாக கூட இருக்கலாம்... ஆனால் அந்த பிள்ளை தமிழ் படித்து அறிந்த நண்பர்கள் இடத்தில் ஆங்கிலத்தில்தான் தன் உணர்வுகளை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்க நண்பர்கள் எல்லாம் ஆங்கிலம் தமிழ் எண்று இரு மொழிகளில் பேசி விளாசி எறிய... தங்களுக்கு இரண்டு மொழிகள் தெரியும் எண்று அவனது நண்பர்கள் பெருமைப்பட, என்னால் தமிழ்படிக்காத இளையவன் தவிர்த்த மற்றய நண்பர்களுக்கு தமிழ் கற்பித்த பெற்றோர் ஆகீப்போன சூழலை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை.... தமிழ் தெரியாத அந்த இளையவனை அவமானப்படுத்தியது நண்பர்கள் எல்லாம் ஒரு "சூழல்" போண்ற ஒரு தோற்றத்தை கொடுத்தாலும் அடிப்படையில் அந்த இளையவன் ஒருவனின் பெறோர் செய்த தவறே அவனை கேவலப்படுத்தியது.... இப்படி இருக்க அந்த இளையவன் பெறோரை மதிக்க வேண்டும் எண்று எண்ணுவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.....

இங்கு சிறுவயதில் கேள்விப்பட்ட ஒரு கதையை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும்...! எங்களின் அணியினர் சொல்ல கருத்துக்களின் தொகுப்பாய் அந்த கதை இருப்பதும் இணைப்பதுக்கு ஒரு காரணம்...! சின்ன கதைதான் பயப்படவேண்டாம் சுருக்கமாகவே தருகிண்றேன்...!

ஒரு சிறுவனின் தகப்பனார் ஆன ஒருவர் தன் தந்தைக்கு சாப்பாடு கொடுக்கும் சட்டியை தேடிக்கொண்டு இருந்தார். அவரால் கண்டு பிடிக்கவே முடியாமல் அவர் கடசியில் சிறுவனான தன் மகனை அளைத்து கேட்டார் ஏண்டா நீ அந்த சட்டியை கண்டாயே உன் தாத்தாவுக்கு சாப்பாடு குடுக்க வேணும் எண்டார்....! அதுக்கு சிறுவன் சொன்னால் ஓம் அப்பா நாந்தான் அதை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன் எண்று.... ஏன் அப்படிச் செய்தாய் எண்று தகப்பனார் காரணம் கேட்க்க சிறுவன் சொன்னான்... அப்பா நீங்களும் வயதாகி தாத்தா மாதிரி வரும்போது உங்களுக்கு சாப்பாடுதர எண்டு எடுத்து ஒளித்து வைத்தனால் எண்றான் பாசமாக.....!

இப்படித்தான் சிறுவர்கள் (பிள்ளைகள்) எல்லாருமே தங்களின் பெற்றோர்களிடம் இருந்துதான் எதையும் கற்றுக்கொள்கிறார்கள்...! ஆனாலும் சினிமா நாடகத்தில் இருந்து எண்று எல்லாம் கற்றுக்கொள்கிறார்கள் எண்று சிலர் சொல்வதுண்டு.... ஆனால் அதை எல்லாம் தங்களின் மனக்கட்டுப்பாடு அற்று தாங்கள் பார்ப்பதற்காய் வயது வேறுபாடு அற்று பிள்ளைகளுக்கும் காட்டி கற்பிப்பது பெற்றோறே...! எண்று கூறிக்கொள்ள விரும்புகிண்றேன்....!

நடுவர் பெரியவர்களின் தூண்டுதலால், அறிவுறுத்தலால் மரியாதை கொடுப்பதாக எண்ணி எல்லாம் குழப்பம் அடையாது முடிவை வளங்க வேண்டும் எண்று வேண்டி வணங்கி சுருக்கமான முடிவுரையோடு விடை பெறுகிண்றேன்... வணக்கம்...! நண்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அனைவரிற்கும் வணக்கங்கள் உலகில் இதுவரை நடந்த பட்டி மன்றங்களிலேயெ இதனை மிக நீண்டகாலம் நடந்த பட்டிமன்றமாக அறிவித்து சிறப்பிக்கலாம்.காரணம் பட்டிமன்றம் முடிகின்றது எனவே உங்கள் இறுதி உரையை தொகுத்து வழங்குங்கள் என்று இந்த பட்டி மன்றத்தை ஒழுங்செய்த ரசிகை என்னிடம்ட வேண்கோள் விடுத்த போது பட்டிமன்றமா?? எந்த பட்டி மன்றம் என்று கேட்டேன் அந்தளவிற்க்கு நாட்கள் இழுபட்டு விட்டது . சரி விடயத்திற்கு வருவோம் யோசித்து பார்த்ததில் பட்டி மன்றத்தின் தலைப்பு இன்றை இளம் சந்ததியினரிற்கும் பெற்றோரிற்கும் இடையே உருவாகும் இடைவெளிக்கு காரணம் பெற்றொரா? பிள்ளைகளா? சூழலா என்பதே. எனதணியில் சோழியன் ரமா நாரதர் ஆகியோர் மிக சிறப்பாக தங்கள் வாதங்களை முன் வைத்து இடைவெளிக்கு காரணம் பிள்ளைகளும் சூழலுமே என்று சிறப்பாக பல உதாரணங்களுடன் முன்வைத்து சென்றனர்.அவர்களின் வாதங்களிற்கு சரியான முறையில் அதற்க காரணம் தாங்கள் அல்ல பெற்றொரே என்று எதிரணியினர் தங்கள் வாதங்களையாவது முன்வைப்பார்கள் என்று பார்த்தால் பாவம் எதிரணியில் எங்கள் வாதங்களை பார்த்து விட்டு ஒடினவர்கள் தான் இன்றுவரை பலரை காணவேயில்லை. அதைவிடஎதிரணியில் பட்டிமன்றத்திற்கென ஏற்கனெ தீர்மானித்தவர்கள் இல்லாமல் வேறு யார் யாரையொ எல்லாம் கையிலை காலிலை விழுந்து கூட்டிவந்து பேசவைத்து(எழுதவைத்து) ஒரு மாதிரி முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள் .

இதற்கெல்லாம் காரணம் என்ன இளைய தலைமுறையினரின் பொறுப்பற்ற தன்மை எந்தவொரு வேலையையும் பொறுப்பையும் சரிவர பொறுப்புணர்வுடன் செய்யாமல் உதாசீனம் செய்கின்ற தன்மை. கேட்டால் சொல்வது பக்கத்து வீட்டு நண்பன் கூப்பிட்டான் போய் விட்டேன் நேரமில்லையென்று மற்றவர் மீது சமூதாயத்தின் பழியை போட்டு விடுவது. இதுவும் தான் பெற்றோரிற்கும் பிள்ளைகளிற்கும் இடையே இடைவெளி வளர காரணம்.எனதணியினர் தீர்மானித்தபடியே பொறுப்புணர்வுடன் தங்கள் வாதத்தை முன்வைத்தனர் காரணம் அவர்களிற்கு பொறுப்பணர்வு இருக்கிறது ஏனெண்றால் எனதணியினர் பெற்றோர் சார்பாக வாதடியவர்கள் மட்டுமல்ல பெற்றொர்களும் கூட ஆம் அனைவரும் திருமணமானவர்களும் மற்றும் பிள்ளைகள் உள்ளவர்களுமாவார்கள் எனவேதான் அவர்களிற்கு பொறுப்பணர்ச்சி அதிகம்.

அதனால் தங்கள் கடைமைகளை சரி வர செய்திருக்கின்றனர் . ஆனால் எதிரணியினரோ பாருங்கள் எவ்வித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் ஏதோ பட்டிமன்றமாம் இவங்களிற்கு வெறை வேலையெ இல்லை என்கிற மாதிரி பாதி பேர் ஏதோ பெற்றோரை குற்றம் சாட்ட ஒரு வசதி கிடைத்ததே என்கிற மாதிரி ஏதோவெல்லாம் எழுதிவிட்டு போயிருக்கின்றார்கள்.எனவே இதுவரை பட்டி மன்றத்தை பார்த்துகொண்டிருந்தவர்களி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.