Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பு தயார்! இந்தியா, அமெரிக்கா மீது பழி!?

Featured Replies

தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான நிலைப்பாட்டினை கூட்டமைப்பு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகின்றது. இந் நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தான் காரணம் என்று தமிழ் மக்கள் மத்தியில் புலுடா விடுவதற்கான

முயற்சியினை கூட்டமைப்பு எடுத்திருப்பதனையும் இதற்கு உதயன் பத்திரிகையினைத் துணைக்கு அழைத்திருப்பதனையும் இன்றைய உதயன் செய்தி ஊடாக அவதானிக்க முடிகிறது.இதுவரையில் நடைபெற்ற பேச்சுக்களில் எதுவித ஆரோக்கியமான முடிவுகளும் எட்டப்படவில்லை, பேச்சுக்குப் போகமுன்னர் கூட்டமைப்பிடம் அரச தரப்பு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அவை நிறைவேற்றப்பட்டாலேயே தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் பரீசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வந்திருந்த நிலையில் இன்று “தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை” என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை நேற்று முன்தினம் மேதின நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய நீதித்துறை அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம், கூட்டமைப்பினருடன் தெரிவுக்குழு தொடர்பில் தான் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,

இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மீது சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.

இந்த அழுத்தங்களை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைத்து விடும் வகையில் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பை இந்தத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு கோரி சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு இறுதி முடிவுக்கு வருவதற்காகவும் ஜனாதிபதியின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காகவும் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறின.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமே எட்டப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் அவர் சார்ந்த குழுவினரும் உறுதியாக உள்ளனர். அரசியல் தீர்வு வேண்டுமாக இருந்தால் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று அரசு கூட்டமைப்பிடம் தொடர்ந்து கோரிவருகிறது.

அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி மஹிந்த இதனைத் தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் அந்தக் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

எனினும் தெரிவுக்குழு விடயத்தில் கூட்டமைப்பு இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அரசின் தீர்வுத் திட்டம் என்ன என்பதில் வெளிப்படுத்தினால் மட்டுமே தெரிவுக்குழுவுக்கு வரமுடியும் என கூட்டமைப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்திய, அமெரிக்க தரப்புக்கள் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராமையால் தான் அரசியல் தீர்வு தாமதமடைவதாக ஜனாதிபதி கூறிவருகிறார். அதனை அவர் ஒரு சாட்டாகப் பயன்படுத்துகிறார். தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வந்தால் 6 மாத காலத்தில் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என அவர் சர்வதேசத்திடமும் உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிலையில் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் மூலம் அரசு அரசியல் தீர்வை வழங்காமல் இழுத்தடிப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைத்து விடமுடியும் என இந்திய, அமெரிக்க அரசுகள் கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளன.

இப்போது தெரிவுக்குழுவுக்குச் சென்று இந்த ஆண்டு இறுதிவரையான 6 மாத காலப்பகுதியில் அரசுக்கு ஒரு அவகாசமாக வழங்கிப் பார்க்கலாம் எனவும் அவை எடுத்துரைத்துள்ளன.

இந்த அழுத்தங்களை அடுத்து தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான சாத்தியப் பாடுகள் அதிகம் உள்ளதாகவும் அது தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் எனவும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து மேலும் அறிய முடிகிறது.

http://thaaitamil.com/?p=17889

இதை நாமும் கேள்விப்பட்டோம்!

இதன் உண்மை, பொய்களை உறுதிப்படுத்த சிலகாலம் செல்லலாம்.

ஆனால் கூட்டமைப்பு மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது.

கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க பின்வரும் நிபந்தனைகளை சிங்கள அரசும், சர்வதேசமும் கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். வேறு வழியே இல்லை என்பதை தெரிவித்து விடவேண்டும்.

(1) ஏற்கனவே சட்டமாக்கப்பட்டுள்ள 13வது திருத்தங்களை உடனடியாக முழுமையாக (காணி, போலிஸ் அதிகாரங்கள் உட்பட) உடன் அமுல்படுத்த வேண்டும்.

(2) சிங்கள பயங்கரவாத அரசு இதுவரை பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட உடன்பாட்டை உடன் அமுல்படுத்த வேண்டும். அதற்கு தேவையான சட்ட வரைபுகளை தமிழர் அறுதிப் பெரும்பான்மை (2/3) இன்றி பாராளுமன்றத்தாலும் மாற்ற முடியாதபடி சட்டமியற்றவேண்டும்.

(3) சிங்கள பயங்கரவாத அரசு 13வது திருத்தங்களுக்கு மேற்பட்ட, சிங்கள பாராளுமன்றத்தால், சிங்கள நிர்வாகங்களால் மாற்ற முடியாத அதிகாரங்களுடன் கூடிய மாதிரி தீர்வுத்திட்ட வரைபை முதலில் முன்வைக்க வேண்டும்.

(அமெரிக்காவும் சிங்கள அரசின் பெரும் பங்கை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. ஹிந்திய போலி ஜனநாயக அரசுக்கு தமிழர் தீர்வு மீது உண்மையான அக்கறையில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை).

(4) ஐக்கிய தேசிய கட்சியும் அதனது மாதிரி அதிகார பரவல் தீர்வுத்திட்ட வரைபை முதலில் முன்வைக்க வேண்டும்.

(5) தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் / ஆலோசகர்கள் / அவதானிகள் முன்னிலையில் குறித்த கால வரையறைக்குள் - 3 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க பங்குபற்றும் ஒவ்வொரு தரப்பும் உறுதி மொழி வழங்க வேண்டும். தமிழின படுகொலைகளுக்கு நேரடியாக உதவியவர்கள் (உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான், பௌத்த நாடுகள் போன்றவை) மத்தியஸ்தம் வகிக்கத் தகுதியற்றவர்கள்.

(6) குறித்த காலத்துக்குள் சிங்களத் தரப்புகள் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப் படுத்தாவிட்டால், உடனடியாக அமெரிக்கா - ஐரோப்பா தலைமையிலான நாடுகள் தமிழருக்கு உரிய தீர்வினை எந்தவொரு வகையிலும் பெற்றுக் கொடுப்பதாக எழுத்து மூலமான உறுதி மொழிகள் வழங்க வேண்டும்.

(7) அத்துடன் சிங்கள அரசை பயங்கரவாத அரசாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப் படுத்த வேண்டும்.

(8) பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நியமங்களுக்கமைய நட்ட ஈடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

(9) தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்திருக்கும் முஸ்லிம்களும், சிங்களவர்களும் உடன் அப்புறப்படுத்த வேண்டும்.

இவை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், உறுதி மொழிகளைப் பெற்ற பின்னர் - கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ள சம்மதிக்கலாம்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? இதெல்லாம் கேள்விப்பட்டா கூட்டமைப்பு கூட கோமணத்தையும் கழட்டி எறிஞ்சுபோட்டு போய்ச்சேரும். தியாகங்கள் எல்லாத்துக்கும் நாமம்தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மீது சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.

இந்த அழுத்தங்களை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைத்து விடும் வகையில் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அழுத்தம் ..! ரொம்ப அழுத்தினா வெடிச்சிருங்கோ.. அடுத்து வர இருக்கும் பொறி உருண்டை குழுவுக்கும் சர்வதேச அழுத்தம் இருக்கத்தான் செய்யும்..! அவனுங்க வேலை வெட்டி இல்லாமா தின்னுட்டு திரியறானுங்கள் ..

என்னமோ சம்பந்தரின் சாணக்கியம் .. சாணக்கியம் என்டுறாங்கள் .. 2 வருசமா ஒண்ணும் காணமப்பா..கொஞ்சம் மண்டையில் மசாலா வேணும் அழுத்தம் கொடுக்கிறவர்களை பஞ்சாயத்து பண்ண கூப்பிட வேணும்..பஞ்சாயத்து பண்ண வாறவன் ஒன்னு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு போவான் அல்லது ஏர்வாடி தர்காவுக்கு போவான்..

டிஸ்கி:

ஊருக்குள் ஒரு பழமொழி பொண்டாட்டி (மனைவி) இழந்தவனை பெண் பார்க்க கூட்டி செல்ல கூடாது என்பார்கள்.. ஏன் என்றால் அங்கிட்டு வரதட்சணை சீர் வரிசை பேரம் நடக்கும் போது இவரு எழுந்து குரல் குடுப்பார் .. அய்யா உங்கட பொண்னை நானே கல்யாணம் கட்டிக்கிறேன் என்று..!அதாவது பேரம் முடியும் முன்பே நான் இதற்கு ரெடி என எழுந்து நிற்பார்.. ஆனால் உண்மையில் பெண் பார்க்க வந்தது யாருக்கோ..

இவுங்களை எல்லாம் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினால் விளங்கிடும்.

ராஜபக்ஸ் : என்ன சுதந்திரமாக ஒண்ணுக்கு போக உரிமை வேண்டுமா..?

சம்ப்ஸ் /சும்ஸ் கோஸ்டிகள்: ஆமாம் ஆமாம்..

ராஜபக்ஸ்: சரி அடுத்த வருடம் புதியதாக அமைய இருக்கம் தேங்காய் சம்பல் குழுவில் இதை பற்றி விவாதிக்கலாம்..

சம்ப்ஸ் /சும்ஸ் கோஸ்டிகள்: புத்தபிரானை 5 கிளாசில் தான் படித்திருக்கேன் .. இவரை சந்திக்க முடியாதா என ஏங்கியதுண்டு . இப்போது தங்கள் மூலம் நிறைவேறி போட்ட்டுது..

இதெல்லாம் நடக்கிற காரியமா? இதெல்லாம் கேள்விப்பட்டா கூட்டமைப்பு கூட கோமணத்தையும் கழட்டி எறிஞ்சுபோட்டு போய்ச்சேரும். தியாகங்கள் எல்லாத்துக்கும் நாமம்தான் மிச்சம்.

தமிழனின் பிழைப்பு இப்படி மிகக் கேவலமாகப் போய்விட்டது!

இது நடக்குமா? இல்லையா? என்று யோசிக்காமல் உனக்கு என்ன தேவை என்று தெளிவாக சொல்லப்பார்!!!

சிங்களப் பயங்கரவாதிகளால் இது முடியாதென்றால் - தனி நாடு ஒன்றே எமக்கு தீர்வு என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லவும் பழகவேண்டும் !

எத்தனை நாளைக்கு கோழைகளாக இருக்கப் போகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.